என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மவுன குருநாதர் சித்தர்"

    • கடந்த வெள்ளிக்கிழமை மாலை மங்கள வாத்தியம் முழங்க, முளைப்பாரி ஊர்வலத்துடன், மஹா தீப ஆராதனை திருமுறைகள் நடைபெற்றது.
    • கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட அமைச்சர் இ.பெரியசாமிக்கு கோவில் கமிட்டியாளர்கள் மற்றும் ஊர் பொது மக்கள் சார்பாக பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

    செம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே எஸ்.பாறைப்பட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீலஸ்ரீ மவுன குருநாதர் சித்தர் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகத்துடன், ஊர் தெய்வங்களான விநாயகர், மாரியம்மன், முத்தாலம்மன், பட்டாளம்மன் கோவில்களுக்கும் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    கடந்த வெள்ளிக்கிழமை மாலை மங்கள வாத்தியம் முழங்க, முளைப்பாரி ஊர்வலத்துடன், மஹா தீப ஆராதனை திருமுறைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மறுநாள் காலை யாகசாலை பூஜைகள் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக கோபுரத்தில் விமான கலசங்கள் ஸ்தாபிதம் நடைபெற்றது. அதன் பின்னர் விக்னேஷ்வர பூஜை, மண்டல பூஜை, சூரிய பூஜை, நான்காம் கால யாக வேள்வி நடைபெற்றது.

    காலை விநாயகர் கோவிலில் உள்ள கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதேபோல், மாரியம்மன், முத்தாலம்மன் கோவிலின் கோபுரத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட அமைச்சர் இ.பெரியசாமிக்கு கோவில் கமிட்டியாளர்கள் மற்றும் ஊர் பொது மக்கள் சார்பாக பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. விழாவில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    ×