என் மலர்
தர்மபுரி
- அமைச்சர் உதயநிதி பேச்சுக்கு பாரதிய ஜனதா கட்சியினர் கடும் எதிர்ப்பு களை தெரிவித்து வருகின்ற னர்.
- 12 பெண் நிர்வாகிகள் உள்பட பா.ஜ.க. வினர் 130 பேரை கைது செய்து பஸ்சில் அழைத்துச் சென்றனர்.
தருமபுரி,
தருமபுரியில் இந்து அறநிலைத்துறை அமைச்சர் பதவி விலக வலியுறுத்தி, இந்து அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகை –யிட முயன்ற பா.ஜ.க.வினரை காவல் துறையினர் கைது செய்தனர்.
சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி பேச்சுக்கு பாரதிய ஜனதா கட்சியினர் கடும் எதிர்ப்பு களை தெரிவித்து வருகின்ற னர். இந்நிலையில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சனா–தனம் குறித்து பேசியதால், அவரை பதவி விலக வலி யுறுத்தி பா.ஜ.க. சார்பில் தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தருமபுரி மாவட்ட பா.ஜ.க. சார்பில் சனாதன தர்மத்தை அழிக்க துடிக்கும், இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு பதவி விலக வேண்டும் மற்றும் அமைச்சர்கள் உதயநிதி, சேகர் பாபு இருவரும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, தருமபுரி இந்து அறநிலை யத்துறை அலுவல–கத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் பா.ஜ.க.வினர் ஈடுபட்டனர்.
அப்பொழுது அமைச்சர்களுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பிய வாறு இந்து அறநிலையத்–துறை அலு–வலகத்தை முற்று கையிட முயற்சி செய்தனர். இதனையடுத்து பாது காப்பு பணியில் ஈடுபட்டி ருந்த போலீசார் 12 பெண் நிர்வாகிகள் உள்பட பா.ஜ.க. வினர் 130 பேரை கைது செய்து பஸ்சில் அழைத்துச் சென்றனர்.
அவர்களை அங்குள்ள தனியார் திருமண மண்ட பத்தில் தங்க வைத்து சிறிது நேரம் கழித்து அனுப்பி வைத்தனர். இந்த போராட்ட சம்பவம் தருமபுரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- வாய்ப்புற்று நோய், நுரையீரல் புற்று நோய், காசநோய், மாரடைப்பு, போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
- புகையிலை இல்லாத மாவட்டமாக தர்மபுரியை உருவாக்க உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
தருமபுரி,
தர்மபுரி மாவட்டம், மாவட்ட கலெக்டர் சாந்தி, மாவட்டம் முழுதும் உள்ள அரசு ஆண்கள் மேல்நி லைப்பள்ளி மற்றும் இருபாலர் பள்ளி அருகில் உள்ள மளிகை மற்றும் பெட்டி,பீடா கடைகளில் தடை செய்யப்பட்ட புகை யிலை பொருட்கள் விற்ப னை உள்ளனவா என ஆய்வு செய்து இருப்பின் உரிய நடவடிக்கை மேற் கொள்ளவும், மேலும் பள்ளிகளில் மாணவர்க–ளிடையே புகையிலை பொருட்கள் உபயோகிப்ப தால் ஏற்படும் நோய்கள், தீமைகள் குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்க உணவு பாது காப்பு துறைக்கு உத்தர விட்டுள்ளார்.
அதன் அடிப்படையில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் பானுசுஜாதா, மேற்பார்வை மற்றும் வழி காட்டலின்படி, காரிமங் கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவ லர் நந்தகோபால் பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்க–ளுக்கு, உதவி தலைமை ஆசிரியர் சுதா முன்னிலையிலும், தலைமை ஆசிரியர் லட்சுமணன் தலைமையில் ஆசிரியர்கள், பங்கேற்புடன் தடை செய்யப்பட்ட புகையிலை , குட்கா பொருட்கள் குறித்தும் புகையிலை பொ ருட்கள் உபயோகிப்ப–தால் ஏற்படும் நோய்கள் குறித்து விழிப்பு–ணர்வு செய்யப் பட்டது. புகையிலை மற்றும் குட்கா போன்ற போதை வஸ்துகளால் ஏற்படும் நோய்களான வாய்ப்புற்று நோய், நுரையீரல் புற்று நோய், காசநோய், மார டைப்பு, போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே அரசு இப்புகை யிலை மற்றும் குட்கா பொருட்களை விற்பனை செய்வதை முற்றிலுமாக தடை செய்துள்ளது. மாணவர்கள் இதனை உணர்ந்து கண்டிப்பாக இதனை தவிர்த்திடவும் வீட்டில் யாரேனும் இது போன்ற புகையிலை பொருட்களை உபயோகம் செய்தால் இது குறித்து விழிப்புணர்வு செய்து தவிர்க்க வழிவகை மேற் கொள்ளவும் கேட்டுக் கொண்டார்.
தங்கள் பகுதியில் தடை செய்யப்பட்ட பொருள்கள் விற்பனையோ , பதுக்கி வைத்து இருந்தாலோ கண்டறிந்தால் உணவு பாதுகாப்புத்துறை புகார் எண் 9444042322 என்ற எண்ணிற்கு அலைபேசி வழியாகவோ, எஸ்.எம்.எஸ். மூலமாகவோ ,கட் செவி மூலமாகவோ அனுப்பினால் உடன் நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என தெரிவித்துக் கொண்டார். பின்னர் அனைவரும் புகை யிலை இல்லாத மாவட்ட மாக தர்மபுரியை உருவாக்கு வோம் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
இதைத்தொடர்ந்து உணவு பாதுகாப்பு அலுவ லர் நந்தகோபால் பாலக் கோடு, முங்கப்பட்டி, எர்ணள்ளி, பாடி, செக்கோடி உள்ளிட்ட பகுதி களில் பெட்டி ,பீடா கடைகள் மற்றும் மளிகை கடைகளில் தடை செய்யப் பட்ட புகையிலை பொருட் கள் உள்ளனவா என ஆய்வு செய்தார். மேலும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் குறித்தும் விற்பனை கண்டறிந்தால் அபராதம், கடை செயல்பட தடை விதித்தல் குறித்தும் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களில் இருந்த ஒரு கடைக்கு உடனடி அபராதம் ரூ.5 ஆயிரம் விதிக்கப்பட்டது.
- மண்டியின் உள்ளே இருந்து புகை வெளியேறியது.
- ரூ.7 லட்சம் மதிப்பிலான பொ ருட்கள் எரிந்து நாசம் ஆனது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பிக்கனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் முனிராஜ் (வயது47). இவர் வெள்ளி சந்தையில் மாங்காய் மண்டி நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு வழக்கம் போல் மாங்காய் மண்டியை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றார். சிறிது நேரத்தில் மண்டியின் உள்ளே இருந்து புகை வெளியேறியது.
சிறிது நேரத்தில் மண்டி தீப்பிடித்து எரிய தொடங்கி யது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் முனிராஜூக்கு தகவல் தெரிவித்தனர். உட னே அவர் அங்கு விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றார். அதற்குள் தீ வேகமாக மண்டி முழுவதும் பற்றி எரிய தொடங்கியது.
இது குறித்து அவர் பாலக் கோடு தீயணைப்பு துறையி னருக்கு தகவல் கொடுத்தார். உடனே சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மண்டியில் எரிந்த கொண்டி ருந்த தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் மண்டியில் இருந்த கார் மற்றும் மாங்காய்களை அடுக்கி வைக்கும் 1200 பிளாஸ்டிக் பெட்டிகள், கேமிரா உள்ளிட்ட ரூ.7 லட்சம் மதிப்பிலான பொ ருட்கள் எரிந்து நாசம் ஆனது.
இதுகுறித்து முனிராஜ் பாலக்கோடு போலீஸ் நிலையத்தில் மர்ம நபர்கள் யாரோ தொழில் போட்டி காரணமாக தீ வைத்து இருக்க வேண்டும் என்று புகார் தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்திற்கு காரணம் என்ன? என்று தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைத்தீர்க்கும் முகாம் நடைபெற்றது.
- முகாமில் அரக்காசனஅள்ளியில் விவசாயத்திற்கு இலவச மின் இணைப்பு பெற லஞ்சம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயி கலெக்டரிடம் மனு அளித்தார்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள அரக்காசனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல்.
இவர் இன்று தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் முகாமில் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
விவசாயியான நான், அரக்காசனஅள்ளியில் குடும்பத்துடன் வசித்து வருவதாகவும், தனக்கு சொந்தமான விவசாய நிலத்திற்கு இலவச மின் இணைப்பிற்காக பெரும்பாலை மின்வாரியத்தில் அதிகாரியிடம் விண்ணப்பித்து இருந்தேன்.
அந்த அதிகாரி தனக்கு பிறகு விண்ணப்–பளித்த அனைவருக்கும் பணம் பெற்றுக் கொண்டு இலவச மின் இணைப்பு கொடுத்தது தெரியவந்தது. ஆனால், தனது நிலத்திற்கு இதுவரை மின் இணைப்பு தராமல் கால–ம் தாழ்த்தி வந்தார்.
இதுகுறித்து அதிகாரி–யிடம் கேட்டபோது, இலவச மின் இணைப்புக்காக லஞ்சம் கேட்டார். அப்போது நான் விண்ணப்பத்துடன் 10 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்தேன். அதனை பெற்றுக்கொண்டு மேலும் ரூ.20 ஆயிரம் கொடுத்தால் மட்டுமே மின் இணைப்பு வழங்க முடியும் என்று அதிகாரி கூறினார்.
ஒரு மின் இணைப்பிற்கு ரூ.20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை லஞ்சம் பெற்றுக் கொண்டுதான் மின் இணைப்பு வழங்கு–கிறார். மேலும் தனக்கு முக்கிய பிரமுகர்கள் ஆதரவு இருப்பதால் அதிகாரியை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்று மிரட்டி வருகிறார்.
எனவே இந்த மனுவை ஏற்று விசாரணை செய்து எனக்கு மின் இணைப்பு வழங்குமாறும், லஞ்சம் வாங்கும் மின்வாரிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனுவை பெற்று கொண்ட கலெக்டர் சாந்தி உடனே அங்கிருந்த மின்–வாரிய அதிகாரியை அழைத்து விசாரிக்க உத்தர விட்டார்.
- சரக அளவிலான தடகள போட்டியில் கடத்தூர் அரசு பெண்கள் பள்ளி மாணவிகள் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளனர்.
- கடத்தூரில் 3 நாட்கள் நடைபெற்ற தடகள போட்டியில் 800-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர்.
கடத்தூர்:
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டார அளவிலான தடகள விளையாட்டு போட்டிகள் கடத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
தொடர்ந்து 3 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டி யில் 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விளையா டினார்கள்.
அதில் விளையாடி 104 வெற்றி புள்ளிகளுடன் பெண்கள் பிரிவில் கடத்தூர் அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியும் ஒட்டு மொத்த சாம்பி யன்ஷிப் பட்டத்தை வென்று சாதனை படைத்தனர்.
கடத்தூர் அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியின் இந்த வெற்றி தொடர்ந்து 16-வது ஆண்டாக இப்பட் டத்தை பெறுகிறார்கள்.
போட்டியில் வென்ற வர்களுக்கு பரிசு கோப்பை பேரூராட்சி தலைவர் கேஸ்.மணி, முன்னாள் தலைமை ஆசிரியர் மோகன் வழங்கினர். வெற்றி பெற்ற மாணவி களையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரி யர்கள் ராஜேந்திரன் தென்றல், சத்தியராஜ், ஆனந்த் ஆகியோரை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர். பெற்றோர் கழகத்தினரும். பள்ளி மேலாண்மை குழுவினர் வெகுவாக பாராட்டினார்கள்.
- தருமபுரியில் இன்று சரக்கு வேனில் 750 கிலோ குட்கா பொருட்களை கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்
- மதிக்கோன்–பாளையம் போலீசார் குண்டல்பட்டியில் தீவிர வாகனசோதனையில் ஈடுபட்டபோது குட்கா பொருட்களை கடத்தி வந்தவர்கள் பிடிபட்டனர்.
தருமபுரி:
கர்நாடகா மாநிலத்தில் இருந்து தருமபுரி வழியாக தமிழகத்திற்கு அடிக்கடி தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள், குட்கா ஆகியவை மர்ம நபர்கள் ரெயில் மற்றும் பஸ், சரக்கு வாகனங்களில் கடத்தி வருவதாக மாவட்ட எஸ்.பி. ஸ்டீபன் ேஜசுபாதத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து மாவட்டத்தில் எல்லை பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு குட்கா கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் போலீசாருக்கு உத்தர விட்டார். அவரது உத்தர–வின்பேரில் மதிக்கோன்–பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபி தலைமையில் போலீசார் இன்று குண்டல்பட்டியில் தீவிர வாகனசோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக சரக்கு வேன் ஒன்று வேகமாக வந்தது. அதனை போலீசார் வழிமறித்து சோதனை செய்ததில், பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியைச் சேர்ந்த டிரைவர் சிவக்குமார்(வயது30), கிருஷ்ணகிரியை சேர்ந்த குமார் (35) ஆகிய 2 பேர் வண்டியில் சுமார் 750 கிலோ எடையுள்ள தடை செய்யப்–பட்ட குட்கா பொருட்களை மூட்டை, மூட்டையாக கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூரில் இருந்து பெரம்பலூருக்கு கடத்தி கொண்டு வரப்பட்டது தெரியவந்தது.
உடனே போலீசார் 2பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து சரக்கு வேன், 750 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கைதான 2 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- பாப்பிரெட்டிபட்டி அருகே பள்ளத்தில் தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
- சாமியாபுரம் கூட்ரோடு வரை உறவினர் ஒருவரை மோட்டார் சைக்கிளில் இறக்கி விட்டு திரும்பி வீட்டிற்கு வலசையூர் செல்லும்போது பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தார்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள புக்கரெட்டிப் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் விஜய் (வயது27).
இவர் கடந்த 9-ந் தேதி தனது மோட்டார் சைக்கிளில் உறவினர் கோடீஸ்வரி என்பவரை பின்னால் உட்கார வைத்து சாமியாபுரம் கூட்ரோட்டில் கொண்டு வந்து இறக்கி விட்டார். பின்னர் விஜய் அங்கிருந்து மீண்டும் வலசையூருக்கு சென்றபோது, வண்டி திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து வழியில் உள்ள பள்ளத்தில் விழுந்தது.
இதில் பலத்த காயமடைந்த விஜயை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த விஜய் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விஜயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காரிமங்கலத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்தவரை வழிமறித்து சோதனை செய்தனர்.
- ஒரு டன் எடையுள்ள ரேஷன் அரிசி கடத்தியவரை போலீசார் கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தருமபுரி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
தருமபுரி:
குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு காவல்துறை இயக்குநர் வன்னியப்பெருமாள் உத்தரவுப்படி ரேசன் அரிசி கடத்தலை தடுக்கும் பொருட்டு கோவை மண்டல போலீஸ் கண்காணிப்பாளர் பாலாஜி, மேற்பார்வையில் துணைக் கண்காணிப்பாளர் விஜயகுமார் வழிகாட்டு தல்படி தருமபுரி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்பு லனாய்வு துறை போலீசார் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கும் வகையில் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று நடத்திய தேடுதல் வேட்டை யில் காரிமங்கலத்தில் மந்தைவீதி கோவிந்தன் மகன் வீரப்பன் என்பவர் அவருடைய இருசக்கர வாகனத்தில் ரேசன் அரிசியை கடத்தி சென்ற போது அவரை, பின்தொடர்ந்து சென்றதில் சுமார் ஒரு டன் ரேசன்அரிசி பதுக்கி வைத்திருந்து தெரியவந்தது.
அவரை கைது செய்த போலீசார் ஒரு டன் ரேசன் அரிசி மற்றும் வண்டியை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் கைப்பற்றப்பட்ட 1 டன் ரேசன் அரிசி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைக் கப்பட்டது.
+2
- தருமபுரி அருகே சாலையில் சென்ற கார் மீது மரம் சாய்ந்து விழுந்ததில் 2 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- மரக்கிளைகளின் இடிபாடுகளுக்கு இடையே காரும், இரு சக்கர வாகனமும் சிக்கிக் கொண்டது. இதில் காரை ஓட்டிச் சென்றவருக்கும், இரு சக்கர வாகனத்தில் சென்றவர் என 2 பேர் பலத்த காயமடைந்தனர்.
தருமபுரி:
தருமபுரி நகரம், நேருநகர் பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 45). இவர் தருமபுரியில் இருந்து பாப்பாரப்பட்டிக்கு தனது காரில் தாத்தா, பாட்டியை அழைத்து சென்று சாலையில் கொண்டிருந்தார்.
அதேபோல் தருமபுரியில் இருந்து கடகத்தூருக்கு பெரியண்ணன் (55) என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
இந்நிலையில் ராமக்காள் ஏரி சாலையில் இரு வெவ்வேறு வாகனங்களும் சென்று கொண்டிருக்கும் போது அருகே நடப்பட்டிருந்த மரம் சாய்ந்து கார் மற்றும் இருசக்கர வாகனத்தின் மீது விழுந்தது.
மரக்கிளைகளின் இடிபா டுகளுக்கு இடையே காரும், இரு சக்கர வாகனமும் சிக்கிக் கொண்டது.
இதில் காரை ஓட்டிச் சென்ற பன்னீர்செல்வம் இரு சக்கர வாகனத்தில் சென்ற பெரியண்ணன் ஆகிய 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.
அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித் தனர். இந்த சம்பவத்தில் காரை ஓட்டிச் சென்றபன்னீர் செல்வத்தின் வயதான தாத்தா பாட்டி இருவரும் அதிர்ஷ்டவசமாக காய மின்றி தப்பி உள்ளனர்.
இதுகுறித்து தருமபுரி நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் ½ மணி நேரத்துக்கு மேலாக தருமபுரி-கிருஷ்ண–கிரி சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் மாவட்ட சுற்றுலா துறை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து கலெக்டர் சாந்தி ஆய்வு செய்தார்.
- வனப்பகுதியில் உள்ள இருளர் மக்களுக்கு கட்டப்பட்டு வரும் குடியிருப்பு பணிகளை கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டார்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் சுற்றுலாத்துறை மூலம் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதேபோன்று ஊரக வளர்ச்சித் துறை மூலமும் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இப் பணிகளை மாவட்ட கலெக்டர் சாந்தி, நேரில் பார்வையிட்டு பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.
மேலும் ஒகேனக்கலை அடுத்த மஞ்சகொடம்பு என்ற வனப்பகுதியில் இருளர் மக்களுக்கு கட்டப்பட்டு வரும் குடியிருப்பு பணிகளை நேரில் பார்வையிட்ட பின் அங்குள்ள பள்ளி மாணவர்களிடையே கலெக்டர் சாந்தி உரையாடினார்.
பள்ளி வயது குழந்தைகள் அனைவரும் தவறாமல் பள்ளிக்கு தொடர்ந்து செல்ல வேண்டும் என்றும், கல்வியை பெற்று எதிர்காலத்தில் சிறந்த வர்களாக திகழ வேண்டும் என்றும் மாணவிகளிடையே கலெக்டர் தெரிவித்தார்.
தமிழகத்தின் மிக முக்கியமான சுற்று லாத்தலமான ஒகேனக்கலில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை நேரில் பார்வையிட்டு அங்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும், நவீனப்ப டுத்தப்பட்டுள்ள மருத்துவ வசதிகள் குறித்தும் கலெக்டர் கேட்டறிந்தார்.
இந்நிகழ்வில் வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.
- தருமபுரி அருகே மீன் பிடிக்க சென்றபோது ஏரியில் மூழ்கி 2 குழந்தைகளின் உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை பிறகு உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
- தருமபுரி அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்டிருந்த உறவினர்கள் பிணமாக கிடந்த 2 குழந்தைகளின் உடல்களை பார்த்து கதறி அழுதனர்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் நார்த்தம்பட்டி ஊராட்சிக் குட்பட்ட தம்மனம்பட்டி கிராமத்தை சேர்ந்த கனகசபாபதி, சரஸ்வதி தம்பதியினர். இவர்களுக்கு சஞ்சனாஸ்ரீ (வயது 7) மோனிகாஸ்ரீ (5) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கனக–சபாபதி, சரஸ்வதி இருவரும் அருகில் உள்ள விவசாய நிலத்தில் விவசாய பணிக்காக சென்றனர்.
அப்போது சஞ்சனாஸ்ரீ, மோனிகாஸ்ரீ மற்றும் தமிழ் இனியன் ஆகிய 3 பேரும் வீட்டிலிருந்து சிறிது தூரத்திலுள்ள தம்ம னம்பட்டி ஏரிக்கு சைக்கிளில் சென்றுள்ளனர்,
இதனையடுத்து தம்பியை கரைக்கு மேலே அமரவைத்து விட்டு அக்காள், தங்கை 2பேரும் ஏரியில் மீன் பிடிப்பதற்காக இறங்கி–யுள்ளனர். அப்போது சேற்றில் சிக்கி 2 பெண் குழந்தைகளும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
வீட்டில் குழந்தைகள் இல்லாததைக் கண்ட பெற்றோர்கள் அக்கம் பக்கத்தில் விசாரித்து ஏரி அருகே சென்ற போது தமிழ் இனியன் தனியாக கரையில் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தான். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் விசாரித்த போது 2 பேரும் ஏரிக்குள் இறங்கியது தெரியவந்தது.
இதுகுறித்து குழந்தை–களின் பெற்றோர் அதிய–மான்கோட்டை போலீசா–ருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதியமான் கோட்டை போலீசார் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் 2 குழந்தைகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு குழந்தைகளின் உடல்களை உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர். அப்போது அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்டிருந்த உறவினர்கள் பிணமாக கிடந்த குழந்தைகளின் உடல்களை பார்த்து கதறி அழுதனர்.
சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 குழந்தைகள் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- நாம் அனைவரும் களத்தில் இறங்கி திட்டமிட்டு பணியாற்றி பா.ம.க.வை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
- தருமபுரி மாவட்டத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு வர வேண்டும் என்பதே என்னுடைய லட்சியம்.
தருமபுரி:
தருமபுரி சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி களப்பணியாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் தருமபுரி மேற்கு மாவட்டத்தின் சார்பில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது
கூட்டத்தில் மேற்கு மாவட்ட பா.மக. செயலாளரும், தருமபுரி சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வெங்கடேஸ்வரன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் பா.ம.க. மாநில தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியும், பாராளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அவர் பேசியதாவது:-
இந்தியாவிலேயே தமிழகத்தில் 4 இட ஒதுக்கீடுகளையும் இந்திய அளவில் 2 இட ஒதுக்கீடுகளையும் மொத்தம் 6 இட ஒதுக்கீடுகளை பெற்று தந்த ஒரே கட்சி பாட்டாளி மக்கள் கட்சியாகும்.
பாராளுமன்ற தேர்தல் இன்னும் 5 மாதங்களில் நடைபெற உள்ளது. இதில் தருமபுரி பாராளுமன்ற தொகுதியில் பா.ம.க. போட்டியிடுகிறது.
நாம் அனைவரும் களத்தில் இறங்கி திட்டமிட்டு பணியாற்றி பா.ம.க.வை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
தருமபுரி தொகுதி தமிழகத்திலேயே பாட்டாளி மக்கள் கட்சியின் கோட்டை என நிரூபித்து வெற்றி கண்டுள்ளது.
வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் திட்டமிட்டு பிரசாரம் செய்து களப்பணி ஆற்றி திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டு பொதுமக்களை நேரில் சந்தித்து பா.ம.க.வின் பலத்தை நிரூபிக்க வேண்டும். இளைஞர் சக்தியை கொண்டு நாம் வெற்றி பெற வேண்டும் .
தமிழகத்திலேயே தருமபுரி மாவட்டம் என்னுடைய சொந்த மாவட்டம் தமிழகத்திலேயே முதல் மூன்று வரிசையில் 3-வது இடமாக தருமபுரி மாவட்டத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு வர வேண்டும் என்பதே என்னுடைய லட்சியம்.
காவிரி உபரி நீர் திட்டம் குறித்து தற்போதைய முதலமைச்சராக உள்ள மு.க.ஸ்டாலினிடமும் நேரில் சந்தித்து 10 லட்சத்து 30 ஆயிரம் பேர் கையெழுத்து கையொப்பமிட்ட கடிதத்தை வழங்கினேன். அவர் பார்க்கலாம் என்று கூறிவிட்டார்.
தருமபுரி மாவட்டத்திற்கு ஒரே ஒரு திட்டமான ஒகேனக்கல் உபரி நீர் திட்டத்தை மட்டும் கொண்டு வந்தால் போதும் மாவட்டம் குடிநீர் பிரச்சனை விவசாயம் வேலைவாய்ப்பு அனைத்தையும் பெற்று விடும். முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒகேனக்கல் உபரி நீர் திட்டத்தை அறிவித்தார். அதன் பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் அந்த திட்டம் நின்றுவிட்டது.
தருமபுரி மாவட்டம் மக்களின் நலனில் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய 2 கட்சிகளுக்கு அக்கறை இல்லை பா.ம.க. ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து ஒகேனக்கல் உபரி நீர் திட்டம் தான் உடனே நிறைவேற்றப்படும். நிச்சயமாக நடக்கும்.
தருமபுரி மாவட்டத்தின் அடிப்படை கட்டமைப்பு தேவைகளை நிச்சயமாக ராமதாஸ் அவர்கள் நிறைவேற்றுவார். நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும். எனக்கு நம்பிக்கை இருக்கிறது. வருகின்ற 2024 பாராளுமன்றத் தேர்தலில் 100 சதவீதம் நாம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
பாராளுமன்றத் தேர்தல் செமி பைனல் என்றால் சட்டமன்றத் தேர்தல் பைனல் போட்டி ஆகும் என தெரிவித்தார். தருமபுரியில் இருந்து மொரப்பூர் வரை புதிய ரெயில் பாதை திட்டம் நிறைவேற்ற 19 முறை மத்திய அமைச்சர்களை நேரில் சந்தித்து பலமுறை வலியுறுத்தி இதற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.






