என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Health Center Building"

    • அமைச்சர்கள் திறந்து வைத்தனர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வாலாஜா:

    ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா ஊராட்சி ஒன்றியம் வள்ளுவம்பாக்கம் ஊராட்சி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட துணை சுகாதார நிலையக் கட்டடத்தை திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெகத்ரட்சகன் முன்னிலை வகித்தார்.மாவட்ட சுகாதாரதுணை இயக்குனர் மணிமாறன் வரவேற்றார்.

    நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கைத்தறி மற்றும் துணிநூல் அமைச்சர் காந்தி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறையின் மூலம் 15 வது நிதிக் குழுவின் கீழ் ரூ.30லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட துணை சுகாதார நிலையக் கட்டடத்தை திறந்து வைத்தும், நெமிலி பேரூராட்சி புன்னை கிராமத்தில் தேசிய நலவாழ்வு குழும நிதியின் கீழ் ரூ.48லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள புறநோயாளிகள் கட்டடத்தின் கல்வெட்டினை திறந்து வைத்தும், 114 பிரிவு பயனாளிகளுக்கு வருவாய்த்துறை சார்பில் இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும், மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும், 5 பயனாளிகளுக்கு மாண்புமிகு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டைகளையும்,

    15 மாணாக்கர்களுக்கு கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் மூக்குக் கண்ணாடிகளையும், 20 பயனாளிகளுக்கு மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ் மருந்து பெட்டகங்களையும், 20 கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தினையும், 3 மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர்களையும் என மொத்தமாக 177 பயனாளிகளுக்கு ரூ.60 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

    • ஆர்.கோம்பை ஊராட்சி சின்னழகுநாயக்கனூரில் 40 வருடங்களுக்கு முன்பு அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டது.
    • இந்த கட்டிடத்தின் அருகே தற்போது துணை சுகாதார நிலையம் இயங்கி வருகிறது.

    எரியோடு:

    திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே உள்ள ஆர்.கோம்பை ஊராட்சி சின்னழகுநாயக்கனூரில் 40 வருடங்களுக்கு முன்பு அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டது. தற்போது அந்த கட்டிடம் பாழடைந்து இடிந்து விழும் நிலையில் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் உள்ளது.

    அடிக்கடி பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த கட்டிடத்தின் அருகே தற்போது துணை சுகாதார நிலையம் இயங்கி வருகிறது.

    எனவே பாழடைந்த நிலையில் உள்ள கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×