என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தெரு விளக்குகள் இயக்கம்"

    • தமிழக முதல்-அமைச்சர் உத்தரவின்படி இந்த ஆண்டில் சாலை வசதிகள், தெருவிளக்கு வசதிகள் ஏற்படுத்திடவும், குடிநீர் வசதி முழுமையாக வழங்குவதற்கு ஒரு பெரிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
    • திண்டுக்கல் மாநகராட்சியில் ஜி.டி.என் சாலை மிகவும் பிரதான சாலை மட்டுமின்றி அதிகளவிலான பொதுமக்கள் பயன்படுத்தும் இந்த சாலையில் மின் விளக்கு வசதிகள் அமைக்கப்பட்டு,பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இயக்கி வைக்கப்பட்டுள்ளது

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் நமக்குநாமே திட்டத்தில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் ஜி.டி.என்.சாலையில் அமைக்கப்பட்ட தெரு விளக்குகளை மாவட்ட கலெக்டர் பூங்கொடி தலைமையில் அமைச்சர் இ.பெரியசாமி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இயக்கி வைத்தார்

    விழாவில் அமைச்சர் பேசியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் உத்தரவின்படி தமிழகத்தில் சாலை மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டில் சாலை வசதிகள், தெருவிளக்கு வசதிகள் ஏற்படுத்திடவும், குடிநீர் வசதி முழுமையாக வழங்குவதற்கு ஒரு பெரிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தின் மூலமாக பொதுமக்களுக்கு முழு வசதிகளுடனும், பாதுகாப்புடனும் வாழ வேண்டும் என்பதற்காக உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.தமிழகம் முழுவதும் 10,000 கி.மீ அளவிற்கு சாலை மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அதில் திண்டுக்கல் மாவட்டத்தில் அதிகளவிலான நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு சாலை மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    திண்டுக்கல் மாநகராட்சியில் ஜி.டி.என் சாலை மிகவும் பிரதான சாலை மட்டுமின்றி கடந்த 25 ஆண்டுகளாக தினமும் அதிகளவிலான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலை கடந்த 2009-10-ஆம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டது.தற்போது இந்த சாலையில் மின் விளக்கு வசதிகள் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு,பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இயக்கி வைக்கப்பட்டுள்ளது.அதிகாலை நேரத்தில் நடைபயிற்சி மேற்கொள்பவர்களுக்கு இந்த மின் விளக்கு வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விழாவில் திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதிபிரகாஷ்,துணை மேயர் ராஜப்பா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன்,திண்டுக்கல் மாநகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி, கோட்டாட்சியர் கமலக்கண்ணன், மாமன்ற உறுப்பினர்கள் கே.கே. ஆர்.வெங்கடேஷ்,எம். சேகர் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ×