என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேளாண்மை துறை சார்பில்  ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்து பயிற்சி
    X

    வேளாண்மை துறை சார்பில் ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்து பயிற்சி

    • வேளாண்மை துணை இயக்குநர் அருள்வடிவு தலைமை தாங்கினார்.
    • உழவன் செயலி பதிவிறக்கம் மற்றும் பயன்பாடு குறித்து விழிப்பு ணர்வு அளிக்கப்பட்டது.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் வேளாண்மை தொழில்் நுட்ப மேலாண்மை முகமை விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த பண்ணை யம் மாவட்ட அளவிளான பயிற்சி நடைபெற்றது.

    இந்நிகழ்சியில நல்லம் பள்ளி வேளாண்மை இளங்கோவன் வரவேற் புரையாற்றினார். இப்பயிற்சிக்கு வேளாண்மை துணை இயக்குநர் அருள்வடிவு தலைமை தாங்கி வேளாண்மை துறையில் உள்ள மத்திய திட்டம் மற்றும் கலைஞரின் அனைத்து கிராம வேளாண்மை ஒருங்கி ணைந்த திட்டத்தினை பற்றி எடுத்துக் கூறினார்.

    நல்லம்பள்ளி வேளாண்மை உதவி இயக்குநர் தேன்மொழி முன்னிலை வகித்து துறை சார்ந்த மானியத் திட்டங்களை எடுத்து ரைத்தார். தொடர்ந்து பாப்பா ரப்பட்டி, வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கி ணைப்பாளர் வெண்ணிலா வேளாண்மை அறிவியல் நிலையத்தின் திட்ட செயல்பாடுகள் மற்றும் ஒருங்கிணைந்த பண்ணை யத்தின் நோக்கம், மண்புழு உரம் தயாரிக்கும் முறைகள் குறித்து விளக்கினார்.

    வேளாண்மை அறிவியல் நிலைய இணை பேராசிரியர் இந்துமதி தோட்டக்கலை பயிர்களின் ஒருங்கிணைந்த முறையின் சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்து விளக்கம் அளித்தார். உதவி கால்நடை மருத்துவா பொற்செழியன் கால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு, தீவன மேலாண்மை குறித்து விளக்கம் அளித்தார். அதியான்கோட்டை, துளசி தேன்பண்ணை அலுவலர். சிலம்பரசன் தேனி வளர்ப்பு மற்றும் பராமரிப்பு மதிப்பு கூட்டி விற்பனை செய்யும் தொழில் நுட்பங்களை எடுத்து ரைத்தார். சிவசங்கரி, வட்டார தொழில்நுட்ப மேலாளர் உழவன் செயலி பதிவிறக்கம் மற்றும் பயன்பாடு குறித்து விழிப்பு ணர்வு அளிக்கப்பட்டது. உதவி வேளாண்மை அலுவலர் ஜனார்த்தனன் நன்றியுரையாற்றினார்.

    இறுதியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு துண்டு பிரசுகள் வழங்கப்பட்டது. இப்ப யிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் அருள்குமார், கபிவன் செய்திருந்தினர். மேலும் 50-ற்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு அமைக்கப்பட்ட கண்காட்சியினை கண்டுகளித்து பயன் அடைந்தனர்.

    Next Story
    ×