என் மலர்tooltip icon

    தர்மபுரி

    • மானாவரி பயிர்களை பயிரிட்டுள்ள விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    • தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 68.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    தருமபுரி,

    தமிழகத்தில் சேலம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய 4 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. இதை யடுத்து தருமபுரி,கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மழைப்பொழிவு இருந்து வந்தது.

     தருமபுரி மாவட்டம் முழுவதும் நேற்று வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனை தொடர்ந்து மாலை முதல் கருமேகம் சூழ்ந்து லேசான சாரல் மழை பொழிய தொடங்கியது. பின்னர் இரவு 10 மணிக்கு மேல் தருமபுரி, நல்லம்பள்ளி, கம்பைநல்லூர், மொரப்பூர், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் கனமழை பெய்தது.

    கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் நிலக்கடலை, கம்பு, சோளம், கேழ்வரகு, சாமை, திணை, கொள்ளு, உள்ளிட்ட மானாவரி பயிர்களை பயிரிட்டுள்ள விவசாயிகளும், பொதுமக்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மாவட்டத்தில் பெய்துள்ள மழையின் அளவு மில்லி மீட்டரில் :-

    தருமபுரி 2 மிமீ, மாரண்டஅள்ளி 3 மிமீ, பென்னாகரம் 19 மிமீ, ஒகேனக்கல் 2.4 மிமீ ,அரூர் 23 மிமீ, பாப்பிரெட்டிப்பட்டி 4 மிமீ, மொரப்பூர் 11 மிமீ, நல்லம்பள்ளி 3 மிமீ ,என மாவட்டத்தில் மொத்தம் 68.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் லேசான மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் வழக்கம் போல பகலில் வெயில் இருந்தது. மாலை மாவட்டத்தில் பல இடங்களில் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. இரவு மழை பெய்தது.

    கிருஷ்ணகிரி நகரில் இரவு 8 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. சுமார் அரை மணி நேரம் மழை விடாமல் பெய்தது. இதனால் நகரில் பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியது.

    நேற்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பாரூர் 32, தேன்கனிக்கோட்டை 13, ஓசூர் 2.6, கிருஷ்ணகிரி 15.1, நெடுங்கல் 16, பெனுகொண்டாபுரம் 35.2, போச்சம்பள்ளி 25.6, ராயக்கோட்டை 7, சூளகிரி 10, ஊத்தங்கரை 121.4, சின்னாறு அணை 12, கெலவரப்பள்ளி அணை 9, கே.ஆர்.பி. அணை 21.2, பாம்பாறு அணை என அதிகபட்சமாக 126 மில்லி மீட்டர் ஊத்தங்கரை சுற்று வட்டார பகுதிகளில் கன மழை பெய்தது.

    • சாமிகளுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    • 10 அடி முதல் 11 அடி வரை விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்து வருகின்றனர்.

    தருமபுரி,  

    இந்துக்களின் மிக முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

    தருமபுரியில் பிரசித்தி பெற்ற எஸ்.வி. சாலையில் உள்ள சாலைவிநாயகர் கோவில், நெசவாளர் காலனியில் உள்ள விநாயகர்-முருகன் கோவில், கடைவீதி அருகே உள்ள ராஜகணபதி கோவில், டிரஸ்சரி காலனியில் உள்ள பிரகதம்பாள் கோவில் ஆகிய கோவில்களில் கணபதி ஹோமம் செய்து, விநாயகர் சிலைகளுக்கு பால், நெய், இளநீர், தேன் மற்றும் வாசனை திரவியங்கள் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. விநயாகருக்கு தேங்காய், பழ வகைகள், விளாங்காய், சுண்டல், அவல் பொரி, கொழுக்கட்டை, பொங்கல் உள்ளிட்டவைகளை படைத்து சிறப்பு ஆராதனையும் நடைபெற்றது. பின்னர் சாமிகளுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    தருமபுரி மாவட்டத்தில் காவல்துறை அனுமதித்துள்ள 1300 இடங்களில் ராஜகணபதி, சக்தி கணபதி, சிவ கணபதி, நந்தி கணபதி, லட்சுமி கணபதி, சரஸ்வதி கணபதி, யானை வாகன கணபதி, துர்முக கணபதி, துர்கா கணபதி உள்ளிட்ட பல வடிவங்களில் 10 அடி முதல் 11 அடி வரை விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்து வருகின்றனர்.

    விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, மக்கள், தங்கள் வீடுகளில் சிறிய அளவிலான விநாயகர் சிலையை அலங்கரித்து வைத்து பூஜைகள் செய்தனர். மேலும் பூஜைப்பொருட்களையும், விநாயகருக்கு மிகவும் பிடித்தமான கொழுக்கட்டை, சுண்டல் மற்றும் உணவு வகைகளை படைத்து நைவேத்தியம் செய்தனர்.

    • 4 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, 5 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.
    • இன்று அதிகாலை முதலே ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

    பென்னாகரம், 

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், ஒகேனக்கல் காவிரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று முன்தினம், விநாடிக்கு 4 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 5 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துதது. இந்த நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், இன்று காலை நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 4 ஆயிரம் கனஅடியாக சரிந்தது. நீர்வரத்து சரிந்த நிலையிலும் அங்குள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. தொடர் விடுமுறை யையொட்டி இன்று அதிகாலை முதலே ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

    சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்தும், பரிசல் சவாரி செய்தும் காவிரியின் அழகை கண்டு ரசித்தனர். 

    • சிலைகள் வைத்து வழிபட 1300 இடங்கள் அனுமதி கேட்டு கடிதம் அளித்துள்ளனர்.
    • தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    தருமபுரி,  

    தருமபுரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி விநாயகர் சிலைகள் விற்பனை நேற்று விறுவிறுப்பாக நடந்தது. பெரியார் சிலை, நெசவாளர் காலனி, 4 ரோடு, பிடமனேரி சாலை பகுதிகளில் களிமண் விநாயகர் சிலை விற்பனை அமோகமாக நடந்தது. மக்கள் சிலைகள் வைத்து வழிபட அதிகம் ஆர்வம் காட்டியுள்ளனர்.

    தெருக்களில் குழுக்களாக சேர்ந்து விநாயகர் சிலைகள் வைத்து வழிபட 1300 இடங்கள் அனுமதி கேட்டு கடிதம் அளித்துள்ளனர். விநாயகர் சிலை வைத்தவர்கள் சார்பில் 2 பேர் சிலைக்கு 24 மணிநேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்க வேண்டும். விநாயகர் சதுர்த்தியையொட்டி இன்று முதல் விநாயகர் சிலை வைக்கும் இடங்களில் தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    தருமபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமையில் 2 ஏ.டி.எஸ்.பி, 9 டி.எஸ்.பி, 25 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துப்பட்டு உள்ளனர். போலீசுக்கு உதவியாக ஆயுதப்படை போலீசார், ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    பண்டிகை முடிந்த பிறகு விநாயகர் சிலைகளை ஆறு, அணை, ஏரி, குளங்களில் கரைப்பது வழக்கம். அந்த இடங்களை சுற்றுசூழல் அதிகாரிகள் அறிவித்து உள்ளனர். அந்த இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர். ஒகேனக் கல் காவிரி ஆறு, தென் பெண்ணையாறு, வாணி யாறு அணை, வரட்டாறு அணை, ஈச்சம் பாடி அணை, கேசர்குளி அணை ஆகிய 6 இடங்க ளில் மட்டுமே சிலைகளை கரைக்க அனுமதிக்கப் பட்டுள்ளது.

    • சந்தேகம்படும்படி 2 நபர்கள் நின்று கொண்டி ருந்தனர்.
    • 50 லிட்டர் கள்ளச்சாராய பாக்கெட்டு களை விற்பனை செய்தது தெரிய வந்தது.

    தருமபுரி,  

    தருமபுரி மாவட்டம் கோட்டப்பட்டி பகுதியில் கள்ளசாராயம் விற்பனை செய்யபடுவதாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் விஜயன் மற்றும் போலீசார் ஆவலூர் என்ற இடத்தில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகம்படும்படி 2 நபர்கள் நின்று கொண்டி ருந்தனர்.

    அவர்களை போலீசார் பிடித்து விசாரித்ததில், கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம், கெழக்காடு அருகே உள்ள கன்னூர் கிராமத்தைச் சேர்ந்தவர்க–ளான ராஜேந்திரன் (வயது44), முருகன் (41) ஆகிய 2 பேர் 50 லிட்டர் கள்ளச்சாராய பாக்கெட்டு களை மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 100 கள்ளச்சாராய பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • இரவு தூங்கி கொண்டி ருந்தபோது திடீரென்று வீட்டின் கதவை தட்டுவதுபோல் சத்தம்கேட்டது.
    • 15 பவுன் தங்க நகைகள், ரூ.1.90 லட்சம் பணம் திருடு போயிருந்தது தெரியவந்தது.

    தருமபுரி, 

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள அனுமந்தபுரத்தை அடுத்த எலுமிச்சனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது63).

    இவர் கூட்டுறவு வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ராணி. இவர்களுக்கு சாரதி என்கிற மகனும், ஜெயந்தி என்கிற மகளும் உள்ளனர்.

    ஜெயந்திக்கு திருமணமாகி ஓசூரில் கணவருடன் வசித்து வருகிறார். சாரதி திருமணமாகி தன் தந்தை ராஜேந்திரடன் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் ஓசூரில் உள்ள ஜெயந்தி புதிய வீடு கட்டியுள்ளதால், புகுமனை விழா நடத்தினார். இதற்காக ராணி, சாரதி, அவரது மனைவி நித்தியகுமாரி ஆகியோர் நேற்று முன்தினம் ஓசூருக்கு செனறனர்.

    வீட்டில் ராஜேந்திரன் மட்டும் தனியாக இருந்தார். நேற்று இரவு அவர் தூங்கி கொண்டிருந்தபோது திடீரென்று வீட்டின் கதவை தட்டுவதுபோல் சத்தம்கேட்டது. உடனே அவர் கதவை திறந்து வெளியில் வந்து பார்த்தபோது யாரும் இல்லை. உடனே அவர் வீட்டின் வெளியே சென்று பார்த்துவிட்டு மீண்டும் வீட்டிற்குள் வந்தார்.

    அப்போது பீரோ திறந்து கிடந்தது. அதில் 7 தங்க செயின் உள்பட 15 பவுன் தங்க நகைகள், ரூ.1.90 லட்சம் பணம் திருடு போயிருந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து ராஜேந்திரன் காரிமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி.யில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நள்ளிரவில் வீட்டின் கதவை தட்டுவது போல் மர்ம நபர்கள் நடித்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த நகை, பணத்தை திருடி சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பல்வேறு பகுதிகளில் வெப்பநிலை நிலவி வரும் நிலையில் ஒரு சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
    • மழையினால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தருமபுரி:

    விவசாயிகள் விதைகளை பயிரிடுவதற்கானமாதமாக ஆடி மாதம் விளங்கி வருகிறது. ஆடி 18-ல் விவசாயிகள் தாங்கள் விரும்பும் விதைகளை விவசாய நிலங்களில் ஏர் உழவு செய்து விதைகளை பயிரிடுவது வழக்கம் .

    இந்நிலையில் ஆடி 18-ல் விதை விதைத்து ஒரு சில தினங்கள் மட்டுமே மழை வந்த நிலையில் கடந்த 3 வாரங்களாக மழையின்மையால் விதை விதைத்த பயிர்கள் வெளியே வரும் நிலையில் நீரின்றி கருகும் சூழ்நிலை ஏற்பட்டது.

    தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்பநிலை நிலவி வரும் நிலையில் ஒரு சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில் தருமபுரியில் நேற்று மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதையடுத்து இரவு திடீரென்று இடியுடன் கூடிய கனமழை பெய்ய தொடங்கியது. இந்த மழையானது விட்டு, விட்டு அதிகாலை வரை பெய்தது.

    இதனால் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. பயிர்களுக்கு போதிய தண்ணீர் கிடைத்ததால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோன்று அரூர் பகுதியில் இரவு முழுவதும் கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள ஏரி, குளம் போன்ற நீர் நிலைகளில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. அரூரில 84.2 மி.மீ அளவு அதிகபட்சமாக பதிவாகி உள்ளது.

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்தது.

    பென்னாகரம் ஏரியூர் பெரும்பாலை தாசம்பட்டி ஒகேனக்கல் சின்னம்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் கன மழை பெய்தது. கனமழையினால் தாழ்வான பகுதிகள், சாலைகளில் தண்ணீர் தேங்கியும் ஏரி,குளம் போன்ற நீர் நிலைகளுக்கு நீர் வரத்து வரத் தொடங்கியுள்ளது.

    கடந்த சில நாட்களாக பென்னாகரம் பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில் இரவு பெய்த மழையினால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    பென்னாகரம் பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கன மழையும் சுற்று வட்டாரப் பகுதிகளில் அவ்வப்போது கனமழையும் பெய்தது.

    தருமபுரி மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    தருமபுரி-25 மி.மீ, பாலக்கோடு-9.4, மாரண்டஅள்ளி-11, பென்னாகரம்-21, ஒகேனக்கல்-3.4, அரூரில் 84.2, பாப்பிரெட்டிப்பட்டி-20, மொரப்பூர்-10, நல்லம்பள்ளி-8 என மொத்தம் மாவட்டம் முழுவதும் 192 மி.மீ மழை பதிவாகி உள்ளது.

    • 30 ஆயிரம் தலைப்புகளில் சுமார் 3.50 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.
    • மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பார்வை யிட்டு புத்தகங்களை வாங்கி செல்கின்றனர்.

    தருமபுரி,  

    தருமபுரி புத்தக திருவிழாவில், புத்தகம் வாங்கும் பொது மக்களுக்கு சுற்றுச்சுழலை பாதுகாக்க மரக்கன்றுகள் விநியோகம் செய்யப்படு கிறது. இதுவரை 1500 மரக் கன்றுகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புத்தக திருவிழா நாளை வரை நடக்கிறது.

    தருமபுரி மாவட்ட நிர்வாகம், தகடூர் புத்தகப் பேரவை மற்றும் பாரதி புத்தகாலயம் மூலம் புத்தகத் திருவிழா வானது வள்ளலார் திடலில் கடந்த 8-ம்தேதி முதல் நடந்து வருகிறது. இன்று புத்தக கண் காட்சி நிறைவு பெறுவதாக இருந்தது. ஆனால் நாளை (18ம் தேதி) வரை புத்தக கண்காட்சி நடக்கிறது.

    இப்புத்தக திருவிழாவில் 100-க்கும் மேற்பட்ட அரங்குகளில் 30 ஆயிரம் தலைப்புகளில் சுமார் 3.50 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. தினந்தோறும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பார்வை யிட்டு புத்தகங்களை வாங்கி செல்கின்றனர்.

    இந்த புத்தக திருவிழாவில் சிறப்பான வாழ்க்கைக்கும், சிறந்த வளர்ச்சிக்கும் கல்வி மிக மிக அவசியம் என்பதை உணர்ந்து, கட் டாயம் புத்தக வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டு வருகிறது. இவ்வாறு புத்தகம் வாங்க வரும் பொதுமக்களுக்கும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவி களுக்கு சுற்றுச்சுழலை பாதுகாக்க மரக்கன்று வழங்கப்படுகிறது.

    நாவல், அத்தி, புங்கன், கொய்யா, பாதம் உள்ளிட்ட ரக மரக்கன்றுகள் வழங்கப் படுகிறது. இதுவரை 1500 மரக்கன்றுகள் வழங்கப் பட்டுள்ளது என்று தகடூர் புத்தகப் பேரவை தலை வர் டாக்டர் செந்தில், செயலாளர் சிசுபாலன் மற்றும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • விவசாயிகள் தங்கள் விவசாய விளைநிலங்களில் விளை வித்த பூக்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
    • ஏராளமானோர் பூஜைக்காக பூக்கள் வாங்கி செல்ல மார்க்கெட்டுக்கு இன்று காலை முதலே வாங்கி செல்கின்றனர்.

    தருமபுரி,

    தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் பூக்கள் சந்தை செயல்பட்டு வருகிறது, இச்சந்தைக்கு பென்னாகரம், பாலக்கோடு, தொப்பூர், நல்லம்பள்ளி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதி களிலிருந்தும் ஏராளமான விவசாயிகள் தங்கள் விவசாய விளைநிலங்களில் விளை வித்த பூக்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்,

    இந்துக்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி நாளை வரவுள்ள நிலையில் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் பல்வேறு வகையான பூக்களின் வரத்து அதிகரித்தது. இதனால் விலை சரிந்துள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.

    விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு ஏராளமானோர் பூஜைக்காக பூக்கள் வாங்கி செல்ல மார்க்கெட்டுக்கு இன்று காலை முதலே வாங்கி செல்கின்றனர்.

    இன்றைய நிலவரப்படி சாமந்தி பூ கிலோ 20 ரூபாய்க்கும், சம்பங்கி 140 ரூபாய்க்கும், பன்னீர் ரோஸ் 120 ரூபாய்க்கும், அரளி பூ 150 ரூபாய்க்கும், செண்டு மல்லி 30 ரூபாய்க்கும், குண்டுமல்லி 200 ரூபாய்க்கும், கோழி கொண்டை 30 ரூபாய்க்கும் சன்னமல்லி 200 ரூபாய்க்கும், பட்டன் ரோஸ் 200 ரூபாய்க்கும் விற்பனை யானது.

    மேலும் இன்று மார்க் கெட்டுக்கு பூக்களின் வரத்து அதிகரிப்பால் கடந்த இரு தினங்களை விட தற்போது பூக்களின் விலை இரு மடங்கு குறைந்து விற்பனையாகி வருகிறது. தற்போது விற்பனையாகி வரும் விலையை விட நாளை மேலும் விலை குறையலாம் என எதிர்பார்க்கபடுகிறது, விலை குறைவால் பொதுமக்களை மகிழ்ச்சிய டைந்தாலும் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    • கலைநிகழ்ச்சிகள் வெகு விமர்சை யாக கொண்டா டப்பட்டது.
    • மாணவர்கள் விநாயகர் போல் வேடமணிந்து வந்தனர்.

    மொரப்பூர்,  

    ஸ்ரீராம் பப்ளிக் பள்ளி யில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 16-ம் தேதி சனிக்கிழமை விநாயகர் சதுர்த்தி விழா கோலா கலமாக கொண்டா டப்பட்டது.

    இவ்வி ழாவில் பள்ளியின் தாளாளர் வேடியப்பன், சாந்தி வேடியப்பன், பள்ளி யின் நிர்வாக இயக்குநர் தமிழ்மணி, பவானி தமிழ்மணி ஆகியோர் கலந்துக்கொண்டு விநாயகப் பெருமானுக்கு ஆராதனைச் செய்து இவ்விழாவினை சிறப்புற தொடங்கினர்.

    இதில் நடனம், நாடகம், விநாயகர் துதிப் பாடல், விநாயகர் பற்றிய சிறப்புரை போன்ற பல கலைநிகழ்ச்சிகள் வெகு விமர்சை யாக கொண்டா டப்பட்டது. மேலும் மாணவர்கள் விநாயகர் போல் வேடமணிந்து வந்தனர்.

    நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவர்களைப் பள்ளியின் கல்வி இயக்குநர் ஜான் இருதயராஜ் மற்றும் பள்ளியின் பள்ளியின் முதல்வர் வெற்றி வேல் செல்வம் பெரு மைப்படுத்தி பாராட்டினர். மேலும் பள்ளியின் ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துக் கொண்டு விழாவை வெகு சிறப்பாகக் கொண்டாடினர்.

    • 8 மூட்டைகளில் 400 கிலோ ரேஷன்அரிசி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
    • ஆட்டோவை பறிமுதல் செய்து முனியப்பனை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

    தருமபுரி,

    குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு காவல்துறை இயக்குநர் வன்னியப்பெருமாள் உத்திரவுப்படி ரேசன் அரிசி கடத்தலை தடுக்கும் பொருட்டு கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் பாலாஜி மேற்பார்வையில் தருமபுரி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல் உதவி ஆய்வாளர் மோகன் தலைமையில் போலீசார் வாகனச்சோதனை நடத்தி னர்.

    இதில் செம்மன அள்ளி பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகத்திற்கு இடமாக வந்த ஆட்டோவை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 8 மூட்டைகளில் 400 கிலோ ரேஷன்அரிசி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    ஆட்டோவை ஓட்டி வந்த கோட்டை வைரவள்ளியை சேர்ந்த கணேசன் மகன் முனியப்பனை கைது செய்து போலீசார் விசாரித்ததில் அவர் மேலும் பதுக்கி வைத்திருந்த 620 கிலோ ரேசன் அரிசியையும் கைப்பற்றினர்.

    கைப்பற்றப்பட்ட 1020 கிலோ ரேசன் அரிசியை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.

    கடத்த லுக்கு பயன்படு த்தப்பட்ட ஆட்டோவை பறிமுதல் செய்து முனியப்பனை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

    • வனவிலங்குகள் வேட்டையாடப்–படுவதாக மாவட்ட வன அலுவலகத்–திற்கு தகவல் கிடைத்துள்ளது.
    • பென்னாகரம் மாவட்ட உரிமையியல் குற்ற வியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர்.

    பென்னாகரம்,

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே வனப் பகுதியில் இருந்து உடும்பை வேட்டையாடி அதன் இறைச்சியை எடுத்து வந்தவரை பென்னாகரம் வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வன சரகத்–திற்கு உட்பட்ட காப்புக்காடு களில் வனவிலங்குகள் வேட்டையாடப்–படுவதாக மாவட்ட வன அலுவலகத்–திற்கு தகவல் கிடைத்துள்ளது.

    இந்த நிலையில் மாவட்ட வன அலுவலர் கேவி அப்பால நாயுடு உத்தரவின் பேரில் பென்னாகரம் வன சரகத்திற்கு உட்பட்ட பேவ னூர் காப்புக்காடு பகுதியில் பென்னாகரம் வனச்சரக அலுவலர் செந்தில்குமார், வானவர்கள் முனுசாமி, சக்திவேல், புகழேந்திரன், வனக்காப்பாளர்கள் ரகு ராம், ஆனந்தராஜ் ஆகி யோர்கள் கொண்ட வனக் குழுவினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது தேவனூர் காப்புக்காடு வீரமணி குட்டை சரகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் இருந்து 2 கிலோ எடை கொண்ட உடும்பை வேட்டையாடி அதன் இறைச்சியை எடுத்து வந்த பென்னாகரம் அருகே கொட்டதண்டுகாடு பகு தியைச் சேர்ந்த அண்ணா–மலை (வயது61) என்பவரை வனத்–துறையினர் கைது செய்தனர்.

    பின்னர் அவரை பென்னாகரம் மாவட்ட உரிமையியல் குற்ற வியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர்.

    மேலும் பென்னாகரம் வன சரகத்திற்கு உட்பட்ட காப்புக் காடுகளில் அத்து மீறி நுழைப்பவர்கள், வன விலங்குகளை வேட்டையா டுதல், வனவிலங்குகளின் இறைச்சியை விற்பனை செய்வது போன்ற வன குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பென்னாகரம் வனத்து றையினர் எச்சரிக்ைக விடுத்துள்ளனர்.

    ×