என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  குடி போதையில் இருந்த லாரி டிரைவருக்கு அரிவாள் வெட்டு
  X

  குடி போதையில் இருந்த லாரி டிரைவருக்கு அரிவாள் வெட்டு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மாரண்டஅள்ளி அடுத்த பஞ்சப்பள்ளி அருகே மது போதையில் இருந்து லாரி டிரைவரைஅரிவாளால் வெட்டிய நண்பரை போலீசார் தேடி வருகின்றனர்.
  • குடிபோதையில் லாரி டிரைவரின் மனைவிக்கு போன்செய்தபோது ஏற்பட்ட தகராறில் உடன் வந்த நண்பர் அரிவாளல் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

  மாரண்டஅள்ளி:

  தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அடுத்த பஞ்சப்பள்ளி அருகே பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 35). லாரி டிரைவர். அதே பகுதியைச் சேர்ந்த குமார் (34). கூலித்தொழிலாளி.

  இருவரும் நண்பர்கள் மணிகண்டன் மது பாட்டில் களை வாங்கிக் கொண்டு மது குடிப்பதற்காக குமார் வீட்டிற்கு சென்றார். அப்பொழுது 2 பேரும் மது அருந்தி விட்டு இருந்த நிலையில் குமார் மணிகண்டன் மனைவிக்கு போன் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதனை மணிகண்டன் கண்டித்ததால் 2 பேருக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

  இதனால் ஆத்திரமடைந்த குமார், மணிகண்டனை அரிவாளால் கை, கால் என பல்வேறு இடங்களில் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி சென்றார்.

  இதையடுத்து பலத்த காயமடைந் மணிகண்டனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு முதல் உதவி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பஞ்சப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடிய குமாரை வலைவீசி தேடி வருகின்றனர்.

  Next Story
  ×