என் மலர்
தர்மபுரி
- மொபட்டில் தரைப்பாலத்தை கடக்க முயன்ற இருவரும் ஆற்றுக் குள் தவறி விழுந்தனர்.
- சந்திரன் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார்.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அருகே உள்ள கூலியம் கிராமத்தை சேர்ந்தவர்கள் சந்துரு (வயது 25), மற்றும் ரஞ்சித் குமார் (25). இவர்கள் இருவரும் தனியார் கம்பெ னியில் வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்றிரவு 7.30 மணிக்கு மொபட்டில் ஊருக்கு சென்றனர். பண்டப்பள்ளி அருகே தென்பெண்ணை ஆற்றின் நீர்வரத்து அதிகமாக இருந்ததால் ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பா லத்தின் மீது தண்ணீர் சென்றது. இதனால் மொபட்டில் தரைப்பாலத்தை கடக்க முயன்ற இருவரும் ஆற்றுக் குள் தவறி விழுந்தனர்.
இதில் ரஞ்சித்குமார் காயத்து டன் உயிர் தப்பினார். சந்திரன் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். தகவலறிந்த ராயக் கோட்டை தீயணைப்புத்துறையினர் மற்றும் உத்தனப் பள்ளி போலீசார் சந்திரனை தேடி வருகின்றனர்.
- மாணவிகள் எடை தூக்கும் போட்டியில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
- பரிசு பெற்ற மாணவர்களை பாராட்டி பதக்கங்களை வழங்கி கௌரவித்தனர்.
மொரப்பூர்,
கொங்கு சஹோதயாவில் மாவட்ட அளவிலான ஜீடோ போட்டி, கரூர் பரணி வித்யாலயா பள்ளியில் நடை பெற்றது. இப்போட் டியில் பல பள்ளியிலிருந்து மாணவர்கள் கலந்துக் கொண்டனர். அதில் ஸ்ரீராம் பப்ளிக் பள்ளியின் 6-ம் வகுப்பு மாணவி பாஷியா இஷால் 11-வயதிற்கு உட்பட்ட மாணவிகள் பிரிவில் 40-கிலோ எடை தூக்கும் போட்டியில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
மேலும், 5-ம் வகுப்பு மாணவன் அமுதவன் 11-வயதிற்கு உட்பட்ட மாணவர் பிரிவில் 25-கிலோ எடை பிரிவில் வெற்றி பெற்று 2-வது பரிசான வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளார். 8-ம் வகுப்பு மாணவன் சையத் சல்மான் 16-வயதிற்கு உட்பட்ட மாணவர் பிரிவில் 3-ம் இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.
பரிசு பெற்ற மாணவர்களை பள்ளியின் தாளாளர் வேடியப்பன், சாந்தி வேடியப்பன் இயக்கு நர் தமிழ்மணி, பள்ளி முதல்வர் வெற்றிவே ல்செல்வம், பாராட்டி பதக் கங்களை வழங்கி கௌரவித்தனர். உடன் பள்ளியின் ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்துக் கொண்டு மாணவச் செல் வங்களை பாராட்டி சிறப் பித்தனர்.
- வீட்டை சரியாக பராமரிக்காமல் இருந்ததால் கணவர் ஆனந்தராஜ், சூர்யாவை திட்டியதாக தெரிகிறது.
- 4-ந் தேதி தனது மகள் பிரதிக்ஷாவை அழைத்து கொண்டு வீட்டைவிட்டு வெளியே சென்றார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள மாதேரிகாட்டு கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ். கூலித்தொழி–லாளியான இவர் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு சூர்யா (25) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிரதிக்ஷா (5), எக்ஷி (3) என்ற 2 மகள்கள் உள்ளனர். கணவன்-மனைவி இருவரும் சந்தோசமாக குடும்பம் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் சூர்யா வீட்டை சரியாக பராமரிக்கா–மல் இருந்து வந்துள்ளார். இதுகுறித்து அவரது கணவர் ஆனந்தராஜ், சூர்யாவை திட்டியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த காணப்பட்ட சூர்யா கடந்த 4-ந் தேதி தனது மகள் பிரதிக்ஷாவை அழைத்து கொண்டு வீட்டைவிட்டு வெளியே சென்றார். அப்போது அவர் தனது தாயின் வாட்ஸ்அப்பிற்கு தான் வீட்டை விட்டு செல்வதாகவும், தனது மற்றொரு மகள் எக்ஷியை வீட்டிலேயே இருப்பதாகவும் குறுந்தகவலை அனுப்பி யுள்ளார். இதனால் பதறிப்போன சூர்யாவின் தாயார் உடனே ஆனந்த ராஜூக்கு தகவல் தெரி வித்தார். இருவரும் சூர்யா வையும், பிரதிக்ஷாவை தேடிவந்தனர். எங்கு தேடி யும் 2 பேரும் கிடைக்காததால் அவர்கள் மாயமானது தெரியவந்தது.
இதுகுறித்து ஆனந்தராஜ் பாலக்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் தெரி வித்தார். புகாரின் பேரில் போலீசார் மாயமான தாய் சூர்யாவை, அவரது மகள் பிரதிக்ஷாவையும் தீவிர மாக தேடிவருகின்றனர்.
- தொடர்ந்து 5 வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்தனர்.
- காதல் திருமணம் செய்து கொண்ட அவர்கள் சென்னையில் வசித்து வந்தனர்.
தருமபுரி,
தருமபுரி அருகே அன்னசாகரம் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மகன் சக்தி (வயது 23). பட்டதாரியான இவர் டிரைவர் வேலை செய்து வந்தார். இவரும் தருமபுரி டீச்சர்ஸ் காலனியைச் சேர்ந்த அம்சவேணி (22) என்பவரும் இலக்கியம்பட்டி அரசு பள்ளியில் படிக்கும்போது பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இவர்கள் தொடர்ந்து 5 வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்தனர்.
இந்த நிலையில் இவரது காதல் விவகாரம் அம்சவேணியின் வீட்டிற்கு தெரியவந்தது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு அம்சவேணியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதல்ஜோடி இருவரும் வீட்டைவிட்டு சென்று கடந்த ஜூலை மாதம் 26-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர். காதல் திருமணம் செய்து கொண்ட அவர்கள் சென்னையில் வசித்து வந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த பெண் வீட்டார் அம்ச–வேணியை மிரட்டியதாக தெரிகிறது. இந்த நிலையில் தனது மகளை காணவில்லை என்று அம்சவேணியின் தந்தை டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் அம்சவேணியை தேடி வருவதை அறிந்து, தனது காதல் கணவருடன் அவர் பாதுகாப்பு கேட்டு இன்று தருமபுரி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். அங்கு அம்சவேணி தான் காதல் திருமணம் செய்ததை தனது தந்தை பிடிக்காததால் அவர்கள் தங்களை மிரட்டி வருவதாகவும், எனவே, தங்களுக்கு பாதுகாப்பு தருமாறு புகார் தெரிவித்தார்.
இதுகுறித்து போலீசார் காதல்ஜோடியின் பெண் வீட்டாரை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் பெண் வீட்டார் சமா–தானம் ஆகாத தால், பெண்ணை காதல் கணவ ருடன் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- தருமபுரி மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது.
- மாவட்டம் முழுவதும் பெய்த மழை 61.8 மி, பென்னாகரத்தில் அதிகபட்சமாக 28 மி.மீ மழை அளவு பதிவாகி உள்ளது.
தருமபுரி,
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் நல்ல மழை பெய்து வந்தது. நேற்று காலை முதல் மாவட்டம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இந்நிலையில் மாலை திடீரென மழை பொழிய தொடங்கியது.
இதில் தருமபுரி நகர் பகுதி, பென்னாகரம், கடத்தூர், அரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்தது. மேலும் திடீரென மழை பெய்ததால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மழையில் நனைந்தவாறே சென்றனர். இதனால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை ஏற்பட்டது. மேலும் மழையில்லாமல் பயிர்கள் காய்ந்து வந்த நிலையில், தொடர்ந்து பெய்து வரும் மழையால், விவசாயிகளும் பொதுமக்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தருமபுரி மாவட்டத்தில் இன்று 6 மணி வரை பதிவான மழை அளவில் மொத்தம் 61.8 மி.மீ மழை அளவு பதிவாகி உள்ளது. இதில் பென்னாகரத்தில் அதிகபட்சமாக 20 மி.மீ மழை அளவு பதிவாகி உள்ளத. மாவட்ட முழுவதும சராசரியாக 6.86 மி.மீ அளவு பெய்துள்ளது.
- கடத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் 2022- 2023-ஆண்டின் எம்.பி. நிதி திட்டத்தின் கீழ் ரூ.2.50 லட்சம் மதிப்பிலான உயர் மின் கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டது.
- கடத்தூர் பகுதியில் ரூ.2.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட உயர் மின் கோபுர விளக்குகள் திறப்பு விழா நடைபெற்றது.
பாப்பிரெட்டிப்பட்டி:
தருமபுரி மாவட்டம், கடத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஒடசல்பட்டி, மணியம்பாடி, தேக்கநாயக்கன்பட்டி, உள்ளிட்ட கிராமங்களில் எம்.பி தொகுதி மேம்பாட்டு திட்டம் 2022- 2023-ன் கீழ் ரூ.2.50 லட்சம் மதிப்பிலான உயர் மின் கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டது. இதனை தருமபுரி எம்.பி செந்தில்குமார் தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.
இதில் ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம், மணியம்பாடி ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா சரவணன், ஒன்றிய துணைத் செயலாளர் சரவணன், பி.டி.ஏ தலைவர் ரமேந்தர், கருணாகரன், கடத்தூர் நகர செயலாளர் மோகன், பேரூராட்சி தலைவர் கேஸ் மணி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் முனிராஜ், தங்கராஜ், பழனி, பச்சையப்பன், கண்ணன், சதீஷ்குமார், பிரகாஷ், சென்னகிருஷ்ணன், ஆண்டியப்பன், சின்னதுரை, அன்பரசு, சரவணன் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- பெரும்பாலை அரசு பள்ளியில் அடுப்பில்லா சமையல் நிகழ்ச்சி நடைபெற்றது.
- நிகழ்ச்சியில் மாணவிகள் இயற்கை உணவு உள்பட அடுப்பில்லாமல் செய்த சுவையான சமையல் உணவு வகைகளை பார்வைக்காக வைக்கப்பட்–டிருந்தது.
தருமபுரி
தருமபுரி மாவட்டம் பெரும்பாலை அரசு மேல்நிலைப்பள்ளியில் பென்னாகரம் மற்றும் ஏரியூர் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில் அடுப்பில்லா சமையல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
திட்ட பணிகள் மேற்பார்–வையாளர் விஜயலட்சுமி, தொகுதி மேற்பார்வை யாளர் கலைச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதைத் தொடர்ந்து பள்ளியின் ஆசிரியர் சீனிவாசன் வரவேற்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில் 49 மாணவி கள் இயற்கை உணவு, சிறுதானியங்கள், காய்கறி, பழங்கள் போன்றவற்றை கொண்டு அடுப்பில்லாமல் செய்த சுவையான சமையல் உணவு வகைகளை பார்வைக்காக வைக்கப்பட்–டிருந்தது. இதில் வெற்றி பெற்ற மாணவி–களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் பள்ளி ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் என 20-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் முகுந்த மாதவன் அனை–வருக்கும் நன்றி கூறினார்.
- காரிமங்கலம் அரசு மகளிர் கல்லூரியில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் சிறுதானிய கண்காட்சி நடைபெற்றது.
- கண்காட்சியில் மாணவிகள் ஊட்டச்சத்து மற்றும் உணவு கட்டுப்பாட்டு துறையை சேர்ந்த மாணவிகள் சிறு தானியங்கள் மற்றும் சிறுதானியங்களால் செய்த உணவு வகைகளை காட்சிப்படுத்தினர்.
காரிமங்கலம்
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கலை கல்லூரியில் ஊட்டச்சத்து மற்றும் உணவு கட்டுப்பாட்டுதுறை மற்றும் உணவு பாதுகாப்பு துறை சார்பாக சிறுதானிய கண்காட்சி மற்றும் உணவுப் பொருள்களின் பயன்பாடுகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் கீதா தலைமை வகித்தார். இதில் ஊட்டச்சத்து மற்றும் உணவு கட்டுப்பாட்டு துறை தலைவர் செந்தில்குமார், காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் ஊட்டச்சத்து மற்றும் உணவு கட்டுப்பாட்டு துறையை சேர்ந்த மாணவிகள் சிறு தானியங்கள் மற்றும் சிறுதானியங்களால் செய்த உணவு வகைகளை காட்சிப்படுத்தினர். மேலும் கம்பு, திணை, வரகு, குதிரைவாலி, சாமை, கேழ்வரகு, சோளம் மற்றும் கொள்ளு உள்ளிட்ட சிறு தானியங்களில் இயற்கையாகவே புரதம், நார்சத்து, கால்சியம், இரும்பு சத்து, வைட்டமின்கள், தாது உப்புக்கள், காப்பர் போன்ற எண்ணற்ற ஊட்டச்சத் துக்கள் உள்ளன. இவற்றில் செய்யும் உணவு வகைகள் எளிதில் ஜீரணம் ஆகக் கூடியது.
முக்கியமாக மனிதர்களை பாதிக்கும் பல நோய்களிலிருந்து பாதுகாக் கக்கூடிய தன்மையும் ஆரோக்கியமான உடலை பராமரிக்க சிறு தானியங்கள் முக்கிய பங்கு வகிப்பதாக கண்காட்சியில் எடுத்து ரைத்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊட்டச்சத்து மற்றும் உணவு கட்டுப்பாட்டு கௌரவ விரிவுரை யாளர்கள் பிரியா, விஜயலட்சுமி, மதுவந்தி மற்றும் கல்லூரி மாணவிகள் ஆகியோர் செய்து இருந்தனர்.
- தருமபுரி மாவட்டத்தில் 5-ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா நாளை முதல் வள்ளலார் திடலில் நடைபெற உள்ளது. இதனை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தொடங்கி வைக்கிறார்.
- புத்தக கண்காட்சியில் 100-க்கும் மேற்பட்ட அரங்குகளில் ஆயிரக்கணக்கான தலைப்புகளைக் கொண்ட லட்சக்கணக்கான புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.
தருமபுரி
தருமபுரி வள்ளலார் திடலில் மாவட்ட நிர்வாகம், தகடூர் புத்தகப் பேரவை மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் தருமபுரி புத்தகத் திருவிழா 2023- னை வருகின்ற நாளை காலை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்,தொடங்கி வைத்து,கண்காட்சி அரங்குகளை பார்வையிடுகிறார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் மாவட்டம் தோறும் புத்தகத் திருவிழாக்கள் நடத்திட ஆணையிட்டுள்ளதை தொடர்ந்து, தருமபுரி மாவட்டத்தில் 5-ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா நாளை முதல் வள்ளலார் திடலில் நடைபெற உள்ளது. தருமபுரி புத்தகத் திருவிழாவில் 100-க்கும் மேற்பட்ட அரங்குகளில் ஆயிரக்கணக்கான தலைப்புகளைக் கொண்ட இலட்சக்கணக்கான புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. இப்புத்தக திருவிழாவில் நாள்தோறும் காலை முதல் இரவு வரை புத்தகக் கடைகள் திறந்திருக்கும். நாள்தோறும் மாலை 7 மணியிலிருந்து 8.30 மணி வரை தமிழகத்தின் முன்னணி பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், பல்துறை ஆளுமைகள், அறிவுசார் சான்றோர்கள் ஆகியோரின் சொற்பொழிவு நிகழ்வுகள் மற்றும் கருத்தரங்குகள் நடைபெற உள்ளது.
நாள்தோறும் பிற்பகல் 3 மணி முதல் தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு இலக்கிய அமைப்புகள் நடத்தும் கலந்துரையாடல்களும், மாணவ. மாணவியர்கள் பங்குபெறும் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. அனைத்து புத்தகங்களும் ஒரே இடத்தில் கிடைக்ககூடிய வகையில் நடைபெற உள்ள இம்மாபெரும் புத்தகத் திருவிழாவினை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் தொடங்கி வைத்து சிறப்பிக்க உள்ளார்.
மேலும், இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர். நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், , பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
- தருமபுரி மாவட்டத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணிபுரிய முன்னாள் படைவீரர்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
- தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த தகுதியுள்ள முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிட்-இல் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம் மற்றும் திருச்சி Division-களில் Retail Outlet Dealers ஆக பணிபுரிய முன்னாள் படைவீரர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க ப்பட்டுள்ளது. அதில் சிசி-1 எனக் குறிப்பிட்டிருக்கும் பிரிவு களில் தகுதியான முன்னாள் படைவீரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தகுதியுடைவர்கள் விண்ணப்பிக்க www.petrolpumpdealerchayan என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். வரும் 27-ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும். மேலும் விபரங்களுக்கு 0427-2274545, 0427-2274555 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
எனவே தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த தகுதியுள்ள முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பித்து பயன்பெறுமாறும், விண்ணப்பத்திருப்பின் அதன் விவரத்தினை தருமபுரி மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.
- இவ–ருக்கு அடிக்கடி மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்தது.
- தனியாக இருந்தபோது திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண் டார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் இண்டூர் அருகே பழைய இண்டூர் பகுதியைச் சேர்ந்த–வர் சிவாஜி (வயது50). கட்டிட மேஸ்திரியான இவ–ருக்கு அடிக்கடி மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சிவாஜி வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார்.
இதனால் அவரது குடும்பத்தி–னர் தட்டிகேட்டதால், தகராறு ஏற்பட்டது. இதில் மனவே தனை அடைந்த சிவாஜி நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண் டார். இது குறித்து இண்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசார ணை நடத்தி வருகின்றனர்.
- நிகழ்ச்சியை தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
- 600 தென்னங்கன்றுகள் 100 சதவீத மானியத்தில் வழங் கப்பட உள்ளது.
தொப்பூர்,
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டாரத்தில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளான் வளர்ச்சி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட பேடறஅள்ளி மற்றும் எச்சனஅள்ளி பஞ்சாயத்தில் இலவசமாக தென்னங்கன்று வழங்கும் நிகழ்வினை தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
இதில் நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், மக்கள் பிரிதி நிதிகள் மற்றும் விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர். நடப்பு ஆண்டில் பேடர அள்ளி, எச்சனஅள்ளி, கோணங்கி அள்ளி, பூதன அள்ளி, மாதேமங்கலம், கம்மம்பட்டி ஆகிய 6 பஞ்சாயத்துகள் தேர்வு செய்யப்பட்டது. தேர்வு செய்யப்பட்ட பஞ்சாயத்து களில் மானிய விலையில் விவசாய இடுபொருட்கள் வழங்கப்படவுள்ளது.
நிகழ்ச்சியில் தென்னங் கன்று ஒவ்வொரு பஞ்சாயத்துகளில் 300 குடும்பங் களுக்கு 2 கன்றுகள் வீதம் 600 தென்னங்கன்றுகள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளது. மேலும் கடப்பாறை, மண்வெட்டி, அறுவாள், பாண்டல் மற்றும் களைக் கொத்தி ஆகியவற்றை உள்ள டக்கிய வேளாண் பண்ணை கருவிகள், கைதெளிப் பான்கள், வரப்பு பயிராக பயிர் வகை விதைகள் விவசா யிகளுக்கு 50% மானியத்தில் ஒவ்வொரு கிராம பஞ்சா யத்துகளுக்கும் வழங்கப்பட உள்ளது.
கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் குறைந்த பட்சம் 8 பயனாளிகளை கொண்ட 10 ஏக்கர் நீர் ஆதாரமற்ற மானாவாரி தரிசுநில தொகுப்பு தேர்வு பணி செய்யப்பட்டு வருகிறது. தேர்வு செய்யப்படும் தொகுப்பில் நீர் ஆதாரம் ஏற்படுத்தப்பட்டு சொட்டுநீர் பாசனம் அமைத்து அந்த தொகுப்பு பரப்பு முழுவதும் பழமரம் நடப்பட்டு, மானா வாரி தரிசாக இருந்த நிலம் மீண்டும் வேளாண் சாகுபடிக்கு கொண்டு வரு வதின் வாயிலாக சாகுபடி பரப்பினை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.மேற்கூறிய அரசு மானிய திட்டங்களில் விவசாயிகள் முன்பதிவு செய்து பயன் பெறுமாறு அறிவித்தினார்.






