என் மலர்
உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் சாவு
- எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளனாது.
- சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
கடத்தூர்,
தருமபுரி மாவட்டம் செட்டிகரை அடுத்த பள்ள–கொல்ைல கிராமத்தை சேர்ந்தவர் காளியப்பன் (வயது62). கூலி ெதாழிலாளி. இவர் நேற்று மாலை தனது மொபட்டில் தருமபுரி–யில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றார். இரவு மீண்டும் அவர் வீட்டிற்கு சென்றார்.
அப்போது அவர் போசி நாக்கியணஅள்ளி பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளனாது. இதில் காளியப்பன் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த கடத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காளியப்ப–னின் உடலை மீட்டு பிரேத பரிசோத–னைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ–மனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






