என் மலர்
உள்ளூர் செய்திகள்

வனத்துறையினரை சிறைப்பிடித்த கிராம மக்களை படத்தில் காணலாம்.
பென்னாகரம் அருகே வனத்துறையினரை சிறை பிடித்த கிராம மக்கள்
- பன்றிகள் பயிரிடப்பட்டுள்ள சாமை, கடலை, ராகி உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.
- காட்டு விலங்குகளை தடுத்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
பென்னாகரம்,
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே விளை நிலங்களை சேதப்படுத்தும் காட்டு விலங்குகளை தடுக்காத வனத்துறை அதிகாரிகளை கிராம பொதுமக்கள் சிறை பிடித்தனர். பென்னாகரம் அடுத்த பூதிப்பட்டியில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் விவசாயத்தை நம்பி உள்ளனர். வனப் பகுதியை சுற்றி உள்ள இக்கிராமத்திற்கு அடிக்கடி காட்டு யானைகள் மற்றும் பன்றிகள் அங்கு பயிரிடப்பட்டுள்ள சாமை, கடலை, ராகி உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.
இதுகுறித்து வனத்து–றையினரிடம் கிராம மக்கள் பலமுறை தெரிவித்தும் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கை மேற்கொள்ள–வில்லை. இதே நிலை தொடர்ந்து நீடித்ததால் நேற்று வனத்துறையினருக்கு காட்டு பன்றி வேட்டையாடி னர் என்று அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தகவல் தெரிவித்தனர். உடனே பென்னாகரம் வனசரக அலுவலர் செந்தில்குமார் தலைமையிலான வனத்து–றையினர் அங்கு சென்றனர். உடனே அப்பகுதி மக்கள் வனத்துறையினரை சுற்று சிறை பிடித்தனர். அப்போது அவர்கள் வனத்துறை அதிகாரிகளிடம் எங்க ளுடைய ஆடு, மாடு வனப் பகுதியில் மேய்ந்தால் அபராதம் வசூலித்து வழக்கு பதிவு செய்கின்றனர். ஆனால், கஷ்டப்பட்டு நாங்கள் வளர்த்து வரும் மானவரி பயிர்களை இரவு நேரங்களில் காட்டு விலங்குகள் சேதப்படுத்தி வருகிறது. இவ்வாறு சேதப்படுத்தும் பயிர்களுக்கு அரசு எவ்வித இழப்பீடும் வழங்குவதில்லை ஆனால் காட்டு பன்றி வேட்டை என கூறினால் உடனே வருகிரீர்கள் என கூறி விவசாயிகள் எங்களின் வாழ்வா
தாரத்தை காப்பாற்ற மாவட்ட நிர்வாகம் உடனடியாக விளை நிலங்களுக்கு புகும் காட்டு விலங்குகளை தடுத்து நிறுத்த வேண்டும் எங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.






