என் மலர்
தர்மபுரி
- 8-ம் வகுப்பு வரை படித்து விட்டு, மேற்கொண்டு படிக்காமல் வீட்டில் இருந்து வந்தார்.
- கர்ப்பமானதால் அடிக்கடி வாந்தி, மயக்கம், உடல் சோர்வு ஏற்பட்டது.
மாரண்டஅள்ளி,
தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அடுத்த சிக்கதோரண பெட்டம் கிராமத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் 8-ம் வகுப்பு வரை படித்து விட்டு, மேற்கொண்டு படிக்காமல் வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் இச்சிறு மியும் மகேந்திரமங்கலம் குழிக்காடு கிராமத்தைச் சேர்ந்த தேவராஜ் (வயது 27) என்ற வாலிபரும் காதலித்து வந்தனர்.
இந்நிலையில் சிறுமி கடந்த ஜூன் மாதம் 1-ம் தேதி வீட்டை விட்டு வெளி யேறி பிக்கனஅள்ளியில் உள்ள பெருமாள் கோவிலில் வாலிபருடன் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்தார்.
இந்நிலையில் சிறுமி கர்ப்பமானதால் அடிக்கடி வாந்தி, மயக்கம், உடல் சோர்வு ஏற்பட்டது. இதனால் சிறுமியை தருமபுரி அரசு மருத்து கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அவரை மருத்துவர்கள் பரிசோதித்த போது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இது குறித்து மருத்துவர்கள் மாரண்ட அள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் மாரண்ட அள்ளி இன்ஸ் பெக்டர் சுப்ர மணியம் போக்சோ வழக்கு பதிவு செய்து வாலிபரை கைது செய்து தருமபுரி சிறையில் அடைத்தார்.
- மின் சாதன பொருட்கள் திடீரென வெடித்து சிதறியது.
- மின்கம்பத்தை மின்சா ரத்துறை மாற்றி அமைத்து, மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தருமபுரி,
தருமபுரி அருகே வெண்ணாம்பட்டி செல்லும் சாலையி்ல், கார் ஒன்று சாலையோரத்திலிருந்த மின்கம்பத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மின்கம்பம் முறிந்ததால் மின்சாரம் துண்டிக்கபட்டது. இதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கியதால் பொது மக்கள் அவதி குள்ளாகியுள்ளனர்.
இது குறித்து கே.கே நகர் குடியிருப்பு வாசிகள் கூறும்போது:-
வெண்ணாம்பட்டி சுற்றுவட்டார பகுதியில் நேற்று மாலை சுமார் 4 மணியளவில் வீடுகளிலிருந்த டிவி, பிரிட்ஜ், வாசிங்மெசின் உள்ளிட்ட மின் சாதன பொருட்கள் திடீரென வெடித்து சிதறியது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்து என்ன நடந்தது என விசாரித்த போது தான் தங்களது குடியிருப்புகளுக்கு அருகே, கார் ஒன்று சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதி விபத்தை ஏற்படுத்தியது தெரிய வந்தது.
மேலும் காரினை ஓட்டி வந்தவர் அளவுக்கதிகமாக மது போதையில் விபத்தை ஏற்படுத்தி உள்ளார். இதனால் கே.கே.நகர் குடியிருப்பு பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்க பட்டுள்ளது.
இதனால் அப்பகுதி மக்கள் கொசுக்கடியில் அவதிபட்டு வருவதாகவும், மாணவர்களுக்கு தேர்வு நேரம் என்பதால் படிக்க முடியாமல் அவதிக்குள்ளா கியுள்ளதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.
இது குறித்து சம்மந்தப்பட்ட மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவித்த நிலையில், நாளை பகல் பொழுதி்ல். தான் பிரச்சனையை சரி செய்து குடியிருப்புகளுக்கு மீண்டும் மின்சாரம் வழங்க முடியும் என அலட்சியமாக தெரிவித்தனர்.
இதனால் அப்பகுதி விடிய, விடிய இருளில் மூழ்கியது. தருமபுரியில் இருந்து வெண்ணாம்பட்டி செல்லும் சாலை முக்கிய சாலையாக இருந்து வரும் நிலையில் எப்போது வேண்டுமானாலும் விபத்துக்குள்ளான மின் கம்பம் சாயும் தருவாயில் உள்ளது .
இந்நிலையில் உயிர் சேதம் ஏற்படுவதற்கு முன் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை மின்சா ரத்துறை மாற்றி அமைத்து, அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகளுக்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- வெளிமாவட்டங்களில் 200 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்பட்டது.
- உழவர் சந்தையில் கிலோ 12 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, மாரண்ட அள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராயக்கோட்டை, தளி, மற்றும் அதனைச் சுற்றி உள்ள கிராம பகுதிகளில் விவசாயிகள் தக்காளியை அதிகபடியாக விளை வித்து வருகின்றனர்.
இங்கு விளைவிக்கும் தக்காளி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், அண்டை மாநில பகுதிக ளுக்கும் வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர்.
இந்த நிலையில் 5 மாதங்களுக்கு முன்பு தக்காளி விளைச்சல் அதிகரிப்பால் கிலோ 3 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது . இதனால் நஷ்டத்தை அடைந்த விவசாயிகள் அறுவடை செய்த தக்காளிகளை ஏரி, குளம் ஆறு போன்றவைகளில் கொட்டிச் சென்றனர். பயிரிட்ட தக்காளி செடிகளை அழித்து மாற்று பயிருக்கு மாறினார்.
இதனால் வரத்து குறைந்து கடந்த 2 மாதத்திற்கு முன்பு தருமபுரி மாவட்டத்தில் கிலோ தக்காளி 160 ரூபாயும், வெளி மாவட்டங்களில் 200 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து இரண்டு மாதங்களாக விலை நீடித்ததால் விவசாயிகள் தக்காளி பயிரிட ஆர்வம் காட்டினர்.
மீண்டும் தக்காளி வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை படிப்ப டியாக குறைந்து கிலோ 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் கர்நாடகா, ஆந்திரா , மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து அதிகரித்தது. இதனால் தருமபுரி மாவட்ட உழவர் சந்தையில் கிலோ 12 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- கர்நாடக மாநிலம் மைசூருக்கு சுற்றுலா அழைத்து சென்றனர்.
- நிர்வாகிகள் புனேவுக்கு சென்று ரம்யாவை மீட்டு வந்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள கெண்டயனஅள்ளி புதூரை சேர்ந்தவர்கள் வெங்கடாசலம் மாதம்மாள் தம்பதி. இவர்களது மகள் ரம்யா. மாற்றுத்திறனாளி.
கடந்த 2002-ம் ஆண்டு பள்ளி சார்பில் குழந்தைகளை ரெயில் மூலம் கர்நாடக மாநிலம் மைசூருக்கு சுற்றுலா அழைத்து சென்றனர். அப்போது ரம்யா ரெயிலில் காணாமல் போனார்.
இந்த நிலையில் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த ரம்யா புனேவில் இருப்பதாக வெங்கடாசலத்தின் செல்போன் வாட்ஸ்-ஆப் எண்ணுக்கு தகவல் வந்தது. இதையடுத்து தருமபுரி மாவட்ட காதுகேளாதோர் நல சங்க நிர்வாகிகள் புனேவுக்கு சென்று ரம்யாவை மீட்டு வந்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர். 21 ஆண்டுகளுக்கு பிறகு மகளை கண்ட பெற்றோர் கட்டி தழுவி வரவேற்றனர்.
- ரூ.33 ஆயிரத்து 765 விவசாயிடமிருந்து பெற்றுக் கொண்டார்.
- மின் கம்பம் மற்றும் கம்பியை மட்டும் அவரது நிலத்தில் பொருத்தி விட்டு சென்றுவிட்டார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகா கோட்டையணஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளமான்காடு கிராமத்தை சேர்ந்தவர் மாரியண்ணன். விவசாயி. இவர் தனது விவசாய நிலத்தில் உள்ள ஆழ்துளை கிணறுக்கு புதிதாக மின் இணைப்பு வேண்டி பெரும்பாலை மின்சார வாரிய அலுவலகத்தில் உள்ள வணிக ஆய்வாளரை அணுகினார்.
அவர் புதிய மின் இணைப்பு பெற ரூ.40 ஆயிரம் செலவாகும் என தெரிவித்து ரூ.33 ஆயிரத்து 765 விவசாயிடமிருந்து பெற்றுக் கொண்டு மின் கம்பம் மற்றும் கம்பியை மட்டும் அவரது நிலத்தில் பொருத்தி விட்டு சென்றுவிட்டார். ஆனால் இதுவரை மின் இணைப்பு வழங்கப்படவில்லை.
இது குறித்து விவசாயி அதிகாரியிடம் பலமுறை சென்று கேட்டும் மின் இணைப்பு வழங்காமல் விவசாயி மாரியண்ணனை அலைகழித்து வந்துள்ளார். மாரியண்ணன் கடந்த 2014-ம் ஆண்டு தனக்கு புதிய மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்தும், கடந்த 9 வருடங்களாக அவரால் மின் இணைப்பு பெற முடியாமல் இருப்பதால் அவதியடைந்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது மீண்டும் அவர் தருமபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து தனக்கு புதிய மின் இணைப்பு வேண்டி மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
மேலும் அதில் தன்னை அலைக்கழித்து வந்த மின்வாரிய வணிக ஆய்வாளர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தனக்கு விரைவாக புதிய மின் இணைப்பு வழங்க வேண்டியும் கோரிக்கை விடுத்துள்ளார்.
- 151-வது நிலம் சர்வே செய்யும் பணி தொடக்க விழா நல்லம்பள்ளி கோபாலம்பட்டியில் இன்று தொடங்கி வைக்கபட்டுள்ளது.
- பக்தர்களின் கோரிக்கையை ஏற்று காலபைரவர் கோவிலில் திருமண மண்டபம் ஒன்று கட்டப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி:
தருமபுரி மாவட்டத்திற்கு வருகை தந்த இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, நல்லம்பள்ளி அருகேவுள்ள கோபாலம் பட்டியில் கோவில் நிலத்தை அளவீடும் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதனை தொடர்ந்து அதியமான் கோட்டையிலுள்ள பிரசித்தி பெற்ற கால பைரவர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர், அங்கிருந்து புறப்பட்டு தருமபுரி நகரில் பிரசித்திப்பெற்ற பழமையான கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் சாமி கோவிலுக்கு வந்தார். அங்கு அவர் சாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர் அவர் நிருபர்களை சந்தித்து பேசியதாவது:-
கடந்த 2021-ம் ஆண்டு முதல் இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான நிலங்களை ஜி.பி.எஸ் கருவி மூலம் நில அளவை செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 1.50 ஏக்கர் நிலம் சர்வே செய்து முடிக்கப்பட்டுள்ளது.
151-வது நிலம் சர்வே செய்யும் பணி தொடக்க விழா நல்லம்பள்ளி கோபாலம்பட்டியில் இன்று தொடங்கி வைக்கபட்டுள்ளது.
கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் தொடர்ந்து, நில அளவையாளர்கள் கொண்டும், ஜி.பி.எஸ் கருவி உதவியின் மூலமும், அளவீடு செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.
இதனையடுத்து தருமபுரி மாவட்டத்திலும் நில அளவீடு செய்யும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
அதியமான் கோட்டையிலுள்ள காலபைரவர் கோவில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
மேலும் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று காலபைரவர் கோவிலில் திருமண மண்டபம் ஒன்று கட்டப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தப் பணிகளை விரைவாக எடுத்துக் கொள்ளவும், பக்தர்களின் வசதிக்காக கழிவறை வசதி, குடிநீர் வசதி செய்து தருவதற்கும், அஷ்டமி காலங்களிலும் பூஜைக்கு அதிகமாக பக்தர்கள் வந்து செல்வதால், அவர்கள் விளக்கேற்றி சாம்பல் பூசணி வைத்து வழிபாடு செய்ய வசதியாக கோவிலுக்கு அருகேவுள்ள தனியார் நிலத்தை கோவி லுக்கு பெறுவதற்கான முயற்சிகள் மாவட்ட நிர்வாகம் மூலம் மேற் கொண்டு வருகின்றோம்.
கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் சாமி கோவில் திருப்பணிகள் விரைந்து முடித்து, கும்பாபிஷேகம் விரைவில் நடைபெறும்.
இதே போல பயன்பாட்டில் இல்லாமல் இருந்து வரும் கோவில் தேரினை சரி செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வரும் பணியும் நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- மாலை 4 மணி அளவில் தருமபுரி வன்னியர் கல்யாண மண்ட பத்தில் நடக்கிறது.
- 4 ரோட்டில் உள்ள அண்ணா உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.
தருமபுரி,
தருமபுரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு ஆலோசனை கூட்டம் நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) தருமபுரியில் நடைபெறு கிறது. இது தொடர்பாக தருமபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தடங்கம் சுப்பிரமணி, தருமபுரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி. பழனியப்பன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியுள்ளதாவது:-
செயற்குழு கூட்டம் தருமபுரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழ ஆலோசனைக் கூட்டம் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணி அளவில் தருமபுரி வன்னியர் கல்யாண மண்ட பத்தில் நடக்கிறது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலை வர்கள் செல்வராஜ், மனோ கரன் ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள். கூட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசுகிறார்.
வருகிற 17-ம் தேதி வேலூரில் நடைபெறும் முப்பெரும் விழா, வருகிற 26-ம் தேதி தருமபுரி மாவட்டத்திற்கு இளை ஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை மற்றும் கட்சி பணிகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை செய்யப்படு வதால் இந்நாள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சியின் மாநில நிர்வாகி கள், மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலா ளர்கள், கிளை கழக நிர்வாகி கள், அணிகளின் தலை வர்கள், துணை தலைவர்கள், அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் அனை வரும் தவறாமல் கலந்துக் கொள்ளு மாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இதேபோன்று தருமபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மாவட்ட முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படு கிறது. அன்றைய தினம் காலை 9 மணிக்கு கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் தருமபுரி ராஜகோபால் கவுண்டர் பூங்கா அருகில் இருந்து ஊர்வலமாக சென்று 4 ரோட்டில் உள்ள அண்ணா உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.
இதேபோன்று தருமபுரி மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்டம் முழுவதும் அண்ணா பிறந்த நாள் விழா நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) சிறப்பாக கொண்டாடப்–படுகிறது. அன்றைய தினம் காலை 9 மணிக்கு மேற்கு மாவட்ட கழகம் சார்பில் அரூர் ரவுண்டானாவில் உள்ள அண்ணா உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படு கிறது.
இந்த நிகழ்ச்சிகளிலும் அந்தந்த பகுதியைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்ள வேண்டு கிறோம். மேலும் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட முழுவதும் ஒன்றியம், நகரம், பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் அண்ணா உருவ சிலைக்கு மாலை அணிவித்தும், சிலைகள் இல்லாத பகுதிகளில் படங்களுக்கு மாலை அணிவித்தும் மரியாதை செலுத்த வேண்டும் . இவ்வாறு அவர்கள் அந்த அறிக்கையில் தெரிவித்து உள்ளனர்.
- 200 மீட்டர் நீளத்திற்கு பைப் லைன்களை அமைத்து வீடுகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
- தொப்பூர் காவல் நிலையத்தில் ஊராட்சி மன்ற தலைவர் அறுமுகம் புகார் மனுவினை அளித்துள்ளார்.
தொப்பூர்,
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியத்தில் சிவாடி ஊராட்சி அமைந் துள்ளது. இந்த ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவராக ஆறுமுகம் உள்ளார். சிவாடி ஊராட்சியில் பொது குடிநீர் தேவையை தீர்க்கும் பொருட்டு 15-வது நிதி குழு மானியத்தின் மூலம் சுமார் 200 மீட்டர் நீளத்திற்கு பைப் லைன்களை அமைத்து அங்குள்ள வீடுகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. சம்பவத்தன்று தனிநபர் ஒருவர் திடீரென புதிதாக அமைக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் அனைத்தையும் உடைத் துள்ளதாக கூறப்ப டுகிறது.
அப்பொழுது அதை தட்டி கேட்ட பொது மக்களையும் அந்த நபர் மிரட்டியதாகவும் கூறப்பட்ட நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம் தொப்பூர் காவல் நிலை யத்தில் புகார் மனு அளித் துள்ளார். அந்த மனுவில் இப்பகுதியில் முழுமையாக குடிநீர் தட்டுப்பட்டை நீக்கும் பொருட்டு பைப் லைன்கள் அமைக்கப்பட்டு குடிநீர் சீராக வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அனைத்து பைப் லைன்களும் உடைக்கப் பட்டு உள்ளதால் பொதுமக்களுக்கு தண்ணீர் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் குடிநீர் குழாயினை சேதப்படுத்திய நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொப்பூர் காவல் நிலையத்தில் ஊராட்சி மன்ற தலைவர் புகார் மனுவினை அளித்துள்ளார்.
- ஸ்டிக்கர்கள் ஒட்டும் பணியை, தருமபுரி ஆர்.டி.ஓ தாமோதரன் ஆய்வு செய்தார்.
- மின் மற்றும் சோளார் விளக்குகள் பொருத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தொப்பூர்,
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே தொப்பூர் வனப்பகுதியில் தொப்பூர் கணவாய் உள்ளது. இந்த கணவாய் வழியாக சேலம்- பெங்களூர் இடையிலான நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை உள்ளது.
இவ்வாறு உள்ள இந்த சாலையில் எஸ்- வளைவு, தாழ்வான சாலை பகுதிகளில் நாள்தோறும் பல்வேறு விபத்துக்களும், அதனால் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி அபாய சாலை பகுதிகளை இரவு நேரத்தில் கண்டறிந்து விபத்தில்லாமல், வாகன ஓட்டிகள் கவனமாக ஓட்டும் வகையில், எஸ்-பெண்டு வளைவு, தாழ்வான சாலைப் பகுதி தெரியும் வகையில், பிரதிபலிப்பான் ஸ்டிக்கர்கள் ஒட்டும் பணியை, தருமபுரி ஆர்.டி.ஓ தாமோதரன் ஆய்வு செய்து, நேரடியாக களத்தில் இறங்கி எச்சரிக்கை செய்ய வேண்டிய அனைத்து பகுதிகளிலும் ஸ்டிக்கர்களை ஒட்டினார்.
மேலும் சாலை பராமரிப்பு ஊழியர்கள் தொப்பூர் கணவாய் சாலையின் இருபுறமும், ரிப்லேக்ட்டர் ஸ்டிக்கர் ஓட்டும் பணி, மின் மற்றும் சோளார் விளக்குகள் பொருத்தும் பணி, உள்ளிட்ட சீரமைப்பு பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
- மாவட்ட செயலாளர் கலை செல்வன் தலைமை வகித் தார்.
- தற்கொலை செய்ய வைக்கும் நீட் தேர்வை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
தருமபுரி,
விலைவாசி உயர்வு, வேலையின்மை அதிகரிப்பு, இந்தி திணிப்பு ஆகிய வற்றிற்கு எதிர்ப்பு தெரி வித்தும், பா.ஜ.க அரசைக் கண்டித்தும் தருமபுரி தலைமை தபால் நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடை பெற்றது. போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கலை செல்வன் தலைமை வகித் தார். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் விலைவாசி உயர்வு, வேலை யில்லா திண்டாட்டம், விவசாய, தொழிலாளர் விரோத சட்டங்கள், மாநில உரிமை களை பறித்தல், மாணவ மாணவிகளை தற்கொலை செய்ய வைக்கும் நீட் தேர்வு என மக்கள் விரோத நடவ டிக்கைகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
இதனையடுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 400- க்கும் மேற்பட்ட வர்களை போலீசார் கைது செய்தனர்.
- வலசையூருக்கு தனது இரு சக்கர வாகனத்தில் வேலைக்கு சென்றார்.
- சாலையில் உள்ள குழியில் பைக் ஏறி இறங்கியதில் நிலை தடுமாறி தவறி கீழே விழுந்தார்.
பாப்பிரெட்டிப்பட்டி.
தருமபுரி மாவட்டம் பாப்பி ரெட்டிபட்டி அடுத்த மூக்கா ரெட்டிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் விஜய் (வயது 27). இவர் கம்பி கட்டும் சென்ட்ரிங் வேலை செய்து வந்தார்.
கடந்த 9-ம் தேதி காலை சேலம் மாவட்டம் வலசையூருக்கு தனது இரு சக்கர வாகனத்தில் வேலைக்கு சென்றார். இந்நிலையில் மாலை அவரது உறவினர் கோவிந்தீஸ்வரி என்பவரை வலசையூரில் இருந்து பைக்கில் அழைத்து வந்து சாமியாபுரம் கூட் ரோட்டில் விட்டு விட்டு மீண்டும் வலசையூர் சென்றார்.
அப்போது அரூர்-சேலம் ரோட்டில் கோம்பூர் அருகே சாலையில் உள்ள குழியில் பைக் ஏறி இறங்கியதில் நிலை தடுமாறி தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கு இருந்தவர்கள் மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த விஜய் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி தேன்மொழி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வேளாண்மை துணை இயக்குநர் அருள்வடிவு தலைமை தாங்கினார்.
- உழவன் செயலி பதிவிறக்கம் மற்றும் பயன்பாடு குறித்து விழிப்பு ணர்வு அளிக்கப்பட்டது.
தொப்பூர்,
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் வேளாண்மை தொழில்் நுட்ப மேலாண்மை முகமை விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த பண்ணை யம் மாவட்ட அளவிளான பயிற்சி நடைபெற்றது.
இந்நிகழ்சியில நல்லம் பள்ளி வேளாண்மை இளங்கோவன் வரவேற் புரையாற்றினார். இப்பயிற்சிக்கு வேளாண்மை துணை இயக்குநர் அருள்வடிவு தலைமை தாங்கி வேளாண்மை துறையில் உள்ள மத்திய திட்டம் மற்றும் கலைஞரின் அனைத்து கிராம வேளாண்மை ஒருங்கி ணைந்த திட்டத்தினை பற்றி எடுத்துக் கூறினார்.
நல்லம்பள்ளி வேளாண்மை உதவி இயக்குநர் தேன்மொழி முன்னிலை வகித்து துறை சார்ந்த மானியத் திட்டங்களை எடுத்து ரைத்தார். தொடர்ந்து பாப்பா ரப்பட்டி, வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கி ணைப்பாளர் வெண்ணிலா வேளாண்மை அறிவியல் நிலையத்தின் திட்ட செயல்பாடுகள் மற்றும் ஒருங்கிணைந்த பண்ணை யத்தின் நோக்கம், மண்புழு உரம் தயாரிக்கும் முறைகள் குறித்து விளக்கினார்.
வேளாண்மை அறிவியல் நிலைய இணை பேராசிரியர் இந்துமதி தோட்டக்கலை பயிர்களின் ஒருங்கிணைந்த முறையின் சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்து விளக்கம் அளித்தார். உதவி கால்நடை மருத்துவா பொற்செழியன் கால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு, தீவன மேலாண்மை குறித்து விளக்கம் அளித்தார். அதியான்கோட்டை, துளசி தேன்பண்ணை அலுவலர். சிலம்பரசன் தேனி வளர்ப்பு மற்றும் பராமரிப்பு மதிப்பு கூட்டி விற்பனை செய்யும் தொழில் நுட்பங்களை எடுத்து ரைத்தார். சிவசங்கரி, வட்டார தொழில்நுட்ப மேலாளர் உழவன் செயலி பதிவிறக்கம் மற்றும் பயன்பாடு குறித்து விழிப்பு ணர்வு அளிக்கப்பட்டது. உதவி வேளாண்மை அலுவலர் ஜனார்த்தனன் நன்றியுரையாற்றினார்.
இறுதியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு துண்டு பிரசுகள் வழங்கப்பட்டது. இப்ப யிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் அருள்குமார், கபிவன் செய்திருந்தினர். மேலும் 50-ற்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு அமைக்கப்பட்ட கண்காட்சியினை கண்டுகளித்து பயன் அடைந்தனர்.






