என் மலர்tooltip icon

    தர்மபுரி

    • ரூ.410 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது.
    • ஒகேனக்கல் கூட்டு குடிநீர் குழாயை பாதுகாப்பாக மண்ணில் புதைக்க வேண்டும்.

    அரூர்,

    தருமபுரி மாவட்டத்தில் மக்களின் குடிநீா் தேவையைப் பூா்த்தி செய்ய ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக அரூர் பகுதியிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு ராட்சத குழாய் மூலம் குடிநீர் பிரித்து அனுப்பப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், தருமபுரி யிலிருந்து திருவண்ணாமலை வரை ரூ.410 கோடி மதிப்பீட்டில் இருவழி சாலை, நான்கு வழி சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டு விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இதனையடுதுத எச்.அக்ரஹாரம் அருகே உள்ள சுண்டாங்கிபட்டி சேவாகிராம சுற்று வட்டார பகுதிகளிலும் நான்கு வழி சாலை விரிவாக்க பணிகளின் நடைபெற்று வருகிறது. அந்தப் பகுதியில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட குழாய் பாதுகாப்பு இல்லாமல் உள்ளது.

    அரூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமங்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு ஏற்படுத்த குழாய் சாலை விரிவாக்க பணியின் போது அகலப்படுத்துவதற்காக திறந்த நிலையில் விடப்பட்டு பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. இது குறித்து ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் ஒப்பந்ததாரர் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர், வட்டார வளர்ச்சி துறையினர் முறையாக கண்காணிப்பு மேற்கொண்டு குடிநீர் குழாய்கள் உடைப்பு ஏற்படாதவாறு கண்காணிப்பில் ஈடுபடவேண்டும். திறந்தவெளியில் இருக்கும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் குழாய் பாதுகாப்பாக மண்ணில் புதைக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

    • தருமபுரி மாவட்டம் அரூர் கச்சேரிமேடு பகுதியில் கடந்த 16-ந் தேதி பொதுக்கூட்ட மேடையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.
    • மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று தி.மு.க. வழக்கறிஞர்கள் அணி மாவட்ட அமைப்பாளர் சந்திரசேகரன் தலைமையில் தி.மு.க.வினர் புகார் மனு அளித்தனர்.

    தருமபுரி:

    பொதுக்கூட்ட மேடை ஒன்றில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவதூறாக பேசியதாக தருமபுரி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதமிடம் தருமபுரி மாவட்ட தி.மு.க. வழக்கறிஞர்கள் அணியினர் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.

    இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று தி.மு.க. வழக்கறிஞர்கள் அணி மாவட்ட அமைப்பாளர் சந்திரசேகரன் தலைமையில் தி.மு.க.வினர் புகார் மனு அளித்தனர்.

    அந்த மனுவில் அவர்கள் கூறி இருப்பதாவது:-

    தருமபுரி மாவட்டம் அரூர் கச்சேரிமேடு பகுதியில் கடந்த 16-ந் தேதி பொதுக்கூட்ட மேடையில் பேசிய அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும், கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தையும், தமிழக அரசின் பல்வேறு திட்டங்களையும் விமர்சித்தும் வீண் வதந்திகளை பரப்பியும் மக்களின் மத்தியில் வரவேற்பையும் நம்பிக்கையும் ஏற்படுத்திய திராவிட மாடல் ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

    அப்போது தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் தடகம் சுப்பிரமணி, மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன், மேற்கு மாவட்டம் துணை அமைப்பாளர் ஆ.மணி, ஒன்றிய செயலாளர் கோபால், தகவல் தொழில்நுட்ப மாவட்ட அமைப்பாளர் கவுதம் மற்றும் தி.மு.க. வழக்கறிஞர்கள் அணியினர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • குழந்தை ஆணா? அல்லது பெண்ணா? என்று பார்ப்பதற்கு ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை பணம் வசூலிக்கின்றனர்.
    • கருவில் பெண் சிசு இருந்தால், அதனை கலைப்பதற்கு ரூ.15 ஆயிரம் முதல் பணம் வசூலிக்கின்றனர் என்பது தெரியவந்தது.

    காரிமங்கலம்:

    காரிமங்கலம் அருகே வீட்டில் சட்டவிரோதமாக கர்ப்பிணிகளுக்கு கருவில் உள்ள சிசு ஆணா? பெண்ணா? என்று பரிசோதித்து கருக்கலைப்பு செய்த செவிலியர் உள்பட 5 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஸ்கேன் எந்திரத்தையும் பறிமுதல் செய்தனர்.

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே செம்மண்குழிமேடு என்ற கிராமத்தில் சட்ட விரோதமாக புரோக்கர் மூலம் கர்ப்பிணி பெண்களுக்கு கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என பரிசோதனையில் கண்டறிந்து, பெண்ணாக இருந்தால் கருக்கலைப்பு செய்தல் உள்ளிட்ட சட்ட விரோத செயல்கள் நடைப்பெற்று வருவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்து,

    அதன் பேரில் தருமபுரி மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் இணை இயக்குநர் சாந்தி தலைமையிலான மருத்துவர்கள் பாலசுப்ரமணியம், சரவணகுமார் அடங்கிய குழுவினர் மற்றும் காரிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்ட்ர் வெங்கட்ராமன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஜவஹர்குமார் மற்றும் போலீசார் ஆகியோர் காரிமங்கலம் பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

    அதில் செம்மண்குழிமேடு கிராமத்தில் உள்ள சுபாஷ் (வயது 28) என்பவரின் வீட்டில் திடீர் சோதனை செய்தனர். அப்போது தருமபுரி அருகே அழகாபுரி 3-வது தெருவை சேர்ந்த கற்பகம் (வயது 38) என்ற பயிற்சி செவிலியர் சட்ட விரோதமாக 7 கர்ப்பிணி பெண்களுக்கு ஆணா, பெண்ணா என்ற பாலின பரிசோதனை மேற்கொண்ட போது கையும் களவுமாக பிடிபட்டார்.

    மேலும் இதற்கு உடந்தையாக இருந்த அவரது கணவர் விஜயகுமார் ( 35) மற்றும் தருமபுரி ஆசிரியர் காலனியை சேர்ந்த புரோக்கர் சிலம்பரசன் (31) நல்லம்பள்ளியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் செல்வராஜ் (35), அந்த வீட்டின் உரிமையாளர் சுபாஷ் (28) ஆகிய 5 நபர்களை பிடித்து காரிமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர்.

    இதையடுத்து காரிமங்கலம் போலீசார் குற்றவாளிகளை கைது செய்து அவர்களிடமிருந்த ஸ்கேன் எந்திரம், 4 செல்போன்கள், 2 சொகுசு கார், 1 ஆட்டோ உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து குற்றவாளிகளை சிறையில் அடைத்தனர்.

    இது குறித்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    கைதான பயிற்சி செவிலியர் கற்பகம் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இதேபோன்று தருமபுரி பகுதியில் கர்ப்பிணிகளுக்கு கருவில் உள்ள சிசு குறித்து பரிசோதனை செய்ததாக செவிலியர் கற்பகத்தை தருமபுரி டவுன் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் சிறையில் இருந்து வெளியே வந்து மீண்டும் அவரது கணவர் உதவியுடன் கர்ப்பிணிகளுக்கு சட்ட விரோதமாக ஆணா? பெண்ணா? என்று பரிசோதனை செய்து வந்தார். அதில், பெண் சிசு இருந்தால் கருக்கலைப்பும் செய்து வந்தார்.

    இந்த கும்பல் கடந்த 2 வருடங்களாக தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள கருப்பிணிகளுக்கு கருக்கலைப்பு செய்ததாக தெரியவந்தது.

    இதற்காக அவர்கள் தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள ஊர்களில் தலா ஒரு புரோக்கரை நியமித்து தொடர் நெட்வெர்க் போல் செயல்பட்டு வருகின்றனர் என்பது தெரியவந்தது. திருமணம் முடித்து கர்ப்பம் தரிக்கும் பெண்களை அவர்கள் குறி வைத்து செயல்பட்டு வந்தனர்.

    மேலும் அந்த கும்பல் கருவில் இருக்கும் குழந்தை ஆணா? அல்லது பெண்ணா? என்று பார்ப்பதற்கு ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை பணம் வசூலிக்கின்றனர். கருவில் பெண் சிசு இருந்தால், அதனை கலைப்பதற்கு ரூ.15 ஆயிரம் முதல் பணம் வசூலிக்கின்றனர் என்பது தெரியவந்தது.

    தொடர்ந்து கைதான கற்பகம், அவரது கணவர் விஜயகுமார் உள்பட 5 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • தற்பொழுது ஒரு சில செடிகளில் மட்டும் காய்கள் பிடித்து வருகிறது.
    • நாள் ஒன்றுக்கு 10 முதல் 20 கூடைகள் வரை மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகிறது.

     தருமபுரி,  

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் உள்ள பிக்கிலி, மலையூர் , வாரக்கொல்லை உள்ளிட்ட மலை கிராமங்களில் சுமார் 15 ஏக்கர் பரப்பில் சீத்தாப்பழம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    இங்கு நிலவும் சீதோசன நிலையால் சீத்தாப்பழம் அதிக அளவில் மகசூல் தருகிறது. மலை கிராமத்தில் விளையும் சீத்தாப்பழங்களை வியாபாரிகள் நேரடியாக கொள்முதல் செய்து சென்னை, கோவை, கேரளா போன்ற பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.

    ஆண்டு தோறும் ஆகஸ்ட் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை சீத்தாப்பழம் சீசன் நிலவுகிறது.

    விவசாயிகள் சீத்தா பழங்களை அறுவடை செய்து கூடைகளில் எடுத்து வந்து வெளியூரிலிருந்து மலையூர் கிராமத்திற்கு வருகை தரும் வியாபாரி களிடம் விற்பனை செய்து வருகின்றனர். நல்ல தேர்ந்தெ டுக்கப்பட்ட பெரிய அளவிலான பழங்கள் சராசரி கிலோ ரூ.20-க்கும், கூடை 200 முதல் 250 ரூபாய் வரை என குறைந்த விலையில் வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர்.

    கடந்த ஆண்டு நல்ல மழை பெய்ததால் சீத்தாப்பழம் விளைச்சல் அதிகமாக இருந்தது. இதனால் தினந்தோறும் டன் கணக்கில் மலை கிராம மக்கள் விற்பனை செய்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டு சீத்தாப்பழம் சுமார் ஒரு கோடி ரூபாய் அளவிற்கு விற்பனை செய்தனர். இதனால் விவசாயிகளுக்கு நல்ல வருவாய் கிடைத்தது.

    இந்த நிலையில் இந்த ஆண்டு பருவ மழை ஏமாற்றியதால், சீத்தாப்பழம் சீசன் தொடங்குகின்ற நேரத்தில் செடிகள் தண்ணீர் இன்றி வறண்டு காணப்பட்டது. இதனால் செடிகளில் வைக்கின்ற காய்கள் முழுவதும் தண்ணீர் இன்றி காய்ந்து கருகி, கீழே கொட்டியது. மேலும் மழை தாமதமாக பெய்து வருவதால், தற்பொழுது ஒரு சில செடிகளில் மட்டும் காய்கள் பிடித்து வருகிறது.

    ஆனாலும் வெள்ளை பூச்சிகள் தாக்குதல் இருப்பதால், அந்த பழங்களையும் வியாபா ரிகள் வாங்குவதில்லை. இதனால் விவசாயிகளுக்கு இந்த ஆண்டு பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் கடந்த ஆண்டு தினமும் 20 முதல் 30 கூடை வரை அறுவடை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது விவசாயிகள் ஓரு கூடை அறுவடை செய்வது என்பதே சவாலாக இருந்து வருகிறது.

    இதனால் தினந்தோறும் டன் கணக்கில் ஏற்றுமதி செய்யப்பட்ட வந்த சீத்தா பழங்கள், தற்பொழுது நாள் ஒன்றுக்கு 10 முதல் 20 கூடைகள் வரை மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதிலும் வியாபாரிகள் யாரும் மலை மீது வராததால்,விவசாயிகளே ஒன்றிணைந்து பிக்கப் வாகனங்கள் மூலம் பாப்பாரப்பட்டி சந்தைக்கு விற்பனைக்கு எடுத்துச் செல்கின்றனர்.

    மேலும் போக்குவரத்து வசதி இல்லாததால், ஒரு கூடை 300 ரூபாய் வரை விற்பனை ஆகின்ற நிலையில், வண்டி வாடகை கூடைக்கு 100 ரூபாய் கொடுக்கப்படுகிறது. இதனால் இந்த ஆண்டு சீத்தாப்பழம் விற்பனையில் போதிய வருவாய் கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    • பன்றிகள் பயிரிடப்பட்டுள்ள சாமை, கடலை, ராகி உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.
    • காட்டு விலங்குகளை தடுத்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பென்னாகரம்,

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே விளை நிலங்களை சேதப்படுத்தும் காட்டு விலங்குகளை தடுக்காத வனத்துறை அதிகாரிகளை கிராம பொதுமக்கள் சிறை பிடித்தனர். பென்னாகரம் அடுத்த பூதிப்பட்டியில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் விவசாயத்தை நம்பி உள்ளனர். வனப் பகுதியை சுற்றி உள்ள இக்கிராமத்திற்கு அடிக்கடி காட்டு யானைகள் மற்றும் பன்றிகள் அங்கு பயிரிடப்பட்டுள்ள சாமை, கடலை, ராகி உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

    இதுகுறித்து வனத்து–றையினரிடம் கிராம மக்கள் பலமுறை தெரிவித்தும் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கை மேற்கொள்ள–வில்லை. இதே நிலை தொடர்ந்து நீடித்ததால் நேற்று வனத்துறையினருக்கு காட்டு பன்றி வேட்டையாடி னர் என்று அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தகவல் தெரிவித்தனர். உடனே பென்னாகரம் வனசரக அலுவலர் செந்தில்குமார் தலைமையிலான வனத்து–றையினர் அங்கு சென்றனர். உடனே அப்பகுதி மக்கள் வனத்துறையினரை சுற்று சிறை பிடித்தனர். அப்போது அவர்கள் வனத்துறை அதிகாரிகளிடம் எங்க ளுடைய ஆடு, மாடு வனப் பகுதியில் மேய்ந்தால் அபராதம் வசூலித்து வழக்கு பதிவு செய்கின்றனர். ஆனால், கஷ்டப்பட்டு நாங்கள் வளர்த்து வரும் மானவரி பயிர்களை இரவு நேரங்களில் காட்டு விலங்குகள் சேதப்படுத்தி வருகிறது. இவ்வாறு சேதப்படுத்தும் பயிர்களுக்கு அரசு எவ்வித இழப்பீடும் வழங்குவதில்லை ஆனால் காட்டு பன்றி வேட்டை என கூறினால் உடனே வருகிரீர்கள் என கூறி விவசாயிகள் எங்களின் வாழ்வா

    தாரத்தை காப்பாற்ற மாவட்ட நிர்வாகம் உடனடியாக விளை நிலங்களுக்கு புகும் காட்டு விலங்குகளை தடுத்து நிறுத்த வேண்டும் எங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் பழனியப்பன் தலைமையில் நடைபெற்றது.
    • பட்டாசுகள் வெடித்தல், மாலை அணிவித்தலை தொண்டர்கள் தவிர்க்க வேண்டும்

    அரூர், 

    தருமபுரி மாவட்டம் கடத்தூர் மற்றும் மொரப் பூரில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சரும், மேற்கு மாவட்ட செயலா ளருமான பழனியப்பன் தலைமையில் செவ்வாய்க் கிழமை நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் மேற்கு மாவட்ட செயலாளர் பி.பழனியப்பன் பேசியதாவது :-

    தருமபுரி கிழக்கு மாவட்டத்துக்கு உள்பட்ட காரிமங்கலத்தில் இம் மாதம் 26-ம் தேதி, தி.மு.க இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க தி.மு.க இளைஞரணி செயலரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை தருகிறார்.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வரவேற்க இளைஞர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பெரும்திரளாக பங்கேற்று சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும். இந்த விழாவில், பட்டாசுகள் வெடித்தல், மாலை அணிவித்தல் உள்ளிட்டவைகளை கட்சித் தொண்டர்கள் தவிர்க்க வேண்டும். மாறாக, அதிக அளவில் புத்தகங்கள் வழங்க வேண்டும், புத்த கங்கள் வழங்குவதால் எதிர்கால மாணவர்களுக்கு பயன்படும்.

    தருமபுரி மாவட்டத்தில் அனைத்து சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதி பெயரில் நூலகம் அமைக்க வேண்டும் என்றார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக மாவட்ட அவைத் தலைவர் மனோகரன், வர்த்தகர் அணி மாநில துணைச் செயலர் சத்தியமூர்த்தி, மாநில தீர்மான குழு துணை செயலர் கீரை விசுவநாதன், ஒன்றிய செயலாளர்கள் செங்கண்ணன், ரத்தின வேல், ஆர் வேடம்மாள், சௌந்தரராசு, சந்திர மோகன், முத்துகுமார், நகர செயலர் முல்லை ரவி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சிவகுரு, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் தமிழழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • ஒரு துணிக்கடையில் வேலை செய்து வருகிறார்
    • ஆபாச வார்த்தைகள் பேசி பீர் பாட்டிலால் தாக்கியுள்ளனர்,

    கடத்தூர்,

    தருமபுரி மாவட்டம், கடத்தூர் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 42). இவர் தருமபுரியில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை செய்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் கடத்தூரில் உள்ள பேக்கரிக்கு சதீஷ்குமார் செல்லும் போது அதே பகுதியை சேர்ந்த விஜய் என்கிற வல்லரசு (25), வேலு (33), கவியரசு (31) ஆனந்த் (31) ஆகிய 4 பேரும் சேர்ந்து வழிமறித்து ஆபாச வார்த்தைகள் பேசி பீர் பாட்டிலால் தாக்கியுள்ளனர்,

    இதில் காயமடைந்த சதீஷ்குமார் கடத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் தருமபுரி அரசு மருத்துவ மனையில் மேல் சிகிச்சை க்காக அனுமதிக்கப்பட்டார்.

    இது குறித்து சதீஷ்குமார் அளித்த புகாரின் பேரில் விஜி , வேலு, ஆனந்த் ஆகிய 3 பேரையும் கடத்தூர் போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறை வாகியுள்ள கவியரசனை தேடி வருகின்றனர். 

    • இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
    • விழா விற்கு மதிவா ணனை அழைக்காததால் இருவரி டையே வாய்த்தகராறு ஏற்பட்டது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மெனசி கிராமத்தைச் சேர்ந்த வர் ஸ்டாலின் (40). விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர் மதிவாணன். இவர்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் ஸ்டாலினின் ஊரில் கோவில் கும்பாபிஷேக விழா நடை பெற்று உள்ளது. இவ்விழா விற்கு மதிவா ணனை அழைக்கா ததால் இருவரி டையே வாய்த்தகராறு ஏற்பட்டது.

    இதை யடுத்து வாக்கு வாதம் முற்றி மதிவாணன் மறைத்து வைத்திருந்த உடைந்த பாட்டிலை எடுத்து ஸ்டாலினின் கன்னத்தில் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த ஸ்டாலினை அக்கம் பக்கத்தினர் மீட்டு பாப்பி ரெட்டிப்பட்டி அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இது குறித்து ஸ்டாலின் அளித்த புகாரின் பேரில் பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மதிவாணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • மல்ல சமுத்திரம் சாலையில் உள்ள சித்திரை ப்பட்டிக்கு சென்றனர்.
    • பரிசோதித்த டாக்டர்கள் வரும்வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    தருமபுரி, 

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள கெண்டிகானஅள்ளியை அடுத்த சங்கனம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி. இவருக்கு சுரேஷ் (வயது21) என்ற மகனும், நதியா (19) என்ற மகளும் உள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி சுரேசும், அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பருமான ஸ்ரீநாத் (18) ஆகிய 2 பேரும் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் காவாபட்டி-மல்லசமுத்திரம் சாலையில் உள்ள சித்திரைப்பட்டிக்கு சென்றனர்.

    அப்போது அங்கு அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர்கள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் பலத்த காயமடைந்தனர். உடனே அக்கம்பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக சுரேஷை பெங்களூருவில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் மீண்டும் தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு சுரேஷை பரிசோதித்த டாக்டர்கள் வரும்வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் குறித்து நதியா பென்னாகரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வாகனத்தையும், அதனை ஓட்டி வந்த டிரைவரையும் தேடிவருகின்றனர்.

    • உணவு பாதுகாப்பு அலுவலர் பானு சுஜாதா, தலைமையில் ஆய்வு செய்தனர்.
    • நிறமூட்டிகள் இறைச்சி களில் கலக்கப்பட்டுள்ளதா? என சோதனை செய்தனர்.

    தருமபுரி,  

    நாமக்கல் மாவட்டத்தில் சவர்மா சாப்பிட்ட சிறுமியின் உயிரிழப்பு மற்றும் 40 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்

    இந்த நிலையில் தமிழக மக்கள் நல வாழ்வு மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தமிழகத்தில் உள்ள உணவகங்களில் ஆய்வு நடத்த உத்தரவு பிறப்பித்த நிலையில் தருமபுரியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தருமபுரி நகரப் பகுதியில் உள்ள முக்கிய இறைச்சி உணவக கடைகள் மற்றும் சவர்மா விற்பனை செய்யும் கடைகள். கிரில் சிக்கன் உள்ளிட்ட கடைகளில் தருமபுரி உணவு பாதுகாப்பு அலுவலர் பானு சுஜாதா, தலைமையில் அலுவலர்கள் நந்தகோபால், குமணன் கந்தசாமி உள்ளிட்டோர் திடீர் ஆய்வு நடத்தினர்.

    இதில் இறைச்சிகள் பதப்படுத்தப்பட்டு உள்ளதா? எனவும், உணவு பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு இறைச்சிகள் பயன்படுத்தப்படுகிறதா? எனவும், செயற்கை நிறமூட்டிகள் இறைச்சி களில் கலக்கப்பட்டுள்ளதா? என ஆய்வு மேற்கொண்டனர்.

    • மோட்டார் சைக்கிள் அவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
    • பாரத்தை பரிசோதித்த டாக்டர்கள் வரும்வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    தருமபுரி,  

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள ஜக்குப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாதையன். இவருக்கு பாரத் (வயது27), வினோத் (25) என்ற 2 மகன்கள் உள்ளனர். இதில் பாரத் டிப்ளமோ வரை படித்துவிட்டு கிருஷ்ணகிரியில் அழகு நிலையம் கடை நடத்தி வந்தார். வினோத் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் பாரத் கிருஷ்ணகிரியில் இருந்து வீட்டிற்கு வந்தார். பின்னர் அவரும்

    அதே பகுதியைச் சேர்ந்த வேடியப்பன் (37) என்பவரும் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றனர். அப்போது அவர்கள் கம்பைநல்லூர்-ஜக்குபட்டி ரோட்டில் உள்ள கோணகுட்டை அருகே வந்தபோது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் அவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பாரத்தும், வேடியப்பனும் படுகாயமடைந்தனர்.

    உடனே அக்கம்பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு பாரத்தை பரிசோதித்த டாக்டர்கள் வரும்வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். வேடியப்பன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவம் குறித்து கம்பைநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆஞ்சநேயர் கோவில் அருகே பழைய கட்டிடத்தில் பிணமாக கிடப்பதாக தகவல் தெரிவித்தார்.
    • முனுசாமி அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் உயிரிழந்ததாக முதற்கட்டவிசாரணையில் தெரியவந்தது.

    தருமபுரி,  

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள மாங்கரையை அடுத்த வண்ணாத்திப்பட்டியைச் சேர்ந்தவர் முனுசாமி (வயது 35).  கட்டிட கூலித்தொழிலாளியான இவர் பெங்களூரு–வில் கட்டிட வேலையில் ஈடுபட்டு வந்தார். இவரது மனைவி முனியம்மாள். தனியார் பள்ளி ஆசிரியை. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று முனியம்மாள் செல்போனில் அதே பகுதி–யில் உள்ள நாத்து பண்ணை வைத்திருக்கும் காளியப்பன் என்பவர் தொடர்பு கொண்டு உனது கணவர் முனுசாமி தருமபுரி-பென்னாகரம் சாலையில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் அருகே பழைய கட்டிடத்தில் பிணமாக கிடப்பதாக தகவல் தெரிவித்தார்.

    உடனே முனியம்மாள் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது அங்கு அவரது கணவர் பிண–மாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். முனுசாமியின் உடலை பார்த்து முனியம்மாள் கதறி அழுதார்.

    இந்த சம்பவம் குறித்து முனியம்மாள் பென்னாகரம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்ததில், முனுசாமி அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் உயிரிழந்ததாக முதற்கட்டவிசாரணையில் தெரியவந்தது. பின்னர் போலீசார் முனுசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத–னைக்காக பென்னாகரம் அரசு தலைமை மருத்துவ–மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து முனுசாமியை யாரா வது கொலை செய்து விட்டு உடலை வீசி சென்றனரா? அல்லது குடும்ப தகராறு காரணமாக மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டாரா? என்று பல்வேறு கோணங்க–ளில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×