என் மலர்tooltip icon

    கடலூர்

    திட்டக்குடி அருகே அங்காளம்மன் கோவிலில் உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திட்டக்குடி:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே பெண்ணாடம் மீனவர் தெருவில் அங்காளம்மன் கோவில் உள்ளது. நேற்று இரவு பூசாரி சுப்பிரமணியன் வழக்கம் போல் பூஜைகளை முடித்து விட்டு கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.

    நள்ளிரவு சமயம் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து கோவிலுக்குள் புகுந்தனர். பின்னர் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

    இன்று அதிகாலை 4:30 மணிக்கு கோவில் திறக்க வந்து பார்த்தபோது கோவிலின் கதவு பூட்டுகள் உடைத்து இருப்பதை கண்டு பூசாரி அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது அங்கு இருந்த உண்டியலில் உடைத்து அதிலிருந்த இருந்த காணிக்கை அனைத்தையும் கொள்ளையர்கள் திருடி சென்று உள்ளனர்.

    இதுகுறித்து சுப்பிரமணியன் பெண்ணாடம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலின்பேரில் பெண்ணாடம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.



    கடலூர் அருகே சர்க்கரை ஆலையில் கன்வேயர் ரோலர் திடீரென்று உடைந்து கீழே விழுந்ததில் ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    கடலூர்:

    கடலூர் அருகே நெல்லிக்குப்பம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் ரவி. (வயது 51). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் சர்க்கரை ஆலையில் பணிபுரிந்து வந்தார்.

    நேற்று இரவு வழக்கம்போல் ஆலையில் வேலை செய்து கொண்டிருந்தபோது கன்வேயர் ரோலர் திடீரென்று உடைந்து கீழே நின்றிருந்த ரவி மீது விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த ரவியை சிகிச்சைக்காக மற்ற ஊழியர்கள் கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்‌. ஆனால் சிகிச்சை பலனின்றி ரவி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
    நெய்வேலி என்.எல்.சி. சுரங்கத்தில் மண் சரிந்ததில் ராட்சத எந்திரம் சாய்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் தொழிலாளிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.
    கடலூர் :

    கடலூர் மாவட்டம் நெய்வேலியில், என்.எல்.சி. இந்தியா நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு உள்ள 3 சுரங்கங்களில் இருந்து வெட்டப்படும் நிலக்கரியை கொண்டு, அனல்மின்நிலையங்களில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் நிறுவனத்தின் தேவைக்கு போக நிலக்கரியும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இதில் சுரங்கங்களில் நிலக்கரி எடுக்க மேல் மண் எடுக்கவும், அந்த பணியின் போது சேகரிக்கப்படும் மண்ணை ஏற்கனவே நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்ட இடங்களுக்கு கொண்டு நிரப்பவும் சுரங்கப்பகுதியில் ராட்சத எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் நேற்று 2-வது சுரங்கத்தில் முதற்கட்ட பணியின் போது நிலக்கரி வெட்டும் பணி நடைபெற்றது. இதில் சுரங்க மண்ணை ராட்சத எந்திரத்தின் மூலம் ஏற்கனவே நிலக்கரி வெட்டப்பட்ட இடங்களில் கொட்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.

    இந்த நிலையில் திடீரென மண் கொட்டும் ராட்சத எந்திரம் ஒரு பகுதியில் சரிந்து விழுந்தது. இதை சற்றும் எதிர்பாராத தொழிலாளர்கள் மற்றும் அங்கிருந்த அதிகாரிகள் தப்பி ஓட்டம் பிடித்தனர். அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தால் சுரங்க பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

    சரிந்து விழுந்த மண் வெட்டும் எந்திரத்தின் மதிப்பு ரூ.100 கோடிக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்தவிபத்து காரணமாக, சுரங்கப்பகுதியில் நிலக்கரி வெட்டும் பணி பாதிப்பு ஏற்பட்டது.

    மேலும், எந்திரத்தில் ஏற்பட்ட சேதங்களை ஆய்வு செய்து இழப்பீடு எவ்வளவு இருக்கும், விபத்துக்கான காரணம் என்ன? மற்றும் பாதிப்புகள் குறித்து என்.எல்.சி.யின் உயர்மட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

    இதுகுறித்து என்.எல்.சி. நிர்வாக தரப்பில் கேட்ட போது, தற்போது விபத்துக்குள்ளான எந்திரம் சுமார் 2 ஆயிரம் டன் எடை கொண்டதாகும். எந்திரம் இருந்த பகுதியின் அடியில் திடீரென மண் சரிந்ததால் இந்த விபத்து நேர்ந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    இதனால் ஒரு மணிநேரம் அந்த பகுதியில் நிலக்கரி வெட்டும் பணி பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் மாற்று எந்திரம் மூலம் வழக்கம் போல் பணிகள் நடந்தது.

    தொடர்ந்து விபத்துக்குள்ளான எந்திரத்தை சீரமைத்து, எதிர்காலத்தில் விபத்துகள் நடக்காத வகையில் சரியான திட்டமிடலுடன் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றனர்.

    சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
    கடலூர்:

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியும், திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் வீரலூரை சேர்ந்த ஏழுமலை மகன் மாரிமுத்து (வயது 25) என்பவரும் கோயம்புத்தூரில் உள்ள தனியார் பஞ்சு ஆலையில் தொழிலாளியாக வேலை பார்த்தனர். அப்போது இருவரும் பேசி பழகி வந்தனர்.

    இதையடுத்து மாரிமுத்து அந்த சிறுமியிடம் அவரை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசைவார்த்தை கூறி வந்தார். இந்த விவகாரம் சிறுமியின் தாயாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து அவர் அந்த சிறுமியை கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் மலைமேடு பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்க வைத்தார்.

    அந்த சிறுமி அங்கு 15 நாட்களாக தங்கி இருந்த நிலையில், இதை அறிந்த மாரிமுத்து கடந்த 7.7.2018 அன்று மலைமேடு கிராமத்திற்கு வந்து சிறுமியை கடத்தி சென்றார். பின்னர் அவரை தனது வீட்டிற்கு அழைத்து சென்று, மறுநாள் இரவு நான் உன்னை தான் திருமணம் செய்து கொள்ளப்போகிறேன் என்று கூறி, அவரை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார்.

    இதுபற்றி சிறுமியின் உறவினர் ஸ்ரீமுஷ்ணம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரிமுத்துவை கைது செய்தனர். இந்த வழக்கு கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

    இவ்வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், நேற்று நீதிபதி எழிலரசி தீர்ப்பு கூறினார். அவர் தனது தீர்ப்பில், இவ்வழக்கில் மாரிமுத்து மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இதையடுத்து அவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலாசெல்வி ஆஜராகி வாதாடினார்.

    காட்டுமன்னார்கோவில் அருகே கஞ்சா விற்ற 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காட்டுமன்னார்கோவில்:

    காட்டுமன்னார்கோவில் கோட்டைமேடு, ஆஞ்சநேயர் கோவில் பின்புறம், சந்தை தோப்பு ஆகிய பகுதிகளில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக சந்தை தோப்பு பகுதியைச் சேர்ந்த சிவனேசன் (வயது (21), கோட்டைமேட்டை சேர்ந்த விக்னேஷ் (22), ஜூலியஸ்சீசர் (24), மில்டன் (22), புளியந்தோப்பு தெருவை சேர்ந்த வினோத்குமார் (22) ஆகியோரை கைது செய்தனர்.
    நெய்வேலி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து வரும் மழை நீர் முறையான வடிகால் வசதி இல்லாததால் விளை நிலங்களில் புகுந்ததால் நெற்பயிர் சேதம் அடைந்துள்ளது என விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி மற்றும் விசூர், ரெட்டிப்பாளையம், மணலூர் பகுதியில் கடந்த 3 நாட்களாக மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது.

    நேற்றும் இடியுடன் பலத்த மழை பெய்தது. தொடர் மழை காரணமாக விளைநிலங்களில் தண்ணீர் புகுந்து சுமார் 300 ஏக்கர் நெற்பயிர் முற்றிலும் அழுகி சேதமடைந்துள்ளது.

    இதன்காரணமாக விசூர், ரெட்டிப்பாளையம், மணலூர் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். நெய்வேலி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து வரும் மழை நீர் முறையான வடிகால் வசதி இல்லாததால் விளை நிலங்களில் புகுந்ததால் நெற்பயிர் சேதம் அடைந்துள்ளது என விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

    எனவே தமிழக அரசு சேதமடைந்த நெல் பயிரை பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கடலூர் அருகே கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் திருவந்திபுரம் சாலக்கரை பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே ஒருவர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்றுக்கொண்டிருந்தார். இதை பார்த்த போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் திருமாணிக்குழியை சேர்ந்த ரமேஷ் (வயது 34) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேசை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் கடலூர் முதுநகர் அருகே உள்ள மணக்குப்பம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த, அதே பகுதியை சேர்ந்த சிவமணி (32) என்பவரை, முதுநகர் போலீசார் கைது செய்தனர்.
    கடலூர் அருகே கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் திருவந்திபுரம் சாலக்கரை பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே ஒருவர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்றுக்கொண்டிருந்தார். இதை பார்த்த போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் திருமாணிக்குழியை சேர்ந்த ரமேஷ் (வயது 34) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேசை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் கடலூர் முதுநகர் அருகே உள்ள மணக்குப்பம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த, அதே பகுதியை சேர்ந்த சிவமணி (32) என்பவரை, முதுநகர் போலீசார் கைது செய்தனர்.
    பண்ருட்டி அருகே வியாபாரியிடம் முந்திரி வாங்கி ரூ.70 லட்சம் மோசடி செய்த தனியார் நிறுவன உரிமையாளர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள பணிக்கன்குப்பத்தை சேர்ந்தவர் நெப்போலியன் மகன் வில்லியம் ஷேக்ஸ்பியர் (வயது 30). இவர் அதே பகுதியில் தனியார் முந்திரி ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். அங்கு பண்ருட்டி அடுத்த சாத்திப்பட்டை சேர்ந்த ஜான்பீட்டர் (40) என்பவர் மேலாளராக பணிபுரிந்து வந்தார்.

    இந்த நிலையில் வில்லியம் ஷேக்ஸ்பியர், ஜான்பீட்டர் ஆகியோர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பண்ருட்டி அடுத்த வீரசிங்கன்குப்பத்தை சேர்ந்த முந்திரி வியாபாரி அருள் (53) என்பவரை சந்தித்து, தங்கள் நிறுவனத்திற்கு முந்திரி வினியோகம் செய்யுமாறு கூறியுள்ளனர்.

    இதையடுத்து அருள், ரூ.60 லட்சம் மதிப்பிலான முந்திரியை அவர்களிடம் விற்பனை செய்துள்ளார். பின்னர் அவர்களிடம் முந்திரிக்கான தொகை ரூ.60 லட்சத்தை தரும்படி அருள் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் கேரளாவில் இருந்து 75 டன் முந்திரி வருவதாகவும், பணத்திற்கு பதிலாக அந்த முந்திரியை கொடுத்து விடுவதாகவும் கூறினர். மேலும் அந்த முந்திரியை வாங்கி கொண்டுவர போக்குவரத்து செலவுக்கு ரூ.10 லட்சம் தரும்படி கேட்டுள்ளனர்.

    இதை நம்பிய அருள், அவர்களிடம் ரூ.10 லட்சம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட வில்லியம் ஷேக்ஸ்பியர், ஜான்பீட்டர் ஆகியோர் நீண்ட நாட்கள் ஆகியும் முந்திரி மற்றும் வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. இதனால் அருள், தனக்கு தர வேண்டிய மொத்தம் ரூ.70 லட்சத்தை தரும்படி அவர்களிடம் சென்று கேட்டுள்ளார்.

    அப்போது வில்லியம் ஷேக்ஸ்பியர், ஜான்பீட்டர் ஆகியோர் பணம் கொடுக்க மறுப்பு தெரிவித்ததுடன், அருளை இரும்பு கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. அப்போது தான் இருவரும் தன்னிடம் முந்திரி மற்றும் பணம் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டது அவருக்கு தெரியவந்தது.

    இதுகுறித்து அருள், முத்தாண்டிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து அந்த வழக்கு கடலூர் மாவட்ட குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    இதையடுத்து ரூ.70 லட்சம் மோசடி செய்ததாக வில்லியம் ஷேக்ஸ்பியர், ஜான்பீட்டர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
    புதுப்பேட்டை அருகே ஊராட்சி செயலாளர் வீட்டில் 16 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    புதுப்பேட்டை:

    பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை அருகே உள்ள வீரப்பெருமாநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 50).ஊராட்சி செயலாளர். இவர் நேற்று முன்தினம் காலை வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் உறவினர் வீட்டு பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதற்காக விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் பகுதிக்கு சென்றார். அங்கு விழா முடிந்ததும் மாலையில் அவர்கள் வீடு திரும்பினர்.

    அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, அங்கிருந்த பீரோ பூட்டு உடைக்கப்பட்டு அதில் இருந்த 16 பவுன் நகைகள் மற்றும் ½ கிலோ வெள்ளி பொருட்களை காணவில்லை.

    அதனை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. இது குறித்த தகவலின் பேரில் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    இதில் பாலசுப்பிரமணியன் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள், வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த ரூ.6 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இது குறித்த புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    வீராணம் ஏரி நிரம்பியதையடுத்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஏரியில் இருந்து விவசாயத்துக்கு விரைவில் தண்ணீர் திறக்கப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
    காட்டுமன்னார் கோவில்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும்.

    இந்த ஏரியால் சுமார் 44,856 ஏக்கர் விவசாயநிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை நகர மக்களுக்கு தாகத்தை தீர்ப்பதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. கீழ்அணையில் இருந்து வீராணம் ஏரிக்கு கடந்த மாதம் முதல் வாரத்தில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. ஆரம்பத்தில் குறைவான தண்ணீரே வீராணம் ஏரிக்கு வந்து கொண்டிருந்தது.

    தற்போது மேட்டூர் அணையிலிருந்து கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. எனவே கீழணைக்கு கூடுதலாக தண்ணீர் வரதொடங்கியது. இதன் மூலம் வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. நேற்று 1,506 கனஅடி நீர் ஏரிக்கு வந்தது.

    இன்று வீராணம் ஏரிக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து 1,652 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியின் நீர் மட்டம் நேற்று 46.80 அடியாக இருந்தது. இன்று காலை ஏரியின் முழு கொள்ளளவான 47.50 அடியை எட்டி வீராணம் ஏரி நிரம்பியது. ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்கு நேற்று 48 கனஅடி நீர் அனுப்பி வைக்கப்பட்டது. இன்று 52 கன அடிநீர் சென்னை குடிநீருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    வீராணம் ஏரியில் இருந்து வி.என்.எஸ். மதகு வழியாக சேத்தியாத்தோப்பு அணைக்கு 500 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. வீராணம் ஏரி நிரம்பியதையடுத்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஏரியில் இருந்து விவசாயத்துக்கு விரைவில் தண்ணீர் திறக்கப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    வீராணம் ஏரி நிரம்பியதை அடுத்து அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் விவசாய பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
    கடலூர் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர்:

    கடலூர் அருகே உள்ள கிழக்கு ராமாபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி வாசுகி (வயது 50). இவருடன் அவரது மகள் பூர்ணிமா தனது 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் வாசுகி நேற்று முன்தினம் தனது வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வாசுகி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×