என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை நீரில் மூழ்கி சேதமடைந்த நெற்பயிரை விவசாயி ஒருவர் காண்பிக்கும் காட்சி.
    X
    மழை நீரில் மூழ்கி சேதமடைந்த நெற்பயிரை விவசாயி ஒருவர் காண்பிக்கும் காட்சி.

    பண்ருட்டியில் பலத்த மழை- 300 ஏக்கர் நெற்பயிர் தண்ணீரில் மூழ்கி நாசம்

    நெய்வேலி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து வரும் மழை நீர் முறையான வடிகால் வசதி இல்லாததால் விளை நிலங்களில் புகுந்ததால் நெற்பயிர் சேதம் அடைந்துள்ளது என விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி மற்றும் விசூர், ரெட்டிப்பாளையம், மணலூர் பகுதியில் கடந்த 3 நாட்களாக மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது.

    நேற்றும் இடியுடன் பலத்த மழை பெய்தது. தொடர் மழை காரணமாக விளைநிலங்களில் தண்ணீர் புகுந்து சுமார் 300 ஏக்கர் நெற்பயிர் முற்றிலும் அழுகி சேதமடைந்துள்ளது.

    இதன்காரணமாக விசூர், ரெட்டிப்பாளையம், மணலூர் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். நெய்வேலி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து வரும் மழை நீர் முறையான வடிகால் வசதி இல்லாததால் விளை நிலங்களில் புகுந்ததால் நெற்பயிர் சேதம் அடைந்துள்ளது என விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

    எனவே தமிழக அரசு சேதமடைந்த நெல் பயிரை பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×