என் மலர்
தர்மபுரி
- 2000 மகளிருக்கு வங்கி அட்டைகள் வழங்கப் பட்டுள்ளது.
- வங்கிகள் மூலம் மகளிர் சுயஉதவிக்குழு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டு பேசினார்.
தருமபுரி
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரம் மாவட்டத்தில், மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கிடும் கலை ஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கி வைத்ததை தொடர்ந்து, தருமபுரி அரசு கலைக் கல்லூரி கலை அரங்கில் நடைபெற்ற விழாவில் தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் குடும்பத் தலைவிகளுக்கு வங்கி பற்று அட்டைகளை வழங்கினார். இவ்விழாவிற்கு தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி, தலைமை தாங்கி பேசினார்.
இவ்விழாவில் தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் கூறிய தாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் பெண்களின் முன்னேற்றத்திற்கென எண்ணற்ற திட்டங்களை அறிவித்து, அவற்றை சிறப் பாக செயல்படுத்தி வருகின்றார். மகளிரின் நலன் காத்து அவர்களது உரிமைகளை நிலைநாட்டு வதில் எப்போதும் தமிழக அரசு அக்கறை செலுத்து வதாக அவர் தெரிவித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியில் அறிவித்தபடி, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கிடும் அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில் அண்ணா பிறந்தநாளான நேற்று தமிழ்நாட்டின் வரலாற்றில் மிகப் பெரிய திட்டமாகவும், இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் மகளிர் பயன்பெறும் வகை யில், மகளிருக்கு மாதந் தோறும் ரூ.1000 வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடங்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து தற்போது தருமபுரி மாவட் டத்தில் இவ்விழாவின் மூலம் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், தருமபுரி மற்றும் நல்லம் பள்ளி வருவாய் வட்டத்தை சார்ந்த 2000 மகளிருக்கு இன்றைய தினம் வங்கி பற்று அட்டைகள் வழங்கப் பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 3,92,385 விண்ணப்பங்கள் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பெற்று பரிசீலிக்கப்பட்டு, தற்போது குடும்பதலை விகளுக்கு ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படுகிறது.
கருணாநிதி மகளிருக்கு உள்ளாட்சி அமைப்புகளில் 33% தனி இடஒதுக்கீட்டினை உருவாக்கி தந்தார்கள். அதன் தொடர்ச்சியாக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மகளிர் நலன் காக்கும் வகையிலும், வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையிலும் மகளிர் கட்டணமில்லாமல் நகரபேருந்துகளில் பயணம் மேற்கொள்ளும் வண்ணம் பயணம் திட்டத்தையும், உயர்கல்வி பயிலும் மாணவி களுக்கு மாதந் தோறும் ரூ.1000 வழங்கும் புதுமைப் பெண் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை அறிவித்தார்.
தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளின் விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாமை முதன்முதலாக தொடங்கி வைத்தார்.
இதே போல் தருமபுரி மாவட்டத்தில் தான் டாக்டர் கலைஞரால் முதன் முதலில் 1989-ஆம் ஆண்டு ஏழை எளிய மகளிரைக் கொண்டு மகளிர் சுய உதவிக்குழுக்கள் தொடங்கப்பட்டது. தற்போது தருமபுரி மாவட் டத்தில் 14.105 மகளிர் சுய உதவிக்குழுக்களில் 1,69,254 மகளிர் உறுப்பினர்களாக உள்ளனர். இம்மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கூட்டுறவு சங்கங்களின் மூலம் கடந்த ஆண்டு 21.048 மகளிர் பயனடையும் வகை யில் ரூபாய் 116.96 கோடி கடன் உதவி வழங்கப் பட்டுள்ளது. மேலும், பல்வேறு வங்கிகள் மூலம் மகளிர் சுயஉதவிக்குழு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டு பேசினார்.
இவ்விழாவில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டி.என்.வி.எஸ்.செந்தில்குமார், தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உறுப்பினர் தடங்கம் சுப்பிரமணி, முன் னாள் அமைச்சர் பழனி யப்பன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் கீதாராணி, அரூர் வருவாய் கோட்டாட்சியர் வில்சன் ராஜசேகர், மாநில கைம் பெண் மற்றும் ஆதரவற்றோர் நலவாரிய உறுப்பினர் ரேணுகாதேவி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் மாது சண்முகம், தடங்கம் ஊராட்சி மன்றத் தலைவர் கவிதா உள்ளிட்ட உள் ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தொடர்புடைய அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் மகளிர் உரிமைத் தொகை பெற்ற பயனாளிகள் கலந்து கொண்டனர்.
- தன்னம்பிக்கை ஊக்கு விக்கும் பயிற்சி வகுப்பு 3 நாட்கள் நடைபெற்றது.
- மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஊக்கு விக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் பயிற்சி கள் வழங்கப்–பட்டது.
பாப்பிரெட்டிப்பட்டி.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா, பொம்மிடி ஸ்ரீனி வாசா பொறியியல் கல்லூ ரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு "பொறியி யல் மாணவர்க–ளுக்கான தன்னம்பிக்கை ஊக்கு விக்கும் பயிற்சி வகுப்பு 3 நாட்கள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீனிவாசா கல்வி அறக்–கட்டளையின் கவுரவத் தலைவர் பேராசிரியர் எஸ்.கே..இளங்கோவன் மற்றும் அறக்கட்டளையின் தலைவர் வி.எஸ்.ரேவதி இளங்கோவன் தலைமை தாங்கினார்.
இவ்விழாவினை கல்லூ–ரியின் தலைவர் வி.எஸ்.ரேவதி இளங்கோவன் குத்து விளக்கேற்றி தொ டங்கி வைத்தார். கல்லூரி இயக்குநர் ரஞ்சித்–குமார் முன்னிலை வகித்தார். துறை தலைவர் ரமேஷ் அனைவரையும் வரவேற்று பேசினார். கல்லூரியின் முதல்வர் நந்தகோபால், நிர்வாக இயக்குனர் முருகன் வாழ்த்துரை வழங்கினர். விழாவில் சிறப்பு அழைப்பாளர்களான கான்பிடோ பயிற்சி மை யத்தின் இயக்குநர் சரவண பெருமாள் மற்றும் பயிற்சி யாளர்களான வேதகாந்தன், பிரஜித்குமார், ரித்திகா ஆகியோர் மாண வர்களுக்கு தன்னம்பிக்கை ஊக்கு விக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் பயிற்சி கள் வழங்கப்–பட்டது.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் மற்றும் பேராசிரி–யர்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.
- எதிர்கால காலநிலை மாற்றம் குறித்தும் பசுமை குறித்தும் விரிவாக பேசினார்.
- மூலிகை தோட்டம் மற்றும் கீரை தோட்டத்தை பார்வை யிட்டார்.
கடத்தூர்,
தருமபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள நத்தமேடு அரசு மேல்நி லைப்பள்ளி தேசிய பசுமை படை மற்றும் சுற்றுச்சூழல் மன்ற மாணவர்களுக்கு சீருடை வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவில் தலைமை ஆசிரியர் கோவிந்தராசு தலைமை தாங்கி எதிர்கால காலநிலை மாற்றம் குறித்தும் பசுமை குறித்தும் விரிவாக பேசினார். தர்மபுரி மாவட்ட பள்ளிக்கல்வி சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் வேலு கலந்துகொண்டு பள்ளி பார்வையிட்டு பள்ளியில் உள்ள பசுமை சார்ந்துள்ள மூலிகை தோட்டம் மற்றும் நர்சரி தோட்டம் கீரை தோட்டத்தை பார்வை யிட்டார். சுற்றுச்சூழல் மாசுபாடு , பிளஸ்டிக் ஒழிப்பு மற்றும் மஞ்சப் பை பற்றிய விழிப்புணர்வு குறித்தும் மாணவர்களிடையே உரை யாற்றினார்.
பள்ளியின் தேசிய பசுமை படை சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் தீர்த்தமலை 2023 -24 ஆண்டுக்கான பசுமை படை மற்றும் சுற்றுச்சூழல் மன்ற செயல்பாடுகள் குறித்து விளக்கினார் விழாவில் பசுமை படை மாண வர்களுக்கு பசுமை படை சீருடை வழங்கப்பட்டது.
விழாவில் பள்ளியின் அனைத்து ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
- மாணவர்கள் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பயணம் செய்த வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.
- டிரைவர்கள் கண்டித்தால் அவர்களை தாக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
அரூர்,
தருமபுரி மாவட்டம் அதிகாரப்பட்டி பகுதியில் அரசு பஸ் எண் 14 -ல் பள்ளி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பயணம் செய்த வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. ஓடும் பஸ் ஜன்னல் கம்பியை பிடித்துக்கொண்டு, உயிருக்கு ஆபத்தினை விளைவிக்கும் வகையில் பள்ளி மாணவர் ஒருவர் பஸ்சின் படிக்கட்டில் நின்று கொண்டு பஸ்சின் மீது ஏறுவதும், இறங்குவதும் , தலையை கையால் சீவி ஸ்டைல் செய்யும் காட்சிகளும் பதிவாகியுள்ளன.
இதைக் காணும் பஸ் பயணிகளும், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பதை பதைத்து போகின்றனர். மேலும் இதே போன்று கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியில் தனியார் பஸ்சில் பள்ளி மாணவர்கள் பஸ் கம்பிகளை பிடித்துக்கொண்டு உயிருக்கு ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்ளும் மற்றொரு வீடியோ காட்சியும் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பள்ளி, மாணவர்கள் இது போன்று ஆபத்தான நிலையில் பயணம் மேற்கொள்வது என்பது தொடர் கதையாகவே உள்ளது. சாகசம் என்ற பெயரில் தங்கள் உயிருக்கு மட்டுமல்லாமல், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் என அனைவரது உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர்.
இது ஒருபுறம் இருக்க பயணிகளை அச்சுறுத்தும் வகையிலும் மாணவர்கள் பயணம் மேற்கொள்வது பொது மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற செயல்களில் ஈடுபடும் மாணவர்களை அரசுப் பஸ் கண்டக்டர், டிரைவர்கள் கண்டித்தால் அவர்களை தாக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
போக்குவரத்து காவல்துறையினர் பள்ளி விடும் நேரங்களில் இதுபோன்று படிக்கட்டில் பயணம் செய்யும் பள்ளி மாணவர்களை நிறுத்தி அறிவுரை வழங்கி அனுப்பினாலும், தொடர்ந்து மாணவர்கள் இந்த செயல்பாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்று ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் பள்ளி, மாணவர்களை கண்காணித்து அவர்களுக்கு தகுந்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இனியும் இதுபோன்று தவறான பயணங்களை மேற்கொள்ளாமல் இருக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- இந்து சமய அறநிலையத்துறையின் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்வதற்காக வருகை தந்தார்.
- கோவிலின் அருகே உள்ள கடைகளில் ரூ.20, ரூ.30 கொடுத்து குடிநீர் வாங்கி குடித்தனர்.
அரூர்,
தருமபுரி மாவட்டம் அரூரில் பிரசித்தி பெற்ற தீர்த்தமலைக்கோவில் உள்ளது. தீர்த்தமலை கோவிலுக்கு நேற்று முன்தினம் இந்து சமய அறநிலையத்துறையின் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்வதற்காக வருகை தந்தார். அமைச்சரின் வருகையை ஒட்டி இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் அவசர அவச ரமாக குடிநீர் வழங்கும் சுத்திகரிப்பு எந்திரம் பொருத்தப்பட்டது.
அமைச்சரின் வருகை–யின்போது அமாவாசை நாள் என்பதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களிலிருந்தும் ஏராள மான பக்தர்கள் வருகை தந்தனர். பக்தர்கள் வருகை தந்தாலும் பக்தர்க ளுக்காக கழிவறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாமல் மிகவும் அவதிப்பட்டனர்.
அமைச்சரின் வருகை–யால் திடீரென்று சுத்தி கரிக்கப்பட்ட குடிநீர் எந்திரம் யாருக்கும் தெரியாமல் பொருத்தபட்டதால் பக்தர்கள் அனைவரும் குடிநீர் இன்றி தவித்து வந்த நிலையில் கோவிலின் அருகே உள்ள கடைகளில் ரூ.20, ரூ.30 கொடுத்து குடிநீர் வாங்கி குடித்தனர்.
அமைச்சரின் வரு கைக்காக ஏற்படுத்தப்––பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எந்திரம் தற்காலி–கமாக பொருத்தப்பட்டதால் நிரந்தரமாக சுத்திகரிக்கப்–பட்ட குடிநீர் மற்றும் அடிப்–படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்பதே பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் பக்தர்கள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிரந்தரமாக வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
- தருமபுரி நகர அ.தி.மு.க.செயலாளர் பூக்கடை ரவி தலைமை–யில் நடை பெற்றது.
- தி.மு.க. அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகள் செயல்பாடுகள் குறித்து விளக்கி பேசினார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்ட அ.தி.மு.க.மற்றும் தருமபுரி சட்டமன்றத் தொகுதியின் சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், மற்றும் மதுரையில் நடைபெற்ற அ.தி.மு.க.பொன்விழா எழுச்சி மாநாட்டில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து விளக்க பொதுக்–கூட்டம் தருமபுரி நகர அ.தி.மு.க.செயலாளர் பூக்கடை பி.ரவி தலைமை–யில் நடை பெற்றது.
இக்கூட்டத்தில் அ.தி.மு.க. அமைப்பு செயலா–ளரும், தருமபுரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் எம்.எல்.ஏ., அ.தி.மு.க. தலைமை கழக பேச்சாளர் எம்.ஜி.ஆர் பித்தன், அ.கலில் பாட்சா, அ.தி.மு.க. கொள்கை பரப்பு துணை செயலாளர் நடிகை விந்தியா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினார்கள்.
பொதுக்கூட்டத்தில் நடிகை விந்தியா, அ.தி.மு.க.வில் கொள்கை கோட்பாடுகள் மற்றும் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் ஏழை எளிய மக்களுக்காக அவர் செயல்படுத்திய நலத்திட்டங்கள், மற்றும் தி.மு.க. அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகள் செயல்பாடுகள் குறித்து விளக்கி பேசினார்.
கூட்டத்தில் அ.தி.மு.க. விவசாய பிரிவு தலைவர் டி.ஆர்.அன்பழகன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் எஸ்.ஆர்.வெற்றிவேல், அ.தி.மு.க.அமைப்பு செயலாளர் சிங்காரம், எம்.எல்.ஏ.க்கள் பாப்பிரெட்டிப்பட்டி கோவிந்தசாமி, அரூர் சம்பத்குமார், மாவட்ட தலைவர் நாகராசன், ஒன்றிய செயலாளர் நல்லம்பள்ளி என்.ஜி.எஸ்.சிவப்பிரகாசம் உள்ளிட்ட அ.தி.மு.க.மாவட்ட நிர்வாகிகளும், சார்பு அமைப்புகளும் ஏராளமான அ.தி.மு.க. தொண்டர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
முடிவில் தருமபுரி அ.தி.மு.க. நகர மன்ற உறுப்பி னரும் வார்டு செயலாளரு மான நாகராஜன் அனை வருக்கும் நன்றி கூறினார்.
- தாட்கோ மூலம் கடன் பெற்ற பயனாளிகள் அசலை முறையாக செலுத்தினால் வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி செய்யப்படும் என்று தருமபுரி கலெக்டர் அறிவித்துள்ளார்.
- தாழ்த்தப்பட்டோர் நிதி வளர்ச்சிக் கழகம் மற்றும் தேசிய துப்புரவுத் தொழிலாளர் நிதி (ம) வளர்ச்சிக் கழகம் ஆகியவற்றின் மூலம் தாழ்த்தப்பட்டோருக்கு கடன் வழங்கப்பட்டு வருகிறது.
தருமபுரி:
தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனைத்தைச் சார்ந்தவர்களுக்கு பல்வேறு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் தேசிய தாழ்த்தப்பட்டோர் நிதி வளர்ச்சிக் கழகம் மற்றும் தேசிய துப்புரவுத் தொழிலாளர் நிதி (ம) வளர்ச்சிக் கழகம் ஆகிய கடன் நிதி உதவி திட்டத்தின் கீழ் 1990-91 முதல் 2011-12 ஆண்டு வரை கடன் உதவி பெற்ற பயனாளிகள் அசல் தொகையினை செலுத்தினால் வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய தாழ்த்தப்பட்டோர் நிதி வளர்ச்சிக் கழகம் மற்றும் தேசிய துப்புரவுத் தொழிலாளர் நிதி (ம) வளர்ச்சிக் கழகம் ஆகிய திட்டங்களில் பெற்ற கடன் தொகையினை ஒரே முறையில் செலுத்தி நேர் செய்யும் திட்டத்தில் கீழ் அசல் தொகையினை செலுத்தும் பயனாளிகளுக்கு வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி செய்து கடன் தொகை நிலுவையில்லா சான்று தாட்கோ, மாவட்ட மேலாளர்களால் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் 31.12.2023 வரை செயல்படுத்தப்படும் எனவும் தாட்கோ, மாவட்ட மேலாளர்கள் மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளபடி அசல் தொகையினை பயனாளிடமிருந்து வசூல் செய்ய விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகம், எண்-3, சாலை விநாயகர் கோவில் ரோடு, விருப்பாட்சிப்புரம், தருமபுரி என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட கலெக்டர் சாந்தி, தெரிவித்துள்ளார்.
- மாரண்டஅள்ளி அடுத்த பஞ்சப்பள்ளி அருகே மது போதையில் இருந்து லாரி டிரைவரைஅரிவாளால் வெட்டிய நண்பரை போலீசார் தேடி வருகின்றனர்.
- குடிபோதையில் லாரி டிரைவரின் மனைவிக்கு போன்செய்தபோது ஏற்பட்ட தகராறில் உடன் வந்த நண்பர் அரிவாளல் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
மாரண்டஅள்ளி:
தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அடுத்த பஞ்சப்பள்ளி அருகே பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 35). லாரி டிரைவர். அதே பகுதியைச் சேர்ந்த குமார் (34). கூலித்தொழிலாளி.
இருவரும் நண்பர்கள் மணிகண்டன் மது பாட்டில் களை வாங்கிக் கொண்டு மது குடிப்பதற்காக குமார் வீட்டிற்கு சென்றார். அப்பொழுது 2 பேரும் மது அருந்தி விட்டு இருந்த நிலையில் குமார் மணிகண்டன் மனைவிக்கு போன் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதனை மணிகண்டன் கண்டித்ததால் 2 பேருக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த குமார், மணிகண்டனை அரிவாளால் கை, கால் என பல்வேறு இடங்களில் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி சென்றார்.
இதையடுத்து பலத்த காயமடைந் மணிகண்டனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு முதல் உதவி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பஞ்சப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடிய குமாரை வலைவீசி தேடி வருகின்றனர்.
- சேலம் மண்டல அளவிலான நடைபெற்ற மேஜை பந்து போட்டியில் ஸ்ரீராம் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
- இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாநில அளவிலான நடைபெறும் தடகள போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
மொரப்பூர்:
கம்பைநல்லூர் ஸ்ரீராம் பள்ளி மாணவர்கள் சேலம் மண்டல அளவில் நடைப்பெற்ற மேஜைப் பந்து அணிக்காக தேர்வு போட்டிகள் நடைபெற்றது.
இதில் 14 வயதிற்குட்பட்ட மாணவர் பிரிவில் நரேன்குமார், முதல் இடமும், கிரிஷ்வர்மா 4-வது இடமும், 19 வயதிற்குட்பட்ட மாணவர் பிரிவில் பிரியதர்ஷன் 2-ம் இடம் பிடித்து சேலம் மண்டலத்திற்கான அணியில் இடம் பிடித்து பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்கள் பள்ளியின் தாளா ளர் வேடியப்பன், சாந்தி வேடியப்பன், பள்ளியின் நிர்வாக இயக்குநர் தமிழ்மணி மற்றும் பாவனி தமிழ்மணி, பள்ளி முதல்வர்கள் சாரதி மகாலிங்கம், ஜான்இருதயராஜ், ஆகி யோர் பாராட்டினர். மாண வர்களுக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் செல்வம், பள்ளி நிர்வாகம் பாராட்டியது.
- தருமபுரி வரத்து அதிகரிப்பால் கத்திரிக்காய் மற்றும் வெண்டைக்காய் விலை தொடர்ந்து வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
- தருமபுரி மாவட்டத்தில் நல்ல மழை பெய்து உள்ளதால் விவசாயிகள் காய்கறிகளை விளைப்பதில் ஆர்வம் காட்டி வருவதால், மார்க்கெட்டுக்கு காய்கறிகளின் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.
தருமபுரி,
தருமபுரி மார்க்கெட்டில் கடந்த சில மாதங்களாக, தக்காளி, சிறிய வெங்காயம், கேரட், பீன்ஸ், கத்தரிக்காய், எலுமிச்சை, பச்சை மிளகாய், குடை மிளகாய், இஞ்சி, பாகற்காய் உள்ளிட்ட பலவகை காய்கறிகளின் வரத்து குறைந்தது. அதனால், அவற்றின் விலை கிடுகிடுவென உயர்ந்தது.
தக்காளி, சிறிய வெங்காயம், இஞ்சி ஆகியவை, கிலோ 200 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டன. மற்ற காய்கறிகள், கிலோ 60க்கு மேல் விற்பனை செய்யப்பட்டன. இதனால், பொது மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தற்போது தருமபுரி மாவட்டத்தில் நல்ல மழை பெய்து உள்ளதால் விவசாயிகள் கத்திரி, வெண்டை, பாகற்காய், முள்ளங்கி, சுரைக்காய் ,உள்ளிட்ட அனைத்து வகை காய்கறிகளும் பயிரிட்டு வருகின்றனர். காய்கறிகளின் வரத்து அதிகரிப்பால் விலை குறைய தொடங்கியுள்ளது மேலும் கத்திரிக்காய் விலை அதிக வரத்தால் வீழ்ச்சி அடைந்துள்ளது.
தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் கத்தரிக்காய் சாகுபடி செய்யப்படுகிறது. எனினும் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அதிகமாகக் கத்தரிக்காய் பயிரிடப்படுகிறது.பொதுவாக கத்தரிக்காய் டிசம்பர்-ஜனவரி, மே-ஜூன், அக்டோபர்- நவம்பர் என 3 பட்டங்களில் சாகுபடி செய்யப்படுகிறது. நட்டு 40 நாள்களில் அறுவடைக்கு வரும்.
அடுத்து 110 நாள்கள் வரை பலன் கொடுக்கும். தருமபுரி மாவட்டத்தில் கத்திரிக்காய் வெண்டைக்காய் சுமார் ஆயிரம் ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்டு உள்ளது. மேலும் இங்கு விளையும் பச்சைக் கத்திரிக்காய் கேரளாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. விவசாயிகள் பெரும்பாலும் நீல நிற கத்திரிக்காய் உடலுக்கு ஆரோக்கியத்தையும் ஊட்டச்சத்து மிகுந்தது என்பதாலும் அனைத்து விசேஷங்களுக்கும் கத்திரிக்காய் பயன்படுத்தப்படுவதால் விவசாயிகள் அதிகமாக சாகுபடி செய்து வருகின்றனர்.
தற்போது பரவலாக தருமபுரி கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பல ஆயிரம் ஏக்கரில் கத்திரிக்காய் வெண்டைக்காய் சாகுபடி செய்யப்பட்டு இருப்பதால் வரத்து அதிகரித்துள்ளது இதனால் உழவர் சந்தையில் கிலோ 8 ரூபாய் முதல் பத்து ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது விவசாயிகளிடத்தில் கிலோ
3 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை வியாபாரிகள் கொள்முதல் செய்து வெளிமார்க்கெட்டில் 8 ரூபாய் முதல் பத்து ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- அரூரை அடுத்த தீர்த்தமலையில் தீர்த்தகிரீஸ்வரர் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.
- தீர்த்தமலையில் கிரிவலப்பாதை விரைவில அமைக்க ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அரூர்:
தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த தீர்த்த மலையில் தீர்த்த கிரீஸ்வரர் கோவிலில் செயல்படுத்தப்படும் மேம் பாட்டு பணிகள் குறித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
வரலாற்று சிறப்பு மிக்க தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் க்கோயிலுக்கு பழங்கா லத்தில் கிரிவலப்பாதை இருந்ததாகவும், தற்போது பயன்பாட்டில் இல்லை என பக்தர்கள் தெரிவிக்கின்றனர். தீர்த்தமலையில் ஏற்கனவே இருந்த கிரிவலப்பாதை குறித்து ஆய்வு மேற்கொள் ளப்பட்டு, சாத்தியகூறுகள் இருந்தால் அந்த பாதையை மீண்டும் புதுப்பித்து தருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
தீர்த்தமலை தீர்த்தகி ரீஸ்வரர் க்கோயிலில் ரூ.2.50 கோடியில் ப்பணி கள் நடைபெறுகிறது. இந்தப் பணிகள் இன்னும் 3 அல்லது 4 மாதங்களில் நிறைவுபெறும். தொடர்ந்து தீர்த்தகிரீஸ்வரர் க்கோயிலில் நன்னீராட்டுப் பெருவிழா நடைபெறும்.
தீர்த்தமலையில் உள்ள மலைக்கோயிலுக்கு செல்வதற்கு மலைப்பாதை அமைப்பதற்காக வனத்துறையினரிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. வனத்துறையினரிடம் இருந்து உரிய அனுமதி கிடைத்தவுடன் தீர்த்தமலை மலைக்கோயிலுக்கு பாதை வசதி ஏற்படுத்தப்படும்.
தருமபுரி மாவட்டத்தில் தீர்த்தமலை உள்ளிட்ட கோயில்களுக்கு பக்தர்கள் சென்று வரும் வகையில் இணைப்பு பேருந்து வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்த ஆய்வின்போது முன்னாள் அமைச்சரும், திமுக மேற்கு மாவட்ட செயலருமான பி.பழனி யப்பன், கிழக்கு மாவட்ட செயலர் தடங்கம் பெ.சுப்பிரமணி உள்ளி ட்டோர் உடனிருந்தனர்.
- தருமபுரியில் வள்ளலார் திடலில் கடந்த 8-ந் தேத முதல் புத்தகத் திருவிழா தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
- தருமபுரி புத்தகத் திருவிழாவில் ஸ்ரீ கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரி மாணவ, மாணவிகள் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
தருமபுரி:
தருமபுரி மாவட்டத்தில் 16 ஆண்டுகளாக இயங்கி வரும் ஸ்ரீ கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரியில் சுமார் 10 க்கும் மேற்பட்ட மருத்துவம் சார்ந்த பாடப்பிரிவுகள் நடத்தி வருகின்றது.
இதில் சுமார் 187 மாணவ, மாணவிகள் படித்து வருகின் றனர். இவர்கள் அனைவரும் மருத்துவம் சார்ந்த பாடப் பிரிவில் படித்து வருகின்றனர். இந்த நிலையில் தருமபுரியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் புத்தகத் திருவிழாவில் கல்லூரி மாணவ, மாணவிகள் அனை–வரையும் அந்த புத்தகத் திருவிழாவிற்கு அழைத்துச் சென்று மருத்துவம் சார்ந்த புத்த–கங்களை கல்லூரி மாணவ மாணவிகளுக்கு எளிதாக கிடைக்க வழிவகை செய்தனர்.
அது மட்டுமல்லாமல் அனைத்து விதமான மருத்துவம் சார்ந்த புத்த கங்களும் தள்ளுபடி விலை யில் புத்தகத் திருவிழாவில் கிடைத்தது. இதைத்தொடர்ந்து புத்தகத் திருவிழாவில் ஸ்ரீகி ருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரி சார்பாக கல்லூரி மாணவ மாணவிகள் கிரா மப்புற கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
புத்தக திருவிழாவிற்கு வருகை தரும் பொது மக்க–ளுக்கு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலை நிகழ்ச்சி கல்லூரி சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் கிருஷ் ணமூர்த்தி, கல்லூரி பேராசிரியர்கள் மகேஸ்வரி, குமுதா, ரஞ்சிதா, செல்வி, கல்லூரி நிர்வாக அலுவலர் ஜோதிபாசு, துணைப் பேராசிரியர்கள் கவினா, சந்தியா அனைவரும் ஒன்றி ணைந்து இந்த புத்தக திரு விழா கலை நிகழ்ச்சியை வழி நடத்தினர்.






