என் மலர்
தர்மபுரி
- சாம்பல் பூசணி, தேங்காய், எலுமிச்சம்பழம் வைத்து 100 ரூபாய்க்கு விளக்கு தட்டு விற்பனை செய்து வருகின்றனர்.
- வாழை இலை வைத்து மறைத்து அதன் மீது சாம்பல் பூசணி தேங்காய் உள்ளிட்டவை வைத்து மீண்டும் விற்பனை செய்கின்றனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கால பைரவர் ஆலயம் உள்ளது. தேய்பிறை அஷ்டமி மற்றும் ஞாயிற்றுக் கிழமை தினங்களில் தமிழ கத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலமான பெங்களூரு உள்ளிட்ட பகுதியில் இருந்தும் ஏரா ளமான பக்தர்கள் கோவி லுக்கு வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
நேற்று தேய்பிறை அஷ்டமி என்பதால் ஏரா ளமான பக்தர்கள் கால பைரவர் ஆலயத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். சிலர் தங்கள் வேண்டுதலை சாம்பல் பூசணி, தேங்காய் மற்றும் எலுமிச்சம் பழத்தில் தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர். இதற்காக கோவிலுக்கு முன்புறமாக பாக்கு மட்டை யில் சாம்பல் பூசணி, தேங்காய், எலுமிச்சம்பழம் வைத்து 100 ரூபாய்க்கு விளக்கு தட்டு விற்பனை செய்து வருகின்றனர். இதனை பக்தர்கள் வாங்கி பயன்படுத்துகின்றனர்.
பக்தர்கள் பயன்படுத்திய பாக்குமட்டை தட்டை சில கடை உரிமையாளர்கள் மீண்டும் எடுத்து வந்து தட்டு தீ பட்ட இடங்கள் மற்றும் சாணம் வைத்த இடத்தில் வாழை இலை வைத்து மறைத்து அதன் மீது சாம்பல் பூசணி தேங்காய் உள்ளிட்டவை வைத்து மீண்டும் விற்பனை செய்கின்றனர். ஏற்கனவே ஒருவர் வைத்து வழிபட்ட தட்டை இவர்கள் எடுத்து வந்து மீண்டும் விற்பனை செய் வது பக்தர்களிடம் அதிர்ச் சியை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே கடை உரிமை யாளா்கள் மஞ்சளுக்கு பதிலாக ஜிலேபி பவுடரை பயன்படுத்தி பக்தர்களுக்கு விளக்கு தட்டு விற்பனை செய்து வந்ததை மாலைமலர் நாளி ழதலில் வெளியா னதையடுத்து தற்பொழுது மஞ்சள் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
- மாவட்ட அளவிலான போட்டிகள் 2 நாட்கள் அவ்வையார் அரசு பள்ளியில் நடைபெறுகிறது.
- மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
தருமபுரி,
அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் பயிலும் 9 முதல் 12 -ம் வகுப்பு வரையிலான மாண வர்களின் படைப்பாற்றல் திறனை வளர்க்கவும், நமது பாரம்பரிய கலை வடிவங்களை குறித்த அறிவையும் புரிதலையும் மாணவர்களுக்கு உருவாக்கி நமது பாரம்பரிய கலைகளை உயிர்ப்புடன் வைத்திருக்க கலை விழாவை அரசு நடத்தி வருகிறது.
இதில் வாய்ப்பாட்டிசை, கருவியிசை, நடனம், காட்சிகலை, நாடகம் மற்றும் தனிநபர் நடிப்பு எனும் 5 தலைப்புகளில் கலை பண்பாட்டு திருவிழா 2015 - 16 -ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது.
இதனையடுத்து 2023 - 24 -ம் ஆண்டிற்கான கலை பண்பாட்டு திருவிழா மாவட்ட அளவிலான போட்டிகள் இரண்டு நாட்கள் தருமபுரி அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது. இந்நிகழ்வினை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட தொடக்கக் கல்வி அலு வலர் மான்விழி, ஒருங்கி ணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் ரவிக்குமார் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஸ்ரீனிவாசன், துரைராஜி, தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
- கடந்த மாதம் தொடங்கி வருகிற 8-ம் தேதி வரை நடைபெறுகிறது .
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை வணங்கி வழிபட்டனர்.
அரூர்,
தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், வேப்பம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள திரவுபதியம்மன் கோவிலில் 6-ஆம் ஆண்டு திருத்தேர் விழா நடைபெற்றது. இவ்விழாவானது கடந்த மாதம் தொடங்கி வருகிற 8-ம் தேதி வரை நடைபெறுகிறது . தேர் திருவிழாவை முன்னிட்டு மாப்பிள்ளை மற்றும் பெண் வீட்டார்கள் ஒன்று கூடி திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு மாவிளக்கு எடுத்தல் ,கூழ் ஊற்றுதல், கரகாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பிறகு திரௌபதியம்மன் திரு தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்ட நிகழ்வில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை வணங்கி வழிபட்டனர்.
தேர் திருவிழாவில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படா மல் இருக்க போலீசார், தீயணைப்பு துறையினர் ,வருவாய்துறையினர், சுகாதாரத்துறையினர் மற்றும் மின்சார துறையினர் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- தக்காளி விலை கிலோ ரூ.100-க்கும் மேல் விற்று உச்சம் தொட்டது.
- தக்காளி விலை கிலோ ரூ.8 முதல் 10 வரை வியாபாரிகள் கொள்முதல் செய்தனர்.
பாலக்கோடு,
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தக்காளி மார்கெட்டிற்கு தினந்தோரும் 10 டன் அளவிற்கு தக்காளி வரத்து உள்ளது . இச்சந்தையில் இருந்து தேனி, திண்டுக்கல், சேலம் , ஈரோடு போன்ற வெளி மாவட்டங்களுக்கு தக்காளி ஏற்றுமதி செய்யப்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன் தக்காளி விலை கிலோ ரூ.100-க்கும் மேல் விற்று உச்சம் தொட்டது. இதனால் தருமபுரி மாவட்டத்தில் காரிமங்கலம், பெல்ரம்பட்டி, பொப்பிடி , சோமனஹள்ளி, மாரண்ட அள்ளி, பஞ்சப்பள்ளி, பேளார ஹள்ளி, எலங்காளப்பட்டி, கரகூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் வழக்கத்தை விட அதிக பரப்பளவில் தக்காளியை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.
இதனால் பாலக்கோடு தக்காளி மார்க்கெட்டுக்கு தக்காளியின் வரத்து படிப்படியாக அதிகரித்து காணப்பட்டது. இதனையடுத்து இன்று மார்க்கெட்டில் தக்காளி கொள்முதல் விலை கிலோ ரூ.8 முதல் 10 வரை வியாபாரிகள் கொள்முதல் செய்தனர். மேலும் 15 கிலோ எடை கொண்ட ஒரு கூடை தக்காளி ரூ.100 முதல் 150 -வரை விற்பனையாகி வருகிறது.
- வரும் 8-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை 10 நாட்கள் புத்தகத்திருவிழா நடைபெற உள்ளது.
- மாணவர்கள் குழுவாக புத்தகம் வாசிப்பில் ஈடுபட்டனர்.
பென்னாகரம்,
தருமபுரியில் வரும் 8-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை 10 நாட்கள் புத்தகத்திருவிழா நடைபெற உள்ளது. இந்த புத்தகத் திருவிழாவை முன்னிட்டு தருமபுரி மாவட்டம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகள், கல்லூரிகளில் "தருமபுரி வாசிக்கிறது"நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிலையில் பென்னாகரத்தில் உள்ள 809 இல்லம் தேடிகல்வி மையங்களிலும் தருமபுரி வாசிக்கிறது நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, மாணவர்கள் குழுவாக புத்தகம் வாசிப்பில் ஈடுபட்டனர்.
பென்னாகரம் அருகே பாப்பாரப்பட்டி அருகே உள்ள நல்லப்ப நாயகனஅள்ளி மையத்தில் தருமபுரி மாவட்ட இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் ராஜகோபால், பென்னாகரம் இல்லம் தேடி கல்வி பொறுப்பாளர் தாமோதரன் ஆகியோர்கள் மாணவர்களுடன் வாசிப்பு நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மேலும் வட்டார கல்வி அலுவலர்கள் மணி கிருஷ்ணன், துளசிராமன், ஜெகன் மற்றும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரிய பயிற்றுநர்கள் உடன் இருந்தனர்.
- முனிராஜ் என்பவரின் நிலத்தில் இறந்தவரின் உடலை புதைக்க குழி தோண்டி கொண்டிருந்தனர்.
- ஆத்திர மடைந்தவர்கள் முனிராஜை கடுமையாக தாக்கி உள்ளனர்.
மாரண்டஅள்ளி,
தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அடுத்த சாமனுர் கிராமத்தை சேர்ந்தவர் முனிராஜ் (வயது 42) விவசாயி.இவருக்கும் அதே ஊரை சேர்ந்த வெங்கடேசன் (48), வடிவேல் (47), அருள் பிரகாஷ் (42), பரந்தாமன் (46), கோவிந்தராஜ் (48), அசோகன் (47), கிருஷ்ணமூர்த்தி ( 48), ஆகியோருக்கும் நிலம் சம்மந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. மேலும் நிலம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைப்பெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் 7 பேரும் முனிராஜ் என்பவரின் நிலத்தில் இறந்தவரின் உடலை புதைக்க குழி தோண்டி கொண்டிருந்தனர். இதனை கண்ட முனிராஜ் இவர்களை கண்டித்து குழி தோண்டு வதை தடுத்துள்ளார்.
இதனால் ஆத்திர மடைந்தவர்கள் முனிராஜை கடுமையாக தாக்கி உள்ளனர்.
இதனால் பலத்த காயமடைந்த முனிராஜ் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்ப்படு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து முனிராஜ் அளித்த புகாரின் பேரில் மாரண்டஅள்ளி போலீசார் 7 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து வடிவேல், கோவிந்தராஜ் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவான மற்ற 5 பேரையும் தேடி வருகின்றனர்.
- ஷிவானிக்கு திடீரென்று உடல் நல குறைவு ஏற்பட்டது.
- சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே பூதனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு லக்ஷனா (வயது3), பிறந்து 10 மாதங்கள் ஆன ஷிவானி என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஷிவானிக்கு திடீரென்று உடல் நல குறைவு ஏற்பட்டதால், பதறிப்போன பெற்றோர், உடனே அதேபகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்தி–ரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.
இந்த சம்பவம் குறித்து வெங்கடேசன் அதிய–மான்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் தெரி–வித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெற்றோர் மற்றும் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்–தியது.
- புவனேஸ்வரி கணவரை பிரிந்து மகனுடன் த.அய்யம்பட்டியில் உள்ள தாய் வீட்டிற்கு வந்தார்.
- பள்ளியில் பிளஸ்-2 வரை படித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் கடத்தூரைச் சேர்ந்தவர் மணிராஜா. இவர் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு த.அய்யம்பட்டியைச் சேர்ந்த புவனேஸ்வரி (வயது27) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
இந்த நிலையில் மணிராஜாவுக்கும்-புவனேஸ்வரிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு புவனேஸ்வரி கணவரை பிரிந்து மகனுடன் த.அய்யம்பட்டியில் உள்ள தாய் வீட்டிற்கு வந்தார். புவனேஸ்வரி நேற்று வீட்டைவிட்டு வெளியே சென்றவர், நீண்டநேரமாகி–யும் வீடு திரும்பவில்லை.
இதனால் பதறிப்போன அவரது தாயார் சாந்தா தனது மகளை உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தார். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து சாந்தா கடத்தூர் போலீஸ் நிலை–யத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான புவனேஸ்வரியை தேடிவருகின்றனர். அதேபோல் தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள மோட்டுபட்டி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி. இவர் மாங்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 வரை படித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் வீட்டில் இருந்த இளம் பெண் கடந்த 3-ந் தேதி காணாமல் போனதை அறிந்த பெற்றோர்கள் அக்கம் பக்கத்தில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து சிறுமியின் தந்தை பென்னாகரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- கோ பூஜை, கணபதி பூஜை செய்து கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- உரியடி திருவிழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
மாரண்டஅள்ளி,
தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி ராதா கிருஷ்ணன் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உறியடி திருவிழா நடைபெற்றது.இந்நிகழ்ச்சி நேற்று முன்தினம் 5-ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை கோ பூஜை, கணபதி பூஜை செய்து கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நேற்று 6-ம் தேதி காலை கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சாமிக்கு அபிஷே கம் மற்றும் அலங்கார ஆராதனை நடைபெற்றது.இதைத் தொடர்ந்து பக்தர்கள் தட்டு வரிசை ஊர்வலம் மற்றும் கருட சேவை, ஊஞ்சல் உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது. பிறகு மாலை உறியடி திரு விழா நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் இளைஞர்கள் உரியடி திருவிழாவில் கலந்து கொண்டு உறிய டித்தனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பின்னர் ராதாகிருஷ்ணன் முக்கிய வீதிகள் வழியாக ரத உற்சவ வீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர் கள் சாமி தரிசனம் செய்த னர்.
- மாணவியின் விருப்பத்தை மீறி கடந்த 3-ம் தேதி இராயக்கோட்டை அருகில் உள்ள நாகனுர் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணசாமி என்ற வாலிபருடன் திருமணம் செய்து வைத்தனர்.
- புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரிமங்கலம்:
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் நகரை சேர்ந்த கூலி தொழிலாளியின் 15 வயது மகள் காரிமங்கலத்தில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தார்.
இந்நிலையில் மாணவியின் விருப்பத்தை மீறி கடந்த 3-ம் தேதி இராயக்கோட்டை அருகில் உள்ள நாகனுர் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணசாமி என்ற வாலிபருடன் திருமணம் செய்து வைத்தனர்.
இதுகுறித்து மாணவி இன்று காரிமங்கலம் போலீசில் நாகனுரை சேர்ந்த கிருஷ்ணசாமி (வயது 26) மற்றும் அவரது உறவினர்களான வள்ளி (45), சின்னராஜ்( 55), லட்சுமி ( 40), ஜமுனா ( 45), நவீன் ( 28) ஆகிய 6 பேர் மீது காரிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- மாணவி தனியாக நடந்து செல்லும்போது முனியப்பன் பின்தொடர்ந்து அவரை கடத்தி சென்று ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
- சம்பவம் குறித்து மாணவியின் பெற்றோர் தருமபுரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
தருமபுரி:
தருமபுரி மதிகோன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் தருமபுரியில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தார்.
பெரியகுரும்பட்டியைச் சேர்ந்த முருகேசன் மகன் கணேசன் என்கிற முனியப்பன் (வயது28) என்பவர் மாணவி பள்ளிக்கு வரும்போது தன்னை காதலிக்கும்படி வற்புறுத்தி வந்தார். ஆனால், அந்த மாணவி முனியப்பனை காதலிக்க மறுத்து விட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று மாணவி தனியாக நடந்து செல்லும்போது முனியப்பன் பின்தொடர்ந்து அவரை கடத்தி சென்று ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுகுறித்து மாணவி நடந்த சம்பவத்தை பற்றி பெற்றோரிடம் தெரிவித்தார். உடனே பெற்றோர் முனியப்பனை தேடி சென்றனர். ஆனால், அவர் தலைமறைவாக இருந்தது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து மாணவியின் பெற்றோர் தருமபுரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள கணேசன் என்கிற முனியப்பனை தேடி வருகின்றனர்.
- தற்காலிக பேருந்து நிலையம் தக்காளி மண்டி அருகே அமைக்கப்பட்டுள்ளது.
- வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புறவழிச் சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
பாலக்கோடு,
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு நகருக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நாள்தோறும் பல்வேறு வேலைகளுக்கு வந்து செல்கின்றனர். உள்ளூர் மற்றும் வெளியூர், வெளிமாவட்ட, மாநிலங்களில் இருந்தும் , ஒகேனக்கல் சுற்றுலா தளத்துக்கு செல்வதற்கும், பாலக்கோடு நகரம் பிரதான மையமாக உள்ளது. தற்போது பேருந்து நிலைய புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால், தற்காலிக பேருந்து நிலையம் தக்காளி மண்டி அருகே அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புறவழிச் சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும் புறவழிச்சாலை பகுதியில் அரசு மகளிர் பள்ளி, அரசு மற்றும் தனியார் மருத்துவமனை, வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவைகளுக்கு பொதுமக்கள் சாலையை கடக்கும் சூழலில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் தக்காளி மார்க்கெட் பிரிவு சாலை, எம்ஜிரோடு பிரிவு சாலை, ஓசூர் புறவழிச்சாலை பிரிவு, பாப்பாரப்பட்டி சாலை பிரிவு உள்ளிட்ட பகுதிகளில் விபத்துகளை தடுக்க போலீசாரால் கண்காணிப்பு கேமரா மற்றும் தடுப்பு சுவர் (பேரிகார்டு) உள்ளிட்டவை வைக்கப்பட்டிருந்தன.
தற்போது அனைத்து பேரிகார்டுகளும் பஸ் நிலையம் கட்டுமான பாதுகாப்பு பணிக்கு பயன்படுத்தி வருவதால், அடிக்கடி வாகனங்கள் மோதி விபத்துகள் ஏற்படுத்தி வருகின்றன. இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி பள்ளி, கல்லூரி மாணவர்களும் அவதி யடைந்து வருகின்றனர். இது குறித்து தெரிந்தும் போலீசார் மற்றும் உயர் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தமிழக முதல்- அமைச்சர் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






