என் மலர்
நீங்கள் தேடியது "தக்காளி விலை மீண்டும் சரிவு"
- வெளிமாவட்டங்களில் 200 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்பட்டது.
- உழவர் சந்தையில் கிலோ 12 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, மாரண்ட அள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராயக்கோட்டை, தளி, மற்றும் அதனைச் சுற்றி உள்ள கிராம பகுதிகளில் விவசாயிகள் தக்காளியை அதிகபடியாக விளை வித்து வருகின்றனர்.
இங்கு விளைவிக்கும் தக்காளி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், அண்டை மாநில பகுதிக ளுக்கும் வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர்.
இந்த நிலையில் 5 மாதங்களுக்கு முன்பு தக்காளி விளைச்சல் அதிகரிப்பால் கிலோ 3 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது . இதனால் நஷ்டத்தை அடைந்த விவசாயிகள் அறுவடை செய்த தக்காளிகளை ஏரி, குளம் ஆறு போன்றவைகளில் கொட்டிச் சென்றனர். பயிரிட்ட தக்காளி செடிகளை அழித்து மாற்று பயிருக்கு மாறினார்.
இதனால் வரத்து குறைந்து கடந்த 2 மாதத்திற்கு முன்பு தருமபுரி மாவட்டத்தில் கிலோ தக்காளி 160 ரூபாயும், வெளி மாவட்டங்களில் 200 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து இரண்டு மாதங்களாக விலை நீடித்ததால் விவசாயிகள் தக்காளி பயிரிட ஆர்வம் காட்டினர்.
மீண்டும் தக்காளி வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை படிப்ப டியாக குறைந்து கிலோ 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் கர்நாடகா, ஆந்திரா , மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து அதிகரித்தது. இதனால் தருமபுரி மாவட்ட உழவர் சந்தையில் கிலோ 12 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.






