நத்தத்தில் மாடியில் இருந்து தவறி விழுந்து கொத்தனார் பலி

சம்பவத்தன்று மாடியில் இருந்து எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார். சம்பவ இடத்திற்கு வந்த நத்தம் போலீசார் உடலை கைப்பற்றி நத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

நத்தம்:

நத்தம் அருகே கூவனூத்து குரும்பபட்டியை சேர்ந்தவர் வினோத்.(வயது33). கொத்தனார். இவர் நத்தம்- திண்டுக்கல் சாலையில் உள்ள தனியார் விடுதியில் தங்கி வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று மாடியில் இருந்து எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார்.

இதில் சம்பவ இடத்திலேயே வினோத் பலியானார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நத்தம் போலீசார் வினோத்தின் உடலை கைப்பற்றி நத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாண்டியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com