என் மலர்
கடலூர்
பண்ருட்டி சென்னை சாலை ரெயில்வே மேம்பாலம் அருகே இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி அங்கு கூம்பு வடிவ கேன்கள் மற்றும் பேரிகாடுகள் அமைத்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி சீரமைத்தார்.
பண்ருட்டி:
பண்ருட்டி சென்னை சாலையில் 4 முனை சந்திப்பு உள்ளது. 4 முனை சந்திப்பு அருகிலேயே ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை சாலை, கும்பகோணம் சாலை, ராஜாஜி சாலை, காந்தி சாலை, கடலூர் ரோடு ஆகிய 5 சாலைகள் இங்கு உள்ளது. இதுமட்டுமில்லாமல் ரெயில்வே மேம்பாலம் அருகில் 2 பக்கமும் 2 சப்-வேக்கள் உள்ளது. இதனால் இங்கு அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து ஸ்தம்பித்து விடுகிறது.
இந்த வழியாக செல்லும் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சாலைகள் வழியாக தினமும் காலை, மாலை இருவேளையும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் மட்டும் சென்று வருகின்றனர்.
இது மட்டும் அல்லாமல் இந்தவழியாக முக்கிய ஊர் களுக்கு செல்லும் ஆயிரக் கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இங்கு அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் பள்ளி மாணவ, மாணவிகள் அரசு ஊழியர்கள், பொதுமக்கள், வியாபாரிகள், வர்த்தகர்கள், வாகன ஓட்டிகள்,கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதனை தொடர்ந்து தற்போது புதிதாகப் பொறுப்பேற்றுள்ள போக்குவரத்து இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
பண்ருட்டி சென்னை சாலை ரெயில்வே மேம்பாலம் அருகே இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி அங்கு கூம்பு வடிவ கேன்கள் மற்றும் பேரிகாடுகள் அமைத்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி சீரமைத்தார்.
இதனை தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் கட்டுப்பாட்டுக்கு வந்தது. இதனால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தொடர்ந்து போக்குவரத்து போலீசார் முக்கிய சாலையில் நிறுத்தப்பட்டுள்ள இரு சக்கர வாகனங்களை சாலையின் ஒரு பகுதியில் மட்டும் நிறுத்த வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர். இதனால் வியாபாரிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கந்து வட்டி கும்பலுக்கு பயந்து தாய் மகள் போலீசில் தஞ்சமடைந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திட்டக்குடி:
திட்டக்குடி அருகே வசிஷ்டபுரம் கிழக்குத் தெருவை சேர்ந்தவர் செங்கான். இவர் கடந்த 10 ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். அவரது மனைவி கொளஞ்சி (வயது 42) கூலி வேலை பார்த்து வருகிறார்.
இவர்களது மகன் சிலம்பரசன் (26), மோனிஷா (24), வாய் பேசாத மகள் நிவேதா (21) ஆகியோருடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் திட்டக்குடி போலீஸ் நிலையத்தில் கொளஞ்சி புகார் மனு அளித்து உள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-
நான் அதே பகுதியில் வசிக்கும் கிருஷ்ணவேணி என்பவரிடம் குடும்ப செலவுக்கு கொளஞ்சி ரூ. 50 ஆயிரம் 3 வட்டி வீதம் பணம் வாங்கினேன். இந்த பணத்துக்கு முதல் தவணையாக ரூ. 45 ஆயிரம், 2-வது தவணையாக மகளிர் சுய உதவி குழு மூலம் பெற்ற 30 ஆயிரம், 3-வது தவணையாக தனது மகன் வேலை செய்த ரூ.15ஆயிரம், 4-வது தவணையாக வேப்பூரில் வசிக்கும் தனது மகள் மோனிஷா கணவர் மூலம் 10 ஆயிரம் கொடுத்துள்ளார். மொத்தம் ரூ. ஒரு லட்சம் கொடுத்துள்ளேன்.
இந்நிலையில் கிருஷ்ணவேணி மேலும் பணம் கேட்டு மிரட்டுகிறார். இதற்கு பயந்து எனது மகனை இங்கே விட்டுவிட்டு எனது வாய் பேசாத மகளை அழைத்துக் கொண்டு கேரளாவுக்கு பிழைப்பு தேடி சென்று விட்டேன். தொடர்ந்து எனக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்து வருகிறார்.
இவ்வாறு மனுவில் கூறி உள்ளார்.
இது குறித்து திட்டக்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கடலூரில் கோரிக்கைகள் ஏற்கப்பட்டதால் போராட்டம் தள்ளி வைக்கப்பட்டு உள்ளதாக சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.
கடலூர்:
நியாயவிலைக்கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு இன்று (12-ந் தேதி) போராட்டம் நடத்தப்படும் என்று நியாயவிலைக்கடை பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு. பாலசுப்பிரமணியன் அறிவித்து இருந்தார்.
அதனை தொடர்ந்து கடலூரில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது கோரிக்கைகள் ஏற்கப்பட்டதால் போராட்டம் தள்ளி வைக்கப்பட்டு உள்ளதாக சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். மேலும் அவர் கூறுகையில் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வரை ரேசன் கடைகளில் பயோமெட்ரிக் பதிவு முறையை தள்ளி வைக்க வேண்டும் என்று அவர் கூறி உள்ளார்.
கடலூர் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் தலைமையில் போலீசார் உழவர் சந்தை முன்பு சாலையில் அமர்ந்து இருந்த சிறு வியாபாரிகளை அப்புறப்படுத்தினர்.
கடலூர்:
கடலூர் திருப்பாதிரிப் புலியூரில் உழவர் சந்தை இயங்கி வருகிறது. உழவர் சந்தை முன்பு காய்கறி, பழ வகைகள் உள்ளிட்ட பல்வேறு சிறு வியாபாரிகள் சாலையில் அமர்ந்து பொருட்கள் விற்பனை செய்து வருகின்றனர்.
நாளை மறுதினம் (14-ந் தேதி) தமிழர் பண்டிகையான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்பு மஞ்சள் மற்றும் பொங்கலுக்கு தேவையான பொருட்கள் காலை முதல் விறுவிறுப்பாக விற்பனையாகி வருகின்றது.
இதன் காரணமாக வழக்கத்தைவிட அதிக அளவில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு திரண்டு வந்ததால் காலை முதல் கடலூர் - சிதம்பரம் சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வந்தது.
இதனை தொடர்ந்து கடலூர் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் தலைமையில் போலீசார் உழவர் சந்தை முன்பு சாலையில் அமர்ந்து இருந்த சிறு வியாபாரிகளை அப்புறப்படுத்தினர். பின்னர் சாலையில் அமர விடாமல் உள்ளே தள்ளி அமர வேண்டும் என எச்சரிக்கை விடுத்தனர்.
மேலும் சாலையோரத்தில் இரும்புத் தடுப்புகளை அமைத்து போக்குவரத்து பாதிப்புகள் ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொண்டனர். இது மட்டுமின்றி அங்கு பாதுகாப்பு பணியில் தொடர்ந்து போலீசார் கண்காணித்து வருகின்றனர். இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

கடலூரில் பாதுகாப்பான முறையில் மதுபானம் விற்பனை செய்வதற்கும் தமிழக அரசு விடுத்துள்ள புதிய உத்தரவுக்கு ஏற்ப அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றது.
கடலூர்:
தமிழகத்தில் தொற்று நோய் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் வழிபாட்டுத் தலங்கள் மூடப்படுவது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்க வரும் குடிப்பிரியர்கள் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும்.
கூட்டம் கூடாமல் இருப்பதற்கு ஐந்து நபர்கள் என வரிசையில் வரக்கூடிய நபர்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய வேண்டும். டாஸ்மாக் கடையில் வேலை செய்பவர்கள் முக கவசம் அணிந்து மதுபானங்கள் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் 147 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இன்று நண்பகல் 12 மணி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து தமிழக அரசு புதிய கெடுபிடி விதிக்கப்பட்டதால் குடி பிரியர்கள் காலை முதல் மதுபானம் வாங்குவதற்கு காத்திருந்தனர். பின்னர் டாஸ்மாக் கடை திறந்த உடன் குடிப்பீரியர்கள் 5 நபர்களாக முதலில் வரிசையில் நின்றனர். அனைவரும் முக கவசம் அணிந்து நின்று கொண்டிருந்தனர்.
பின்னர் கடை விற்பனையாளர் முக கவசம் அணிந்து வரிசையில் நின்ற மது பிரியர்களுக்கு மதுபானம் விற்பனை செய்தனர். மேலும் நாளை போகி பண்டிகை மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுபானம் அதிக அளவில் விற்பனை நடைபெறும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்டு வருகின்றது.
மேலும் பாதுகாப்பான முறையில் மதுபானம் விற்பனை செய்வதற்கும் தமிழக அரசு விடுத்துள்ள புதிய உத்தரவுக்கு ஏற்ப அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக குடி பிரியர்கள் மதுபானம் வாங்குவதற்கு நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கியதை காண முடிந்தது.
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே மனைவியை தாக்கியது தொடர்பாக கணவரை போலீசார் கைது செய்தனர்.
சிதம்பரம்:
புவனகிரி அரியகோஷ்டி தெற்குதெரு பகுதியை சேர்ந்தவர் சசிகலா (வயது 44). இவரது கணவர் தட்சணாமூர்த்தி (59). இவரது கணவர் தினமும் குடித்துவிட்டு வீட்டில் சண்டை போட்டு வந்துள்ளார். நேற்று மனைவி மற்றும் இவரது மகள் சுபலட்சுமியிடம் (19) சண்டை போட்டுள்ளார்.
பின்னர் மகளை கீழே தள்ளி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து இவரது மனைவி பரங்கிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் தட்சணாமூர்த்தி மீது போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

ஆட்சிமொழிக் கருத்தரங்கில் சவகர் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் சந்திரசேகரன், பெரியார் அரசு கலைக்கல்லூரியின் தமிழ்ப்பேராசிரியர் முனைவர் ராசா, கடலூர் அரசு மேனிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர். வெற்றிச் செல்வி ஆகியோர் கருத்துரையாற்றினார்கள்.
கடலூர்:
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஜனவரி 7 மற்றும் 8ஆம் தேதி 2 நாட்கள் ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் நடைபெற்றன. இப்பயிலரங்கில் ஆட்சி மொழி வரலாறு, சட்டம், அரசாணைகள், மொழி பெயர்ப்பு கலைச்சொல்லாக்கம், தமிழில் குறிப்புகள், வரைவுகள் செயல்முறை ஆணைகள் அணியம் செய்தல், மொழி பயிற்சி, கணினிப் பயிற்சி, ஆட்சிமொழி ஆய்வும், குறை களைவு நடவடிக்கைகளும் என்ற தலைப்புகளில் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன. அந்தப் பயிற்சி வகுப்புகளில் கடலூர் மாவட்டத்தில் பணிபுரியும் அரசுத் துறைகளைச் சார்ந்த பணியாளர்கள் பலரும் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

1330 திருக்குறளையும் முற்றோதல் செய்த 5 மாணவிகளுக்கு 10,000 ஆயிரம் வீதம் காசோலைகளும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பெற்றனர். மாவட்ட நிலையில் ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கத்தில் சிறந்து விளங்கிய அரசு இசைப்பள்ளிக்குக் கேடயம், பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
தமிழில் சிறந்த குறிப்புகள், வரைவுகள் எழுதிய அரசு பணியாளர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பெற்றனர். இந்த 2 நாள் நிகழ்ச்சிகளை தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அன்பரசி வெகுசிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தார்.

கோவில் விழாக்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட காரணத்தினால் திருவந்திபுரம் தேவநாத சுவாமி சொர்க்கவாசல் திறப்பு விழாவின்போது பொதுமக்கள் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடலூர்:
கடலூர் அருகே திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் 108 வைணவத் தலங்களில் முதன்மை பெற்றதாகும். இக்கோவிலுக்கு கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் வருகை தந்து சாமி தரிசனம் செய்து செல்வார்கள்.
மேலும் முகூர்த்த நாட்களில் குறைந்தபட்சம் 150 முதல் 350 திருமணங்கள் வரை நடைபெறும். இக்கோவிலில் வருடந்தோறும் சொர்க்க வாசல் திறப்பு விழா விமர்சையாக நடைபெற்று வருவது வழக்கம்.
இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது தொற்றுப் பரவல் நாளுக்கு நாள் அசுர வேகத்தில் உயர்ந்து வருகிறது. மேலும் கடலூர் மாவட்டத்தில் நேற்று வரை 162 பேருக்கு தொற்று பரவல் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருவது குறிப்பிடத் தக்கதாகும்.
இந்த நிலையில் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் வருகிற 13-ந்தேதி சொர்க்க வாசல் திறப்பு விழா நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு கடந்த 3 ந் தேதி திங்கட்கிழமை முதல் பகல் பத்து உற்சவம் வெகு விமர்சியாக நடைபெற்று வருகிறது.
இன்று 9-ம் நாள் பகல்பத்து உற்சவம் வெகு விமரிசையாக கோவில் உட்புறத்தில் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து நாளை மறுதினம் காலை வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு விசுவரூப தரிசனம் மற்றும் மார்கழி மாத பூஜை நடைபெறுகிறது.
பின்னர் காலை 5 மணி அளவில் சொர்க்கவாசல் திறப்பு விழாவில் தேசிகர் முன்னின்று தேவநாத சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள உள்ளார். தொடர்ந்து தமிழக அரசு ஏற்கனவே கோவில் விழாக்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட காரணத்தினால் சொர்க்கவாசல் திறப்பு விழாவின்போது பொதுமக்கள் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.
பின்னர் காலை 6 மணி முதல் வழக்கம்போல் சாமி தரிசனத்திற்கு பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. ஆகையால் பொதுமக்கள் அனைவரும் இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கி 6 மணிக்கு மேல் சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்து கையில் கிருமி நாசினி தெளித்து பாதுகாப்பாக சாமி கும்பிட்டு செல்ல வேண்டும் என கோவில் நிர்வாகத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

18-ந்தேதி தைப்பூசத்தையொட்டி அன்று காலை 6 மணி, 10 மணி, பகல் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி, மறுநாள் காலை 5.30 ஆகிய நேரங்களில் 7 திரை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.
வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்திய ஞானசபை உள்ளது. இங்கு ஆண்டு தோறும் தைப்பூச விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு 151-வது தைப்பூச விழா 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி அன்று காலை அகவல் பாராயணம் நடைபெறுகிறது. பின்னர் 7.30 மணிக்கு வள்ளலார் பிறந்த மருதூர், தண்ணீரால் விளக்கு எரித்த கருங்குழி, வள்ளலார் சித்திபெற்ற மேட்டுக்குப்பம் மற்றும், தருமச்சாலையில் சன்மார்க்க கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு சத்தியஞானசபையில் விழா கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. இதையடுத்து 18-ந்தேதி தைப்பூசத்தையொட்டி ஜோதி தரிசனம் நடைபெற உள்ளது. அதன்படி அன்று காலை 6 மணி, 10 மணி, பகல் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி, மறுநாள் காலை 5.30 ஆகிய நேரங்களில் 7 திரை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.
தொடர்ந்து 20-ந்தேதி பகல் 12 மணி முதல் மாலை வரை மேட்டுக்குப்பத்தில் உள்ள வள்ளலார் சித்திபெற்ற திருஅறைதரிசனம் நடைபெறுகிறது. முன்னதாக வடலூர் ஞானசபையில் இருந்து வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் அடங்கிய பெட்டியை பூக்களால் அலங்கரித்து மேளதாளம் முழங்க வள்ளலார் சித்திபெற்ற திருஅறை உள்ள மேட்டுக்குப்பம் கொண்டுசெல்லப்படும். அங்கு பக்தர்கள் வழிபாட்டுக்கு பின்னர் மீண்டும் வடலூர் கொண்டு வரப்படும். தைப்பூச திருவிழாவையொட்டி வழக்கமாக நடைபெறும் சொற்பொழிவுகள், இசை நிகழ்ச்சி, நாடகம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக தடைசெய்யப்பட்டுள்ளது.
மேலும் ராட்டினம், சர்க்கஸ் கூடாரங்கள் உள்ளிட்டவை நடத்தவும் அனுமதியில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா பரவல் தீவிரமாக இருப்பதால் தமிழக அரசின் வழிகாட்டுதலின் படி தைப்பூச விழாவில் பக்தர்களுக்கு அனுமதி அளிப்பது மற்றும் நிகழ்ச்சிகள் நடத்துவதில் மாற்றம் இருக்கலாம் என செயல் அலுவலர் ராஜா சரவணக்குமார் தெரிவித்துள்ளார். விழாவையொட்டி வடலூர் ஞானசபையில் பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி நேற்று (திங்கட் கிழமை) முதல் நாளை வரை தருமச்சாலையில் மகா மந்திரம் ஓதுதல் நிகழ்ச்சியும், 13-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை ஞானசபையில் அருட்பா முற்றோதல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

திட்டக்குடி அருகே அரசு பஸ் ஓட்டுநரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திட்டக்குடி:
விருத்தாசலத்தில் இருந்து நேற்று முன்தினம் மாலை பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து திட்டக்குடிக்கு விருத்தாசலம் அம்பேத்கர் தெருவை சேர்ந்த பிரகாஷ் ( 44 ) என்பவர் ஓட்டினார் . கண்டக்டராக ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள காவனூரை சேர்ந்த பூமாலை ( 40 ) பணியில் இருந்தார்.
பெண்ணாடம் பேருந்து நிலையத்தில் பேருந்து நின்ற போது அங்கு வந்த வாலிபர் ஒருவர், பஸ் டிரைவரிடம் தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கியதாக தெரிகிறது. இதை தடுக்க வந்த கண்டக்டரையும் வாலிபர் தாக்கியதாக தெரிகிறது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பெண்ணாடம் காவல் உதவி ஆய்வாளர் தீபன் மற்றும் போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர் பெண்ணாடம் சோழநகர் பகுதியைச் சேர்ந்த நாகராஜன் மகன் அகிலன் ( 19 ) என தெரியவந்தது . இதுகுறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அகிலனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த வாரம் முழுவதும் பண்டிகை காலம் இருப்பதால் வழக்கத்தை விட வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் தங்களுக்கு தேவையான கருவாடுகள் அதிக அளவில் வாங்கி சென்றனர்.
கடலூர்:
கடலூர் அருகே காரா மணிக்குப்பத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை வார சந்தை நடைபெறுவது வழக்கம். இங்கு கடலூர், நெல்லிக்குப்பம், மேல்பட்டாம்பாக்கம், நடுவீரப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறி, பழ வியாபாரிகள், மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளுக்கு தேவையான பொருட்கள் ஆகியவற்றைக் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
வருகிற 14-ந்தேதி பொங்கல் பண்டிகை கொண்டாட உள்ளதால் பொங்கல் பானை, கரும்பு, பொங்கல் பண்டிகைக்கு தேவையான பொருட்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.
மேலும் நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, சென்னை காசிமேடு, கடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கருவாடு வாரச்சந்தைக்கு வியாபாரிகள் கொண்டு வந்தனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து இன்று அதிகாலை 5 மணியுடன் முடிவடைந்தது.
இதனைத்தொடர்ந்து இன்று நடைபெற்ற வாரச்சந்தையில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் காலை முதல் ஏராளமானோர் திரண்டனர். பின்னர் வருகிற வெள்ளிக்கிழமை பொங்கல் பண்டிகை கொண்டாட உள்ள நிலையில் தங்களுக்கு தேவையான பானைகள், கரும்பு, காய்கறி வகைகள், மாட்டு பொங்கலன்று மாடுகளுக்கு தேவையான மணிகள், புதிய கயிர்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களையும் வாங்கி சென்றனர்.
இந்த வாரம் முழுவதும் பண்டிகை காலம் இருப்பதால் வழக்கத்தை விட வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் தங்களுக்கு தேவையான கருவாடுகள் அதிக அளவில் வாங்கி சென்றனர். இதன் மூலம் சுமார் 50 லட்ச ரூபாய்க்கு மேல் கருவாடுகள் விற்பனையாகி உள்ளன என வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் இன்று அதிக அளவில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் சமூக இடைவெளி இல்லாமல் பலபேர் முக கவசம் அணியாமல் வந்ததால் சந்தை முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது. மேலும் போலீசார் சார்பில் பொது மக்களுக்கு தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு மாலைபோல் அணிந்து சாராய பாக்கெட்டுகளை கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர்:
ஞாயிறு முழு ஊரடங்கால் கடலூர் மாவட்டத்தில் நேற்று டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. ஆனால் கடலூரை ஒட்டியுள்ள புதுச்சேரி மாநிலத்தில் மதுபானம் மற்றும் சாராய கடைகள் திறந்து இருந்தன. இதனால் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து கடலூர் மாவட்டத்திற்கு சாராயம் மற்றும் மதுபாட்டில்கள் கடத்தி வருவதை தடுக்க போலீசார் தீவிரமாக சோதனை நடத்தி வந்தனர்.
அதன்படி கடலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மா, சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன், ஏட்டுகள் பாண்டியன், தனசேகர் ஆகியோர் வண்டிப்பாளையம் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்குள்ள திருமண மண்டபம் அருகில் நின்றிருந்த வாலிபரை சந்தேகத்தின்பேரில் விசாரித்தனர். மேலும் அவரது சட்டையை கழற்றி சோதனை செய்தபோது, தலா 100 மில்லி லிட்டர் அளவு கொண்ட சாராய பாக்கெட்டுகளை கோர்த்து மாலையாக அணிந்து இருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர், கடலூர் அருகே உள்ள வெள்ளக்கரை கிராமத்தை சேர்ந்த சின்னதுரை மகன் மணிகண்டன் (வயது 35) என்பதும், புதுச்சேரியில் 40 சாராய பாக்கெட்டுகளை வாங்கி, அதனை மாலையாக கோர்த்து கழுத்தில் அணிந்து கடலூருக்கு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். மேலும் சாராய பாக்கெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டது.