என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில்  பொது சிவில் சட்டம் குறித்த கருத்தரங்கம்
    X

     நிகழ்ச்சியில் மாநில தலைவரும் எம்.எல்.ஏ-வுமான ஜவாஹிருல்லாஹ் பேசிய போது எடுத்தபடம்.

    முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் பொது சிவில் சட்டம் குறித்த கருத்தரங்கம்

    • பொது சிவில் சட்டம், மற்றும் இந்தியாவை பாரதம் என குறித்தும் பேசினார்.
    • பொது சிவில் சட்டம் கொண்டு வர முற்படும் செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

    அரூர்,

    தருமபுரி மாவட்டம், அரூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் மற்றும் அரூர் அஹ்லே சுன்னத்வல் ஜமாத் இணைந்து பொது சிவில் சட்டம் குறித்த கருத்தரங்கை நடத்தியது.

    இதற்கு மாவட்ட பொருளாளர் இதாயத்துல்லா வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட தலைவர் சுபேதன் தலைமை தாங்கினார். த.மு.மு.க மற்றும் மனித நேய மக்கள் கட்சி மாநில தலைவரும் எம்.எல்.ஏ-வுமான ஜவாஹிருல்லாஹ் கலந்து கொண்டு பொது சிவில் சட்டம், மற்றும் இந்தியாவை பாரதம் என குறித்தும் பேசினார்.

    இதில் தருமபுரி தி.மு.க மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பழனியப்பன், த.மு.மு.க மாநில செயலாளர் அஸ்தாப்அஹமத், தலைமை பிரதிநிதி சாதிக்பாஷா, முத்தவல்லி சபீர்அகமத், செயலாளர் அப்துல்ரவூப், பொருளாளர் அப்துல்ரஹிமான், தர்கா கமிட்டி தலைவர் அலாவு தீன்பாட்சா, திமுக நகர செயலாளர் முல்லைரவி, ஒன்றிய செயலாளர்கள் சௌந்த ரராஜன், சந்திரமோகன், கலைவாணி, மாநில செயற்குழு உறுப்பினர் இர்பான்பாஷா, அப்துல் சுக்கூர், முகமதுசலீம், அப்துல்மஜீத், ஷானவாஸ், அப்துல் அப்பாஸ், நியாஸ், முகமதுஅலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் நகர செயலாளர் முகமது ரபிக் நன்றி கூறினார். கருத்தங்கில் இந்திய பன்முகத் தன்மையை சிதைக்கும் வகையில் உள்ள பொது சிவில் சட்டம் கொண்டு வர முற்படும் செயலுக்கு கண்டனம் தெரிவித்தும், தமிழ்நாடு அரசு 49 வாழ்நாள் சிறைவாசிகளை 151-ம் பிரிவின் கீழ் விடுதலை செய்ய அளித்துள்ள பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    Next Story
    ×