என் மலர்
உள்ளூர் செய்திகள்

விவசாயி சாவு
- நிலத்திற்கு தண்ணீர் எடுத்து விடுவதற்காக கிணற்றின் அருகே சென்–றார்.
- கிணற்றுக்குள் தவறி விழுந்த–தில் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் இண்டூர் அருகே ஆற்று–கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது67). விவசாயியான இவருக்கு ஒரு ஏக்கர் நிலம உள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று கண்ணன் தனது நிலத்திற்கு தண்ணீர் எடுத்து விடுவதற்காக கிணற்றின் அருகே சென்–றார். அப்போது அவர் கிணற்றுக்குள் தவறி விழுந்த–தில் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த இண்டூர் போலீசார் உடனே அங்கு விரைந்து வந்து கண்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசா–ரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






