என் மலர்
உள்ளூர் செய்திகள்

வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்த கணவர், மாமியார் மீது புகார்
- வரதட்சணை வேண்டாம் என்று கூறி சாருமதியை, திருமணம் செய்து கொண்டார்.
- வரதட்சணை வாங்கி வா என்று தொந்தரவு செய்த–தாக தெரிகிறது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள பாலநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருண்பாரத். இவரது மனைவி சாருமதி (வயது26). இவர்களுக்கு கடந்த 6 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு தனிஷா (3) என்ற பெண் குழந்தை உள்ளது.
திருமணத்திற்கு முன்பு வரதட்சணை வேண்டம் என்று கூறி சாருமதியை, அருண்பாரத் திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் அருண்–பாரத் கடந்த சில நாட்களாக சாருமதியிடம், அவரது குடும்பத்தினரிடம் இருந்து வரதட்சணை வாங்கி வா என்று தொந்தரவு செய்த–தாக தெரிகிறது.
இதுகுறித்து சாருமதி அரூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் திரும–ணத்திற்கு பிறகு அருண் பாரத் வரதட்சணை கேட்டாரா? என உண்மை தன்மை அறிய சமூக நல அலுவலர் மற்றும் வரதட்–சணை தடுப்பு அலுவலர் ஆகியோர் விசாரணை நடத்தினர். இதில், அருண்–பாரத் தனது மனைவியிடம் வரதட்சணை கேட்டார் என்று தெரியவந்தது.
அதன்பேரில் அரூர் போலீசார் அருண்பாரத், அவரது தாய் காந்தரூபி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






