என் மலர்
உள்ளூர் செய்திகள்

உதயநிதி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கான இடத்தை அமைச்சர் ஆய்வு
- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- 26-ந் தேதி தி.மு.க. ஒருங்கிணைந்த மாவட்ட இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
காரிமங்கலம்,
தருமபுரி மாவட்டத்தில் வருகிற 26-ந் தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ள இடத்தை வேளாண் துறை அமைச்சர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தருமபுரி மாவட்டத்தில் வருகிற 26-ந் தேதி காரிமங்கலத்தில் தி.மு.க. ஒருங்கிணைந்த மாவட்ட இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் தருமபுரியில் பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி, அரசு திட்டங்கள் ஆய்வு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சிகளில் தி.மு.க. இளைஞரணி செயலாளர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி கலந்து கொள்கிறார். இதையொட்டி நேற்று தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அமைச்சர் உதயநிதி பங்கேற்க உள்ள நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது தி.மு.க. மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன், கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, முன்னாள் எம்பி தாமரைச்செல்வன், அவைத் தலைவர்கள் மனோகரன், செல்வராஜ், மாவட்ட துணை செயலாளர் வக்கீல் மணி, தலைமை செயற்குழு உறுப்பினர் பேரூராட்சி தலைவர் மனோகரன், ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணன் அன்பழகன், அடிலடங அன்பழகன், வக்கீல் கோபால், முத்துக்குமார், சரவணன், பேரூராட்சி தலைவர்கள் வெங்கடேசன், சூர்யா தனபால், மாரி, நகர செயலாளர் சீனிவாசன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் வெங்கடேஸ்வரன், சிவகுரு மற்றும் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






