என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி  விழுந்த தொழிலாளி சாவு
    X

    இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு

    • வலசையூருக்கு தனது இரு சக்கர வாகனத்தில் வேலைக்கு சென்றார்.
    • சாலையில் உள்ள குழியில் பைக் ஏறி இறங்கியதில் நிலை தடுமாறி தவறி கீழே விழுந்தார்.

    பாப்பிரெட்டிப்பட்டி.

    தருமபுரி மாவட்டம் பாப்பி ரெட்டிபட்டி அடுத்த மூக்கா ரெட்டிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் விஜய் (வயது 27). இவர் கம்பி கட்டும் சென்ட்ரிங் வேலை செய்து வந்தார்.

    கடந்த 9-ம் தேதி காலை சேலம் மாவட்டம் வலசையூருக்கு தனது இரு சக்கர வாகனத்தில் வேலைக்கு சென்றார். இந்நிலையில் மாலை அவரது உறவினர் கோவிந்தீஸ்வரி என்பவரை வலசையூரில் இருந்து பைக்கில் அழைத்து வந்து சாமியாபுரம் கூட் ரோட்டில் விட்டு விட்டு மீண்டும் வலசையூர் சென்றார்.

    அப்போது அரூர்-சேலம் ரோட்டில் கோம்பூர் அருகே சாலையில் உள்ள குழியில் பைக் ஏறி இறங்கியதில் நிலை தடுமாறி தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கு இருந்தவர்கள் மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த விஜய் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி தேன்மொழி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×