என் மலர்tooltip icon

    தர்மபுரி

    • லைகள் 10 அடிக்கு மேல் உயரம் கொண்டதாக இருக்கக் கூடாது.
    • சுத்தமான களிமண்ணால் செய்யப்பட்டவையாக இருக்க வேண்டும்.

    தருமபுரி, 

    வருகின்ற 18.9.2023 அன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்ப டவிருக்கிறது. இப்பண்டிகையையொட்டி பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கு ஆகி யவற்றை கருத்தில் கொண்டு, தமிழக அரசு வழிகாட்டு தல்களை வெளியிட்டுள்ளது. சிலை வைத்து வழிபாடு செய்வது மற்றும் கரைப்பது தொடர்பான நிபந்தனைகள் பின்வருமாறு:-

    சிலைகள் அமைக்க அந்தந்த பகுதி சார் ஆட்சியர் அல்லது கோட்டாட்சியர் ஆகியோரிடம் மனு அளித்து அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும். நிறுவப்படும் சிலைகள் 10 அடிக்கு மேல் உயரம் கொண்டதாக இருக்கக் கூடாது.

    கடந்த ஆண்டில் வைக்கப் பட்ட இடங்கனை தவிர புதிய இடங்களில் சிலைகளை வைக்க அனுமதி கிடையாது.  மேலும், மின்சார வாரி யத்தில், மின் இணைப்பு எங்கிருந்து பெறப்படுகிறது என்பதற்கான சான்றும் இணைக்கப்பட வேண்டும். நிறுவ இருக்கின்ற விநாயகர் சிலையானது சுத்தமான களிமண்ணால் செய்யப்பட்டவையாக இருக்க வேண்டும்.

    சிலைகள் நிறுவ அமைக்கப்படும் கொட்டகை எளிதில் தீப்பிடிக்காத பொருட் களைக் கொண்டு நுழைவிடம் மற்றும் வெளி யேறும் இடம் ஆகியவை தனித்த னியாக வைத்து போதுமான இடவசதியுடன் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். வழிபாட்டுத் தளங்கள், மருத்துவமனைகள் மற்றும் கல்விக் கூடங்களுக்கு அருகாமையிலும், மக்களின் எதிர்ப்புகள் உள்ள இடங்களி லும் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தக் கூடாது. காலையில் 2 மணி நேரமும், மாலையில் 2 மணி நேரமும் மட்டுமே ஒலிபெருக்கியை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

     அதேபோல் பாலக்கோடு தனியார் திருமண மண்ட பத்தில் விநாயகர் சதுர்த்தி சிலை வைப்பது தொடர்பான கலந்தாய்வுகூட்டம் பாலக்கோடு டி.எஸ்.பி. சிந்து தலைமையில் நடைப்பெற்றது. இதில் பாலக்கோடு, காரி மங்கலம், மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி, மகேந்தி ரமங்கலம் ஆகிய போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட விநாயகர் சிலை அமைப்பா ளர்கள் கலந்து கொண்டனர். இதில் பேசிய டி.எஸ்பி.சிந்து வருகின்ற 18-ம் தேதி நடைபெற இருக்கும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு வைக்கப்படும் விநாயகர் சிலைகளை கரைக்க 33 நிபந்தனைகள் குறித்து எடுத்துரைத்தார்.

    இந்த கலந்தாய்வு கூட்டத்தில் சிலை அமைப்பா ளர்கள், பொதுமக்கள், இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ், சுப்ரமணி, மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

    • டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. இன்று தருமபுரிக்கு வருகை தந்தார்.
    • உபரி நீர் திட்டத்திதை தி.மு.க. அரசு கண்டு கொள்ளாமல் இருந்து வருகிறது.

    தருமபுரி,  

    தருமபுரி கிழக்கு மாவட்ட பா.ம.க. சார்பில் பாப்பி–ரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பா.ம.க. தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. இன்று தருமபுரிக்கு வருகை தந்தார். அப்போது அவர் நிருபர்க ளிடம் அளித்த பேட்டியில் கூறியதாவது:

    தமிழகத்தில் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் ஆங்காங்கே பா.ம.க. சார்பில் நடத்தி வருகின் றோம். முதற் கட்டமாக தருமபுரி மாவட்டம் பாப்பி ரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்கு சாவடி முகவர்கள் கூட்டம் கடத்தூரிலும், மாலை 4 மணிக்கு தருமபுரியிலும் நடைபெறுகிறது. தருமபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் காவிரி ஆற்றின் உபரிநீர் திட்டம் நிறைவேற்ற முதல் கோரிக்கையாக தொடர்ந்து நாங்கள் வைத்து வருகின்றோம். இந்த உபரி நீர் திட்டத்தால், சிப்காட், தொழிற்பேட்டை, தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு ஆகியவை அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும். இதுசம்பந்தமாக மாவட்டத்தில் பா.ம.க. சார்பில் பல போராட்டங் களும், பலமுறை கையெ–ழுத்து இயக்கம் போராட்ட–மும் நடைபெற்றது. இதில் 10 லட்சம் பேர் கையெ–ழுத்து போட்டுள்ளனர். அதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பி வைத்துள்ளோம். இதுகுறித்து முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடமும் நாங்கள் கோரிக்கையாக வைத்தி ருந்தோம். அப்போது, அவர் இந்த உபரி நீர் திட்டத்திற்கு நிதி ஒதுக்கினார்.

    பின்னர் தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது, முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினி டமும் பலமுறை இதுகுறித்து மனுவாக நேரில் சந்தித்து கொடுத்துள்ளோம். இந்த திட்டத்தை குறித்து தி.மு.க. அரசு கண்டு கொள்ளாமல் இருந்து வருகிறது. வருடந்தோறும் காவிரி ஆற்றில் 100 டி.எம்.சி. உபரி நீர் வீணாக கடலில் கலந்து வருகிறது. இந்த நீரில் இருந்து 3 டி.எம்.சி. தண்ணீர் மட்டும்தான் உபரிநீராக ஏரி, குளங்களில் நிரப்ப கோரிக்கை வைக்கப்–பட்டுள்ளது. இதுகுறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடமும் வலியுறுத்தி உள்ளோம்.

    அனைத்து கட்சிகளும் வலியுறுத்தியுள்ளன. மனம் இருந்தால், மார்க்கம் அமையும் என்பதுபோல், தி.மு.க. ஆட்சி மனம் இறங்கினால், தருமபுரி மாவட்டத்திற்கு காவிரி ஆற்றின் உபரி நீர் திட்டம் நிறைவேறும். மாவட்டத்தில் தொழிற்பேட்டை இல்லாத–தால், இங்கிருந்து 5 லட்சம் இளைஞர்கள் வெளி மாவட்டம், மாநிலங்களுக்கு சென்று வேலை தேடிவரு கின்றனர். எனவே, உபரிநீர் திட்டம் நிறைவேற்றி, தொழிற்பேட்டை அமைத்து தருமபுரி மாவட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கிட வேண்டும். எனவே, காவிரி உபரி நீர்த்திட்டத்தை விரைவில் நிறைவேற்ற முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    காவிரி நீர் பங்கீட்டில் மத்திய அரசின் நதி நீர் ஆணையத்தையும் மதிக்கா–மல், நீதிமன்ற உத்தரவையும் மதிக்காமல் கர்நாடகா அரசு கடுமையாக நடந்து கொள்கி–றது. இது வருந்தத்தக்க விஷயமாகும். பிறகு நீதிமன்றம் எதற்கு? தீர்ப்பு எதற்கு? எதையும் கர்நாடகா அரசு மதிக்கவில்லை. தருமபுரி மாவட்டத்தில் 5 லட்சம் இளைஞர்களுக்கு வேலை இல்லை. மாவட்டத்தில் உள்ள தொழில்துறையிலும் வளர்ச்சி இல்லை. தருமபுரி மாவட்ட எல்லையில் உள்ள பெங்களூரு வளர்ச்சி அடைகிறது. இதேபோன்று சேலம் மாவட்டம் வளர்ச்சியடைகிறது. ஏன் தருமபுரி மாவட்டம் மட்டும் வளர்ச்சி அடையவில்லை. இந்த மாவட்டத்தின் மீது தி.மு.க. அரசுக்கு அக்கறை இல்லையா? மாவட்டத்தில் விளையும் விவாசாய பொருட்களுக்கு இடைத்தரகர்கள் தான் விலையை நிர்ணயம் செய்து வருகிறார்கள். பருத்தி, மஞ்சள், மரவள்ளி, நெல் உள்ளிட்ட பொருட்களுக்கு விலையை அரசே நிர்ணயம் செய்ய வேண்டும்.

    2 மாதங்களுக்கு முன்பு தக்காளி விலை ரூ.200 ஆக உயர்ந்தது. இதே தக்காளி 3 மாதங்களுக்கு முன்பே ரூ.5-யாக இருந்தது. இதில் இடைதரகர்கள் தான் அதிகமாக சம்பாதித்து வருகின்றனர். இந்த மாவட்டத்தில் தக்காளியின் விளைச்சல் அதிகமாக உள்ளது. எனவே, தமிழக அரசு குளிர்பதன கிடங்கு அமைத்தால், தக்காளி விலையேற்றத்திற்கான பிரச்சினைக்கு தீர்வு காணலாம். தருமபுரி மாவட்டத்தில் போதை பொருள் விற்பனை யால் அதிகமான மாண வர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் போதை தடுப்பு போலீஸ் துறையில் குறைந்த அளவே போலீசார் உள்ளனர். எனவே, காலியாக உள்ள காவலர் பணியிடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனே நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது, கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட பா.ம.க. செயலா ளர்கள் எஸ்.பி.வெங்கடேஸ் வரன் எம்.எல்.ஏ., அரசாங்கம், மாநில விவசாய அணி வேலுசாமி மற்றும் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

    • அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • 26-ந் தேதி தி.மு.க. ஒருங்கிணைந்த மாவட்ட இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

    காரிமங்கலம்,  

    தருமபுரி மாவட்டத்தில் வருகிற 26-ந் தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ள இடத்தை வேளாண் துறை அமைச்சர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தருமபுரி மாவட்டத்தில் வருகிற 26-ந் தேதி காரிமங்கலத்தில் தி.மு.க. ஒருங்கிணைந்த மாவட்ட இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் தருமபுரியில் பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி, அரசு திட்டங்கள் ஆய்வு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

    இந்த நிகழ்ச்சிகளில் தி.மு.க. இளைஞரணி செயலாளர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி கலந்து கொள்கிறார். இதையொட்டி நேற்று தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அமைச்சர் உதயநிதி பங்கேற்க உள்ள நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது தி.மு.க. மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன், கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, முன்னாள் எம்பி தாமரைச்செல்வன், அவைத் தலைவர்கள் மனோகரன், செல்வராஜ், மாவட்ட துணை செயலாளர் வக்கீல் மணி, தலைமை செயற்குழு உறுப்பினர் பேரூராட்சி தலைவர் மனோகரன், ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணன் அன்பழகன், அடிலடங அன்பழகன், வக்கீல் கோபால், முத்துக்குமார், சரவணன், பேரூராட்சி தலைவர்கள் வெங்கடேசன், சூர்யா தனபால், மாரி, நகர செயலாளர் சீனிவாசன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் வெங்கடேஸ்வரன், சிவகுரு மற்றும் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சாக்கடை அடைப்பால் கழிவுநீர் சாலையில் வெளியேறி மழைநீருடன் கலந்து வெள்ளமாக ஓடியது.
    • பள்ளி மாணவ, மாணவியர், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் சிரமத்துக்கு ஆளாகினர்.

    தருமபுரி, 

    தருமபுரி நகரில் நேற்று இரவு, 7 மணிக்கு சாரல் மழையுடன் தொடங்கி கனமழையாக மாறி ஒரு மணி நேரம் கொட்டியது. பல இடங்களில் உள்ள சாக்கடை அடைப்பால் கழிவுநீர் சாலையில் வெளியேறி மழைநீருடன் கலந்து வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது. இதனையடுத்து தருமபுரி நேதாஜி பைபாஸ் சாலையின் ஓரத்தில் உள்ள சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாததால் மழை நீர், சாக்கடை நீருடன் கலந்து பைபாஸ் சாலையில் வாகன ஓட்டிகள் செல்ல முடியாதபடி தண்ணீர் ஓடியது. இதனால் பள்ளி மாணவ, மாணவியர், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் சிரமத்துக்கு ஆளாகினர்.

    தருமபுரி நான்கு வழி சாலையை இணைக்கும் இந்த சாலையில் தருமபுரி நகர போலீஸ் நிலையம் அருகில் சாலையின் அருகே உள்ள சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. இது குறித்து பல முறை மனு அளித்தும் எந்த அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை. தருமபுரி நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கால் தருமபுரி நகரில் பல்வேறு பகுதிகளில் சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாததாலும் சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது.

    இந்நிலையில் தருமபுரி நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள சீர்கேடுகளை தருமபுரி மாவட்ட நிர்வாகம் சீரமைத்து நகர் பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய்களை தூர் வாரி நகரில் தூய்மையை ஏற்படுத்த வேண்டுமென பல்வேறு தரப்பு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

    • காவிரி ஆற்றில் நீர் திறப்பு குறைந்ததால், ஒகேனக்கல்லுக்கு இன்று நீர்வரத்து சரிந்து வினாடிக்கு 5 ஆயிரம் கன அடியாக வந்தது.
    • நீர்வரத்து குறைந்தாலும், ஒகேனக்கல் ஐந்தருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    தருமபுரி:

    காவிரி மேலாண்மை வாரிய உத்தரவுப்படி கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு தண்ணீர் வினாடிக்கு 7 ஆயிரம் கன அடியாக திறக்கப்பட்டது. ஆனால் தற்போது நீர்திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டு வினாடிக்கு 2ஆயிரம் கன அடியாக திறக்கப்பட்டுள்ளது.

    கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வழியாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்தடையும்.

    இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு கடந்த 2 நாட்களாக நீர்வரத்து வினாடிக்கு 6,500 கன அடியாக நீடித்து வந்து கொண்டிருந்தது.

    இந்த நிலையில் தற்போது கர்நாடகா அரசு காவிரி ஆற்றில் நீர் திறப்பு குறைந்ததால், ஒகேனக்கல்லுக்கு இன்று நீர்வரத்து சரிந்து வினாடிக்கு 5 ஆயிரம் கன அடியாக வந்தது. மேலும் நீர்வரத்து குறைந்தாலும், ஒகேனக்கல் ஐந்தருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    இதற்கிடையே இன்று விடுமுறை நாள் என்பதால் ஒகேனக்கல்லில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். சுற்றுலா பயணிகள் எண்ணை மசாஜ் செய்து மெயின் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். பின்னர் அவர்கள் பரிசலில் சென்று சவாரி செய்து மகிழ்ந்தனர். இதன் காரணமாக மீன் கடைகள், கடைவீதி ஆகிய பகுதிகளில் பொது மக்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரின் அளவை பிலிகுண்டுலுவில் தொடர்ந்து மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    • நிலத்திற்கு தண்ணீர் எடுத்து விடுவதற்காக கிணற்றின் அருகே சென்–றார்.
    • கிணற்றுக்குள் தவறி விழுந்த–தில் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

    தருமபுரி, 

    தருமபுரி மாவட்டம் இண்டூர் அருகே ஆற்று–கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது67). விவசாயியான இவருக்கு ஒரு ஏக்கர் நிலம உள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று கண்ணன் தனது நிலத்திற்கு தண்ணீர் எடுத்து விடுவதற்காக கிணற்றின் அருகே சென்–றார். அப்போது அவர் கிணற்றுக்குள் தவறி விழுந்த–தில் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த இண்டூர் போலீசார் உடனே அங்கு விரைந்து வந்து கண்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசா–ரணை நடத்தி வருகின்றனர்.

    • படிக்கட்டுகளில் தொங்கிச் செல்லும் மாணவர்களால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    • 2 முறை விபத்து ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது.

    தருமபுரி, 

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த பாப்பாரப்பட்டியிலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மருக்காரம்பட்டி, நாகனம்பட்டி, எலுமல்மந்தை, திகிலோடு உள்ளிட்ட மலை கிராமங்களுக்கு அரசு நகர பேருந்துகள் இயக்கப்ப டுகிறது.

    நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், சுற்றுவட்டார கிராமப்புற பகுதியில் இருந்தும், அதிகளவு மாணவ, மாணவியர் நாள்தோறும் அரூர், தருமபுரியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு கல்வி பயில சென்று வருகின்றனர். இந்நிலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் கூட்ட நெரிசலால் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கிச் செல்லும் மாணவர்களால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் போதிய பேருந்து இல்லாததால் நேற்று கொட்டும் மழையிலும் மாணவர்கள் உயிருக்கு ஆபத்தான முறையில் படியில் தொங்கியபடி பயணம் செய்தது பெற்றோர் மற்றும் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே இப்பகுதியில் 2 முறை விபத்து ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்காக கூடுதல் பேருந்து இயக்கவேண்டுமென அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    இனிவரும் காலங்களில் உயிர்சேதம் ஏற்படுவதற்குள் கூடுதல் பேருந்து இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஏ.டி.எம். அறையில் எந்த மின் விளக்கும் இல்லாமல் இருட்டாக உள்ளது.
    • வாடிக்கையாளர்கள், வியாபாரிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.

    அரூர், 

    தருமபுரி மாவட்டம் , அரூரில் அரசு வங்கி இயங்கி வருகிறது. இங்கு வங்கி வாடிக்கையாளர்கள், உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் பணம் எடுப்பதற்கு வசதியாக 3 இடங்களில் ஏ.டி.எம். சென்டர் இயங்கி வருகிறது. இந்நிலையில் அரூர் திருவிக நகரில் உள்ள வங்கி ஏ.டி.எம். காலை மற்றும் இரவு நேரங்களில் தொடர்ந்து இயங்கி வருகிறது. இது உள்ளூர் வெளியூர் வாடிக்கை யாளர்களுக்கு பயனுள்ள தாக இருந்தாலும் தொடர்ந்து ஏ.டி.எம். அறையில் எந்த மின் விளக்கும் இல்லாமல் இருட்டாக உள்ளது.

    வாடிக்கையாளர்கள் பணத்தை எண்ணி சரிபார்க்க முடியாமல் பயத்துடன் வெளியே வந்து வெளிச்சத்தில் சரிபார்த்து செல்கிறார்கள். மேலும் இருட்டாக இருப்பதால் வெளியூர் பயணிகளுக்கு ஏ.டி.எம். இருப்பதும் தெரிவதில்லை. இதனால் பணம் எடுத்து செல்ல முடியாமல் அவதிப்ப டுகிறார்கள்.

    இதனால் இரவு நேரங்களில் பணம் எடுக்கும் வரும் வாடிக்கையாளர்கள், வியாபாரிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். இதனையடுத்து இருட் டில் இருக்கும் ஏ.டி.எம் அறைக்கு முறையான மின்விளக்குகள் அமைத்து தர நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்பதே வாடிக்கையா ளர்களின் கோரிக்கை யாகவும், எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

    • வரதட்சணை வேண்டாம் என்று கூறி சாருமதியை, திருமணம் செய்து கொண்டார்.
    • வரதட்சணை வாங்கி வா என்று தொந்தரவு செய்த–தாக தெரிகிறது.

    தருமபுரி,  

    தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள பாலநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருண்பாரத். இவரது மனைவி சாருமதி (வயது26). இவர்களுக்கு கடந்த 6 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு தனிஷா (3) என்ற பெண் குழந்தை உள்ளது.

    திருமணத்திற்கு முன்பு வரதட்சணை வேண்டம் என்று கூறி சாருமதியை, அருண்பாரத் திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் அருண்–பாரத் கடந்த சில நாட்களாக சாருமதியிடம், அவரது குடும்பத்தினரிடம் இருந்து வரதட்சணை வாங்கி வா என்று தொந்தரவு செய்த–தாக தெரிகிறது.

    இதுகுறித்து சாருமதி அரூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் திரும–ணத்திற்கு பிறகு அருண் பாரத் வரதட்சணை கேட்டாரா? என உண்மை தன்மை அறிய சமூக நல அலுவலர் மற்றும் வரதட்–சணை தடுப்பு அலுவலர் ஆகியோர் விசாரணை நடத்தினர். இதில், அருண்–பாரத் தனது மனைவியிடம் வரதட்சணை கேட்டார் என்று தெரியவந்தது.

    அதன்பேரில் அரூர் போலீசார் அருண்பாரத், அவரது தாய் காந்தரூபி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளனாது.
    • சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

    கடத்தூர்,  

    தருமபுரி மாவட்டம் செட்டிகரை அடுத்த பள்ள–கொல்ைல கிராமத்தை சேர்ந்தவர் காளியப்பன் (வயது62). கூலி ெதாழிலாளி. இவர் நேற்று மாலை தனது மொபட்டில் தருமபுரி–யில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றார். இரவு மீண்டும் அவர் வீட்டிற்கு சென்றார்.

    அப்போது அவர் போசி நாக்கியணஅள்ளி பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளனாது. இதில் காளியப்பன் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த கடத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காளியப்ப–னின் உடலை மீட்டு பிரேத பரிசோத–னைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ–மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விழாவுக்கு கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார்.
    • உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் புத்தக விற்பனை அரங்குகளை பார்வையிட்டார்.

    தருமபுரி,  

    தருமபுரி மாவட்ட நிர்வாகம், தகடூர் புத்தகப் பேரவை மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் 5-ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா இன்று முதல் வருகிற 17-ம் தேதி வரை 10 நாட்கள் தர்மபுரி வள்ளலார் திடலில் நடைபெற உள்ளது.

    இந்த புத்தகத் திருவிழாவின் தொடக்க விழா இன்று காலை நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார். தகடூர் புத்தக பேரவை செயலாளர் செந்தில் வரவேற்று பேசினார். செந்தில்குமார் எம்.பி., வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ., தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் தடங்கம் சுப்பிரமணி, பி. பழனி–யப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தொடங்கி வைத்து புத்தக விற்பனை அரங்குகளை பார்வை–யிட்டார். பின்னர் அவர் புத்தகத் திருவிழாவுக்கு ரூ. 1 லட்சம் நன்கொடை வழங்கி பேசினார்.

    விழாவில் அமைச்சர் பேசுகையில், தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழாக்கள் நடத்த ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ரூ.20 லட்சம் அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது. இது போன்ற புத்தகத் திருவிழாக்களை மாணவ, மாணவிகள், பொதுமக்கள் நல்ல முறையில் பயன்ப–டுத்திக் கொள்ள வேண்டும். புத்தகங்கள் படித்தால் குற்–றங்கள் குறையும். படிக்கும் காலத்தில் படிப்பில் கவனம் செலுத்துங்கள். உழைக்கும் காலத்தில் உழைப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று கூறினார்.

    புத்தக கண்காட்சியில் 100-க்கும் மேற்பட்ட அரங்குகளில் ஆயிரக்க–ணக்கான தலைப்புகளைக் கொண்ட லட்சக்கணக்கான புத்த–கங்கள் காட்சிப்ப–டுத்தப்பட உள்ளன. புத்தக கண்காட்சி நாள்தோறும் காலை முதல் இரவு வரை புத்தகக் கடைகள் திறந்திருக்கும்.

    நாள்தோறும் மாலை 7 மணியிலிருந்து 8.30 மணி வரை தமிழகத்தின் முன்னணி பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், பல்துறை ஆளுமைகள், அறிவுசார் சான்றோர்கள் ஆகியோரின் சொற்பொழிவு நிகழ்வுகள் மற்றும் கருத்தரங்குகள் நடைபெற உள்ளது. பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், சிறுவர்-–சிறுமியர்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராகக் கூடிய இளை–ஞர்கள், இல்லத்தரசிகள், மூத்த குடிமக்கள் என அனைவரும் பயன்பெறும் வகையில் புத்தக அரங்குகள், சிறுதானியங்களுக்கான உணவு அரங்குகள், அரசின் திட்டங்கள் தொடர்பான கண்காட்சி அரங்குகள், சிறுவர்கள் குழந்தைகள் விளையாடும் விதமாக தனி இடமும் அமைக்கப்பட்டு உள்ளது.

    விழாவில் கூடுதல் கலெக்டர் தீபா விஸ்வேஸ்வரி, உதவி கலெக்டர் கீதா ராணி உள்ளிட்ட அதிகாரிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 

    • எண்ணும் எழுத்தும் திட்டத்தில் 3-ம் நபர் ஆய்வை உடனடியாக அரசு கைவிட வேண்டும்
    • ஆர்பாட்டத்திற்க்கு மனோஜ் குமார் தலைமை தாங்கினார்.

    கடத்தூர், 

    தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. எண்ணும் எழுத்தும் திட்டத்தில் 3-ம் நபர் ஆய்வை உடனடியாக அரசு கைவிட வேண்டும் என்ப தை வலியுறுத்தி கடத்தூர் வட்டார கல்வி அலுவலகம் முன்பாக தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கடத்தூர் வட்டகிளை சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்பாட்டத்திற்க்கு மனோஜ் குமார் தலைமை தாங்கினார். ஆசிரியர் சுரேஷ் முன்னிலை வகித் தார். ஆசிரியர் செந்தில் குமார் அனை வரையும் வரவேற்றார்.மேலும் இந்திரா காந்தி, வேல்மு ருகன்,சாரதி, திருமால் ஆகியோர் கண்டன உரையாற்றினார். இதில் ஏராளமான ஆசிரி யர்கள் பங்கேற்றனர்.

    ×