என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • பழனி மின்இழுவை ரெயில்நிலைய பகுதியில் ‘இந்துக்கள் மட்டும் செல்ல அனுமதி' என்ற பேனரை மீண்டும் வைக்க வேண்டும் என இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
    • கோவில் நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு இந்து அமைப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    பழனி:

    தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பிற மதத்தினர் வருவதை தடுக்க 'இந்துக்கள் மட்டும் செல்ல அனுமதி' என்ற வாசகம் கொண்ட பேனர் வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலிலும் மின்இழுவை ரெயில்நிலைய வாயில் பகுதியில் பேனர் வைக்கப்பட்டு இருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகத்தையொட்டி புனரமைப்பு பணிகள் நடைபெற்றன. அப்போது மின்இழுவை ரெயில்நிலைய பகுதியில் வைக்கப்பட்டிருந்த அந்த பேனர் அகற்றப்பட்டது.

    இதற்கிடையே சமீபத்தில் மாற்று மதத்தை சேர்ந்த பெண்கள் சிலர் மின்இழுவை ரெயில் மூலம் பழனி மலைக்கோவிலுக்கு செல்ல முயன்றனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் பழனி மின்இழுவை ரெயில்நிலைய பகுதியில் 'இந்துக்கள் மட்டும் செல்ல அனுமதி' என்ற பேனரை மீண்டும் வைக்க வேண்டும் என இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

    மேலும் பழனியை சேர்ந்த செந்தில்குமார் என்ற பக்தர், பழனி முருகன் கோவிலில் 'இந்துக்கள் மட்டும் செல்ல அனுமதி' என்ற பேனரை வைக்கக்கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, பழனி முருகன் கோவிலில் மீண்டும் பேனர் வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

    ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் நேற்று பழனி முருகன் கோவில் மின்இழுவை ரெயில்நிலையம் முன்பு 'இந்துக்கள் மட்டும் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்' என்ற வாசகம் கொண்ட பேனர் மீண்டும் வைக்கப்பட்டது.

    கோவில் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு இந்து அமைப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    • சிறப்பு விருந்தினராக இஸ்ரோ முன்னாள் முதன்மை மேலாளரும், மூத்த விஞ்ஞானியுமான சிவ சுப்ரமணியன் கலந்து கொண்டார்.
    • மேலும் பள்ளியில் 12ம் வகுப்பு தேர்வில் 4 பாடங்களில் சதம் அடித்த மாணவி சரண்யா ஸ்ரீ என்பவருக்கு விருது வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் -மதுரை ரோடு யானைத்தெப்பம் பகுதியில் டி.பி.கே.என். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. பள்ளியின் 33வது ஆண்டு விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைவர் ராஜப்பன் தலைமை தாங்கினார். செயலாளர் வளசுப்பிரமணியன் வரவேற்புரை ஆற்றினார். நாட்டாமை ராக்கி, நாட்டாமை பொன்னுலிங்க நாடார் கலந்து கொண்டனர்.

    சிறப்பு விருந்தினராக இஸ்ரோ முன்னாள் முதன்மை மேலாளரும், மூத்த விஞ்ஞானியுமான சிவ சுப்ரமணியன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில்,

    விஞ்ஞானத்தில் இந்தியா அதிக வளர்ச்சி அடைந்து வருகிறது. நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 தரையிறங்கி சாதனை படைத்துள்ளது. உலகமே இந்தியாவை திரும்பி பார்க்க வைத்துள்ளது. மாணவர்கள் அறிவியல் கற்க ஆர்வம் காட்ட வேண்டும். குழந்தைகளுக்கு பெற்றோர் விஞ்ஞானம் சார்ந்த அறிவுரை வளர்க்க ஊக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

    மேலும் பள்ளியில் 12ம் வகுப்பு தேர்வில் 4 பாடங்களில் சதம் அடித்த மாணவி சரண்யா ஸ்ரீ என்பவருக்கு விருது வழங்கி பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் பொருளாளர் ராஜேஷ் கண்ணன், பள்ளி முதல்வர் ரத்னகலா மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க மாநில செயலாளர் ராஜசேகரன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
    • இந்த திட்டத்தில் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு பணிக்கொடை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

    திண்டுக்கல்:

    சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கம் சார்பில் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆக்னெஸ் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க மாநில செயலாளர் ராஜசேகரன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

    சட்டமன்ற தேர்தலின் போது தி.மு.க.வினர் வாக்குறுதி அளித்தபடி பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை (சி.பி.எஸ்.) ரத்து செய்ய வேண்டும். இந்த திட்டத்தில் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு பணிக்கொடை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

    நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டம் இன்று காலை 10 மணி வரை நடைபெற்றது. இதில் சங்க மாவட்ட செயலாளர் ஜஸ்டின், மாநில ஒருங்கிணைப்பாளர் பிரெடெரிக் எங்கெல்ஸ், தமிழ்நாடு வணிகவரி பணியாளர் சங்க மாவட்ட தலைவர் முனிராஜ் மற்றும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சீருடை பணியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    கோரிக்கை நிறைவேற்றப்படா விட்டால் அடுத்த மாதம் (செப்டம்பர்) 12ம் தேதி சென்னையில் 72 மணிநேர உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • முனீஸ்வரன் கொலை வழக்கு சம்பந்தமாக ஏற்கனவே 7 பேரை தாலுகா போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    • போலீசார் ரோந்து பணியில் வந்த போது அந்த வழியாக ஆம்னி வேனில் வந்த ஒருவரை மடக்கி பிடித்து விசாரித்ததில் சின்ன பொன்மாந்துறை யைச் சேர்ந்த மாசாணம் (37) என்பதும், முனீஸ்வரன் கொலை வழக்கில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகே உள்ள நடுமாலப்பட்டியைச் சேர்ந்தவர் முனீஸ்வரன் (வயது 29). பெயிண்டர். இவர் கடந்த ஜூலை 23ந் தேதி அவரது வீட்டில் கட்டிலில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு கும்பல் வீட்டுக்குள் புகுந்து அரிவாள், கத்தியால் சர மாரியாக வெட்டி முனீஸ்வ ரனை கொலை செய்தனர்.

    இது குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.முனீஸ்வரன் கொலை வழக்கு சம்பந்தமாக ஏற்கனவே 7 பேரை தாலுகா போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் நேற்று புறநகர் போலீஸ் துணை சூப்பிரண்டு உதயகுமார், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திர மோகன் தலைமையிலான போலீசார் பொன்மாந்துறை புதுப்பட்டி அருகே நல்லேந்திரபுரத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டி ருந்தனர்.

    அப்போது அந்த வழியாக ஆம்னி வேனில் வந்த ஒருவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.விசாரணையில் அவர் சின்ன பொன்மாந்துறை யைச் சேர்ந்த மாசாணம் (37) என்பதும், முனீஸ்வரன் கொலை வழக்கில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து மாசாணத்தை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ஆம்னி வேன் பறிமுதல் செய்யப்பட்டது.

    • மிகவும் பழமை யான இந்த கோவில் பழனி முருகன் கோவிலில் உப கோவிலாகும். இங்கு சனி க்கிழமை தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.
    • விழாவை யொட்டி தினசரி காலை பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் சப்பரத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    பழனி:

    பழனி பாலசமுத்திரத்தில் அேகாபில வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. மிகவும் பழமை யான இந்த கோவில் பழனி முருகன் கோவிலில் உப கோவிலாகும். இங்கு சனி க்கிழமை தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. அப்போது பழனி பாலசமுத்திரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்த ர்கள் திரளாக வந்து தரி சனம் செய்து வருகின்றனர்.

    ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் பிரம்மோற்சவ திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழா இன்று காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை யொட்டி தினசரி காலை பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் சப்பரத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவில் அனுமார், பவளக்கால், கருடன், ஷேசவாகனங்களில் பெருமாள் பவனி வருகிறார். தினசரி மாலையில் சொற்பொழிவு, இன்னிசை நிகழ்ச்சி நடைபெறும்.

    திருவிழாவின் 7வது நாளான 1ம் தேதி மாலை 5 மணிக்குமேல் அகோபில வரதராஜபெருமாள், ஸ்ரீதேவி, பூதேவிக்கு திருக்கல்யாணம் நடை பெறுகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோ ட்டம் 3ம் தேதி நடைபெறு கிறது. இதையொட்டி அன்று காலை 7 மணிக்கு தேரேற்றம், 7.45 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல், அதனை தொடர்ந்து தேரோட்டம் நடைபெறுகிறது.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை பழனி கோவில் நிர்வாகத்தி னர் செய்து வருகின்றனர்.

    • அறையில் உள்ள‌ க‌ழிவ‌றைக்கு சென்று பார்த்தபோது 2 பேரும் தூக்கிட்டு த‌ற்கொலை செய்து கொண்ட‌து தெரிய‌வ‌ந்த‌து.
    • தம்பதி தற்கொலை குறித்து ப‌ல்வேறு கோண‌ங்க‌ளில் கொடைக்கானல் போலீசார் விசார‌ணை மேற்கொண்டு வ‌ருகின்ற‌ன‌ர்.

    கொடைக்கானல்:

    மதுரை தல்லாகுளம் மீனாட்சிபுரம் சத்தியமூர்த்தி 6-வது தெருவில் மளிகை கடை நடத்தி வந்தவர் ராஜ்குமார்(46). இவரது மனைவி சித்ராபுஷ்பம் (42). இவர்களுக்கு கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணமாகி இதுவரை குழந்தை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் 2 பேரும் சித்ரா புஷ்பத்தின் தாயார் மாசிலாராஜபாண்டியுடன் (76) கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தனர்.

    கடந்த 3 தினங்களாக சுற்றுலாதலங்களை கண்டு ரசித்து விட்டு நேற்று இரவு பஸ் நிலையம் அருகே இருந்த தங்கும் அறைக்கு திரும்பியவர்கள் வெகு நேரம் முழித்திருந்து பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது. இதில் வயதான மாசிலா மூதாட்டி தூங்கிவிட்டதை தொடர்ந்து கணவன்-மனைவி 2 பேரும் கழிவறைக்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். அதிகாலையில் கண்விழித்த மூதாட்டி 2 பேரும் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

    அதனை தொடர்ந்து தங்கும் அறையில் உள்ள கழிவறைக்கு சென்று பார்த்தபோது 2 பேரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனால் பதட்டமான மூதாட்டி தங்கும் விடுதி மேலாளரிடமும் அடுத்தடுத்த அறைகளில் தங்கியிருந்தவர்களிடம் இது குறித்து தெரிவிக்கவே அவர்கள் கொடைக்கானல் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தற்கொலை செய்து கொண்ட தம்பதியின் உடல்களை மீட்டு கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கடன் பிரச்சனையில் தூக்கிட்டு தற்கொலை செய்தார்களா, திருமணமாகி பல ஆண்டுகளாக குழந்தை இல்லாத மனக்கவலையா அல்லது வேறு ஏதேனும் காரணமா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் கொடைக்கானல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் இந்த சம்பவத்தால் அண்ணாசாலை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • கொடைரோடு அருகேயுள்ள பள்ளபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்ட தொடக்க விழா நடைபெற்றது.
    • சிறப்பு அழைப்பாளராக திண்டுக்கல் எம்.பி. வேலுச்சாமி கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு காலை உணவுகளை வழங்கி பேசினார்.

    கொடைரோடு:

    கொடைரோடு அருகேயுள்ள பள்ளபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்ட தொடக்க விழா நடைபெற்றது. நிலக்கோட்டை தெற்கு தி.மு.க. ஒன்றிய செயலாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார். முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் அன்பழகன் முன்னிலை வகித்தார்.பள்ளித் தலைமை ஆசிரியை ஆனந்தகுமாரி வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளராக திண்டுக்கல் எம்.பி. வேலுச்சாமி கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு காலை உணவுகளை வழங்கி பேசினார். மேலும் பள்ளபட்டி, மெட்டூர், ஊத்துப்பட்டி பகுதியில் நேர, முழு நேர ரேசன் கடைகளை வேலுச்சாமி எம்.பி திறந்து வைத்தார். இந்த விழாவில் நிலக்கோட்டை தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் சவுந்திரபாண்டியன், ஒன்றிய அவைத் தலைவர் அழகர்சாமி, ஒன்றிய கவுன்சிலர் லலிதாமணிகண்டன், பள்ளபட்டி ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் சதீஸ்குமார், ஒன்றிய துணைச் செயலாளர்கள் நெடுமாறன், வெள்ளிமலை,தி.மு.க. நிர்வாகிகள் கணேசன், ராஜேந்திரன், கருப்பு, பாண்டி மற்றும் அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் அமைச்சர் அர.சக்கரபாணி கலந்துகொண்டு 120 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
    • பின்னர், கள்ளிமந்தையம் திருப்பதி அருள்நெறி மேல்நிலைப்பள்ளியில் குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் அமைச்சர் அர.சக்கரபாணி கலந்துகொண்டு ரூ.33 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, ரூ.14.15 கோடி மதிப்பீட்டில் பள்ளிகளில் புதிய கட்டிட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 120 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

    பழனி ஊராட்சி ஒன்றியம், மேலக்கோட்டை ஊராட்சி, பெருமாள்நாயக்கன்வலசு கிராமத்தில் ரூ.10லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய சமுதாயக்கூடம், எரமநாயக்கன்பட்டியில் ரூ.23.57 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் ஆகியவை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் கால்நடை பராமரிப்பு நடைமுறை மூலதனக்கடனாக 63 பயனாளிகளுக்கு தலா ரூ.56,000 கடனுதவி வழங்கினார்.

    தொடர்ந்து ஒட்டன்சத்திரம் கே.ஆர்.அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நபார்டு திட்டத்தில் ரூ.2.6 கோடி மதிப்பீட்டில் 12 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம், தனியார் பங்களிப்புடன் ரூ.6.00 கோடி மதிப்பீட்டில் 36 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் என ரூ.8.60 கோடி மதிப்பீட்டில் 48 வகுப்பறைகள் கொண்ட கட்டிடங்கள் கட்டுவதற்கும், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பரப்பலாறு அரசு மேல்நிலைப்பள்ளியில் நபார்டு திட்டத்தில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் 14 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம், மேல்கரைப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் ரூ.1.45 கோடி மதிப்பீட்டில் 5 வகுப்பறை கட்டிடம் மற்றும் ஆய்வுக்கூடம் கட்டுவதற்கும், கொக்கரக்கண்வலசு அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.1.10 கோடி மதிப்பீட்டில் 5 வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கும் என மொத்தம் ரூ.14.15 கோடி மதிப்பீட்டில் பள்ளி வகுப்பறை கட்டுமான பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

    அம்பிளிகை ஜேக்கப் நினைவு கிறித்துவ கல்லூரியில் நடைபெற்ற விழாவில் பெரியகோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி, அம்பிளிக்கை சாந்தி நிகேதன் மேல்நிலைப்பள்ளி, ஓடைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த 120 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் மற்றும் குறு வட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். பின்னர், கள்ளிமந்தையம் திருப்பதி அருள்நெறி மேல்நிலைப்பள்ளியில் குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.

    இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்திலகவதி, ஒட்டன்சத்திரம் நகர் மன்ற தலைவர் திருமலைசாமி, நகர்மன்ற துணைத் தலைவர்வெள்ளைச்சாமி, நகராட்சி ஆணையாளர் மீனா, பழனி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்ஈஸ்வரி கருப்புச்சாமி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்சங்கீதா பழனிச்சாமி, பழனி வருவாய் கோட்டாட்சியர்சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள்ரவீந்திரன், தாஹிரா, மாவட்ட கல்வி அலுவலர்(பழனி) பரிமளா, ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர்முத்துசாமி, ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மத்திய அரசின் மூலம் 4 வழிச்சாலையில் நடைமேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவ-மாணவிகள் வலியுறுத்தினர்.
    • பல்கலைக்கழகத்தில் பயிலும் முதலாம் ஆணடு மாணவிகளுக்கு விடுதி வசதி இல்லை என நிர்வாகம் அறிவித்துள்ளது.

    சின்னாளபட்டி:

    காந்திகிராமிய பல்கலைக்கழகத்தில் பி.டெக் படித்து வந்த சிறுநாயக்கன் பட்டியை சேர்ந்த மாணவன் வீரகார்த்திக் (20) என்பவர் பல்கலைக்கழக நுழைவாயில் அருகே விபத்தில் பலியானார். இதனைதொடர்ந்து மாணவ-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பதிவாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாக அதிகாரிகள், அம்பாத்துறை, சின்னாளபட்டி போலீசார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மத்திய அரசின் மூலம் 4 வழிச்சாலையில் நடைமேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவ-மாணவிகள் வலியுறுத்தினர். மேலும் கூட்டத்தில் கலந்து கொண்ட மாணவிகள் தெரிவிக்கையில், பல்கலைக்கழகத்தில் பயிலும் முதலாம் ஆணடு மாணவிகளுக்கு விடுதி வசதி இல்லை என நிர்வாகம் அறிவித்துள்ளது.

    இதனால் பல மாணவிகள் ஒன்று சேர்ந்து அம்பாத்துறை, சின்னாளபட்டி பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கி வருகிறோம். இரவு நேரங்களில் மாணவிகள் தனியாக வீட்டுக்கு வரும் போது மோட்டார் சைக்கிளில் செல்லும் வாலிபர்களால் பாலியல் தொல்லை நடக்கிறது. இதனை வெளியில் சொல்லவும் பயமாக இருப்பதால் மாணவிகள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வ்ருகிறது.

    எனவே இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். அப்போது கூட்டத்தில் கலந்து கொண்ட போலீசார் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்போது உடனடியாக போலீசாரை அழைத்தால் நாங்கள் சம்பவ இடத்திற்கு வருவோம் என்றனர். ஆலோசனை கூட்டத்திலேயே மாணவிகள் இதுபோன்ற குற்றசாட்டை அதிகாரிகள் முன்னிலையில் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

    • நாகர்கோவில் மாவட்டம் தோவாளை சுடலை மாடசாமி கோவில் நிர்வாகிகள் சந்தித்து பாதாம் பருப்பு, முந்திரிப் பருப்பு, உலர் திராட்சை பிஸ்தா, செரி பழ மாலை சுவாமிக்கு படைக்க ஆர்டர் கொடுத்தனர்.
    • பூக்களால் உருவான மாலைகளை போன்று உலர் பொருட்களால் உருவான மாலை மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள பழைய காமன்பட்டியை சேர்ந்தவர் செல்வகுமார். இவர் நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் பூக்கட்டி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவரை நாகர்கோவில் மாவட்டம் தோவாளை சுடலை மாடசாமி கோவில் நிர்வாகிகள் சந்தித்து பாதாம் பருப்பு, முந்திரிப் பருப்பு, உலர் திராட்சை பிஸ்தா, செரி பழ மாலை சுவாமிக்கு படைக்க ஆர்டர் கொடுத்தனர்.

    ஆவணி மாத திருவிழாவிற்கு சுமார் 350 கிலோ எடை கொண்ட 3 மாலைகள் கட்டப்பட்டு நாகர்கோவில் மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டது. இம்மாலையை இப்பகுதி பொதுமக்கள் ஆச்சரியத்தோடு பார்த்தனர். பூக்களால் உருவான மாலைகளை போன்று உலர் பொருட்களால் உருவான மாலை மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது.

    இது குறித்து மாலை கட்டியவர் கூறியதாவது, பாதாம், பிஸ்தா, கருப்பு உலர் திராட்சை ,செரி பழம், பருப்பு ஆகிய பொருட்கள் கொண்டு சுமார் 350 கிலோ எடையில் மாலை செய்யப்பட்டுள்ளது. மாலை செய்வதற்கு சுமார் ரூ.3.50 லட்சம் வரை செலவாகும் என தெரிவித்தார்.

    • பெரும்பாலான காய்கறிகள் விலை குறைந்தபோதும் அதிகளவு காய்கறிகள் கொள்முதல் செய்யப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    • இன்று ஒரேநாளில் மட்டும் ரூ.5 கோடிக்கு காய்கறிகள் கொள்முதல் செய்யப்பட்டன.

    ஒட்டன்சத்திரம்:

    கேரளாவில் பிரசித்திபெற்ற ஓணம் பண்டிகை வருகிற 29-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதேபோல் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் மலையாள மக்களால் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

    கேரளாவிற்கு அதிகளவு காய்கறிகள் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் இருந்து அனுப்பப்படுவது வழக்கம். மார்க்கெட்டில் சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்படும் நிலையில் இன்று ஓணம் பண்டிகைக்காக மார்க்கெட் செயல்பட்டது.

    இதனால் பல்வேறு ஊர்களில் இருந்து காய்கறிகள் அதிகளவு கொண்டுவரப்பட்டன. பெரும்பாலான காய்கறிகள் விலை குறைந்தபோதும் அதிகளவு காய்கறிகள் கொள்முதல் செய்யப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் விவசாயிகளுக்கு போதுமான விலை கிடைக்கவில்லை என ஆதங்கம் தெரிவித்தனர்.

    இன்று ஒரேநாளில் மட்டும் ரூ.5 கோடிக்கு காய்கறிகள் கொள்முதல் செய்யப்பட்டன. வழக்கமாக ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் இருந்து 70 லாரிகளில் காய்கறிகள் அனுப்பி வைக்கப்படும். இன்று 300 லாரிகளில் காய்கறிகள் கொண்டு செல்லப்பட்டது.

    சேம்பைகிழங்கு கிலோ ரூ.25, பீட்ரூட் ரூ.10, கத்தரிக்காய் ரூ.15 முதல் ரூ.20, புடலங்காய் ரூ.12, வெண்டை ரூ.20, பாகற்காய் ரூ.18, சுரக்காய் ரூ.7 முதல் ரூ.15, பூசணிக்காய் ரூ.7, அவரை ரூ.35 முதல் ரூ.55, கொத்தவரை ரூ.18, மரமுருங்கை ரூ.9, கரும்பு முருங்கை ரூ.10, பச்சை மிளகாய் ரூ.32, பல்லாரி ரூ.18, சின்னவெங்காயம் ரூ.35 முதல் ரூ.50, தக்காளி ஒரு பெட்டி ரூ.300 முதல் ரூ.500 என கொள்முதல் செய்யப்பட்டது.

    கடந்த 2 நாட்களாக தக்காளி ஒரு பெட்டி ரூ.300 வரையிலேயே கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் இன்று தேவை அதிகரிப்பின் காரணமாக ரூ.500 வரை கொள்முதல் செய்யப்பட்டது. இது விவசாயிகளுக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்தியது.

    ஓணம் பண்டிகையை முன்னிட்டு இன்றும், நாளையும் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த பல்வேறு மாவட்டங்களுக்கு ஒட்டன்சத்திரத்தில் இருந்து காய்கறிகள் அனுப்பி வைக்கப்படும் என்றும், திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமையில் விடுமுறை எனவும் வியாபாரிகள் தெரிவித்தனர். இதன் காரணமாக பல்வேறு ஊர்களில் இருந்து விவசாயிகள் அதிகளவு காய்கறிகளை கொண்டு வந்தனர்.

    • கடந்த மாதம் 20-ந்தேதி உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது
    • உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2 கோடியே 69 லட்சத்து 29 ஆயிரத்து 944 வருவாய் கிடைத்தது.

    பழனி:

    பழனி முருகன் கோவிலில் கடந்த மாதம் 20-ந்தேதி உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இந்தநிலையில் நேற்றும் பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில் கோவில் அலுவலர்கள், வங்கி பணியாளர்கள், பழனியாண்டவர் கல்லூரி மாணவிகள் என 100-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.

    உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2 கோடியே 69 லட்சத்து 29 ஆயிரத்து 944 வருவாய் கிடைத்தது. மேலும் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 826 செலுத்தப்பட்டிருந்தது. இதுதவிர தங்க சங்கிலி, மோதிரம், வேல் உள்ளிட்ட தங்கத்திலான பொருட்கள் 925 கிராம், வெள்ளியிலான வேல், பாதம் உள்ளிட்ட பொருட்கள் என 12 கிலோ 162 கிராம் ஆகியவையும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.

    ×