என் மலர்
உள்ளூர் செய்திகள்

நண்பரை பாட்டிலால் குத்திய வாலிபர் சிறையில் அடைப்பு
- இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
- விழா விற்கு மதிவா ணனை அழைக்காததால் இருவரி டையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மெனசி கிராமத்தைச் சேர்ந்த வர் ஸ்டாலின் (40). விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர் மதிவாணன். இவர்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் ஸ்டாலினின் ஊரில் கோவில் கும்பாபிஷேக விழா நடை பெற்று உள்ளது. இவ்விழா விற்கு மதிவா ணனை அழைக்கா ததால் இருவரி டையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
இதை யடுத்து வாக்கு வாதம் முற்றி மதிவாணன் மறைத்து வைத்திருந்த உடைந்த பாட்டிலை எடுத்து ஸ்டாலினின் கன்னத்தில் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த ஸ்டாலினை அக்கம் பக்கத்தினர் மீட்டு பாப்பி ரெட்டிப்பட்டி அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இது குறித்து ஸ்டாலின் அளித்த புகாரின் பேரில் பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மதிவாணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story






