என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    அண்ணாவின் பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம்
    X

    அண்ணாவின் பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தருமபுரி நகர அ.தி.மு.க.செயலாளர் பூக்கடை ரவி தலைமை–யில் நடை பெற்றது.
    • தி.மு.க. அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகள் செயல்பாடுகள் குறித்து விளக்கி பேசினார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட அ.தி.மு.க.மற்றும் தருமபுரி சட்டமன்றத் தொகுதியின் சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், மற்றும் மதுரையில் நடைபெற்ற அ.தி.மு.க.பொன்விழா எழுச்சி மாநாட்டில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து விளக்க பொதுக்–கூட்டம் தருமபுரி நகர அ.தி.மு.க.செயலாளர் பூக்கடை பி.ரவி தலைமை–யில் நடை பெற்றது.

    இக்கூட்டத்தில் அ.தி.மு.க. அமைப்பு செயலா–ளரும், தருமபுரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் எம்.எல்.ஏ., அ.தி.மு.க. தலைமை கழக பேச்சாளர் எம்.ஜி.ஆர் பித்தன், அ.கலில் பாட்சா, அ.தி.மு.க. கொள்கை பரப்பு துணை செயலாளர் நடிகை விந்தியா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினார்கள்.

    பொதுக்கூட்டத்தில் நடிகை விந்தியா, அ.தி.மு.க.வில் கொள்கை கோட்பாடுகள் மற்றும் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் ஏழை எளிய மக்களுக்காக அவர் செயல்படுத்திய நலத்திட்டங்கள், மற்றும் தி.மு.க. அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகள் செயல்பாடுகள் குறித்து விளக்கி பேசினார்.

    கூட்டத்தில் அ.தி.மு.க. விவசாய பிரிவு தலைவர் டி.ஆர்.அன்பழகன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் எஸ்.ஆர்.வெற்றிவேல், அ.தி.மு.க.அமைப்பு செயலாளர் சிங்காரம், எம்.எல்.ஏ.க்கள் பாப்பிரெட்டிப்பட்டி கோவிந்தசாமி, அரூர் சம்பத்குமார், மாவட்ட தலைவர் நாகராசன், ஒன்றிய செயலாளர் நல்லம்பள்ளி என்.ஜி.எஸ்.சிவப்பிரகாசம் உள்ளிட்ட அ.தி.மு.க.மாவட்ட நிர்வாகிகளும், சார்பு அமைப்புகளும் ஏராளமான அ.தி.மு.க. தொண்டர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

    முடிவில் தருமபுரி அ.தி.மு.க. நகர மன்ற உறுப்பி னரும் வார்டு செயலாளரு மான நாகராஜன் அனை வருக்கும் நன்றி கூறினார்.

    Next Story
    ×