search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாலக்கோடு மார்க்கெட்டில் தக்காளி விலை சரிவு
    X

    பாலக்கோடு தக்காளி மார்க்கெட்டில் விற்பனைக்காக பெட்டிகளில் வைக்கப்பட்டுள்ள தக்காளி பழங்களை படத்தில் காணலாம்.

    பாலக்கோடு மார்க்கெட்டில் தக்காளி விலை சரிவு

    • தக்காளி விலை கிலோ ரூ.100-க்கும் மேல் விற்று உச்சம் தொட்டது.
    • தக்காளி விலை கிலோ ரூ.8 முதல் 10 வரை வியாபாரிகள் கொள்முதல் செய்தனர்.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தக்காளி மார்கெட்டிற்கு தினந்தோரும் 10 டன் அளவிற்கு தக்காளி வரத்து உள்ளது . இச்சந்தையில் இருந்து தேனி, திண்டுக்கல், சேலம் , ஈரோடு போன்ற வெளி மாவட்டங்களுக்கு தக்காளி ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    கடந்த சில மாதங்களுக்கு முன் தக்காளி விலை கிலோ ரூ.100-க்கும் மேல் விற்று உச்சம் தொட்டது. இதனால் தருமபுரி மாவட்டத்தில் காரிமங்கலம், பெல்ரம்பட்டி, பொப்பிடி , சோமனஹள்ளி, மாரண்ட அள்ளி, பஞ்சப்பள்ளி, பேளார ஹள்ளி, எலங்காளப்பட்டி, கரகூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் வழக்கத்தை விட அதிக பரப்பளவில் தக்காளியை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.

    இதனால் பாலக்கோடு தக்காளி மார்க்கெட்டுக்கு தக்காளியின் வரத்து படிப்படியாக அதிகரித்து காணப்பட்டது. இதனையடுத்து இன்று மார்க்கெட்டில் தக்காளி கொள்முதல் விலை கிலோ ரூ.8 முதல் 10 வரை வியாபாரிகள் கொள்முதல் செய்தனர். மேலும் 15 கிலோ எடை கொண்ட ஒரு கூடை தக்காளி ரூ.100 முதல் 150 -வரை விற்பனையாகி வருகிறது.

    Next Story
    ×