என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது
    X

    தருமபுரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது

    • தருமபுரி மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது.
    • மாவட்டம் முழுவதும் பெய்த மழை 61.8 மி, பென்னாகரத்தில் அதிகபட்சமாக 28 மி.மீ மழை அளவு பதிவாகி உள்ளது.

    தருமபுரி,

    தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் நல்ல மழை பெய்து வந்தது. நேற்று காலை முதல் மாவட்டம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இந்நிலையில் மாலை திடீரென மழை பொழிய தொடங்கியது.

    இதில் தருமபுரி நகர் பகுதி, பென்னாகரம், கடத்தூர், அரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்தது. மேலும் திடீரென மழை பெய்ததால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மழையில் நனைந்தவாறே சென்றனர். இதனால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை ஏற்பட்டது. மேலும் மழையில்லாமல் பயிர்கள் காய்ந்து வந்த நிலையில், தொடர்ந்து பெய்து வரும் மழையால், விவசாயிகளும் பொதுமக்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தருமபுரி மாவட்டத்தில் இன்று 6 மணி வரை பதிவான மழை அளவில் மொத்தம் 61.8 மி.மீ மழை அளவு பதிவாகி உள்ளது. இதில் பென்னாகரத்தில் அதிகபட்சமாக 20 மி.மீ மழை அளவு பதிவாகி உள்ளத. மாவட்ட முழுவதும சராசரியாக 6.86 மி.மீ அளவு பெய்துள்ளது.

    Next Story
    ×