என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    1300 இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி
    X

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தர்மபுரி நெசவாளர் காலனி, பிடமனேரி, பெரியார் மன்றம் உள்ளிட்ட பகுதிகளில் பிள்ளையார் சிலை அமோக விற்பனை நடைபெற்றது. நெசவாளர் காலனி பகுதியில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை படத்தில் காணலாம்.

    1300 இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி

    • சிலைகள் வைத்து வழிபட 1300 இடங்கள் அனுமதி கேட்டு கடிதம் அளித்துள்ளனர்.
    • தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி விநாயகர் சிலைகள் விற்பனை நேற்று விறுவிறுப்பாக நடந்தது. பெரியார் சிலை, நெசவாளர் காலனி, 4 ரோடு, பிடமனேரி சாலை பகுதிகளில் களிமண் விநாயகர் சிலை விற்பனை அமோகமாக நடந்தது. மக்கள் சிலைகள் வைத்து வழிபட அதிகம் ஆர்வம் காட்டியுள்ளனர்.

    தெருக்களில் குழுக்களாக சேர்ந்து விநாயகர் சிலைகள் வைத்து வழிபட 1300 இடங்கள் அனுமதி கேட்டு கடிதம் அளித்துள்ளனர். விநாயகர் சிலை வைத்தவர்கள் சார்பில் 2 பேர் சிலைக்கு 24 மணிநேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்க வேண்டும். விநாயகர் சதுர்த்தியையொட்டி இன்று முதல் விநாயகர் சிலை வைக்கும் இடங்களில் தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    தருமபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமையில் 2 ஏ.டி.எஸ்.பி, 9 டி.எஸ்.பி, 25 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துப்பட்டு உள்ளனர். போலீசுக்கு உதவியாக ஆயுதப்படை போலீசார், ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    பண்டிகை முடிந்த பிறகு விநாயகர் சிலைகளை ஆறு, அணை, ஏரி, குளங்களில் கரைப்பது வழக்கம். அந்த இடங்களை சுற்றுசூழல் அதிகாரிகள் அறிவித்து உள்ளனர். அந்த இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர். ஒகேனக் கல் காவிரி ஆறு, தென் பெண்ணையாறு, வாணி யாறு அணை, வரட்டாறு அணை, ஈச்சம் பாடி அணை, கேசர்குளி அணை ஆகிய 6 இடங்க ளில் மட்டுமே சிலைகளை கரைக்க அனுமதிக்கப் பட்டுள்ளது.

    Next Story
    ×