என் மலர்
உள்ளூர் செய்திகள்

குளத்தில் வெட்டப்பட்டுள்ள மரங்கள்.
திண்டுக்கல் அருகே குளத்தில் மரங்கள் வெட்டி கடத்தல்
- திண்டுக்கல் கிழக்கு தாலுகா, பெரியகோட்டை ஊராட்சி, பில்லமநாயக்க ன்பட்டி ஊரின் வழியே செல்லும் சந்தனவர்தினி ஆற்றின் அருகே அமை ந்துள்ளது நமச்சிவாயம் குளம்.
- மரங்களை தன்னலத் தேவைக்காகவும், அரசின் அனுமதியின்றி சட்டத்திற்கு எதிராகவும், வெட்டி விற்பனை செய்து வருகின்றனர்.
ண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே தீத்தம்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். சமூக ஆர்வலர். இவர் மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு அளித்தார். அந்த புகாரில் கூறியிரு ப்பதாவது, திண்டுக்கல் கிழக்கு தாலுகா, பெரியகோட்டை ஊராட்சி, பில்லமநாயக்க ன்பட்டி ஊரின் வழியே செல்லும் சந்தனவர்தினி ஆற்றின் அருகே அமை ந்துள்ளது நமச்சிவாயம் குளம்.
இதன் மூலம் சுற்றுவட்டார 5க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு நிலத்தடி நீர் ஆதாரமாக இருந்து வருகிறது. இதில் மரங்கள் அதிகம் உள்ளது. மரங்களை தன்னலத் தேவைக்காகவும், அரசின் அனுமதியின்றி சட்டத்திற்கு எதிராகவும், வெட்டி விற்பனை செய்து வருகின்றனர்.
அந்த மர்ம நபர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொ ள்ளவும், மேலும், இனிவரும் காலங்களில், இதுபோன்ற சட்டவிரோத செயல்பாடுகள் நடை பெறாமல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு தடுக்கவும் இயற்கை வளத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.






