என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாகனம் மோதி வாலிபர் சாவு
    X

    வாகனம் மோதி வாலிபர் சாவு

    • மல்ல சமுத்திரம் சாலையில் உள்ள சித்திரை ப்பட்டிக்கு சென்றனர்.
    • பரிசோதித்த டாக்டர்கள் வரும்வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள கெண்டிகானஅள்ளியை அடுத்த சங்கனம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி. இவருக்கு சுரேஷ் (வயது21) என்ற மகனும், நதியா (19) என்ற மகளும் உள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி சுரேசும், அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பருமான ஸ்ரீநாத் (18) ஆகிய 2 பேரும் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் காவாபட்டி-மல்லசமுத்திரம் சாலையில் உள்ள சித்திரைப்பட்டிக்கு சென்றனர்.

    அப்போது அங்கு அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர்கள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் பலத்த காயமடைந்தனர். உடனே அக்கம்பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக சுரேஷை பெங்களூருவில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் மீண்டும் தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு சுரேஷை பரிசோதித்த டாக்டர்கள் வரும்வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் குறித்து நதியா பென்னாகரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வாகனத்தையும், அதனை ஓட்டி வந்த டிரைவரையும் தேடிவருகின்றனர்.

    Next Story
    ×