என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாங்காய் மண்டியில் தீ விபத்து
    X

    மாங்காய் மண்டியில் தீ விபத்து

    • மண்டியின் உள்ளே இருந்து புகை வெளியேறியது.
    • ரூ.7 லட்சம் மதிப்பிலான பொ ருட்கள் எரிந்து நாசம் ஆனது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பிக்கனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் முனிராஜ் (வயது47). இவர் வெள்ளி சந்தையில் மாங்காய் மண்டி நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு வழக்கம் போல் மாங்காய் மண்டியை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றார். சிறிது நேரத்தில் மண்டியின் உள்ளே இருந்து புகை வெளியேறியது.

    சிறிது நேரத்தில் மண்டி தீப்பிடித்து எரிய தொடங்கி யது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் முனிராஜூக்கு தகவல் தெரிவித்தனர். உட னே அவர் அங்கு விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றார். அதற்குள் தீ வேகமாக மண்டி முழுவதும் பற்றி எரிய தொடங்கியது.

    இது குறித்து அவர் பாலக் கோடு தீயணைப்பு துறையி னருக்கு தகவல் கொடுத்தார். உடனே சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மண்டியில் எரிந்த கொண்டி ருந்த தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் மண்டியில் இருந்த கார் மற்றும் மாங்காய்களை அடுக்கி வைக்கும் 1200 பிளாஸ்டிக் பெட்டிகள், கேமிரா உள்ளிட்ட ரூ.7 லட்சம் மதிப்பிலான பொ ருட்கள் எரிந்து நாசம் ஆனது.

    இதுகுறித்து முனிராஜ் பாலக்கோடு போலீஸ் நிலையத்தில் மர்ம நபர்கள் யாரோ தொழில் போட்டி காரணமாக தீ வைத்து இருக்க வேண்டும் என்று புகார் தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்திற்கு காரணம் என்ன? என்று தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×