என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிரிவலப்பாதை அமைக்க ஆய்வு"

    • அரூரை அடுத்த தீர்த்தமலையில் தீர்த்தகிரீஸ்வரர் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.
    • தீர்த்தமலையில் கிரிவலப்பாதை விரைவில அமைக்க ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

    அரூர்:

    தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த தீர்த்த மலையில் தீர்த்த கிரீஸ்வரர் கோவிலில் செயல்படுத்தப்படும் மேம் பாட்டு பணிகள் குறித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    வரலாற்று சிறப்பு மிக்க தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் க்கோயிலுக்கு பழங்கா லத்தில் கிரிவலப்பாதை இருந்ததாகவும், தற்போது பயன்பாட்டில் இல்லை என பக்தர்கள் தெரிவிக்கின்றனர். தீர்த்தமலையில் ஏற்கனவே இருந்த கிரிவலப்பாதை குறித்து ஆய்வு மேற்கொள் ளப்பட்டு, சாத்தியகூறுகள் இருந்தால் அந்த பாதையை மீண்டும் புதுப்பித்து தருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

    தீர்த்தமலை தீர்த்தகி ரீஸ்வரர் க்கோயிலில் ரூ.2.50 கோடியில் ப்பணி கள் நடைபெறுகிறது. இந்தப் பணிகள் இன்னும் 3 அல்லது 4 மாதங்களில் நிறைவுபெறும். தொடர்ந்து தீர்த்தகிரீஸ்வரர் க்கோயிலில் நன்னீராட்டுப் பெருவிழா நடைபெறும்.

    தீர்த்தமலையில் உள்ள மலைக்கோயிலுக்கு செல்வதற்கு மலைப்பாதை அமைப்பதற்காக வனத்துறையினரிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. வனத்துறையினரிடம் இருந்து உரிய அனுமதி கிடைத்தவுடன் தீர்த்தமலை மலைக்கோயிலுக்கு பாதை வசதி ஏற்படுத்தப்படும்.

    தருமபுரி மாவட்டத்தில் தீர்த்தமலை உள்ளிட்ட கோயில்களுக்கு பக்தர்கள் சென்று வரும் வகையில் இணைப்பு பேருந்து வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    இந்த ஆய்வின்போது முன்னாள் அமைச்சரும், திமுக மேற்கு மாவட்ட செயலருமான பி.பழனி யப்பன், கிழக்கு மாவட்ட செயலர் தடங்கம் பெ.சுப்பிரமணி உள்ளி ட்டோர் உடனிருந்தனர்.

    ×