என் மலர்
உள்ளூர் செய்திகள்

விழாவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
கலை பண்பாட்டு திருவிழா
- மாவட்ட அளவிலான போட்டிகள் 2 நாட்கள் அவ்வையார் அரசு பள்ளியில் நடைபெறுகிறது.
- மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
தருமபுரி,
அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் பயிலும் 9 முதல் 12 -ம் வகுப்பு வரையிலான மாண வர்களின் படைப்பாற்றல் திறனை வளர்க்கவும், நமது பாரம்பரிய கலை வடிவங்களை குறித்த அறிவையும் புரிதலையும் மாணவர்களுக்கு உருவாக்கி நமது பாரம்பரிய கலைகளை உயிர்ப்புடன் வைத்திருக்க கலை விழாவை அரசு நடத்தி வருகிறது.
இதில் வாய்ப்பாட்டிசை, கருவியிசை, நடனம், காட்சிகலை, நாடகம் மற்றும் தனிநபர் நடிப்பு எனும் 5 தலைப்புகளில் கலை பண்பாட்டு திருவிழா 2015 - 16 -ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது.
இதனையடுத்து 2023 - 24 -ம் ஆண்டிற்கான கலை பண்பாட்டு திருவிழா மாவட்ட அளவிலான போட்டிகள் இரண்டு நாட்கள் தருமபுரி அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது. இந்நிகழ்வினை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட தொடக்கக் கல்வி அலு வலர் மான்விழி, ஒருங்கி ணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் ரவிக்குமார் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஸ்ரீனிவாசன், துரைராஜி, தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.






