என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செம்பட்டி அருகே மின்கோபுரம் அமைக்க இடம் கொடுத்த விவசாயிகள் போராட்டம்
    X

    அமைச்சர் இ.பெரியசாமியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்த விவசாயிகள்.

    செம்பட்டி அருகே மின்கோபுரம் அமைக்க இடம் கொடுத்த விவசாயிகள் போராட்டம்

    • 100-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு, மின்வாரிய அதிகாரிகள் மின்கோபுரம் அமைக்க இடம் கொடுத்ததற்கு உரிய தொகை வழங்காமல் காலம்
    • மின்வாரிய அதிகாரிகள் டிராக்டர் மூலம் அப்பகுதியில் உள்ள மின் கம்பிகளை எடுத்துச்செல்ல திட்டமிட்டபோது அவர்களை வழிமறித்த விவசாயிகள், தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்கினால் தான் டிராக்டர் செல்ல அனுமதிப்போம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    செம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே வீ.கூத்தம்பட்டி வழியாக விருதுநகரிலிருந்து கோயம்புத்தூருக்கு உயர் மின் கோபுரம் செல்கிறது. ஆத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட, வீரக்கல், வீ.கூத்தம்பட்டி, தெற்கு மேட்டுப்பட்டி, வடக்கு மேட்டுப்பட்டி, வண்ணம்பட்டி உள்ளிட்ட பகுதியை சேர்ந்த, 100-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு, மின்வாரிய அதிகாரிகள் மின்கோபுரம் அமைக்க இடம் கொடுத்ததற்கு உரிய தொகை வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தனர்.

    மின்வாரிய அதிகாரிகள் டிராக்டர் மூலம் அப்பகுதியில் உள்ள மின் கம்பிகளை எடுத்துச்செல்ல திட்டமிட்டனர். அப்போது அவர்களை வழிமறித்த விவசாயிகள், தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்கினால் தான் டிராக்டர் செல்ல அனுமதிப்போம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விவசாயிகள் போராட்டத்தால் அதிகாரிகள் அப்பகுதியில் இருந்து வெளியேறினர்.

    இந்நிலையில் கோனூர் ஊராட்சிக்கு சென்ற அமைச்சர் இ.பெரியசாமியிடம் வீ.கூத்தம்பட்டி விவசாயிகள்தங்களுக்கு மின்வாரிய அதிகாரிகள் உரிய நிவாரணம் தரவேண்டுமென கோரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து மின்சாரத்துறை அமைச்சரிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்து உரிய நிவாரணம் வாங்கி தருவதாக உறுதியளித்தார். அதன்பின்னர் வீ.கூத்தம்பட்டியை சேர்ந்த விவசாயிகள் அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்

    Next Story
    ×