இல்லம் தேடி கல்வி மையங்களில் தருமபுரி வாசிக்கிறது நிகழ்ச்சி

வரும் 8-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை 10 நாட்கள் புத்தகத்திருவிழா நடைபெற உள்ளது. மாணவர்கள் குழுவாக புத்தகம் வாசிப்பில் ஈடுபட்டனர்.
இல்லம் தேடி கல்வி மையங்களில் தருமபுரி வாசிக்கிறது நிகழ்வில் மாணவர்கள் புத்தகங்களை வாசித்த காட்சி.
இல்லம் தேடி கல்வி மையங்களில் தருமபுரி வாசிக்கிறது நிகழ்வில் மாணவர்கள் புத்தகங்களை வாசித்த காட்சி.
Published on

பென்னாகரம்,

தருமபுரியில் வரும் 8-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை 10 நாட்கள் புத்தகத்திருவிழா நடைபெற உள்ளது. இந்த புத்தகத் திருவிழாவை முன்னிட்டு தருமபுரி மாவட்டம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகள், கல்லூரிகளில் "தருமபுரி வாசிக்கிறது"நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிலையில் பென்னாகரத்தில் உள்ள 809 இல்லம் தேடிகல்வி மையங்களிலும் தருமபுரி வாசிக்கிறது நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, மாணவர்கள் குழுவாக புத்தகம் வாசிப்பில் ஈடுபட்டனர்.

பென்னாகரம் அருகே பாப்பாரப்பட்டி அருகே உள்ள நல்லப்ப நாயகனஅள்ளி மையத்தில் தருமபுரி மாவட்ட இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் ராஜகோபால், பென்னாகரம் இல்லம் தேடி கல்வி பொறுப்பாளர் தாமோதரன் ஆகியோர்கள் மாணவர்களுடன் வாசிப்பு நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மேலும் வட்டார கல்வி அலுவலர்கள் மணி கிருஷ்ணன், துளசிராமன், ஜெகன் மற்றும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரிய பயிற்றுநர்கள் உடன் இருந்தனர்.  

X

Maalai Malar
www.maalaimalar.com