என் மலர்
திண்டுக்கல்
+2
- பிரகாஷ்ராஜ் பங்களாவுக்கு தற்காலிக மின் இணைப்பு கேட்டு விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது.
- கட்டுமான பணி முடிந்ததும் மீண்டும் மின்வாரியத்தை அணுகினால் நிரந்தர மின் இணைப்பு வழங்கப்படும்.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வில்பட்டி பகுதியில் விதிகளை மீறி வீடு கட்டி வரும் நடிகர் பிரகாஷ்ராஜ், பேத்துப்பாறை பகுதியில் வீடு கட்டி வரும் பாபி சிம்ஹா ஆகியோருக்கு எவ்வாறு அனுமதி அளிக்கப்பட்டது என விவசாயிகள் பரபரப்பு குற்றச்சாட்டுகளை எழுப்பினர்.
கொடைக்கானல் பகுதியில் கனரக வாகனங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர்களுக்கு மட்டும் சிறப்பு அனுமதி வழங்கியது ஏன்? சுமார் 25 நாட்களுக்கு மேலாக ஜே.சி.பி. எந்திரம் பயன்படுத்த அனுமதி வழங்கியது யார்? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.
இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த ஊர் தலைவர் மகேந்திரன் கூறும் போது, பிரகாஷ்ராஜ் பங்களாவுக்கு வணிக பயன்பாட்டுக்கான மின்சார அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. லஞ்சம் கொடுத்து பஞ்சாயத்து அனுமதியின்றி சட்டத்துக்கு புறம்பான மின் அனுமதி பெற்றுள்ளனர். பங்களாவுக்கு செல்ல பட்டா நிலத்தில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு உரிய அனுமதி பெறவில்லை.
பாபிசிம்ஹா பங்களாவை ஒட்டி இருக்கும் 2 ஏக்கர் அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. எனவே இது போன்ற பிரச்சனையில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றார்.
இதுகுறித்து கொடைக்கானல் ஆர்.டி.ஓ. ராஜா தெரிவிக்கையில், குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் பிரகாஷ்ராஜ், பாபிசிம்ஹா ஆகியோரது இடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதா? என தாசில்தாரிடம் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன்.
இந்த புகார்கள் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு சம்மந்தப்பட்ட இடங்கள் அளவீடு செய்யப்படும். இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மின் வாரிய பொறியாளர் முருகேசன் தெரிவிக்கையில், பிரகாஷ்ராஜ் பங்களாவுக்கு தற்காலிக மின் இணைப்பு கேட்டு விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது. வில்பட்டி பஞ்சாயத்துக்கு கட்டும் வரி ரசீது இணைக்கப்பட்டுள்ளது. மின் வாரிய விதிகளின்படி தற்காலிக இணைப்புக்கு பஞ்சாயத்து வரி ரசீது இருந்தால்போதும். கட்டிட அனுமதி தேவையில்லை. கட்டுமான பணி முடிந்ததும் மீண்டும் மின்வாரியத்தை அணுகினால் நிரந்தர மின் இணைப்பு வழங்கப்படும். இதில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை என்றார்.
இது குறித்து வில்பட்டி பஞ்சாயத்து தலைவர் பாக்கியலட்சுமி ராமச்சந்திரன் தெரிவிக்கையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கட்டிடங்கள் கட்டக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அதனையும் மீறி கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. எனவே விதி மீறி கட்டிடங்கள் கட்டப்பட்டது குறித்தும், கனரக வாகனங்கள் பயன்படுத்தியது குறித்தும் அவர்கள் 2 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்படும் என்று தெரிவித்தார்.
- 100-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு, மின்வாரிய அதிகாரிகள் மின்கோபுரம் அமைக்க இடம் கொடுத்ததற்கு உரிய தொகை வழங்காமல் காலம்
- மின்வாரிய அதிகாரிகள் டிராக்டர் மூலம் அப்பகுதியில் உள்ள மின் கம்பிகளை எடுத்துச்செல்ல திட்டமிட்டபோது அவர்களை வழிமறித்த விவசாயிகள், தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்கினால் தான் டிராக்டர் செல்ல அனுமதிப்போம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
செம்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே வீ.கூத்தம்பட்டி வழியாக விருதுநகரிலிருந்து கோயம்புத்தூருக்கு உயர் மின் கோபுரம் செல்கிறது. ஆத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட, வீரக்கல், வீ.கூத்தம்பட்டி, தெற்கு மேட்டுப்பட்டி, வடக்கு மேட்டுப்பட்டி, வண்ணம்பட்டி உள்ளிட்ட பகுதியை சேர்ந்த, 100-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு, மின்வாரிய அதிகாரிகள் மின்கோபுரம் அமைக்க இடம் கொடுத்ததற்கு உரிய தொகை வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தனர்.
மின்வாரிய அதிகாரிகள் டிராக்டர் மூலம் அப்பகுதியில் உள்ள மின் கம்பிகளை எடுத்துச்செல்ல திட்டமிட்டனர். அப்போது அவர்களை வழிமறித்த விவசாயிகள், தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்கினால் தான் டிராக்டர் செல்ல அனுமதிப்போம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விவசாயிகள் போராட்டத்தால் அதிகாரிகள் அப்பகுதியில் இருந்து வெளியேறினர்.
இந்நிலையில் கோனூர் ஊராட்சிக்கு சென்ற அமைச்சர் இ.பெரியசாமியிடம் வீ.கூத்தம்பட்டி விவசாயிகள்தங்களுக்கு மின்வாரிய அதிகாரிகள் உரிய நிவாரணம் தரவேண்டுமென கோரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து மின்சாரத்துறை அமைச்சரிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்து உரிய நிவாரணம் வாங்கி தருவதாக உறுதியளித்தார். அதன்பின்னர் வீ.கூத்தம்பட்டியை சேர்ந்த விவசாயிகள் அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்
- ஆர்.கோம்பை ஊராட்சி சின்னழகுநாயக்கனூரில் 40 வருடங்களுக்கு முன்பு அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டது.
- இந்த கட்டிடத்தின் அருகே தற்போது துணை சுகாதார நிலையம் இயங்கி வருகிறது.
எரியோடு:
திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே உள்ள ஆர்.கோம்பை ஊராட்சி சின்னழகுநாயக்கனூரில் 40 வருடங்களுக்கு முன்பு அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டது. தற்போது அந்த கட்டிடம் பாழடைந்து இடிந்து விழும் நிலையில் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் உள்ளது.
அடிக்கடி பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த கட்டிடத்தின் அருகே தற்போது துணை சுகாதார நிலையம் இயங்கி வருகிறது.
எனவே பாழடைந்த நிலையில் உள்ள கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு முருகனுக்கு அதிகாலை 16 வகையான அபிஷேக பொருட்கள் மற்றும் மூலிகை விபூதி கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.
- தொடர்ந்து சிறப்பு ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அடுத்த ராமலிங்கம்பட்டி போகர் நகரில் பாதாள செம்பு முருகன் கோவில் அமைந்துள்ளது. இங்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும், சஷ்டி, கிருத்திகை உள்ளிட்ட முருகனுக்கு உகந்த நாட்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது.
அதன்படி வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு முருகனுக்கு அதிகாலை 16 வகையான அபிஷேக பொருட்கள் மற்றும் மூலிகை விபூதி கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திண்டுக்கல், கரூர், தாராபுரம், திருப்பூர், கோவை, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
நீண்ட வரிசையில் சுமார் ஒரு மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு மூலிகை விபூதி பிரசாதமாக கோவில் ஆதீனம் அறிவாதினம் வழங்கினார்.
- கவர்னர் கொடைக்கானலில் குறிஞ்சி ஆண்டவர் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள கோகினூர் சேக் அப்துல்லா மாளிகையில் தங்குகிறார்.
- வர்னர் ஆர்.என்.ரவி வருகையை முன்னிட்டு இப்பகுதியில் தடையற்ற மின்சாரம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் வருகிற 31-ந் தேதி பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்கிறார். இதனை முன்னிட்டு வருகிற 30-ந் தேதி அவர் கொடைக்கானலுக்கு வருகை தர உள்ளார்.
கொடைக்கானலில் குறிஞ்சி ஆண்டவர் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள கோகினூர் சேக் அப்துல்லா மாளிகையில் அவர் தங்குகிறார். இதற்கான ஏற்பாடுகள் கோகினூர் மாளிகையில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
பொதுவாக கொடைக்கானலுக்கு வரும் முதலமைச்சர், அரசு உயர் அதிகாரிகள் உள்பட பலரும் கோகினூர் மாளிகையில் தங்குவது வழக்கம். அதன்படி வருகிற 30-ந் தேதி கவர்னர் ஆர்.என்.ரவி தங்க உள்ளதால் அதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
இப்பகுதியில் குறைந்த அழுத்த மின்சாரம் நிலவி வருவதால் அடிக்கடி மின் தடை ஏற்படுவதாக இப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி வருகையை முன்னிட்டு இப்பகுதியில் தடையற்ற மின்சாரம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
அதன்படி புதிய டிரான்ஸ்பார்மர் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை மின்வாரிய செயற்பொறியாளர் முருகேசன், தாசில்தார் முத்துராமன் ஆகியோர் செய்தனர்.
- ஒட்டன்சத்திரம் பகுதியில் தண்ணீர் அதிகமாக உள்ள கிராமப்பகுதிகளில் சின்ன வெங்காயம் விதை உற்பத்தி வெகுவாக நடைபெற்று வருகிறது.
- ஒரு ஏக்கருக்கு சின்ன வெங்காய பூக்களில் இருந்து எடுக்கப்படும் விதைகள் 1½ கிலோ போதுமானது.
ஒட்டன்சத்திரம்:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதியில் சின்ன வெங்காயம் விதைகளாகவும், நாற்றுகளாகவும் நடவு செய்து வருகின்றனர்.
இதில் விதைகளை கொண்டு சாகுபடி செய்யும் சின்ன வெங்காயம் அதிக அளவு மகசூல் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இதில் ஒட்டன்சத்திரம் பகுதியில் தண்ணீர் அதிகமாக உள்ள கிராமப்பகுதிகளில் சின்ன வெங்காயம் விதை உற்பத்தி வெகுவாக நடைபெற்று வருகிறது. ஏக்கரில் சின்ன வெங்காயம் பயிரிட 500 கிலோ வரை விதை வெங்காயம் வாங்க வேண்டும்.
1 கிலோ விதை வெங்காயம் ரூ.50 முதல் ரூ.150 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதிலும் அறுவடை செய்து 45 நாட்கள் ஆன வெங்காயத்தை மட்டுமே பயிரிட முடியும். இம்முறையில் பயிரிட்டால் செலவு மிகவும் அதிகமாகும். அதே சமயம் ஒரு ஏக்கருக்கு சின்ன வெங்காய பூக்களில் இருந்து எடுக்கப்படும் விதைகள் 1½ கிலோ போதுமானது. இந்த விதை ஒரு கிலோ ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது.
விதையை கொண்டு நடவு செய்து சாகுபடி செய்வதற்கு செலவு குறைவு என்பதால் பெரும்பாலான விவசாயிகள் பூமியிலிருந்து எடுக்கப்படும் வெங்காய விதைகளை வாங்கி பயிரிட ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தற்போது விதைக்காக பயிரிட்டுள்ள சின்னவெங்காய பூக்கள் பூத்துக்குலுங்கி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
- இரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்த நாட்டுத்துரை தனது மனைவியிடம் தகராறு செய்துள்ளார்.
- கருப்பாத்தாளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பழனி:
பழனி அருகே உள்ள வடபருத்தியூர் கிராமம் தோட்டத்து சாலையில் வசித்து வருபவர் நாட்டுத்துரை(70). இவரது மனைவி கருப்பாத்தாள்(65). இவர்களது ஒரே மகளுக்கு திருமணமாகி தனியாக வசித்து வருகிறார். நாட்டுத்துரை மற்றும் அவரது மனைவி ஆடுகள் வைத்து வளர்த்து வருகின்றனர்.
நாட்டுத்துரை குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. ஒரே வீட்டில் அவர்கள் இருந்தபோதும் தனித்தனியாக உணவு சமைத்து சாப்பிட்டு வந்துள்ளனர்.
நேற்று இரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்த நாட்டுத்துரை தனது மனைவியிடம் தகராறு செய்துள்ளார். தகராறு முற்றவே வீட்டில் இருந்த அரிவாளால் தனது மனைவியை வெட்ட முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த கருப்பாத்தாள் அந்த அரிவாளை பறித்து தனது கணவரை சரமாரியாக வெட்டினார்.
இதில் நாட்டுத்துரை சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து கீரனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நாட்டுத்துரை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கருப்பாத்தாளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடும்ப பிரச்சினையில் கணவரை மனைவியே வெட்டி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- வெங்காயம் சிதறிகிடந்த பாதை வழியாக சென்று அவை பதுக்கி வைத்திருந்த இடத்தை கண்டுபிடித்தனர்.
- போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செம்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே பச்சமலையான்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட உத்தயாகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் முத்துராஜ். விவசாயி. இவரும் அதேபகுதியை சேர்ந்த ராமசாமி என்பவரும் தங்கள் தோட்டத்தில் வெங்காயம் பயிரிட்டிருந்தனர்.
அறுவடை பணிகள் நிறைவடைந்து அடுத்த முறை பயன்படுத்தும் விதைக்காக வெங்காய மூட்டைகளை பட்டறைகளில் பாதுகாப்பாக வைத்திருந்தனர். நேற்று நள்ளிரவு பட்டறையில் வைக்கப்பட்டிருந்த வெங்காய தோட்டத்திற்கு அழகம்பட்டியை சேர்ந்த செல்வம், காமுபிள்ளை சத்திரத்தை சேர்ந்த பொன்ராம் ஆகியோர் பட்டறையில் இருந்த 50 கிலோ எடை கொண்ட 15 மூட்டை வெங்காயத்தை திருடி மற்றொருவர் தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்தனர்.
நள்ளிரவில் மூட்டைகளை தூக்கிச்சென்றதால் அதிலிருந்து கீழே விழுந்த வெங்காயம் வழிநெடுக சென்று அவர்கள் பதுக்கிய இடத்தை காட்டி கொடுத்தது. இன்று காலை தோட்டத்திற்கு சென்று பார்த்த விவசாயிகள் வெங்காய மூட்டைகள் திருடுபோனது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் வெங்காயம் சிதறிகிடந்த பாதை வழியாக சென்று அவை பதுக்கி வைத்திருந்த இடத்தை கண்டுபிடித்தனர். அங்கிருந்த வெங்காயதிருடன் பொன்ராம் என்பவரை செம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அந்த இடத்தின் உரிமையாளர் செல்வம் என்பவர் தப்பி ஓடிவிட்டநிலையில் அங்கிருந்த வெங்காய மூட்டைகள் மற்றும் அவற்றை திருட பயன்படுத்திய மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை போலீசாரிடம் விவசாயிகள் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் பிடிபட்ட பொன்ராம் என்பவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்செல்ல சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியராஜன் அறிவுறுத்தினார். இதற்கு விவசாயிகள் மறுத்து அவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் போலீஸ் நிலையத்திலும் முற்றுகையிட்டனர். இதனைதொடர்ந்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த மாதம் பெய்த மழையால் விளை ச்சல் அமோகமாக உள்ளது.
- விசேஷ தினங்களோ, கோவில் திருவிழாக்கலோ அதிகம் இல்லாத நிலையில் ரூ.8 க்கு விலை போனது பெரும் கவலை அளிக்கிறது.
திண்டுக்கல்:
நீர்ப்பூசணி என அழைக்கப்படும் வெள்ளை பூசணி சமையலுக்கும், வர்த்தக நிறுவனங்கள், வீடுகளில் திருஷ்டி பரிகாரங்களுக்காகவும் மற்றும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் மருத்துவ குணம் கொண்டதாகவும் உள்ளதால் மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் பூசணிக்காய் பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது.
கொடி இனத்தை சேர்ந்த பூசணிக்காயில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது. இதில் மஞ்சள் மற்றும் வெள்ளை நிறமுள்ள 2 வகை பூசணி காணப்படு கிறது. இந்த 2 வகை பூசணிக்காய்களிலும் உள்ள சதைப்பகுதியும், விதைகளும் மருத்துவத்தில் பயன்படு த்தப்படுகின்றன.
வெள்ளைப் பூசணி க்காயை பெரும்பாலும் திருஷ்டி கழிக்க மட்டுமே பயன்படுத்துகிறோம். ஆனால் இதில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளது. விட்டமின் பி, சி-யுடன், கால்சியம், பொட்டா சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் நார்ச்ச த்தும் வளமாக நிறைந்து ள்ளது. முக்கியமாக இதில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது.
இவ்வளவு மருத்துவ குணம் கொண்ட வெள்ளை பூசணிக்காய்களை சாகுபடி செய்ய திண்டுக்கல் சுற்று வட்டார பகுதியான தாடிக்கொம்பு, பழைய காப்பிளியபட்டி, வி.புதூர், மறவபட்டி, வேடசந்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த மாதம் பெய்த மழையால் விளை ச்சல் அமோகமாக உள்ளது.
திண்டுக்கல் அடுத்த பழைய காப்பளிய ப்பட்டியில் இருந்து விளை விக்கப்பட்ட வெள்ளை பூசணி ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டிற்கு விவசாயிகள் கொண்டு சென்றனர். கடந்த மாதங்க ளில் கோவில் திருவிழாக்கள் அதிகம் இருந்ததால் ரூ. 15க்கு விற்கப்பட்டது. தற்போது அதிக விளைச்சல் உள்ளதால் வரத்து அதிகரி த்தது. மேலும் வெள்ளை பூசணியின் பயன்பாடு குறைவாக உள்ளதால் இன்று ரூ.8 க்கு விலை போனது. இது விவசாயிக ளுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பழைய காப்பிளியப் பட்டியைச் சேர்ந்த விவசாயி பிரபு கூறுகையில்,
1½ ஏக்கரில் பூசணி பயிரிட்டிருந்தேன். ரூ.40 ஆயிரம் செலவான நிலை யில் 5 டன் பூசணிக்காய் விளைச்சல் வந்தது. ஆனால் விசேஷ தினங்களோ, கோவில் திருவிழாக்கலோ அதிகம் இல்லாத நிலையில் ரூ.8 க்கு விலை போனது பெரும் கவலை அளிக்கிறது. குறைந்த பட்சம் ரூ.12 விலை போனால் மட்டுமே விவசாயிக்கு கட்டுபடியான விலை கிடைக்கும். இந்த விலை சரிவு விவசாயி களுக்கு பெரும் கவலை அளிப்பதாக உள்ளது என தெரிவித்தார்.
- திண்டுக்கல் ஆய்வுக் கூட்டத்தில் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் – மீனவர் நலத்து றை குறித்த குறிப்பாணைகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
- இக்கூட்ட த்தில் தமிழ்நாடு சட்ட மன்ற பேரவையின் சட்ட விதிகள் ஆய்வுக்குழு உறுப்பினர்கள் உள்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் தமிழ்நாடு சட்ட மன்ற பேரவையின் சட்ட விதிகள் ஆய்வுக்குழு தலைவர் சிவகுமார் என்ற தாயகம் கவி தலைமையில் மாவட்ட கலெக்டர் பூங்கொடி முன்னிலையில் ஆய்வுக் கூட்டம் இன்று நடை பெற்றது.
இக்கூட்டத்தில் குழுவின் தலைவர் சிவகுமார் என்ற தாயகம் கவி தெரிவித்த தாவது:-
தமிழக சட்டமன்றத்தில் பொதுமக்களின் நலன் கருதி பல்வேறு சட்ட திருத்த ங்கள், புதிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதேபோல் மக்கள் நல த்திட்டங்களை செயல்படு த்துவதற்காகவும், நலத்திட்ட ங்களை செயல்படுத்துவதில் எளிமை படுத்துவதற்காக வும், அரசு துறைகளை மேம்படுத்துவதற்காகவும் விதிமுறைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த புதிய சட்டதிருத்த ங்களை 100 சதவீதம் நடைமுறைப்படுத்த ப்படுகிறதா என்பது குறித்தும், நலத்திட்டங்கள் பொதுமக்களுக்கு முழுமை யாக சென்றடைகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக தமிழ்நாடு முதல்-அமைச்சர் தமிழ்நாடு சட்ட மன்ற பேரவையின் சட்ட விதிகள் ஆய்வுக்குழுவை ஏற்படுத்தி யுள்ளார்.
இந்தக் குழுவினர் மாவட்டங்கள் தோறும் சென்று ஆய்வு மேற்கொ ண்டு, புதிய சட்டதிருத்தங்கள் தொட ர்பாக ஆய்வு மேற்கொண்டு அதன் அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளது. அதன்படி, திண்டு க்கல் மாவட்டத்தில் 2 நாட்கள் ஆய்வு மேற்கொள்வ தற்காக சட்ட மன்ற பேரவையின் சட்ட விதிகள் ஆய்வுக்குழு வருகை தந்து ள்ளது. இன்று திண்டுக்கல் பகுதியிலும், நாளை கொடைக்கானல் பகுதி களிலும் ஆய்வு மேற்கொள்ள ப்படுகிறது.
திண்டுக்கல் ஆய்வுக் கூட்டத்தில் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் – மீனவர் நலத்து றை குறித்த குறிப்பாணைகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் மேற்கொள்ள ப்படும் கால்நடை மருத்துவ முகாம்கள், கால்நடை தீவனம் வழங்கல், கால்நடை பராமரிப்பு கடனுதவிகள், கால்நடை தீவன பெருக்கம், பால் உற்பத்தியை அதிகரிக்க மேற்கொள்ளப்படும் திட்டங்கள், பால் உற்பத்தி யாளர்களுக்கு வழங்கப்படும் திட்டங்கள், மீனவர் நலனு க்காக செயல்படுத்தப்படும், மீன்வளர்ப்பு, டீசல் மானியம், மீனவர் தொழில் மேம்பாட்டு கடனுதவிகள் என அரசு சார்பில் செயல்ப டுத்த ப்படும் திட்டங்கள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என தெரிவித்தார்.
இக்கூட்ட த்தில் தமிழ்நாடு சட்ட மன்ற பேரவையின் சட்ட விதிகள் ஆய்வுக்குழு உறுப்பினர்கள் ஈஸ்வர ப்பன், எபினேசர் என்ற ஜான் எபினேசர், சிவகாம சுந்தரி, செல்வராஜ், பால சுப்பிரமணியன், ராமச்ச ந்திரன், அரசு இணைச்செய லாளர்அன்பு ச்சோழன், அரசு துணை ச்செயலாளர் கணேஷ், மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு பாஸ்கரன், மாவட்ட வருவாய் அலுவலர் சேக்முகையதீன் உட்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- கொடைக்கானல் அப்சர்வேட்டரி சாலை சேதமடைந்து வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் இருப்பதாக விவசாயிகள் குறைதீர்கூட்டத்தில் புகார் அளித்தனர்.
- சேதமடைந்த சாலையை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் உறுதியளித்தனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் அப்சர்வேட்டரி சாலை சேதமடைந்து வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் இருப்பதாக நகர்மன்ற தலைவர் செல்லத்துரையிடம் கொடைக்கானலில் நடந்த விவசாயிகள் குறைதீர்கூட்டத்தில் புகார் அளித்தனர்.
இதனைதொடர்ந்து நகர்மன்ற தலைவர் செல்லத்துரை, துணைத்தலைவர் மாயக்கண்ணன், கோட்டாட்சியர், நெடுஞ்சாலைத்துறை உதவிகோட்டபொறியாளர் ராஜன், ஆகியோர் உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரடியாக சென்று களஆய்வு மேற்கொண்டனர்.
சேதமடைந்த சாலையை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் உறுதியளித்தனர். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிகழ்ச்சியில் 1-வது வார்டு கவுன்சிலர் கலாவதி தங்கராஜ், மாவட்ட பிரதிநிதி இளங்கோவன், 8-வது வார்டு கவுன்சிலர் அப்பாஸ் ஆகியோர் உடனிருந்தனர்.
- வேடபட்டி ஒத்தக்கண் பாலம் அருகே இன்று காலை ரெயிலில் அடிபட்டு ஒரு வாலிபர் இறந்து கிடப்பதாக போலீ சாருக்கு தகவல் கிடைத்தது.
- ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் வேடபட்டி ஒத்தக்கண் பாலம் அருகே இன்று காலை ரெயிலில் அடிபட்டு ஒரு வாலிபர் இறந்து கிடப்பதாக போலீ சாருக்கு தகவல் கிடைத்தது. இதனைதொடர்ந்து ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணையில் இறந்த வாலிபர் மேற்குவங்க மாநிலம் கோத்ராவை சேர்ந்த அலாவுதீன் சகாஜி(24) என தெரியவந்தது. இவர் திண்டுக்கல்லில் தங்கி வேலை பார்த்தவரா அல்லது வெளியூர் செல்லும்போது தவறிவிழுந்தாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்






