என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • குடி பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ள மகனை தாய் தொடர்ந்து கண்டித்தார்.
    • இதனால் வழக்கம் போல் குடித்து விட்டு வீட்டிற்கு வந்த மகனுக்கும் அவரது தாய்க்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் அண்ணா நகரை சேர்ந்த கபிரியேல் கிங் மனைவி ஜெலின் மேரி (வயது56). இவருக்கு ஜான் வினோத்குமார் என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர். அண்ணா நகர் பகுதியில் உள்ள இவர்களது வீட்டின் மேல் பகுதியில் ஜெலின் மேரி மற்றும் இவரது மகள்கள், கணவருடன் வசித்து வருகின்றனர். கீழ்ப்பகுதியில் மகன் ஜான் வினோத்குமார் வசித்து வருகிறார். ஜான் வினோத்குமார் குடி பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதை ஜெலின் மேரி தொடர்ந்து கண்டித்தார்.

    இருந்தபோதும் அவர் குடி பழக்கத்ைத நிறுத்தவில்லை. இதனால் வழக்கம் போல் குடித்து விட்டு வீட்டிற்கு வந்த ஜான் வினோத்குமாருக்கும் அவரது தாய்க்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஜான் வினோத்குமார் தனது தாய் மேரி திட்டுவதால் மனம் உடைந்து தொடர்ந்து என்னை திட்டுவதால் நான் இறந்து விடுகிறேன் என்று கூறி தான் வைத்திருந்த மது பாட்டிலில் விஷத்தை கலந்து குடித்துள்ளார்.

    உன்னுடைய குடிப்பழக்கத்தை என்னால் நிறுத்த முடியவில்லை நான் கண்டித்தும் நீ திருந்த போவதில்லை என்று தாய் ெஜலின் மேரியும் மகன் வைத்திருந்த விஷம் கலந்த மதுவை குடித்து விட்டார். சற்று நேரத்தில் இருவரும் மயக்கம் அடைந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த கபிரியேல்கிங் தனது உறவினர்கள் உதவியுடன் மகன் மற்றும் மனைவியை கொடைக்கானல் அரசுஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக இருவரும் தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் வழியிலேயே ஜெலின் மேரி பரிதாபமாக பலியானார். மகன் ஜான் வினோத்குமார் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து கொடைக்கானல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • திருச்சியில் பதுங்கி இருந்த கலையரசனை நகர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
    • நகை, மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் கோவிந்தாபுரத்தைச் சேர்ந்தவர் சேகர்.இவரது மனைவி ராணி (வயது 62). இவர் கடந்த 19ந் தேதி கிழக்கு கோவிந்தாபுரம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் மூதாட்டி ராணியிடம் 2½ பவுன் செயினை பறித்து மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். இது குறித்து திண்டுக்கல் நகர் மேற்கு போலீசில் ராணி புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து மூதாட்டியிடம் செயினை பறித்துச் சென்ற நபர்களை பிடிக்க திண்டுக்கல் எஸ்.பி. பாஸ்கரன் தனிப்படை போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    அதனைத் தொடர்ந்து டவுன் டி.எஸ்.பி.கோகுல கிருஷ்ணன் மேற்பார்வையில், நகர் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் மலைச்சாமி, நகர் உட்கோட்ட குற்றப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் வீரபாண்டியன், ஜார்ஜ் எட்வர்டு, தலைமை காவலர்கள் முகம்மது அலி, விசுவாசம், சக்திவேல் ஆகியோர் இணைந்து அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது ராணியின் செயினை மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் பறித்துச் செல்வது போலீசாருக்கு தெரியவந்தது. அந்த காட்சியில் பதிவான வாலிபர்களின் புகைப்படம் மூலம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    அதில் அவர்கள் பெரம்பலூர் மாவட்டம் அய்யலூரைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரது மகன் கலையரசன்(24), திருச்சி மாவட்டம் சங்கிலியாண்டபுரத்தைச் சேர்ந்த பாரதி என்பதும், இவர்கள் 2 பேர் மீதும் திருச்சி மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் செயின் பறிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து திருச்சியில் பதுங்கி இருந்த கலையரசனை நகர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 2½ பவுன் நகை, மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள பாரதியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • திண்டுக்கல் மறை மாவட்டம் சின்ன பொன்னி மாந்துரை புதுப்பட்டியில் இருந்து பாதயாத்திரையாக பக்தர்கள் இன்று சென்றனர்.
    • நாளை முதல் செப்டம்பர் 9ஆம் தேதி வரை 60 சிறப்பு பஸ்கள் இரவு பகலாக இயக்கப்படுகிறது.

    திண்டுக்கல்:

    வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா ஆலயத் திருவிழா வருடந்தோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா நாளை மறுநாள் (29ம் தேதி) ெகாடியேற்றத்துடன் தொடங்குகிறது. செப்டம்பர் 9ஆம் தேதி வரை திருவிழா நடைபெறுகிறது.

    இந்த திருவிழாவிற்கு தமிழகம் மற்றும் வெளி மாநில ங்களில் இருந்து ஏரா ளமா னோர் பாதயாத்திரையாக சென்று வழிபாடு நடத்துவது வழக்கம்.

    தி ண் டு க் க ல் மறை மாவட்டம் சின்ன பொன்னி மாந்துரை புதுப்பட்டியில் இருந்து பாதயாத்திரையாக பக்தர்கள் இன்று சென்றனர். அல ங்கரிக்கப்பட்ட தேரி ல்மாதா சொரூபம் மல ர்களால் அலங்கரி க்கப்பட்டு பக்தர்கள் இழுத்து சென்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை 50க்கும் மேற்பட்டோர் பாதையாத்திரை சென்றனர்.

    புனித வேளாங்கண்ணி மாதாவை தரிசிக்க செல்லும் பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு போக்குவரத்து கழகம் மதுரை கோட்டம் சார்பில் சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கலில் இருந்து வேளாங்கண்ணிக்கும், வேளாங்கண்ணியில் இருந்து திண்டுக்கலுக்கும் பக்தர்களி ன் தேவைக்கேற்ப, நாளை முதல் செப்டம்பர் 9ஆம் தேதி வரை 60 சிறப்பு பஸ்கள் இரவு பகலாக இயக்க ப்படுகிறது.

    இதனை கண்கா ணிக்க திண்டு க்கல்லிலும் வேளா ங்கண்ணியிலும் மேலாளரின் தலைமையில் 2 தனி குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று மேலாண் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

    • குடும்பத்தினர் கை விட்ட நிலையில் நீண்ட தலைமுடி, தாடியுடன் அழுக்கான உடையில் சுற்றித் திரிந்த அவரை சமூக ஆர்வலர் குளிக்க வைத்து புதிய உடைகள் அணிவி த்தார்.
    • ஆதரவின்றி சுற்றித் திரிபவர்களுக்கு உணவு மற்றும் புதிய உடைகளை கொடுத்து வருகிறேன். என் வாழ்நாள் முழுவதும் இந்த பணியில் ஈடுபடுவேன் என்றார்.

    ஒட்டன்சத்திரம்:

    மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் நிஷார்சேட் (வயது 55). இவர் திண்டுக்கல் மாவட்டம் இடை யகோட்டை, கள்ளிம ந்தயம், ஒட்டன்சத்திரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் வருகிறார். அப்பகுதியில் சுற்றித் திரியும் ஆதரவற்ற வர்களை மீட்டு அவர்களை சுத்தம் செய்து புதிய ஆடைகள் அணிவித்து உணவு வாங்கி கொடுக்கிறார்.

    இடையகோட்டை அருகே வெரியப்பூர் பகுதியில் சுற்றித் திரிந்த 40 வயது மதிக்கத்தக்கவரை அவர் மீட்டார். குடும்பத்தினர் கை விட்ட நிலையில் நீண்ட தலைமுடி, தாடியுடன் அழுக்கான உடையில் சுற்றித் திரிந்த அவரை நிஷார் சேட் குளிக்க வைத்து புதிய உடைகள் அணிவி த்தார்.

    இது குறித்து அவர் கூறுகையில், தமிழக த்தில் உள்ள அனைத்து மாவ ட்டங்கள் மற்றும் கேரள, பாண்டிச்சேரி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று மன நலம் பாதிக்கப்பட்டு ஆதரவின்றி சுற்றித் திரிபவர்களுக்கு உணவு மற்றும் புதிய உடைகளை கொடுத்து வருகிறேன். என் வாழ்நாள் முழுவதும் இந்த பணியில் ஈடுபடுவேன் என்றார்.

    • மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான மங்கத் ராம் சர்மா பல்வேறு துறை களின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார்.
    • அனைத்து துறை அலு வலர்களும் தன்னலமற்று, ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அனைத்து துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    திண்டுக்கல்:

    கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான மங்கத் ராம் சர்மா, மாவட்ட கலெக்டர் பூங்கொடி தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில் பல்வேறு துறை களின் சார்பில் மே ற்கொள்ள ப்பட்டு வரும் பல்வேறு திட்ட ப்பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார்.

    ஆய்விற்கு பின்னர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மங்கத் ராம் சர்மா தெரிவித்ததாவது:- அனைத்துத்துறை அரசு அலுவலர்களையும் ஒருங்கிணை த்து, துறையின் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து, சம்பந்தப்பட்ட முதன்மை அலுவலர்களுடன் மாதந்தோறும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதன்படி வருவாய் மற்றும் பேரிடர் மேலா ண்மைத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி த்துறை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், வேளாண்மைத்துறை, தோட்ட க்கலைத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை, கல்வித்துறை, கூட்டுறவுத்துறை, கால்நடைப் பராம ரிப்புத்துறை, பொது ப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில், துறை ரீதியாக செய ல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் அதன் பயன்கள், தேவையான நிதிநிலைகள் மற்றும் செல வினங்கள் ஆகியன குறித்தும், துறைகளின் சார்பில் நடைபெற்று வரும் பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் ஆகியன குறித்தும் துறை சார்ந்த அலுவல ர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படு த்தப்படவுள்ள கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் நடைபெற்ற முகாம்களின் செயல்பாட்டுப் பணிகள், அரசு பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டம், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம், நமக்கு நாமே திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் ஆகியவைகளின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை வசதி, மின்சாரம், தெருவிளக்கு, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல்,

    வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குதல், விளையாட்டு த்திடல் மற்றும் புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம், மக்களை தேடி மருத்துவத் திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம், விவசாயிகள் பயன்பெறும் வகையில் தரிசு நிலத்தை சாகுபடிக்கு கொண்டு வருதல், வனத்துறையின் சார்பில் மரம் நடுதல் மற்றும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளில் மேற்கொ ள்ளப்பட வேண்டிய பணிகள் ஆகியன குறித்தும், தேவையான நிதிநிலைகள் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    வருவாய் துறை மூலம் வழங்கப்படும் சான்றிதழ்கள் மற்றும் ரேசன் விலை க்கடையின் செயல்பாடுகள் மாணவர்கள் கல்வி கற்பதற்கு வழங்க ப்பட்டுள்ள கல்வி உபகர ணங்கள் ஆகியன தொட ர்பாகவும், வட்டார போக்கு வரத்து அலு வலகத்தின் செய ல்பாடுகள் மற்றும் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு ள்ள விபரங்கள் உள்ளிட்டவைகள் தொட ர்பாகவும் ஆய்வு மேற்கொ ள்ளப்பட்டது.

    பொது மக்களின் நலன் கருதிஅரசால் செய ல்படுத்தப்படும் திட்டங்களை விரைந்து செயல்படுத்திட அனைத்து துறை அலு வலர்களும் தன்னலமற்று, ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அனைத்து துறை அலுவல ர்களுக்கும் அறிவுறுத்தப்ப ட்டுள்ளது என தெரிவித்தார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சேக் முகையதீன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் திலகவதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவி யாளர்கள் கோட்டை குமார்(பொது), (வளர்ச்சி) ராணி, வேளாண்மை இணை இயக்குநர் அனுசுயா, மாநகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி, வட்டார போக்கு வரத்து அலுவலர் சுரேஷ், வருவாய் கோட்டா ட்சியர்கள் சரவணன், ராஜா, திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் கமலக்கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சிறிது தொலைவில் பழங்காலத்தில் மழை அளவை குறிக்கும் கல் மழைமானி ஒன்று உள்ளது.
    • இம் மழைமானி ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது.இவை அனைத்தும் வேடசந்தூர் -ஈசநத்தம், சாலையில் சங்கர்னாபட்டி அருகே குளக்கரையில் அருகே உள்ளது நடுகல்கள் தற்போது வழிபாட்டில் உள்ளது.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் வேடசந்தூர்-ஈசநத்தம் சாலையில் சங்கர்னாபட்டி அருகில் உள்ள குளக்கரையில் திண்டுக்கல் வரலாற்று ஆய்வு குழுவினர் விஸ்வநாததாஸ், வரலாற்று மாணவர் ரத்தின முரளிதர் மற்றும் வரலாற்று ஆர்வலர்கள் சந்திரசேகர்,உமா மகேஸ்வரன், பெருமாள்சாமி ஆகியோர் நடுகல் ஆய்வு மேற்கொண்டனர்.

    இது குறித்து அவர்கள் கூறியதாவது:-

    வீரனின் கொண்டை இடது புறம் சரிந்தும் காதுகள் தொல்லக் காதகவும் முகத்தில் மீசை முறுக்கியபடியும் கழுத்தில் நெஞ்சணி ஆரமும் வலது கை மழுவை ஊன்றிய நிலையிலும் இடை வாரில் குறு வாளும் இடைக் கச்சையும் அதன் மேல் உதர பந்தமும் காலில் தண்டை உடன் நிற்கிறார்.அவரின் மனைவி கொண்டை இடது புறம் சரிந்தும் கொண்டையிலிருந்து கெண்டைக்கால் வரை திரை சேலை மாலை போல் தொங்கிய நிலையும் காதுகளில் வலயமும் நெஞ்சில் பதக்கமும் வலது கையில் தீ பந்தமும் இடைக் கச்சை ஆடை கெண்டைக்கால் வரை சுருள் ஆடையும் இடது கையில் மது குடுவையும் உள்ளது.வீரன் இறந்து பட்டதும் வீரனுடன் உடன் கட்டை ஏறினாள்.

    முறுக்கிய மீசையும் காதில் குண்டலமும் இடது புறம் சரிந்த கொண்டையும் நெற்றியில் தலை முடியோடு சேர்த்த கிரீடமும் கழுத்தில் நெஞ்சணி ஆரமும் மார்பில் சன்ன வீரமும் இரு தோளில் பீதாம்பரமும் வலது கையில் வேலும் இடது கையில் வில்லும் இரு தோளில் லாகு வளையமும் கழுத்தை சுற்றி தோள் வழியே குரங்கு சொறி என்னும் மாலையும் வலது கைக்கு கீழே பசுவும் இடையில் உதரபந்தமும் இடைவாரில் குறு வாளும் இடைக் கச்சை சுருக்கத்துடன் முழங்கால் வரை வலது கை ஓரம் அம்பார துணி உள்ளது.

    இவ்வீரன் போர் கலையில் திறமையாக இருப்பான் இவ்விரு நடுகல் சிற்பமும் பதினேழாம் நூற்றாண்டை சேர்ந்தது. அக்கால கிராமங்களில் மாடு வளர்ப்பவர்கள் தம் தேவை போக சிறிதளவு பாலை பிள்ளை பால் என்று ஊர் கோவில் அல்லது ஊர் சாவடி அருகில் ஒரு அடி குழி உள்ள சதுர கல்லில் ஊற்றுவர். இதை ஆடு மாடு இல்லாத மக்கள் இப்பாலை தம் குழந்தைகளுக்கு எடுத்து செல்வர்.

    இப் பால் கல் தொட்டி ஒன்று உள்ளது.அக்கால மக்கள் இதை தர்மமாக செய்தனர்.அதில் இருந்து சிறிது தொலைவில் பழங்காலத்தில் மழை அளவை குறிக்கும் கல் மழைமானி ஒன்று உள்ளது.இம் மழைமானி செம்பாறை கல்லால் ஆனது.இம் மழைமானி ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது.இவை அனைத்தும் வேடசந்தூர் -ஈசநத்தம், சாலையில் சங்கர்னாபட்டி அருகே குளக்கரையில் அருகே உள்ளது நடுகல்கள் தற்போது வழிபாட்டில் உள்ளது.

    • வார விடுமுறையான இன்று பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
    • சிலர் பால்குடம், காவடி எடுத்தும், படிப்பாதையில் படிப்பூஜை செய்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    பழனி:

    தமிழகத்தின் சிறந்த ஆன்மீக தலமாகவும் முருகபெருமானின் 3ம் படை வீடாகவும் பழனி முருகன் கோவில் திகழ்கிறது. இங்கு சாமி தரிசனம் செய்ய தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

    திருவிழா காலங்கள் மட்டுமின்றி சுபமுகூர்த்தம், பண்டிகை நாட்கள் மற்றும் வார விடுமுறை நாட்களில் முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அந்த வகையில் வார விடுமுறையான இன்று பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

    சிலர் பால்குடம், காவடி எடுத்தும், படிப்பாதையில் படிப்பூஜை செய்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். படிப்பூஜை செய்யும் பக்தர்கள் சிலர் பக்தர்கள் செல்லும் பாதையில் சூடம் ஏற்றி வழிபட்டனர். இது நடந்து செல்லும் பக்தர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது. படிபாதையில் சூடம் ஏற்றி வழிபட கோவில் நிர்வாகம் சார்பில் தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதுமட்டுமின்றி மலைக்கோவிலின் தரிசன வழிகள், வெளிப்பிரகாரம், படிப்பாதை ஆகிய இடங்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அடிவாரத்தில் இருந்து கூட்டம் காரணமாக நீண்ட நேரம் காத்திருந்த பின்பே பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மலைக்கோவிலுக்கு முருகனை தரிசிக்க அதிகாலையில் இருந்தே பல்வேறு வாகனங்களில் பக்தர்கள் பழனிக்கு வந்ததால் அடிவாரம் ரோடு, பூங்காரோடு, கிரி வீதி ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாமி தரிசனம் செய்தபின்பு ஊருக்கு திரும்புவதற்காக பக்தர்கள் பழனி பஸ் நிலையத்தில் குவிந்தனர். இதனால் பஸ்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    • அநியாயமாக கலப்படத்தை காரணம் காட்டி அந்த உரிமையை தமிழ்நாடு அரசு பறித்துக் கொண்டது.
    • எனவே இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு கள் இறக்குவதற்கு விதித்துள்ள தடையை நீக்க வேண்டும்.

    கொடைக்கானல்:

    தமிழ்நாடு கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கொடை க்கானலில் நிருப ர்களுக்கு பேட்டி யளித்தார். அப்போது அவர் கூறுகை யில், தமிழ்நாடு அரசிடம் கள் இறக்க அனுமதி வழங்கவும் கள்ளுக்கடை களை திறக்க கோருவதும் அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானவை என்று கூறுவது புரிதல் இன்மையின் வெளிப்பாடு ஆகும். 1950 ஜனவரி 26ஆம் தேதி அரசியல் அமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்தது அந்த சட்டம் கொடுத்திருக்கும் உணவு தேடும் உரிமைதான் கள் இறக்குவதும், பருகுவதும்.

    ஆனால் அநியாயமாக கலப்படத்தை காரணம் காட்டி அந்த உரிமையை தமிழ்நாடு அரசு பறித்துக் கொண்டது. பாண்டிச்சேரி, கேரளா, தெலுங்கானாவில் ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் மற்றும் உலக அளவில் எங்கும் கள்ளுக்கு தடை கிடையாது. அங்கும் கலப்படம் செய்வார்கள். அதனை அந்த மாநில அரசுகள் தடுக்கும். ஆனால் தமிழ்நாட்டில் கலப்படத்தை கட்டுபடுத்தமுடியவில்லை என்று கூறி தடை விதிக்க ப்பட்டுள்ளது. கள் மருத்துவ குணம் கொண்டதாகும்.

    ஜனவரி 21 ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் கள் இறக்கி சந்தைப்ப டுத்தப்படும். எங்களது உரிமையை பறித்துக் கொண்டார்கள் எனவும் இனிமேல் அந்த உரிமையை பறிப்பதற்கு விடமாட்டோம். கேரளாவில் கள்ளுக்கு தடை இல்லை. மதுபான கடைகளில் கள் விற்ப னையை டப்பா க்களில், பாட்டில்களில் , டின்களில் சந்தைப்படுத்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

    எனவே இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு கள் இறக்குவதற்கு விதித்துள்ள தடையை நீக்க வேண்டும். இந்தியாவில் உள்ள 8 கோடி பனை மரங்களில் 5 கோடி பனை மரங்கள் தமிழ்நாட்டில் உள்ளது. முக்கிய இடங்களில் கள் சந்தை படுத்தும் போது தமிழகத்துக்கு வருவாய் அதிகரிக்கும் என்றார்.

    • நகர் பகுதி மற்றும் பல்வேறு இடங்களில் கூட்டம் அலைமோதி காணப்பட்டது.
    • சீதோஷ்ணம் நிலவியதால் நட்சத்திர ஏரியில் உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசி யான கொடை க்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். வெயிலின் தாக்கம் குறைந்து குளுமையான சீதோசனம் நிலவி வருவதால் மலை ஸ்தலங்களுக்கு பொதுமக்கள் படையெடுக்க தொடங்கி உள்ளனர்.

    இன்று கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது. நகர் பகுதி மற்றும் பல்வேறு இடங்களில் கூட்டம் அலைமோதி காணப்பட்டது.

    இன்று வாரவிடுமுறை என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தந்தனர்.

    இதனால் முக்கிய சுற்றுலா இடங்களான பைன் பாரஸ்ட், தூண்பாறை, குணா குகை, பிரையண்ட் பூங்கா, கோக்கர்ஸ் வாக், செட்டியார் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அதிகரித்து காண ப்பட்டது. மேலும் இதமான சீதோஷ்ணம் நிலவியதால் நட்சத்திர ஏரியில் உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். மேலும் ஏரிச்சாலையில் சைக்கிள் மற்றும் குதிரை சவாரி செய்தனர். சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால் வியாபாரிகள், ஓட்டல் உரிமையாளர்கள் உள்பட சுற்றுலா தொழிலை நம்பியுள்ளவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். 

    • திண்டுக்கல் கிழக்கு தாலுகா, பெரியகோட்டை ஊராட்சி, பில்லமநாயக்க ன்பட்டி ஊரின் வழியே செல்லும் சந்தனவர்தினி ஆற்றின் அருகே அமை ந்துள்ளது நமச்சிவாயம் குளம்.
    • மரங்களை தன்னலத் தேவைக்காகவும், அரசின் அனுமதியின்றி சட்டத்திற்கு எதிராகவும், வெட்டி விற்பனை செய்து வருகின்றனர்.

    ண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே தீத்தம்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். சமூக ஆர்வலர். இவர் மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு அளித்தார். அந்த புகாரில் கூறியிரு ப்பதாவது, திண்டுக்கல் கிழக்கு தாலுகா, பெரியகோட்டை ஊராட்சி, பில்லமநாயக்க ன்பட்டி ஊரின் வழியே செல்லும் சந்தனவர்தினி ஆற்றின் அருகே அமை ந்துள்ளது நமச்சிவாயம் குளம்.

    இதன் மூலம் சுற்றுவட்டார 5க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு நிலத்தடி நீர் ஆதாரமாக இருந்து வருகிறது. இதில் மரங்கள் அதிகம் உள்ளது. மரங்களை தன்னலத் தேவைக்காகவும், அரசின் அனுமதியின்றி சட்டத்திற்கு எதிராகவும், வெட்டி விற்பனை செய்து வருகின்றனர்.

    அந்த மர்ம நபர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொ ள்ளவும், மேலும், இனிவரும் காலங்களில், இதுபோன்ற சட்டவிரோத செயல்பாடுகள் நடை பெறாமல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு தடுக்கவும் இயற்கை வளத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    • திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 38 மெட்ரிக், சி.பி.எஸ்.இ.பள்ளிகளில் இருந்து மாணவ- மாணவிகள் கலந்து கொ ண்டனர்.
    • இந்த விழாவில் பேச்சு, கட்டுரை ஓவியம், சமையல், விளம்பரம், நடிப்பு, வினாடி-வினா, அறிவியல் கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.

    நத்தம்:

    நத்தம் என்.பி.ஆர். கல்லூரியில் பள்ளி மாணவ- மாணவிகளு க்கான தேசிய ஒருமைப்பாடு கலை விழா நடந்தது. இதில் திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 38 மெட்ரிக், சி.பி.எஸ்.இ.பள்ளிகளில் இருந்து 3 ஆயிரத்து 800 மாணவ- மாணவிகள் கலந்து கொ ண்டனர். இந்த விழாவில் பேச்சு, கட்டுரை ஓவியம், சமையல், விளம்பரம், நடிப்பு, வினாடி-வினா, அறிவியல் கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.

    இந்த போட்டியில் 11, 12 -ம் வகுப்பு பிரிவில் மதுரை வேலம்மாள் போதி கேம்பஸ் பள்ளி அதிக புள்ளிகள் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தையும், 9,10-ம் வகுப்பு பிரிவில் திண்டுக்கல் அச்யுதா சி.பி.எஸ்.இ. பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் தட்டிச் சென்றது. விழா முடிவில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு என். பி. ஆர்.கல்லூரி முதல்வர்கள் சுந்தரராஜன் (இன்ஜி னியரிங்) சீனிவாசன் (கலை மற்றும் அறிவியல்) ஆனந்த் (பா லிடெக்னிக்) அன்ன லட்சுமி( நர்சிங்) ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

    • சம்பவத்தன்று மாடியில் இருந்து எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார்.
    • சம்பவ இடத்திற்கு வந்த நத்தம் போலீசார் உடலை கைப்பற்றி நத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    நத்தம்:

    நத்தம் அருகே கூவனூத்து குரும்பபட்டியை சேர்ந்தவர் வினோத்.(வயது33). கொத்தனார். இவர் நத்தம்- திண்டுக்கல் சாலையில் உள்ள தனியார் விடுதியில் தங்கி வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று மாடியில் இருந்து எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார்.

    இதில் சம்பவ இடத்திலேயே வினோத் பலியானார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நத்தம் போலீசார் வினோத்தின் உடலை கைப்பற்றி நத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் இச்சம்பவம் தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாண்டியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×