என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஸ்ரீ விஜய் வித்யாஷ்ரம் பள்ளியில்  மாநில அளவிலான செஸ் போட்டிகள்
    X

    ஸ்ரீ விஜய் வித்யாஷ்ரம் பள்ளியில் மாநில அளவிலான செஸ் போட்டிகள்

    • 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • விளையாட்டு வீரர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

    தருமபுரி,

    தருமபுரி ஸ்ரீ விஜய் வித்யாலயா கல்வி நிறுவ னங்கள், விவேகானந்தா செஸ் அகாடமி ஆகியவை இணைந்து நடத்திய மாநில அளவிலான செஸ் போர்டிகள் தருமபுரி ஸ்ரீ விஜய் வித்யாஷ்ரம் பள்ளி வளாகத்தில் 2 நாட்கள் நடைபெற்றது. இந்த போட்டிகளில் மாநிலம் முழுவதிலும் இருந்து அனைத்து மாவட்டங்களை சேர்ந்த சுமார் 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

    மொத்தம் 9 சுற்றுகள் நடந்த இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு ஸ்ரீ விஜய் வித்யாலயா கல்வி நிறுவனங்களின் தலைவர் டி.என்.சி. மணிவண்ணன் தலைமை தாங்கி போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு டி.என். சின்னசாமி நினைவு கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டி பேசினார். இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் செல்வி மணிவண்ணன், பள்ளி துணைத் தலைவர் தீபக் மணிவண்ணன், செயலாளர் டாக்டர் ராம்குமார், இயக்குனர்கள் டாக்டர் திவ்யா ராம்குமார், ஷரவந்தி தீபக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் தருமபுரி டான் பாஸ்கோ கல்லூரி முதல்வர் ஆஞ்சலோ ஜோசப், மாவட்ட செஸ் கழக துணைத் தலைவர் துரைசாமி, செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் சேகர், முதன்மை நடுவர் பழனியப்பன், பள்ளி டீன் கௌசல்யா ஆகியோர் கலந்து கொண்டனர். போட்டி களுக்கான ஏற்பாடு களைத் தமிழ்நாடு மாநில சதுரங்கக் கழக இணை செயலாளரும், விவே கானந்தா செஸ் அகாடமியின் இயக்குனருமான பேரா சிரியர் ராஜசேகரன், துணை இயக்குனர் பாண்டுரங்கன், செயலர் மகாலட்சுமி ராஜசேகரன், டான் பாஸ்கோ கல்லூரி தமிழ் துறை தலைவர் சங்கர் ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×