search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல்லில் இன்று சட்டமன்ற பேரவையின் விதிகள் ஆய்வுக்குழு கூட்டம்
    X

    சட்டமன்ற பேரவை சட்டவிதிகள் ஆய்வுக்குழு தலைவர் தாயகம் கவி தலைமையில் கலெக்டர் பூங்கொடி முன்னிலையில் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது.

    திண்டுக்கல்லில் இன்று சட்டமன்ற பேரவையின் விதிகள் ஆய்வுக்குழு கூட்டம்

    • திண்டுக்கல் ஆய்வுக் கூட்டத்தில் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் – மீனவர் நலத்து றை குறித்த குறிப்பாணைகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
    • இக்கூட்ட த்தில் தமிழ்நாடு சட்ட மன்ற பேரவையின் சட்ட விதிகள் ஆய்வுக்குழு உறுப்பினர்கள் உள்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் தமிழ்நாடு சட்ட மன்ற பேரவையின் சட்ட விதிகள் ஆய்வுக்குழு தலைவர் சிவகுமார் என்ற தாயகம் கவி தலைமையில் மாவட்ட கலெக்டர் பூங்கொடி முன்னிலையில் ஆய்வுக் கூட்டம் இன்று நடை பெற்றது.

    இக்கூட்டத்தில் குழுவின் தலைவர் சிவகுமார் என்ற தாயகம் கவி தெரிவித்த தாவது:-

    தமிழக சட்டமன்றத்தில் பொதுமக்களின் நலன் கருதி பல்வேறு சட்ட திருத்த ங்கள், புதிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதேபோல் மக்கள் நல த்திட்டங்களை செயல்படு த்துவதற்காகவும், நலத்திட்ட ங்களை செயல்படுத்துவதில் எளிமை படுத்துவதற்காக வும், அரசு துறைகளை மேம்படுத்துவதற்காகவும் விதிமுறைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    இந்த புதிய சட்டதிருத்த ங்களை 100 சதவீதம் நடைமுறைப்படுத்த ப்படுகிறதா என்பது குறித்தும், நலத்திட்டங்கள் பொதுமக்களுக்கு முழுமை யாக சென்றடைகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக தமிழ்நாடு முதல்-அமைச்சர் தமிழ்நாடு சட்ட மன்ற பேரவையின் சட்ட விதிகள் ஆய்வுக்குழுவை ஏற்படுத்தி யுள்ளார்.

    இந்தக் குழுவினர் மாவட்டங்கள் தோறும் சென்று ஆய்வு மேற்கொ ண்டு, புதிய சட்டதிருத்தங்கள் தொட ர்பாக ஆய்வு மேற்கொண்டு அதன் அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளது. அதன்படி, திண்டு க்கல் மாவட்டத்தில் 2 நாட்கள் ஆய்வு மேற்கொள்வ தற்காக சட்ட மன்ற பேரவையின் சட்ட விதிகள் ஆய்வுக்குழு வருகை தந்து ள்ளது. இன்று திண்டுக்கல் பகுதியிலும், நாளை கொடைக்கானல் பகுதி களிலும் ஆய்வு மேற்கொள்ள ப்படுகிறது.

    திண்டுக்கல் ஆய்வுக் கூட்டத்தில் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் – மீனவர் நலத்து றை குறித்த குறிப்பாணைகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் மேற்கொள்ள ப்படும் கால்நடை மருத்துவ முகாம்கள், கால்நடை தீவனம் வழங்கல், கால்நடை பராமரிப்பு கடனுதவிகள், கால்நடை தீவன பெருக்கம், பால் உற்பத்தியை அதிகரிக்க மேற்கொள்ளப்படும் திட்டங்கள், பால் உற்பத்தி யாளர்களுக்கு வழங்கப்படும் திட்டங்கள், மீனவர் நலனு க்காக செயல்படுத்தப்படும், மீன்வளர்ப்பு, டீசல் மானியம், மீனவர் தொழில் மேம்பாட்டு கடனுதவிகள் என அரசு சார்பில் செயல்ப டுத்த ப்படும் திட்டங்கள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என தெரிவித்தார்.

    இக்கூட்ட த்தில் தமிழ்நாடு சட்ட மன்ற பேரவையின் சட்ட விதிகள் ஆய்வுக்குழு உறுப்பினர்கள் ஈஸ்வர ப்பன், எபினேசர் என்ற ஜான் எபினேசர், சிவகாம சுந்தரி, செல்வராஜ், பால சுப்பிரமணியன், ராமச்ச ந்திரன், அரசு இணைச்செய லாளர்அன்பு ச்சோழன், அரசு துணை ச்செயலாளர் கணேஷ், மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு பாஸ்கரன், மாவட்ட வருவாய் அலுவலர் சேக்முகையதீன் உட்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×