என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 4,000 கன அடியாக சரிவு
- 4 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, 5 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.
- இன்று அதிகாலை முதலே ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
பென்னாகரம்,
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், ஒகேனக்கல் காவிரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று முன்தினம், விநாடிக்கு 4 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 5 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துதது. இந்த நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், இன்று காலை நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 4 ஆயிரம் கனஅடியாக சரிந்தது. நீர்வரத்து சரிந்த நிலையிலும் அங்குள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. தொடர் விடுமுறை யையொட்டி இன்று அதிகாலை முதலே ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்தும், பரிசல் சவாரி செய்தும் காவிரியின் அழகை கண்டு ரசித்தனர்.
Next Story






