என் மலர்
நீங்கள் தேடியது "பூக்களின் விலை கடும் சரிவு"
- விவசாயிகள் தங்கள் விவசாய விளைநிலங்களில் விளை வித்த பூக்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
- ஏராளமானோர் பூஜைக்காக பூக்கள் வாங்கி செல்ல மார்க்கெட்டுக்கு இன்று காலை முதலே வாங்கி செல்கின்றனர்.
தருமபுரி,
தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் பூக்கள் சந்தை செயல்பட்டு வருகிறது, இச்சந்தைக்கு பென்னாகரம், பாலக்கோடு, தொப்பூர், நல்லம்பள்ளி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதி களிலிருந்தும் ஏராளமான விவசாயிகள் தங்கள் விவசாய விளைநிலங்களில் விளை வித்த பூக்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்,
இந்துக்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி நாளை வரவுள்ள நிலையில் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் பல்வேறு வகையான பூக்களின் வரத்து அதிகரித்தது. இதனால் விலை சரிந்துள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.
விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு ஏராளமானோர் பூஜைக்காக பூக்கள் வாங்கி செல்ல மார்க்கெட்டுக்கு இன்று காலை முதலே வாங்கி செல்கின்றனர்.
இன்றைய நிலவரப்படி சாமந்தி பூ கிலோ 20 ரூபாய்க்கும், சம்பங்கி 140 ரூபாய்க்கும், பன்னீர் ரோஸ் 120 ரூபாய்க்கும், அரளி பூ 150 ரூபாய்க்கும், செண்டு மல்லி 30 ரூபாய்க்கும், குண்டுமல்லி 200 ரூபாய்க்கும், கோழி கொண்டை 30 ரூபாய்க்கும் சன்னமல்லி 200 ரூபாய்க்கும், பட்டன் ரோஸ் 200 ரூபாய்க்கும் விற்பனை யானது.
மேலும் இன்று மார்க் கெட்டுக்கு பூக்களின் வரத்து அதிகரிப்பால் கடந்த இரு தினங்களை விட தற்போது பூக்களின் விலை இரு மடங்கு குறைந்து விற்பனையாகி வருகிறது. தற்போது விற்பனையாகி வரும் விலையை விட நாளை மேலும் விலை குறையலாம் என எதிர்பார்க்கபடுகிறது, விலை குறைவால் பொதுமக்களை மகிழ்ச்சிய டைந்தாலும் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
- பறிக்கும் கூலி கொடுக்க முடியாமல் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
- பன்னீர் ரோஸ் கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டத்தில் முக்கிய தொழிலாக இருந்து வருவது விவசாயம், விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பூக்கள் சாகுபடி செய்கின்றனர்.
அதிகப்படியாக குண்டுமல்லி, சாமந்தி, சம்பங்கி, செண்டு மல்லி, முல்லை, காக்கனா, கோழிக்கொண்டை, பன்னீர் ரோஸ், உள்ளிட்ட அனைத்து வகுப்புகளையும் சாகுபடி செய்து வருகின்றனர்.
இங்கு சாகுபடி செய்யப்படும் பூக்கள் வெளி மாவட்டங்கள், அண்டை மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது
தொடர்ந்து மாவட்டத்தில் திருமண வைபவங்கள், உள்ளூர் திருவிழாக்கள், சுப வைபவங்கள், கோவில் கும்பாபிஷேகம்,என நடைபெற்று வந்ததால் பூக்களின் விலை அதிகரித்திருந்த நிலையில் தற்பொழுது கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.
மாலைகளுக்கு பயன்படும் சம்பங்கி பூ கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கிலோ 160 ரூபாய்க்கு விற்பனையானது தற்பொழுது பூ மார்க்கெட்டில் கிலோ 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் பன்னீர் ரோஸ் கிலோ 20 ரூபாய்க்கும், அரளி கிலோ 60 ரூபாய்க்கும், குண்டு மல்லி கிலோ 200 ரூபாய்க்கும், முல்லை கிலோ 140 ரூபாய்க்கும், காக்கடா கிலோ 80 ரூபாய்க்கும், செண்டுமல்லி கிலோ 10 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இது சம்பந்தமாக விவசாயிகள் கூறும்போது:- கடந்த இரண்டு மாதமாக பூக்கள் விலை அதிகரித்து நல்ல வருவாயை ஈட்டியது. தற்பொழுது கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பூக்கள் விலை கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.
வயலில் பூக்களை பறிக்கும் கூலி கொடுக்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறோம் என வேதனையோடு தெரிவித்தனர்.






