என் மலர்
தர்மபுரி
- நந்தி மற்றும் லிங்கத்துக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
- பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.
தருமபுரி,
ஆவணி மாத பிரதோ–ஷத்தை முன்னிட்டு தருமபுரி பகுதியில் உள்ள அனைத்து சிவன் கோவில்க–ளிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பிரதோஷ சிறப்பு வழிபாடு தருமபுரி பகுதியில் உள்ள அனைத்து சிவன் கோவில்க ளிலும் நடைபெற்றது.
இந்த வழிபாட்டை யொட்டி நந்தி மற்றும் லிங்கத்துக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தருமபுரி நகரில் பிரசித்தி பெற்ற கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் உடனாகிய மல்லிகார்ஜுன சாமி கோவிலில் ஆவணி மாத பிரதோஷ சிறப்பு வழிபாடு நேற்று மாலை நடைபெற்றது. இதையொட்டி முதலில் நந்திக்கு பல்வேறு வகை–யான வாசனை திரவியங்கள் மற்றும் பழங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராத–னைகள் நடைபெற்றது. தொடர்ந்து மூலவருக்கும் சிறப்பு அபிஷேக ஆராத–னைகள் மற்றும் உபகார பூஜைகளும், தொடர்ந்து மகா தீபாராதனை நடை–பெற்றது. பின்னர் கோவில் வளாகத்திலேயே சாமி திருவீதி உலா நடைபெற்றது.
இந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த வழிபாட்டை–யொட்டி பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோன்று தருமபுரி நெசவாளர் நகரில் உள்ள மங்களாம்பிகை உடனா கிய மகாலிங்கேஸ்வரர் கோவிலில் ஆவணி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி மற்றும் மகாலிங்கேஸ்வ–ரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடை–பெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்–பட்டது.
தருமபுரி குமாரசாமிப்–பேட்டை சிவகாமசுந்தரி உடனாகிய ஆனந்த நடராஜர் கோவிலில் நடைபெற்ற ஆவணி மாத சனி பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் தருமபுரி கடைவீதி அம்பிகா பரமேஸ்வரி அம்மன் உடனாகிய மருதவா–ணேஸ்வரர் கோவில், அன்ன–சாகரம் சாலையில் உள்ள சித்திலிங்கேஸ்வரர் கோவில், தீயணைப்பு நிலைய வளாகத்தில் உள்ள பிரகதாம்பாள் சமேத அருளீஸ்வரர் கோவில், அன்னசாகரம் சோமேஸ்வ–ரர் கோவில், சவுலுப்பட்டி ஆதி லிங்கேஸ்வரர் கோவில் உள்ளிட்ட தருமபுரி நகரை சுற்றியுள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் ஆவணி மாத பிரதோஷ சிறப்பு வழிபாடு நடை பெற்றது.
இதேபோன்று மாவட்டத்–தின் முக்கிய கோவில்களான தீர்த்தமலை தீர்த்தகி ரீஸ்வரர் கோவில், ஒகே னக்கல் தேசநாதேஸ்வரர் கோவில், காரிமங்கலம் மலையில் உள்ள அருணேஸ்வரர் கோவில் உள்ளிட்ட அனைத்து சிவன் கோவில்–களிலும் ஆவணி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
- பொது சிவில் சட்டம், மற்றும் இந்தியாவை பாரதம் என குறித்தும் பேசினார்.
- பொது சிவில் சட்டம் கொண்டு வர முற்படும் செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
அரூர்,
தருமபுரி மாவட்டம், அரூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் மற்றும் அரூர் அஹ்லே சுன்னத்வல் ஜமாத் இணைந்து பொது சிவில் சட்டம் குறித்த கருத்தரங்கை நடத்தியது.
இதற்கு மாவட்ட பொருளாளர் இதாயத்துல்லா வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட தலைவர் சுபேதன் தலைமை தாங்கினார். த.மு.மு.க மற்றும் மனித நேய மக்கள் கட்சி மாநில தலைவரும் எம்.எல்.ஏ-வுமான ஜவாஹிருல்லாஹ் கலந்து கொண்டு பொது சிவில் சட்டம், மற்றும் இந்தியாவை பாரதம் என குறித்தும் பேசினார்.
இதில் தருமபுரி தி.மு.க மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பழனியப்பன், த.மு.மு.க மாநில செயலாளர் அஸ்தாப்அஹமத், தலைமை பிரதிநிதி சாதிக்பாஷா, முத்தவல்லி சபீர்அகமத், செயலாளர் அப்துல்ரவூப், பொருளாளர் அப்துல்ரஹிமான், தர்கா கமிட்டி தலைவர் அலாவு தீன்பாட்சா, திமுக நகர செயலாளர் முல்லைரவி, ஒன்றிய செயலாளர்கள் சௌந்த ரராஜன், சந்திரமோகன், கலைவாணி, மாநில செயற்குழு உறுப்பினர் இர்பான்பாஷா, அப்துல் சுக்கூர், முகமதுசலீம், அப்துல்மஜீத், ஷானவாஸ், அப்துல் அப்பாஸ், நியாஸ், முகமதுஅலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் நகர செயலாளர் முகமது ரபிக் நன்றி கூறினார். கருத்தங்கில் இந்திய பன்முகத் தன்மையை சிதைக்கும் வகையில் உள்ள பொது சிவில் சட்டம் கொண்டு வர முற்படும் செயலுக்கு கண்டனம் தெரிவித்தும், தமிழ்நாடு அரசு 49 வாழ்நாள் சிறைவாசிகளை 151-ம் பிரிவின் கீழ் விடுதலை செய்ய அளித்துள்ள பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
- அனைத்து வாக்குச்–சாவடி களுக்கும் முகவர்கள் மற்றும் பூத் கமிட்டி அமைக்க வேண்டும்.
தருமபுரி,
தருமபுரி மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோ சனைக் கூட்டம் தருமபுரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
மாநில விவசாய பிரிவு தலைவர் டி.ஆர். அன்ப–ழகன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் எஸ்.ஆர்.வெற்றிவேல், எம்.எல்.ஏக்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், மாவட்ட இணைச்செயலாளர் செல்வி திருப்பதி, மாவட்ட துணைச் செயலாளர்கள் ராஜேந்திரன், செண்பகம், மாவட்ட பொருளாளர் நல்லதம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் பூக்கடை ரவி வரவேற்றார்.
வருகிற பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கட்சி நிர்வாகிகள் தீவிர களப்ப–ணியாற்ற வேண்டும். அனைத்து வாக்குச்–சாவடி களுக்கும் முகவர்கள் மற்றும் பூத் கமிட்டி அமைக்க வேண்டும். மகளிர் அணியி–னர் மற்றும் இளைஞர் பாசறை நிர்வாகி–களை பூத் கமிட்டிகளில் சேர்க்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்–பட்டன.
இந்தக் கூட்டத்தில் முன்னாள் கூட்டுறவு ஒன்றிய தலைவர் பொன்னு வேல், சார்பு அமைப்பு மாவட்ட செயலாளர்கள் பழனிசாமி, தகடூர் விஜயன், மோகன், சங்கர், கோவிந்த–சாமி, உலக மாதேஷ், ஒன்றிய செயலாளர்கள் சிவப்பிர–காசம், பழனி, மதிவாணன், வேலுமணி, சேகர், செந்தில்–குமார், செல்வராஜ், முருகன், கோபால், செந்தில், விஸ்வ–நாதன், பசுபதி, மகாலிங்கம், செல்வம், தனபால், அன்பு, தங்கராஜ், கூட்டுறவு பணியாளர்கள் சங்க மாநில செயலாளர் சின்அருள்சாமி, நகர நிர்வா–கிகள் அம்மா வடிவேல், அறிவாளி, சுரேஷ், பார்த்திபன், வேல்முருகன், பலராமன் மற்றும் பேரூராட்சி செயலா–ளர்கள், உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய செயலா–ளர் நீலாபுரம் செல்வம் நன்றி கூறினார்.
- ஒகேனக்கல்லில் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் சீறிபாய்ந்து சென்றன.
- சுற்றுலா பயணிகள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயின்அருவி, சினிபால்ஸ் ஆகிய அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.
பென்னாகரம்:
காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவின்படி கர்நாடகா அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது.
இதன் காரணமாக தமிழக-கர்நாடகா எல்லையில் உள்ள பிலிக்குண்டுலு வழியாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு நீர்வரத்து 6 ஆயிரம் கன அடியாக இருந்தது.
இந்த நிலையில் கர்நாடகா அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு குறைந்ததால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்தும் படிப்படியாக சரிந்து நேற்று முன்தினம் 3 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.
இந்த நிலையில் தமிழக-கர்நாடகா எல்லை பகுதியில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 தினங்களாக கனமழை பெய்ததால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 4 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
இதன்காரணமாக ஒகேனக்கல்லில் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் சீறிபாய்ந்து சென்றன. இந்த நிலையில் ஒகேனக்கல்லுக்கு இன்று குறைந்த அளவிலேயே சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.
சுற்றுலா பயணிகள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயின்அருவி, சினிபால்ஸ் ஆகிய அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர். பின்னர் அவர்கள் பரிசலில் சவாரி செய்தனர்.
- பள்ளியில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவரிடம் கொடுக்க சொல்லியதை தொடர்ந்து, பணம் கொடுத்துவிட்டு சான்றிதழை வாங்கி வந்துள்ளார்.
- சான்றிதழ் , மாற்று சான்றிதழ் வாங்க வருபவர்களிடம் கட்டாயபடுத்தி பணம் வாங்கி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம், அமானி மல்லாபுரம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவர் தான் படித்த பள்ளியான அமானி மல்லாபுரம் அரசு மேல்நிலைபள்ளிக்கு சென்று தமிழ் வழி கல்வி சான்று கேட்டு தலைமை ஆசிரியர் சசிக்குமாரை அணுகி உள்ளார். அப்போது சான்றிதழ் வழங்க வேண்டும் என்றால் முதலில் பள்ளிக்கு நோட்டுகள், பேப்பர் பண்டல்கள் வாங்கி தருமாறு தலைமை ஆசிரியர் கேட்டுள்ளார்.
அதன் பிறகு நோட்டு, பேப்பர் பண்டல்களை நாங்களே வாங்கி கொள்கிறோம் பணமாக கொடுத்து விடுங்கள் எனக்கூறி 300 ரூபாய் பணத்தை பள்ளியில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவரிடம் கொடுக்க சொல்லியதை தொடர்ந்து, பணம் கொடுத்துவிட்டு சான்றிதழை வாங்கி வந்துள்ளார. மேலும் கார்த்திக், பணம் கொடுத்ததை தனது செல்போன் மூலம் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டிருக்கிறார்.
குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள தலைமை ஆசிரியர் சசிக்குமார், இது போன்று சான்றிதழ் , மாற்று சான்றிதழ் வாங்க வருபவர்களிடம் கட்டாயபடுத்தி பணம் வாங்கி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
இது தொடர்பாக மாவட்ட கல்வித்துறையும், தமிழக அரசும் உரிய விசாரணை நடத்தி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் மாணவர் கார்த்திக் கோரிக்கை வைத்துள்ளார்.
- காவிரி ஆற்றின் கரையோரப்–பகுதியில் விஷம் குடித்து மயங்கி கிடந்தனர்.
- டாக்டர்கள் உமேஷ் ஏற்கனவே உயிரி–ழந்து விட்டதாக தெரிவித் தனர்.
பென்னாகரம்,
கர்நாடகா மாநிலம் ராம்நகரா மாவட்டம் கனக–புரம் அருகே கோடிஅள்ளி கிராமத்தில் உள்ள சாமுண்டிபுரா பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் கோடிஅள்ளியில் உள்ள ஒரு அரசுபள்ளியில் பி.யு.சி. முதலாமாண்டு படித்து வருகிறார்.
இந்த நிலையில் இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த உமேஷ் (24) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக தெரியவந்தது. இது நாளடைவில் காதலாக மாறியது. இந்த நிலையில் உமேஷ் தனது காதலியுடன் சுற்றுலாவுக்காக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்துள்ளார். அவர்கள் இன்று காலை அங்குள்ள காவிரி ஆற்றின் கரையோரப்–பகுதியில் விஷம் குடித்து மயங்கி கிடந்தனர். இதனை அங்கிருந்த பரிசல் ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்த–னர். உடனே அவர்கள் ஒகேனக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மயங்கி கிடந்த காதல் ஜோடி இருவரையும் மீட்டு பென்னாகரம் அரசு ஆஸ்–பத்திரியில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் உமேஷ் ஏற்கனவே உயிரி–ழந்து விட்டதாக தெரிவித் தனர். உமேஷூடன் வந்த சிறுமிக்கு தொடர்ந்து அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து அங்கு சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து இறந்த உமேஷின் உடலை போலீ–சார் மீட்டு பிரேத பரிசோ–தனைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அவர்கள் வைத்திருந்த அடையாள அட்டையில் உள்ள முகவரியில் சிறுமி யின் பெற்றோரை தொடர்பு கொண்டு நடந்த சம்ப–வத்தை பற்றி போலீசார் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த சிறுமி மற்றும் உமேஷின் பெற்றோர்கள் தருமபுரிக்கு வந்து கொண்டிருக்கின்றனர். இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சிறுமி கடந்த சில நாட்களுக்கு முன்பே தனது காதலுனுடன் வீட்டைவிட்டு வெளியேறி இருக்கலாம் என்றும், இதனால் சிறுமி மாயமா–னதால், கோடிஅள்ளி போலீஸ் நிலையத்தில் தனது பெண் காணவில்லை என்று பெற்றோர் புகார் அளித்ததும் தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒகேனக்கல் சுற்றுலா பகுதியில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதில் வாலிபர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- பா.ம.க. மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினார்
- தென்பெ ண்ணையாற்றில் வீணாகும் தண்ணீரை தடுப்பணைகட்டி நீரேற்றம் செய்திட வேண்டும்.
கடத்தூர்,
கடத்தூரில் பா.ம.க. சட்டசபை ஒட்டு சாவடி களப்பணியாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்க்கு மாவட்ட செயலாளர் அரசாங்கம் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. வேலுசாமி, அல்லிமுத்து, செந்தில், ராமலிங்கம், இமயவர்மன் வணங்காமுடி, சிவகுமார், மாது, சரவணன் மதியழகன், சேட்டு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பா.ம.க. மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினார். அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது மாவட்ட பகுதியில் இருந்து சுமார். 5 லட்சம் இளைஞர்கள் வெளி மாவட்டங்களிலும், மாநிலங்களிலும் சென்று பணியாற்றி வருவதை தடுக்க தொழிற்சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் உள்ள தும்பலஅள்ளி கால்வாய் திட்டம், பொதியன் பள்ளம், ஆணை மடுவு நீர்த்தேக்கத் திட்டப்பணிகள், வாணியாறு கால்வாய் நீட்டிக்க வேண்டும்.வள்ளி மதுரை அணை உயர்த்தி அமைக்க வேண்டும், தென்பெண்ணையாற்றில் வீணாகும் தண்ணீரை தடுப்பணைகட்டி நீரேற்றம் செய்திட வேண்டும். ஒவ்வொரு யூனியனிலும் குளிர்பதன கிடங்குகள் அமைத்திட வேண்டும்.தக்காளி, பட்டு, புளி, மரவள்ளி உள்ளிட்ட விவசாய விளை பொருட்க–ளுக்கு அடிப்படை விலை நிர்ணயிக்க வேண்டும் .
நெல்லுக்கு கூடுதல் விலை வழங்கவேண்டு்ம். குவிண்டாலுக்கு தமிழக அரசு ஆதார விலையை குறைந்தது ரூ. 500 உயர்த்தி , நெல் குவிண்டாலுக்கு ரூ. 2,700 வழங்கிடவேண்டும் கூட்டணி குறித்து விரைவில் முடிவெடுக்கபடும் தேர்தலுக்கு இன்னும் காலம் உள்ளது. பா.ம.க.வில் கடந்த 6 மாதத்திற்கு முன்பே தேர்தல் பணிகள் தொடங்கி விட்டோம். ஜி -20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய பிரதமருக்கு பா.ம.க. சார்பில் பாராட்டும் வாழ்த்துகளையும் தெரி–வித்து கொள்கின்றோம். தமிழகத்தில் போதை பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளது. அதிலும் கஞ்சா விற்பனை உச்சத்தில் உள்ளது. அதிகஅளவில் பள்ளி, கல்லுாரி மாண வர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனை தடுக்க முதல்வர் தனி கவனம் செலுத்த வேண்டும்,
பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கம்பைநல்லுார் பகுதிகளில் மக்களுக்கு பெரும் அவதியாக டாஸ்மாக் உள்ளது. இதனால் பெரும் பாதிப்பு ஏற்படுகின்றது. இதனை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் இல்வாவிடில் கடும் போராட்டம் நடத்தப்படும் என்று செய்தியா–ளர்களிடம் தெறிவித்தார். அப்போது ஸ்டீஸ் சதாசிவம், ஜெயகுமார், ஒன்றிய நிர்வாகிகள் சின்ன தம்பி, முனுசாமி வேடியப்பன், சவணன், சின்னசாமி ஆகியோர் உடனிருந்தனர்.
- பள்ளியின் தாளாளர்கள் வேடியப்பன் மற்றும் சாந்தி வேடியப்பன் தலைமை தாங்கினர்.
- முதலுதவி பற்றிய செவிலியர் ராதா மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
கம்பைநல்லூர்,
தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூரில் உள்ள ஸ்ரீராம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு முதலுதவி பற்றிய விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தினை பள்ளியின் தாளாளர்கள் வேடியப்பன் மற்றும் சாந்தி வேடியப்பன் தலைமை தாங்கினர். பள்ளி நிர்வாக இயக்குனர் தமிழ் மணி, திருமதி. பவானி தமிழ் மணி கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.
இக்கூட்டத்தில் முதலுதவி பற்றிய விளக்கங்களை செவிலியர் ராதா விளக்கப் படம் மூலம் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். இவ்விழாவில் பள்ளி முதல்வர் சாரதி மகாலிங்கம் மற்றும் ஒருங்கிணைப் பாளர்கள் திரு. குருமூர்த்தி, மணிமேகலை, பிரவீணா பங்கேற்றனர்.
விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஒருங்கிணைப்பாளர் புவனேஸ்வரி செய்திருந்தார்.
- ஊதியத்துடன் குடும்பநல ஓய்வு ஊதியம் வழங்க வெண்டும்
- மாவட்ட தலைவர் கணேசன் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடைபெற்றது.
தருமபுரி
தருமபுரியில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு பணியாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில் கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு கடந்த சட்டமன்ற தேர்தலில் போது கொடுத்த வாக்குறுதின்படி சத்துணவு பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், காலை சிற்றுண்டி திட்டத்தை பள்ளி சத்துணவு பணியாளர்களிடம் வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு அடிப்படை ஊதியத்துடன் குடும்பநல ஓய்வு ஊதியம் வழங்க வெண்டும்,
உணவூட்டும் செலவீனங்களை விலைவாசிக்கு ஏற்றவாறு வழங்க வேண்டும், ஓய்வு பெற்றுகின்ற சத்துணவு அமைப்பாளர்களுக்கு 5 லட்சமாகவும், சமையலர் மற்றும் உதவியாளர்களுக்கு 3 லட்சமாகவும் உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் எம்.ஜி.ஆர்.சத்துணவு பணியாளர்கள் சங்கம் மாவட்ட தலைவர் கணேசன் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்பாட்டத்தில் மாநில தலைவர் ராஜேந்திரன், மாநில பொது செயலாளர் சிவாஜி மற்றும் மாநில, மாவட்ட பொருப்பாளர்கள் உள்ளிட்ட 2 ஆயிரத்துக்கும் மெற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
- விளையாட்டு வீரர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
தருமபுரி,
தருமபுரி ஸ்ரீ விஜய் வித்யாலயா கல்வி நிறுவ னங்கள், விவேகானந்தா செஸ் அகாடமி ஆகியவை இணைந்து நடத்திய மாநில அளவிலான செஸ் போர்டிகள் தருமபுரி ஸ்ரீ விஜய் வித்யாஷ்ரம் பள்ளி வளாகத்தில் 2 நாட்கள் நடைபெற்றது. இந்த போட்டிகளில் மாநிலம் முழுவதிலும் இருந்து அனைத்து மாவட்டங்களை சேர்ந்த சுமார் 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.
மொத்தம் 9 சுற்றுகள் நடந்த இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு ஸ்ரீ விஜய் வித்யாலயா கல்வி நிறுவனங்களின் தலைவர் டி.என்.சி. மணிவண்ணன் தலைமை தாங்கி போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு டி.என். சின்னசாமி நினைவு கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டி பேசினார். இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் செல்வி மணிவண்ணன், பள்ளி துணைத் தலைவர் தீபக் மணிவண்ணன், செயலாளர் டாக்டர் ராம்குமார், இயக்குனர்கள் டாக்டர் திவ்யா ராம்குமார், ஷரவந்தி தீபக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் தருமபுரி டான் பாஸ்கோ கல்லூரி முதல்வர் ஆஞ்சலோ ஜோசப், மாவட்ட செஸ் கழக துணைத் தலைவர் துரைசாமி, செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் சேகர், முதன்மை நடுவர் பழனியப்பன், பள்ளி டீன் கௌசல்யா ஆகியோர் கலந்து கொண்டனர். போட்டி களுக்கான ஏற்பாடு களைத் தமிழ்நாடு மாநில சதுரங்கக் கழக இணை செயலாளரும், விவே கானந்தா செஸ் அகாடமியின் இயக்குனருமான பேரா சிரியர் ராஜசேகரன், துணை இயக்குனர் பாண்டுரங்கன், செயலர் மகாலட்சுமி ராஜசேகரன், டான் பாஸ்கோ கல்லூரி தமிழ் துறை தலைவர் சங்கர் ஆகியோர் செய்திருந்தனர்.
- பணத்தை திருப்பி கேட்டால் கொலை செய்து விடுவதாக அந்தப் பெண்ணும் அவரது மகன்களும் மிரட்டுகிறார்கள்.
- திருமண ஆசை காட்டி பணம் மோசடி செய்து வந்தது தெரிய வந்தது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டை கமலம் நகரைச் சேர்ந்தவர் மாதேஷ் (வயது 27) என்பவர் தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தியிடம் கொடுத்த புகார் மனுவில் கூறியுள்ளதாவது:-
திப்பம்பட்டி அருகே உள்ள பன்னிகுளம் பகுதி யைச் சேர்ந்த ஒரு பெண் தருமபுரியில் டைலர் கடை வைத்திருந்தார். அந்தப் பெண்ணுக்கு 2 மகன்களும் உள்ளனர்.அவர் என்னிடம் அன்பாக பேசிய தை தொடர்ந்து நானும், அந்த பெண்ணும் மிகவும் நெருக்கமாக பழகினோம். தருமபுரி மற்றும் ஒட்டப்பட்டி பகுதியில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து குடும்ப மும் நடத்தி வந்தோம். இந்த நிலையில் அந்தப் பெண்ணின் மகன்கள் என்னிடம் ரூ.7 லட்சம் பணம் வாங்கினார்கள்.
பணத்தை திருப்பி தந்து விடுவதாகவும் கூறினார்கள். மேலும் என்னை திருமணம் செய்து கொள்வதாக அந்தப் பெண் ஆசையும் காட்டினாள். இந்த தகவல் எனது மனை விக்கு தெரிந்ததும், அவளும் எனது குழந்தைகளும் பிரிந்து விட்டனர். இந்த நிலையில் அந்தப் பெண் என்னை திருமணம் செய்து கொள்ளா மல் தொடர்ந்து ஏமாற்றி வருகிறார்.
மேலும் நான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டால் கொலை செய்து விடுவதாக அந்தப் பெண்ணும் அவரது மகன்களும் மிரட்டுகிறார்கள். இதனிடையே அந்தப் பெண் பல பேரிடம் திருமண ஆசை காட்டி பணம் மோசடி செய்து வந்தது தெரிய வந்தது. எனவே மாவட்ட நிர்வாகம் அந்தப் பெண் மீது நடவடிக்கை மேற்கொண்டு நான் இழந்த பணத்தை விட்டு தருமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதே போன்று கடந்த வாரம் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்திலும் மெக்கா னிக் ஒருவர் திருமண ஆசை காட்டி ரூ. 3.50 கோடி அபகரித்து விட்டதாக அந்தப் பெண் மீது புகார் தெரிவித்து கலெக்டரிடம் மனு கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டி மனுக்கள் வந்தது.
- அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அதற்கான தீர்வினை விரைந்து காண வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தருமபுரி,
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் சாந்தி, தலைமையில் நேற்று நடைபெற்றது. இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுகொண்டு, மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு அதீத முக்கியத்துவம் அளித்து, விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார்கள். அந்த வகையில் ஒவ்வொரு வாரம் திங்கட்கிழமைகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெறப்பட்டு, தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உரிய தீர்வுகள் காணப்பட்டு வருகிறது.
இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், பட்டா வேண்டுதல். சிட்டா பெயர் மாற்றம், புதிய குடும்ப அட்டை வேண்டுதல், வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட இதர உதவித் தொகைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மற்றும் மாற்றுத்தி றனாளிகளுக்கு உதவித்தொ கைகள், உதவி உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 407 மனுக்கள் வரப்பெற்றன.
பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, நடவடிக்கை மேற் கொண்டு தகுதியான மனுக்களுக்கு உரிய தீர்வினை உடனுக்குடன் வழங்கிட வேண்டுமெனவும். பொதுமக்கள் அளிக்கின்ற கோரிக்கை மனுக்கள் மீது துறை அலுவலர்கள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அதற்கான தீர்வினை விரைந்து காண வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட கலெக்டர் சாந்தி, தெரிவித்தார்.
இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தனித்துணை ஆட்சியர் (சபாதி) (பொ) நசீர் இக்பால், பிற்படுத்தப் பட்டோர் நல அலுவலர் ராஜசேகரன். ஆதிதிராவிடர் நல அலுவலர் சாகுல் அமீத், பழங்குடியினர் நல அலுவலர் கண்ணன், உதவி திட்ட அலுவலர் (வீடுகள்) தமிழரசன் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






