என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு"

    • தருமபுரி அருகே மீன் பிடிக்க சென்றபோது ஏரியில் மூழ்கி 2 குழந்தைகளின் உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை பிறகு உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
    • தருமபுரி அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்டிருந்த உறவினர்கள் பிணமாக கிடந்த 2 குழந்தைகளின் உடல்களை பார்த்து கதறி அழுதனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் நார்த்தம்பட்டி ஊராட்சிக் குட்பட்ட தம்மனம்பட்டி கிராமத்தை சேர்ந்த கனகசபாபதி, சரஸ்வதி தம்பதியினர். இவர்களுக்கு சஞ்சனாஸ்ரீ (வயது 7) மோனிகாஸ்ரீ (5) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் கனக–சபாபதி, சரஸ்வதி இருவரும் அருகில் உள்ள விவசாய நிலத்தில் விவசாய பணிக்காக சென்றனர்.

    அப்போது சஞ்சனாஸ்ரீ, மோனிகாஸ்ரீ மற்றும் தமிழ் இனியன் ஆகிய 3 பேரும் வீட்டிலிருந்து சிறிது தூரத்திலுள்ள தம்ம னம்பட்டி ஏரிக்கு சைக்கிளில் சென்றுள்ளனர்,

    இதனையடுத்து தம்பியை கரைக்கு மேலே அமரவைத்து விட்டு அக்காள், தங்கை 2பேரும் ஏரியில் மீன் பிடிப்பதற்காக இறங்கி–யுள்ளனர். அப்போது சேற்றில் சிக்கி 2 பெண் குழந்தைகளும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

    வீட்டில் குழந்தைகள் இல்லாததைக் கண்ட பெற்றோர்கள் அக்கம் பக்கத்தில் விசாரித்து ஏரி அருகே சென்ற போது தமிழ் இனியன் தனியாக கரையில் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தான். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் விசாரித்த போது 2 பேரும் ஏரிக்குள் இறங்கியது தெரியவந்தது.

    இதுகுறித்து குழந்தை–களின் பெற்றோர் அதிய–மான்கோட்டை போலீசா–ருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதியமான் கோட்டை போலீசார் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் 2 குழந்தைகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு குழந்தைகளின் உடல்களை உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர். அப்போது அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்டிருந்த உறவினர்கள் பிணமாக கிடந்த குழந்தைகளின் உடல்களை பார்த்து கதறி அழுதனர்.

    சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    2 குழந்தைகள் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×