என் மலர்
செய்திகள்

கைது
கடலூர் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது
கடலூர் அருகே கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் திருவந்திபுரம் சாலக்கரை பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே ஒருவர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்றுக்கொண்டிருந்தார். இதை பார்த்த போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் திருமாணிக்குழியை சேர்ந்த ரமேஷ் (வயது 34) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேசை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் கடலூர் முதுநகர் அருகே உள்ள மணக்குப்பம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த, அதே பகுதியை சேர்ந்த சிவமணி (32) என்பவரை, முதுநகர் போலீசார் கைது செய்தனர்.
Next Story






