search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    8 வயதில் காணாமல் போன சிறுமி 21 ஆண்டுக்கு பிறகு புனேயில் மீட்பு
    X

    காதுகேளாதோர் நல சங்க நிர்வாகிகள் வாய் பேச முடியாத 8 வயது சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த காட்சி.

    8 வயதில் காணாமல் போன சிறுமி 21 ஆண்டுக்கு பிறகு புனேயில் மீட்பு

    • கர்நாடக மாநிலம் மைசூருக்கு சுற்றுலா அழைத்து சென்றனர்.
    • நிர்வாகிகள் புனேவுக்கு சென்று ரம்யாவை மீட்டு வந்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள கெண்டயனஅள்ளி புதூரை சேர்ந்தவர்கள் வெங்கடாசலம் மாதம்மாள் தம்பதி. இவர்களது மகள் ரம்யா. மாற்றுத்திறனாளி.

    கடந்த 2002-ம் ஆண்டு பள்ளி சார்பில் குழந்தைகளை ரெயில் மூலம் கர்நாடக மாநிலம் மைசூருக்கு சுற்றுலா அழைத்து சென்றனர். அப்போது ரம்யா ரெயிலில் காணாமல் போனார்.

    இந்த நிலையில் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த ரம்யா புனேவில் இருப்பதாக வெங்கடாசலத்தின் செல்போன் வாட்ஸ்-ஆப் எண்ணுக்கு தகவல் வந்தது. இதையடுத்து தருமபுரி மாவட்ட காதுகேளாதோர் நல சங்க நிர்வாகிகள் புனேவுக்கு சென்று ரம்யாவை மீட்டு வந்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர். 21 ஆண்டுகளுக்கு பிறகு மகளை கண்ட பெற்றோர் கட்டி தழுவி வரவேற்றனர்.

    Next Story
    ×