என் மலர்
திண்டுக்கல்
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே உள்ள நல்லமநாயக்கன்பட்டி செல்லும் வழியில் ஒரு பெண் உள்பட 2 பேர் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தனர். இது குறித்து அப்பகுதி பொது மக்கள் எரியோடு போலீ சாருக்கு தகவல் தெரிவித்த னர்.
போலீசார் சம்பவ இட த்துக்கு சென்று அவர்கள் 2 பேரையும் மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். போலீசார் விசாரணையில் அவர்கள் இருவரும் கள்ளக்காதல் ஜோடி என தெரியவந்தது. இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், வேடசந்தூர் அருகே உள்ள பூத்தாம்பட்டியைச் சேர்ந்த கீர்த்தி கர்ணன் (33). டிரை வர் வேலை பார்த்து வரு கிறார். இவருக்கு திருமண மாகி மகாலெட்சுமி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர்.
தனது குழந்தைக்கு அடிக்கடி உடல் நிலை பாதிக்கப்பட்டதால் மகா லெட்சுமி தனது தாய் வீட்டுக்கு சென்று வந்து ள்ளார். இந்த நிலையில் கீர்த்தி கர்ணனுக்கும் அவ ரது உறவினரான சற்குணம் மனைவி பானுப்பிரியா (25) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் நாள டைவில் கள்ளக்காதலாக மாறியது. இந்த விபரம் மகாலெட்சுமிக்கு தெரிய வரவே அவர் இருவரையும் கண்டித்தார். ஆனால் இவர்களின் தொடர்பு நீடித்து வந்ததால் தன்னை விவாகரத்து செய்து விட்டு பானுப்பிரியாவுடன் சேர்ந்து வாழுமாறும், அதற்கு தனக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை எனவும் கூறியுள்ளார்.
இது குறித்து எரியோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இதனால் வேதனையடைந்த கீர்த்தி கர்ணன் மற்றும் பானுப்பிரியா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரு கின்றனர்.
- முன்னாள் மாணவர் இயக்கம் மற்றும் மாவட்ட கால்பந்தாட்ட கழகம் சார்பில் தமிழக இயேசு சபை பள்ளிகளுக்கு இடையேயான கால்பந்தா ட்ட போட்டி நடைபெற்றது.
- இப்போட்டியில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலை ப்பள்ளி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பள்ளியின் முன்னாள் மாணவர் இயக்கம் மற்றும் மாவட்ட கால்பந்தாட்ட கழகம் சார்பில் தமிழக இயேசு சபை பள்ளிகளுக்கு இடையேயான கால்பந்தா ட்ட போட்டி நடைபெற்றது.
பள்ளியின் முன்னாள் மாணவர் இயக்க துணை தலைவர் நாட்டாண்மை காஜாமைதீன் தலைமை தாங்கினார். சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக லூர்து சேவியர் கலந்து கொண்டார்.
போட்டியை மணிகண்டன் தொடங்கி வைத்தார். முன்னாள் மாணவர் இயக்குனர் ஜோசேவியர், அருட்தந்தை பாஸ்டின், துணை தலைவர் பெஞ்சமின் ஆேராக்கியம், துணை தலைமை ஆசிரியர் மரியலூயிஸ், ஆசிரியர்கள் மரிய ராஜேந்திரன், டேமியன் ஈசாக் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இப்போட்டியில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
- அத்தப்பூ கோலத்துக்கு பயன்படும் வாடாமல்லி, சம்பங்கி, செண்டுமல்லி உள்ளிட்ட பூக்கள் அதிக அளவு கொண்டுவரப்பட்டன.
- தற்போது ஓணம் பண்டிகைக்கான பூக்கள் விற்பனை முற்றிலும் நிறுத்தப்பட்டு விட்டது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் பூ மார்க்கெ ட்டில் கடந்த 1 வாரமாக பல்வேறு கிராமங்களில் இருந்து அதிக அளவு பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. கேரளாவில் நாளை ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் இதற்காக அதிக அளவு பூக்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டன.
குறிப்பாக அத்தப்பூ கோலத்துக்கு பயன்படும் வாடாமல்லி, சம்பங்கி, செண்டுமல்லி உள்ளிட்ட பூக்கள் அதிக அளவு கொண்டுவரப்பட்டன.
மேலும் ஆவணி மாத முகூர்த்த நாட்கள் காரண மாகவும், அதிக அளவு பூக்கள் கொண்டு வரப்பட்டு விலை உச்சத்தில் விற்பனை யானது. தற்போது ஓணம் பண்டிகைக்கான பூக்கள் விற்பனை முற்றிலும் நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் இன்று 30 டன் வாடாமல்லி பூக்கள் வந்த நிலையில் 10 டன் விற்பனை யாகாமல் தேக்கமடைந்து ள்ளது.
மேலும் பெரும்பாலான பூக்களும் விலை சரியத் தொடங்கியுள்ளது. நேற்று கிலோ ரூ.1000க்கு விற்ற மல்லிகை இன்று ரூ.500க்கு விற்கப்பட்டது. முல்லை ரூ.150, கனகாம்பரம் ரூ.300, ஜாதிப்பூ ரூ.250, ரோஜா ரூ.70, கோழிக்கொண்டை ரூ.30, செண்டு மல்லி ரூ.20, சம்பங்கி ரூ.120 என விற்பனையானது. நேற்று கிலோ ரூ.30க்கு விற்கப்பட்ட வாடாமல்லி இன்று ரூ.10க்கு விற்பனையானது. இதனால் விவசாயிகள் கவலை யடைந்தனர்.
- மழை இல்லாததால் விவசாயிகள் மிகுந்த கவலையில் உள்ளனர்.
- எப்போதும் இந்த அளவுக்கு கடுமையான வெயிலும் அதே சமயம் வைகையாறு படுகையும் இப்படி காய்ந்து கிடப்பதை பார்த்ததில்லை என்று விவசாயிகள், பொதுமக்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.
நிலக்கோட்டை::
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் மிகவும் கடுமையாக உள்ளது. பொதுவாக ஆடி , ஆவணி மாதங்களில் மழை பெய்து வெயிலின் தாக்கம் குறையும். ஆனால் இந்த ஆண்டு ஆடி, ஆவணி மாதத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். மழை இல்லாததால் விவசாயிகள் மிகுந்த கவலையில் உள்ளனர்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் கடந்த 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஆவணி மாதத்தில் வைகை ஆறு ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. எப்போதும் இந்த அளவுக்கு கடுமையான வெயிலும் அதே சமயம் வைகையாறு படுகையும் இப்படி காய்ந்து கிடப்பதை பார்த்ததில்லை என்று விவசாயிகள், பொதுமக்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.
மேலும், இப்படியே மழை இல்லாமல் போனால் நிச்சயமாக நிலக்கோட்டை ஒன்றியத்தில் மிகுந்த அளவில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்படும். நிலக்கோட்டை ஒன்றியம் மட்டும் அல்லாமல் அதனை சுற்றியுள்ள சின்னாளப்பட்டி, செம்பட்டி ஆகிய பகுதிகளுக்கும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்.
எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகளையும், அணைப்பட்டி வைகை ஆற்றுப் படுகையில் போடப்பட்டுள்ள வட்டக் கிணறுகளையும் பராமரிக்க முன் வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சின்னக்காம்பட்டி துணை நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது.
- காலை 9 மணி முதல் மாலை 2.00 மணிவரை மின் வினியோகம் இருக்காது
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையக்கோட்டை அருகே உள்ள சின்னக்காம்பட்டி துணை நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது.
இதனால் இடையகோட்டை, மார்க்கம்பட்டி, மாம்பாறை, சின்னக்காம்பட்டி, கொ.கீரனூர், குத்திலிப்பை, சாமியாடிபுதூர், ஐ.வாடிப்பட்டி, நரசிங்கபுரம், கொங்கபட்டி, ஜவ்வாதுபட்டி, அண்ணாநகர், புல்லாகவுண்டனூர், நவக்கானி, சோளியப்பகவுண்டனூர், இ.அய்யம்பாளையம், நாரப்பநாயக்கன்பட்டி, அத்தப்பன்பட்டி, பாறைப்பட்டி, எல்லப்பட்டி, இடையன்வலசு, இ.கல்லுப்பட்டி, பெருமாள்கவுண்டன்வலசு, கக்கரநாயக்கனூர், வலையபட்டி மற்றும் அதனைச்சுற்றியுள்ள குக்கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 2.00 மணிவரை மின் வினியோகம் இருக்காது என ஒட்டன்சத்திரம் உதவி செயற்பொறியாளர் மணிமேகலை தெரிவித்துள்ளார்.
- கடந்த வெள்ளிக்கிழமை மாலை மங்கள வாத்தியம் முழங்க, முளைப்பாரி ஊர்வலத்துடன், மஹா தீப ஆராதனை திருமுறைகள் நடைபெற்றது.
- கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட அமைச்சர் இ.பெரியசாமிக்கு கோவில் கமிட்டியாளர்கள் மற்றும் ஊர் பொது மக்கள் சார்பாக பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
செம்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே எஸ்.பாறைப்பட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீலஸ்ரீ மவுன குருநாதர் சித்தர் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகத்துடன், ஊர் தெய்வங்களான விநாயகர், மாரியம்மன், முத்தாலம்மன், பட்டாளம்மன் கோவில்களுக்கும் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை மங்கள வாத்தியம் முழங்க, முளைப்பாரி ஊர்வலத்துடன், மஹா தீப ஆராதனை திருமுறைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மறுநாள் காலை யாகசாலை பூஜைகள் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக கோபுரத்தில் விமான கலசங்கள் ஸ்தாபிதம் நடைபெற்றது. அதன் பின்னர் விக்னேஷ்வர பூஜை, மண்டல பூஜை, சூரிய பூஜை, நான்காம் கால யாக வேள்வி நடைபெற்றது.
காலை விநாயகர் கோவிலில் உள்ள கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதேபோல், மாரியம்மன், முத்தாலம்மன் கோவிலின் கோபுரத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட அமைச்சர் இ.பெரியசாமிக்கு கோவில் கமிட்டியாளர்கள் மற்றும் ஊர் பொது மக்கள் சார்பாக பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. விழாவில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
- பெங்களூரு, பி.இ.எல். நிறுவனத்தில் தொழில் பயிற்சி முடித்து டி.ஆர்.டி.ஓ. மேல் பட்டயபடிப்பில் தேர்ச்சி பெற்று இஸ்ரோவில் சேர்ந்தார்.
- காமேஸ்குருவுக்கு அவரது கிராம மக்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஒட்டன்சத்திரம்:
சந்திரயான்-3 வெற்றித் திட்டத்தில் பங்காற்றிய ஒட்டன்சத்திரம் மற்றும் திண்டுக்கல்லைச் சேர்ந்த விஞ்ஞானிகளுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சத்திரப்பட்டி வேலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் அதே ஊரில் அரசு தொடக்கப்பள்ளியில் 5ம் வகுப்பு வரை படித்து பின்னர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு வரை பயின்றார்.
பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் என்ஜினீயரிங் பட்டயபடிப்பு படித்தார். அதன் பின் பெங்களூரு, பி.இ.எல். நிறுவனத்தில் தொழில் பயிற்சி முடித்து டி.ஆர்.டி.ஓ. மேல் பட்டயபடிப்பில் தேர்ச்சி பெற்று இஸ்ரோவில் சேர்ந்தார்.
பணியில் இருந்தபடியே பி.இ. மற்றும் எம்.இ. பட்டம் முடித்தார். இஸ்ரோவில் 35 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றி தற்போது பெங்களூருவில் ஜியோ கமாண்டட் எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம் துறை தலைவராக பணிபுரிந்து வருகிறார். இவரது ஆராய்ச்சி கட்டுரைகளை இந்தியா, வெளிநாடு, பல்கலைக்கழகங்கள் பரிந்துரை செய்துள்ளன.
சிறிய கிராமத்தில் பிறந்து இஸ்ரோ விஞ்ஞானியாக பணிபுரிந்து சந்திரயான்-3 திட்டத்தில் பங்கேற்றிய ரவிச்சந்திரனுக்கு உள்ளூர் கிராம மக்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இதே போல் திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள கம்பிளியம்பட்டியைச் சேர்ந்தவர் காமேஸ்குரு. இவர் அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு வரை படித்தவர். பின்னர் எம்.எஸ்.பி. பள்ளியில் பிளஸ்-2 வரை படித்தார். அதனைத் தொடர்ந்து திருச்சி அரியமங்கலம் தொழில்நுட்ப நிறுவனத்தில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் முடித்து டிப்ளமோ பட்டதாரியானார். என்.ஐ.டி.டி.யில் இருந்து எம்.எஸ். (நான்டிஸ்ட்ரக்டிவ் டெஸ்டிங்) முடித்தவர். அதன் பின் இஸ்ரோ விஞ்ஞானியாக 12 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருகிறார். சந்திரயான்-3 பணியில் ஏவுகணை வாகனம், செயற்கைகோள் உந்து விசை அமைப்புகளில் தனது பங்களிப்பை வழங்கியுள்ளார். செயற்கை கோள் திரவ என்ஜின் தரக்கட்டுப்பட்டில் என்ஜினீயராக உள்ளார்.
சந்திரயான்-3 வெற்றியில் மட்டுமின்றி சந்திரயான்-2 மற்றும் ஆதித்யா செயற்கைகோள் திட்டங்களிலும் பணிபுரிந்து பெரும் பங்கு வகித்துள்ளார். காமேஸ்குருவுக்கு அவரது கிராம மக்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
- மாணவர்களுக்கான போட்டியில் 156 புள்ளிகள் பெற்று நத்தம் துரைக்கமலம் அரசு மாதிரி மேல்நிலை பள்ளி அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்று முதலிடம் பிடித்தது.
- தொடர்ந்து வெற்றி பெற்ற துரைக்கமலம் அரசு மாதிரி மேல்நிலைபள்ளியில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கபட்டன.
நத்தம்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் என்.பி.ஆர் கல்லூரியில் இ-குறுவட்ட அளவிலான தடகள போட்டிகள் நடந்தது. இதற்கு கலை கல்லூரி முதல்வர் சீனிவாசன் தலைமை தாங்கினார். இதில் மாணவ, மாணவிகளின் அணிவகுப்பை தொடர்ந்து ஒலிம்பிக் தீபம் ஏற்றி போட்டி தொடங்கியது.
இந்த போட்டியில் 60 பள்ளிகள் கலந்து கொண்டன. முடிவில் மாணவர்களுக்கான போட்டியில் 156 புள்ளிகள் பெற்று நத்தம் துரைக்கமலம் அரசு மாதிரி மேல்நிலை பள்ளி அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்று முதலிடம் பிடித்தது. பெண்களுக்கான போட்டியில் நத்தம் அரசு பெண்கள் மேல்நிலைபள்ளி மாணவிகள் வெற்றி பெற்று முதலிடம் பிடித்தனர்.
தொடர்ந்து வெற்றி பெற்ற துரைக்கமலம் அரசு மாதிரி மேல்நிலைபள்ளி மாணவர்களை உடற்கல்வி இயக்குநர் சம்சுதீன், உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ்,சோலைமலை கல்லூரி உடற்கல்வி ஆசிரியர் கல்யாணசுந்தரம் உள்ளிட்ட ஆசிரியர்கள் பாராட்டினர்.பின்னர் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கபட்டன.
- தொடர்ந்து ஒட்டன்சத்திரம் தீயணைப்புத்துறையினர் வந்து போராடி தீயை அணைத்தனர்.
- இருந்தபோதும் பட்டறையில் இருந்த இரும்பு பொருட்கள், எந்திரங்கள் மற்றும் வீட்டில் இருந்த டி.வி., பீரோ, கட்டில், பாத்திரங்கள் உள்பட ரூ.2 லட்சம் பணம் மற்றும் 7 பவுன் தங்க நகைகள் எரிந்து நாசமாயின.
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் அருகே இடையகோட்டை சாலையூர் நால்ரோடு பகுதியில் லட்சுமணன் (51) என்பவர் வீட்டின் அருகே பட்டறை நடத்தி வருகிறார். நேற்று விடுமுறை என்பதால் லெட்சுமணன், அவரது மனைவி சுதாராணி மற்றும் குடும்பத்தினர் வீட்டில் இருந்தனர். அப்போது திடீரென மேற்கூரையில் தீ பற்றி மளமளவென பரவியது.
இதனால் அதிர்ச்சியடைந்த லெட்சுமணன் குடும்பத்தினர் வீட்டை விட்டு அலறியடித்து ஓடினர். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைக்க முயன்றனர். முடியாததால் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து ஒட்டன்சத்திரம் தீயணைப்புத்துறையினர் வந்து போராடி தீயை அணைத்தனர். இருந்தபோதும் பட்டறையில் இருந்த இரும்பு பொருட்கள், எந்திரங்கள் மற்றும் வீட்டில் இருந்த டி.வி., பீரோ, கட்டில், பாத்திரங்கள் உள்பட ரூ.2 லட்சம் பணம் மற்றும் 7 பவுன் தங்க நகைகள் எரிந்து நாசமாயின.
இது குறித்து இடையகோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலெட்சுமி வழக்கு பதிவு செய்து மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது அப்பகுதியில் பட்டாசுகள் வெடித்ததால் தீ பற்றியதா? என விசாரணை நடத்தி வருகின்றார்.
- கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் திட்டமிட்டபடி முதல்-அமைச்சரால் செப்டம்பர் 15-ந் தேதி தொடங்கி வைக்கப்படவுள்ளது.
- இதுவரை பெறப்பட்ட விண்ணப்பங்களில் தகுதியுள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் 2 புதிய அங்கன்வாடி கட்டிடம், 2 ரேசன் கடைகள், 1 குடிநீர் மேல்நிலைத் தொட்டி மற்றும் 1 புதிய பள்ளி கட்டிடத்தினை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி, மாவட்ட கலெக்டர் பூங்கொடி தலைமையில் திறந்து வைத்தார்.
இதில் அமைச்சர் பேசியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்களுக்கென பல்வேறு திட்டங்களை வகுத்து அதனை சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறார். அரசு பள்ளியில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு அனைத்து கிராமங்களுக்கும் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்படும்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்திற்கு மத்திய அரசு ரூ.20 கோடியை தமிழ்நாட்டிற்கு ஒதுக்கினார்கள். ரூ.20 கோடியை 5 மாதங்களில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலமாக அனைத்து கிராம மக்களுக்கும் அதிகமான வேலைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்தாண்டு மேலும் அதிகமான வேலை நாட்கள் வழங்கப்படும். பொதுமக்களால் வைக்கப்படும் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் திட்டமிட்டபடி முதல்-அமைச்சரால் செப்டம்பர் 15-ந் தேதி தொடங்கி வைக்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் வாயிலாக அனைத்து தகுதியுள்ள நபர்களுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும். அரசு விதித்துள்ள விதிகளின்படி அனைவருக்கும் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதுவரை பெறப்பட்ட விண்ணப்பங்களில் தகுதியுள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
எண்ணிக்கை நிர்ணயம் செய்யாமல் தகுதியுள்ள அனைவருக்கும் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கடந்த 10 ஆண்டுகளில் எந்தவித நிதியும் கூடுதலாக ஒதுக்கப்படவில்லை. ரூ.4 ஆயிரம் கோடியில் 10 ஆயிரம் சாலை பணிகள் அமைக்கப்படும் என பேசினார்.
இதில் வேலுச்சாமி எம்.பி., ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் சிவகுருசாமி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சுப்புலட்சுமி சண்முகம், ஊராட்சி மன்ற தலைவர்கள் ராதாதேவி சாமிநாதன், செல்வராணி, ஒன்றியக்குழு உறுப்பினர் விவேகானந்தன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பூங்கொடி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
- சந்தேகத்திற்கிடமாக சென்றுகொண்டிருந்த ஒரு ஜீப்பை நிறுத்தி சோதனை நடத்தினர்.
- கும்பலை பிடிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கொடைக்கானல்:
திண்டுக்கல் வனப்பாதுகாப்பு படைக்குழு உதவி வனப்பாதுகாவலர் சீனிவாசனுக்கு கொடைக்கானல் மலை கிராமங்களில் வன விலங்குகள் வேட்டையாடப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்படி ரேஞ்சர் கிருஷ்ணகுமார், வனவர் ராஜேஷ்கண்ணன், வன காப்பாளர்கள் சரவணன், மணிகண்டன் ஆகியோர் கொண்ட குழுவினர் தாண்டிக்குடி-பண்ணைக்காடு ரோட்டில் நள்ளிரவில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமாக சென்றுகொண்டிருந்த ஒரு ஜீப்பை நிறுத்தி சோதனை நடத்தினர். ஜீப்பில் இருந்த பண்ணைக்காட்டை சேர்ந்த கருணாகரன் (வயது40) என்பவர் அதிகாரிகளை தாக்கி விட்டு தப்பி ஓடினார். கூடம் நகரை சேர்ந்த சந்திரன் (44), பண்ணைக்காட்டை சேர்ந்த பாலசுப்பிரமணி (43) ஆகியோர் நாட்டு துப்பாக்கியுடன் சிக்கினர். ஜீப்பில் சோதனையிட்டபோது துப்பாக்கியால் சுடப்பட்ட காட்டுச்சேவல், உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கி, தோட்டாக்கள், வேட்டையாட பயன்படுத்திய கத்தி, டார்ச் லைட், சுருக்கு கம்பி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
அதன்பின்னர் தப்பி ஓடிய கருணாகரனையும் வனத்துறையினர் பிடித்தனர். 3 பேரும் பெரும்பள்ளம் ரேஞ்சர் குமரேசனிடம் ஒப்படைக்கப்பட்டு கொடைக்கானல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
கொடைக்கானல் வனப்பகுதியில் இதுபோல கள்ளத்துப்பாக்கியுடன் வன விலங்குகளை வேட்டையாடும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே வனத்துறையினர் இரவு நேர ரோந்து பணி நடத்தி இதுபோன்ற கும்பலை பிடிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- நேற்று வேலைக்கு செல்வதற்காக கொசவபட்டியில் இருந்து நத்தம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார்.
- சேர்வீடு பிரிவு 4 வழிச்சாலை அருகே சென்ற போது 2 மோட்டார் சைக்கிள்களும் மோதிக் கொண்டன.
நத்தம்:
நத்தம் அருகே கொசவபட்டியைச் சேர்ந்தவர் தயாளன் (வயது 29). இவர் நத்தத்தில் உள்ள தனியார் எலக்ட்ரிக்கல் கடையில் வேலை பார்த்து வந்தார். நேற்று வேலைக்கு செல்வதற்காக கொசவபட்டியில் இருந்து நத்தம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார்.
மதுரை மாவட்டம் சிலைமான் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வரும் சுப்புராயன் என்பவர் திண்டுக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு எழுதி விட்டு மதுரைக்கு பைக்கில் சென்றார்.
சேர்வீடு பிரிவு 4 வழிச்சாலை அருகே சென்ற போது 2 மோட்டார் சைக்கிள்களும் மோதிக் கொண்டன. இதில் தயாளன் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சுப்புராயனுக்கும் காயம் ஏற்பட்டது.
அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து நத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






