என் மலர்
உள்ளூர் செய்திகள்

தருமபுரி தபால் நிலையம் முன்பு சாலை மறியிலில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினரை படத்தில் காணலாம்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 450 பேர் கைது
- மாவட்ட செயலாளர் கலை செல்வன் தலைமை வகித் தார்.
- தற்கொலை செய்ய வைக்கும் நீட் தேர்வை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
தருமபுரி,
விலைவாசி உயர்வு, வேலையின்மை அதிகரிப்பு, இந்தி திணிப்பு ஆகிய வற்றிற்கு எதிர்ப்பு தெரி வித்தும், பா.ஜ.க அரசைக் கண்டித்தும் தருமபுரி தலைமை தபால் நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடை பெற்றது. போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கலை செல்வன் தலைமை வகித் தார். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் விலைவாசி உயர்வு, வேலை யில்லா திண்டாட்டம், விவசாய, தொழிலாளர் விரோத சட்டங்கள், மாநில உரிமை களை பறித்தல், மாணவ மாணவிகளை தற்கொலை செய்ய வைக்கும் நீட் தேர்வு என மக்கள் விரோத நடவ டிக்கைகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
இதனையடுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 400- க்கும் மேற்பட்ட வர்களை போலீசார் கைது செய்தனர்.






